அத்தியாயம் (28)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆதி பாரிஸ் செல்ல இருக்கிறான் என்று மட்டும், அவன் கூறியது போலவே மேலோட்டமாக கீழ் போர்ஷனில் உள்ளவர்களிடத்தில் சொல்லி வைத்தாள் ஆதியின் அம்மா ருக்மணி. ஆதிக்கு பெண் பார்த்திருப்பதைப் பற்றி இன்னும் மூச்சு விடவில்லை. விஷயம் கேள்வி பட்டதும் மாடி ஏறி ஆதியை காண்பதற்காக ஓடி வந்தாள் ரஞ்சினி.

"என்னடா பாரிஸ் போகப் போறேன்னு மாமி சொல்றா நிஜமாவா?" என்றாள் ஆச்சர்யமாக.

"ஆமா...." என்றான்.

"எதுக்குடா???"

"எதுக்குன்னா என்ன அர்த்தம்? ஏன் நாங்கள்லாம் பாரிஸ் போகக் கூடாதா???"

"டேய் சீரியசா கேட்குறேன். என்ன திடீர்னு?"

"France தமிழ் சங்கத்துல என் friend ஓட show இருக்கு. அதுக்கு வரச்சொல்லி invitation வந்திருக்கு. அதான்!"

"ஆருவை பார்க்க போறியா?"

"அவ்ளோ தூரம் போய்ட்டு அவளைப் பார்க்காமல் வருவேனா??"

"நீ வரேன்னு அவகிட்ட சொல்லலாமா??"

"தயவு செஞ்சு அப்படி ஒன்னும் பண்ணி வெச்சிடாதே. நான் ஒன்னும் அவளைப் பார்க்கறதுக்காக பாரிஸ் போகலை. பாரிஸ் போனா அவளைப் போய் பார்ப்பேன். So அது அவளுக்கு Surprise ஆவே இருக்கட்டும்"

"ஹ்ம்ம்ம்... ஓகே ஓகே... உங்க ரெண்டு பேர் relationship ஐ புரிஞ்சிக்க முயற்சி பண்ணா சுத்தி இருக்க நாங்கல்லாம் தான் mental ஆயிடுவோம். ஏதோ பண்ணிட்டு போங்க. நான் வாரேன்." என்று கூறி விட்டு சென்றாள் ரஞ்சினி.

பாரிஸ் கிளம்புவதற்கான வேலைகளில் மும்முறமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்தான் ஆதி. ருத்ரியோடு பேசி விட்டு வந்த மறு நாளே வீசாவிற்கு அப்ளை செய்து இருந்தான் ஆனால் அவன் பாரிஸ் வருவது பற்றி இதுவரை ருத்ரியிடம் கூறியிருக்காத நிலையில் அவளை பார்த்து விட்டு வந்து சரியாக ஒரு வாரத்தின் பின்னதாக அவளுக்கு கால் செய்தான் ஆதி.

"ஹாய் ஆதி.." என்றது மறு முனை.

"ஹாய் ருத்ரி... நீங்க free ஆ இருந்தா நம்ம இன்னைக்கி ஈவ்னிங் 5 க்கு same place ல meet பண்ணலாமா?"

"ஹ்ம்ம்ம்.... Ok not a problem" என்றாள்.

ஆதி ருத்ரியை அழைத்து அவனும் பாரிஸ் வருவதாக தெரிவித்தான். அவன் அவளுடைய Program ஐ பார்க்க விரும்புவதாகவும் தன்னுடைய நீண்ட நாள் தோழி ஒருத்தி பாரிஸில் இருப்பதாகவும் இதை காரணமாக வைத்து அவன் அவளையும் பார்த்து விட்டு வர நினைப்பதாயும் கிட்டத்தட்ட அவனுடைய உண்மையான எண்ணத்தை மேலோட்டமாக ருத்ரிக்கு தெரிவித்தான் ஆதி.

"இதுல என்ன இருக்கு? நீங்க பாரிஸ் போறதுக்கு என்னை என்ன Permission கேட்டுட்டு?? நீங்க என் Program பார்க்க வாரேன்னு சொல்றதே எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்றாள் ருத்ரி.

"இல்லை உங்க பின்னாடியே நான் பாரிஸ் வரேனோனு நீங்க என்னை தப்பா எடுத்துக்க கூடாதில்லையா...." என்று தயங்கினான் ஆதி.

"Come on ஆதி!! நான் நம்ம first meeting ல இருந்தே உங்களை என்னோட friend ஆ ஏத்துட்டாச்சு. More over என்னோட show France தமிழ் சங்கத்துல நடக்குதுன்னு சொன்னேன்ல. அதை தொடர்ந்து அங்க என்னோட குருவுக்கு ஒரு பாராட்டு விழாவும் arrange பண்ணி இருக்காங்க. எனக்கு கூட ஒரு விருது இருக்கு. என் சார்பா நீங்க வந்து கலந்துக்கிட்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்."

"கண்டிப்பா நான் அங்க இருப்பேன் உங்க சார்பா.." என்றான் அவன். இம்முறை பில்லை அவன் செலுத்தினான். அவள் தடுக்கவில்லை.

................................................................

கிட்டத்தட்ட 13 மணி நேர விமான பிரயாணத்தின் பின்னர் பாரிஸ் நகரை சென்றடைந்தான் ஆதித்யா. ருத்ரி 3 நாட்கள் கழித்து அவளது நடனக் குழுவுடன் வருவதாக இருந்தாள். ஆதி அவளுக்கு முன்னதாகவே பயணப்பட்டு விட்டான். காதல் நகரம் பாரிஸில் அவன் காதலைத் தவிர அவன் அறிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. ஆகவே ஒரு Traveling agent இன் மூலமாகத் தான் தனது பாரிஸ் பயணத்தை ஒழுங்கு படுத்தி இருந்தான் அவன். அவன் Check out செய்து கொண்டு வெளியில் வருவதற்கும் அவனுக்கான Taxi Driver அவனுக்கான பேர் பலகையுடன் வெளியில் காத்திருப்பதற்கும் சரியாக இருந்தது. அவன் பாரிஸ் வந்த நேரம் அங்கு நல்ல மழைக்காலம் போல வெளியில் மழை பெய்து குளிர் உடலை ஊசியால் குத்துவது போல இருந்தது. Taxi யின் வழியாக பாரிஸ் நகரின் அழகை ரசித்துப் பார்த்துக் கொண்டு சென்றவனின் மனசு பூராகவும் இந்த பாரிஸ் நகரில் அவள் எங்கு இருக்கிறாள், எதேர்ச்சையாக இப்பொழுதே அவளை கண்டு விட மாட்டோமா என்றிருந்தது. அவள் தங்கி இருக்கும் வீட்டின் விலாசம், அவளது காலேஜின் பெயர் என்று எல்லாத் தகவல்களையும் திரட்டிக் கொண்டு தான் அவன் இந்த பயணமே மேற்கொண்டது. ஆனால் அவனாக சென்று அவளைப் பார்க்கும் வரை அவனால் பொறுமை காக்க முடியவில்லை போலும். அதிர்ஷ்டம் அதற்கு முன் கை கொடுக்காதா என்று கன்னத்தில் கை வைத்து பாரிஸ் நகரை ஏக்கமாக பார்த்துக் கொண்டு இருந்தவன் கண்ணில் நிஜமாகவே அவள் பட்டு விட்டாள். இவன் 'வண்டியை நிறுத்து!நிறுத்து!' என்று ஆங்கிலத்தில் கத்த அவன் 'நீ இரங்க வேண்டிய இடம் இதுவல்ல' என்று தன் தாய் மொழியில் கத்த இவன் அவனுக்கு ஆங்கிலம் கற்றுத் தர முயல, அவன் இவனுக்கு French கற்றுக் கொடுக்க முயலவென இருபக்கமும் புரியாத மொழியில் கத்திக் கொண்டு இருக்க, இவன் சொல்வது அவனுக்கு புரியாமல் அவன் சொல்வதது இவனுக்குப் புரியாமல் கடைசியில் ஆருவை தவற விட்டது தான் மிச்சம்!

Agent க்கு எவ்வளவு செலவழித்து இருந்த போதிலும் Taxi Driver க்கு சுத்தமாக ஆங்கிலம் புரியவில்லை. ஆதிக்கு வண்டியை விட்டு வெளியில் குதித்து விடும் அளவிற்கு ஆத்திரம்! ஒரு வழியாக அவன் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு தான் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலை சென்றடந்தான் ஆதி. அது ஒரு புகழ் பெற்ற பெரிய 5 நட்சத்திர ஹோட்டல். அவனது ஹோட்டல் அறை 11 ஆம் மாடியில் இருந்தது. பால்கனியில் நின்று பார்த்தால் Eiffel Tower தெரிந்தது. பால்கனியில் கொஞ்ச நேரம் நின்று மழை தூரிக் கொண்டிருந்த பாரிஸ் நகரின் அழகை சிலாகித்து விட்டு குளிக்கச் சென்றான் ஆதி. குளித்து முடித்து வெளியே வந்து சற்று நேரத்தில் இரவு உணவும் ஒரு பாட்டில் Champagne உம் அவனது அறையைத் தேடி வந்தது. அதற்கு மேல் பொறுமை காக்க முடியாமல் தனது ஃபோனில் ஆருவின் பாரிஸ் நம்பரை எடுத்துப் பார்த்தான். கால் ஆப்ஷனை touch செய்தவன் ஒரு வினாடியில் வேண்டாம் என காலை கட் செய்தான். நேரடியாக அவள் முன் சென்று நிற்க வேண்டும். அப்பொழுது தானே அது Surprise ஆகும். அவனது ஆருவை அவன் காண அவளுக்கு கால் செய்து 'நான் பாரிஸ் வந்துருக்கேன். நம்ம மீட் பண்ணலாமா?' என்று அனுமதி பெற வேண்டுமா என்ன!! என்று தோன்றவும் அவளுக்கு கால் செய்யும் எண்ணத்தை கை விட்டான். உணவுக்கு இடையே Champagne உம் உடலுக்குள் இறங்க அவன் எண்ணங்கள் பின்னோக்கி அவனது இளமைக் காலத்துக்கு சென்றது.

................................................................

எப்பொழுதுமே ஆதியின் பிறந்த நாளுக்கு ஆரு அவனுக்கு ஏதாவது ஒரு Surprise கொடுத்து விடுவாள். சிறு வயது முதல் அவனது பிறந்த நாளுக்கு முதல் முதலில் வாழ்த்து தெரிவிப்பதும் அவள் தான். அப்பொழுது ஆதிக்கு 21 வயது. காலேஜ் சென்று கொண்டு இருந்தான். காலேஜ் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கவென முதல் நாள் இரவே வெளியில் கிளம்பி சென்று விட்டான். இத்தனை வருடங்களில் முதல் முறையாக ஆதிக்கு பன்னிரண்டு மணிக்கு முதல் முதலாக வாழ்த்து தெரிவிக்க முடியவில்லையே என்று ஆருவுக்கு அழுகை அழுகையாக வந்தது. அவன் வீட்டுக்கு வருவான் வருவான் என நெடு நேரம் கண் விழித்துக் காத்திருந்தவள் விடிந்த பின் தான் தூங்கி இருந்தாள். இரவு நண்பனின் வீட்டில் தங்கி விட்டு விடிகாலை 5 மணிக்கு வீடு போய் சேர்ந்தவன் வாசலில் நின்ற மாமியிடம் ஆரு எங்கே என்று கேட்க மாமி தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லவும் அவன் சரியென்று சொல்லி வீட்டுக்கு சென்று குளித்து உடை மாற்றிக் கொண்டு காலேஜிக்கு கிளம்பி விட்டான். ஆரு எழுந்த கையோடு
அம்மா, ஆதி அவளைத் தேடி வந்திருந்தான் என்று சொன்னது தான் தாமதம் ஏன் தன்னை எழுப்பவில்லை என்று சொல்லி ஒரு அழுகை அழுது தீர்த்தாள் அவள். இன்றைக்கு சாயந்தரம் வரை அவனை பார்க்கவே முடியாது போல என எண்ணிக் கொண்டவள் மிகவும் சோர்வாக குளித்து யூனிஃபாரம் மாட்டிக் கொண்டு பஸ்சைப் பிடித்து ஸ்கூலுக்கு கிளம்பினாள்.

பஸ்ஸில் ஏறி அமர்ந்தும் மனது முழுவதும் ஆதியைச் சுற்றித் தான் இருந்தது. பஸ்ஸின் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டே சென்றாள் பாதையில் எங்காவது அவனை கண்டு விட மாட்டோமா என்று. சிவப்பு விளக்கு எறிய சரியாக பஸ் ஆதியின் காலேஜ் முன் traffic signal இல் நின்றது. அவனையே நினைத்துக் கொண்டு இருந்தவள் கண்ணில் அவனும் பட்டு விட்டான். ஆனால் அவனோ பாதைக்கு எதிர்புறத்தில் நின்றான். இவள் ஏறி இருந்த பஸ்ஸோ இந்த புறம் நின்று கொண்டு இருந்தது அதுவும் வாகன நெரிசலில். ஆனால் அவள் கண்ணில் தெரிந்ததென்னவோ அவன் மட்டும் தான். சரியாக பச்சை விளக்கு ஒளிர்வதற்கு ஒரு சில விநாடிகளே இருக்க பாதி ஒடத் தயாரான பஸ்சில் இருந்து வெளியே குதித்தாள் ஆரோஹி. ஸ்ட்டார்ட் செய்யப்பட்ட பஸ்சில் இருந்து குதித்தது கால் பாதத்தை பதம் பார்த்திருக்க அந்த வலியை உணர்வதற்கு முன் signal இல் நின்றிருந்த மற்ற வாகனங்களுக்கு நட்ட நடுவில் நின்று கொண்டு இருந்தாள் அவள். ஒரு புறம் அவள் ஏறி இருந்த பஸ்சின் கண்டாகடர் அவளை ஏதோ சொல்லி திட்டிக் கொண்டே சென்றார். இன்னொரு புறம் ஒரு கார்க்காரனும் ஒரு பைக் இளைஞனும் இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் அவள் மேலலேயே ஏற்றி இருப்பார்கள். பச்சை விளக்கு எரிந்த போதிலும் வாகங்கள் நகர முடியாமலும் சில நகர்ந்து இடி பட தயாராகவும் சிலர் அவளை காது பட கெட்ட வார்த்தையில் வையவும் அவை எதையும் கருத்தில் கொள்ளாமல் கிடைத்த இடைவெளில்யில் புகுந்து 99 இல் உயிர் பிழைத்து பாதையைக் கடந்து ஆதியை நோக்கி ஓடி வந்தாள் ஆரோஹி.

அவள் அருகில் வந்ததும் தான் அவளை கவனித்தான் அவன். அவன் அருகில் சென்றதும் இதுவரை இருந்த மொத்த தைரியமும் ஒரு விநாடியில் காணாமல் போக தயங்கித் தயங்கி தன் கையை நீட்டி அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவள் அவள். அவனைக் கண்டு அவனுக்கு வாழ்த்து தெரிவித்ததன் பின்னர் தான் சுய நினைவிற்கே வந்தவள் அதன் பின் தான் அவளது பாதம் சுலுக்கியதால் ஏற்பட்ட வலியையும் , அவனை பார்ப்பதற்காக அவள் எடுத்த ரிஸ்கின் தீவிரத்தையும் உணர்ந்தவள் இவ்வளவு நேரம் உள்ளுக்குள் அமுக்கி வைத்திருந்த பயம் எல்லாம் ஒட்டுமொத்தமாக மனதினுள் விஸ்வரூபமெடுக்க வாகனங்களிக்கு நடுவே அவள் மாட்டிக் கொண்டு இடிபடுவது போல பிரமை தோன்ற அவன் கைகளிலேயே மயங்கிச் சரிந்தாள் ஆரோஹி. இப்படி அவள் சிறு வயது முதல் அவனுக்காக செய்தவைகள் தான் எத்தனை! ஒன்றா இரண்டா இதை எல்லாம் யோசித்து பார்த்தபடி தூங்கிப் போனான் ஆதித்யா.

ஆதித்யாவுக்கு பாரிஸ் நகரின் முதல் நாள் காலை இனிதே விடிந்தது. கஷ்ட்டப்பட்டு கண்களைத் திறந்து பார்த்தவன் காதில் எங்கேயோ தனது ஃபோன் அடிக்கும் சத்தம் கேட்டது. கண்களை பாதி திறந்த வண்ணம் கட்டில் மீதெங்கும் தன் ஃபோனை கைகளால் துழாவி தேடினான்.

"அது என்ன கட்டில்ல துழாவிட்டு இருக்கே. ஃபோனை Over night charge ல விடாதேன்னு உனக்கு எத்தனை வாட்டி சொல்றது...." என்று சொல்லிக் கொண்டு Charger இல் இருந்த ஃபோனை கழட்டிக் கையில் கொடுத்தாள் அம்மா.

அம்மாவின் குரல் கேட்டது தான் தாமதம் கண்களை நன்கு கசக்கி விட்டபடி எழுந்து கட்டிலில் நேராக அமர்ந்து கொண்டான் ஆதி.

அடையார், சாந்தி நகர், அதே வீடு, அதே அறை, அதே கட்டில், அதே அம்மா!
பாரிஸ் நகரம், 5 star ஹோட்டல், 11 வது மாடி, தூவானம் போட்ட மழை, Champagne, ஆரோஹி.... எல்லாமே வெறும் கனவா.........

"நான் பாரிஸ் போகலையா??" அவன் வாய் தன்னாலே உளறியது.

"முதல்ல வீசா வரட்டும் அதுக்கப்பறமா போய்க்கலாம்" அம்மாவின் குரல் வாசலில் இருந்து நக்கலாக ஒலித்தது.

கண்கள் அறியா காற்றைப் போலே கனவில் வந்து தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரி என்ன
மழை மேகம் நானானால் உன் வாசல் வருவேனே
உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே
கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro