அத்தியாயம் (31)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இப்படியே உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. முதலில் போய் ப்ரித்வி என்ன செய்கிறான் என்று பார்க்கலாம் என கதவைத் திறந்து கொண்டு ப்ரித்வியின் அறைக்குச் சென்றாள் ஆரோஹி. கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த போது ப்ரித்வியின் அறையில் இன்னும் மின்விளக்கு ஒளிர்ந்து கொண்டு இருந்தது. ப்ரித்வி விட்டத்தை பார்த்த படி தலையின் கீழ் கை இரண்டை கட்டிக் கொண்டு படுத்திருந்தான். அவன் அருகில் பல்லவி மௌனமாக அமர்ந்து இருந்தாள். ஆரு உள்ளே நுழைந்ததும் பல்லவி ஆருவை சங்கடமாகப் பார்த்தாள். ப்ரித்வி மேலே இருந்து கண்ணை அசைக்கவில்லை. தானும் சென்று ப்ரித்வியின் கட்டிலில் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தாள் ஆரோஹி. யாரும் ஒரு வார்த்தை பேசாததால் அவளே ஆரம்பித்தாள்.

"என் மேல கோபமா இருக்கிங்களா?" என்றாள்.

பதில் இல்லை.

"So என்னை யாரும் விஷ் பண்ண மாட்டிங்க அப்படித் தானே???" என்றாள்.

அவளாகவே வந்து பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மாட்டீர்களா என்று கேட்டதன் பின்னரும் மௌனமாக இருப்பது தவறு என்று பட முதலில் பல்லவி தான் சுதாகரித்துக் கொண்டு ஆருவை கட்டிக் கொண்டு அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னாள். ப்ரித்வி என்ன நினைத்தானோ அவள் அப்படிக் கேட்டதும் அவனும் எழுந்து அமர்ந்து அவளிடத்தில் கையை மட்டும் நீட்டி ஹாப்பி பர்த்டே என்றான். அவனிடம் கை குலுக்கி விட்டு தயங்கித் தயங்கி ஆரு பேச ஆரம்பித்தாள்.

"அது வந்து ஆதி இங்க வந்ததே எனக்கு தெரியாது. அவன் அர்த்த ராத்திரில என் ரூமுக்கு...." என்று நடந்ததை விபரிக்க ஆரம்பித்தாள் ஆரு.

"You don't have to explain aarohi" என்று சொல்லி அவளை தடுத்தான் ப்ரித்வி.

"இல்லை நான் என்ன சொல்ல வரேன்னா..."

"நீ ஒன்னும் சொல்ல தேவை இல்லை. You don't owe anybody any explanation! எங்களுக்கு உன் மேல எந்த வருத்தமும் கிடையாது. Actually அப்படி சொல்லாமல் கொள்ளாமல் கதவை திறந்துட்டு உன் ரூமுக்குள்ள வந்தது எங்களுக்கு தான் சங்கடமா இருக்கு" என்றான் ப்ரித்வி ஆருவுக்கு ஆதரவாக. ஆனால் அவன் முகத்தை வைத்து அவன் மனதில் உண்மையிலே என்ன நினைக்கிறான் என்பதை அறிய முடியாமல் இருந்தது.

அதற்கு மேல் என்ன சொல்வதென்று புரியாமல் கையை பிசைந்த வண்ணம் கீழே பார்த்த படி அமர்ந்திருந்தாள் ஆரு. பிறந்த நாளும் அதுவுமாக அவளை மனம் வருந்த விடக் கூடாது என்று தோன்ற பல்லவி எழுந்து வந்து அவள் முன் நின்று கொண்டு,

"இங்க பாருங்க ஆருக்கா நீங்க என்னைக்கி இந்த வீட்டுக்குள்ள காலெடுத்து வச்சிங்களோ அன்னைல இருந்து இது உங்களோட வீடு, நீங்க எங்கள்ல ஒருத்தங்க. நீங்க எப்போ வேண்ன்னா எங்க வேண்னா போகலாம். அதே மாதிரி எப்போ வேண்ணா யாரு வேண்னா உங்களைப் பார்க்க இங்க வரலாம். யாரும் உங்களை எதுவும் கேட்கறதுக்கு இல்லை. You are an adult and we respect your privacy. அண்ணா சொன்ன மாதிரி நீங்க யாருக்கும் answerable இல்லை. நாங்க தான் உங்களை first ஆ விஷ் பண்ணப் போறோங்கற ஆசைல வந்தோம், அவரு முந்திக்கிட்டாரேங்கற ஒரு வருத்தம் தான். அதுக்கென்ன காலைல விடிஞ்சதும் நம்ம celebrate பண்ணிட்டா போச்சு! சரி... நீங்க இரண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் கிளம்பிறேன்" என்று சொல்லி ஆருவின் கன்னத்தை தட்டி விட்டு வெளியே சென்றாள் பல்லவி.

ப்ரிதிவிக்கும் அதே எண்ணம் தான் அவன் மனதில் எவ்வளவு வருத்தம் இருந்தாலும் அதை ஆருவுக்கு காண்பிக்க இது நேரம் இல்லை. ஏனென்றாள் இன்று அவளுக்கு பிறந்த நாள். அவள் இன்னுமும் சோர்வாக இருக்கக் கண்டு,

"பப்பி பிடிச்சிருக்கா???" என்றான்.

"ரொம்ம்ம்ம்ப....." என்றாள்.

"என்ன பேர் வெக்க போற???

"Button" என்றாள்.

"ஏது பட்டனா???" இப்பொழுது அவனை அறியாமலேயே அவன் முகத்தில் கொஞ்சம் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

"ஹ்ம்ம்ம்...."

"அது என்ன பேர் பட்டன்?"

"தெரிலை. அதை பார்த்ததும் அப்படி கூப்பிடனும்னு தான் தோணிச்சு. அதான் அதையே Fix பண்ணிட்டேன்" என்றாள்.

நாய் குட்டிக்கு பட்டன் என்று பேர் வைக்கவும் அதற்கு இப்படி ஒரு விளக்கம் கொடுக்கவும் ஆரோஹியால் மட்டும் தான் முடியும். அப்பேர்ப்பட்டவள் இனி தனக்கு இல்லை என்று எண்ணுகையில் உள்ளுக்குள் வலித்தது. அவன் அமைதியானதை உணர்ந்து,

"அது என்ன Button ஓட கழுத்துல???" என்றாள் அவன் கண்ணைப் பார்த்து.

"என்ன??? Belt ஐ சொல்றியா???" என்றான் புரியாதது போல எங்கேயோ பார்த்துக் கொண்டு.

"ஹ்ம்ம்... அதுல ஏதோ எழுதி இருந்த மாதிரி இருந்தது...." என்றாள்.

"ஆமா ஐ லவ் யூன்னு எழுதி இருந்தது. அதுக்கென்ன??" என்றான் விட்டேத்தியாக.

அவன் அதைப் பற்றி பேச விரும்பவில்லை என்பது புரியவே அந்த பேச்சை அத்தோடு நிறுத்தினாள் ஆரோஹி.

"சரி நீ போய் தூங்கு. நாளைக்கு நைட் ஒரு சின்ன பார்ட்டி அரெஞ்ச் பண்ணி இருக்கேன். நம்மளுக்குள்ள தான். அவரையும் வரச் சொல்லு" என்றான்.

"ஹ்ம்ம்...." என்று விட்டு எழுந்து வெளியே செல்லப் போனவளை அவள் பின்னால் நின்று கையைப் பிடித்து தடுத்து, அவள் அவனை நோக்கி திரும்பியதும் அவளை கட்டிப் பிடித்து "Happy Birthday" என்றான்.

அவள் உள்ளே வந்த போது அவளோடு கையை மட்டுமே குலுக்கி அவன் வாழ்த்து சொன்னது தங்களுக்கு இடையே ஏதோ ஒரு இடைவெளி விழுந்து விட்டதைப் போல அவள் மனதை கொஞ்சம் புண்படுத்தி இருக்க இருக்க இப்பொழுது அவன் சகஜமாக கட்டிப் பிடித்து வாழ்த்து சொன்னதும் சந்தோஷமாக உணர்ந்தவள் நிம்மதியாக தன் அறைக்கு சென்று உறங்கினாள்.

மறு நாள் காலை சொற்களால் விபரிக்க முடியாத ஒரு சந்தோஷத்தோடேயே ஆரம்பித்தது ஆரோஹிக்கு. காலையிலேயே வீட்டில் இருந்து வீடியோ கால் வந்தது. வீட்டில் உள்ள அனைவரிடமும் வீடியோவில் பேசி விட்டு Button ஐ கையில் தூக்கிக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தவளை ராதா மோகன் புன்னகையோடு வரவேற்று அவளை வாழ்த்தி ஆசீர்வதித்தார். பல்லவி அவளுக்கு முன்னாலேயே எழுந்து அவளுக்கு Coffee, Breakfast செய்து கொடுத்தாள். ப்ரித்வி ஆபீசுக்கு கிளம்புவதற்கு முன்னதாக சிறிது நேரம் Button ஓடு விளையாடினான். இன்று பிறந்த நாள் என்பதால் ஆரோஹி வழமை போல western அணியாமல் சுடிதார் அணிந்து இருந்தாள். அவள் அழகாக இருக்கிறாள் என்று சொல்லத் துடித்த நாவை ஏனோ பலவந்தமாக கட்டுப்படுத்திக் கொண்டான் ப்ரித்வி.

காலேஜுக்கு கிளம்பி சென்ற போதும் இருப்புக் கொள்ளவில்லை அவளுக்கு. எப்பொழுது ஆதியை சென்று பார்ப்போம் என்று இருந்தது. இப்பொழுது தான் புதிதாக காதல் மலர்ந்திருப்பதைப் போல பரபரத்துக் கொண்டிருந்த மனதை சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தாள். காலேஜில் அவளது தலைமை Chef அவளுக்காக ஒரு கேக்கை அப்பொழுதே உடனடியாக Bake செய்து கொடுக்க அங்கேயும் ஒரு சிறு பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்து முடிந்தது. ஒரு வழியாக காலேஜ் முடிந்ததும் Chef bake செய்த Cake இன் ஒரு பகுதியை ஒரு டப்பாவில் வைத்து எடுத்துக் கொண்டு ஆதி கொடுத்து விட்டு சென்ற விலாசத்தை தேடிச் சென்றாள் ஆரு. அந்த ஹோட்டலை அடைந்து ரிசெப்ஷனில் அவனது அறை எண்ணை விசாரித்துக் கொண்டு மேலே சென்று அவள் கதவைத் தட்ட ஆதிக்கு பதிலாக யாரோ ஒரு பெண் வந்து கதைவைத் திறந்தாள். தப்பான அறைக்கு வந்து விட்டோமோ என ஆரோஹி திருதிருவென முழிக்க அந்த பெண் தான் முதலில் சுதாகரித்துக் கொண்டு,

"ஆதியை பார்க்க வந்து இருக்கிங்களா?" என்றாள்.

என்ன நடந்து கொண்டு இருக்கிறது. ஆதியின் அறையில் யார் இந்த புது முகம் என்று எதுவும் புரியாமல் ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினாள் ஆரு.

"ஆதி குளிச்சிட்டு இருக்கார். ப்ளீஸ் கம் இன்" என்று அந்த பெண் அழைக்க உள்ளே சென்று அந்த அறையின் நடுவில் போட்டிருந்த கட்டிலில் அமர்ந்து அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள் ஆரோஹி. அதற்குள் குளித்து முடித்து வெளியில் வந்த ஆதி ஆருவைக் கண்டதும் கண்கள் பளிச்சிட,

"அட அதுக்குள்ள வந்துட்டியா?? ருத்ரி... நான் சொன்னேன்ல இது தான் ஆரோஹி... ஆரு மீட் ருத்ரி" என இருவரையும் அறிமுகம் செய்து வைதான்.

ஆதி இரு பெண்களையும் பொதுப்படையாகத் தான் அறிமுகம் செய்து வைத்தானே தவிற ஆதிக்கு யார் என்ன உறவு என்று இருவருக்கும் தெரியாது. ஆரு யார் என்பது பற்றிய அக்கறை ருத்ரிக்கு சுத்தமாக இல்லை. ஆனால் ஆருவுக்குத் தான் வெளியில் காட்டிக் கொள்ளாத போதும் உள்ளுக்குள் உருத்தலாக இருந்தது யார் இந்த புது முகம் என்று! ஆனால் ருத்ரி பழகுவதற்கு மிகவும் இனிமையான பெண்ணாக இருந்தாள். ஆருவும் ருத்ரியும் கிட்டத்தட்ட ஒரே வயது பெண்கள் ஆகையால் இருவருக்கும் பேசிக் கொள்ள ஆரம்பித்ததுமே ஒருவரை ஒருவர் பிடித்து போனது. ஆதியை தனிமையில் சந்திக்க வந்த இடத்தில் அவன் அறையில் வேறொரு பெண்ணை சந்தித்ததில் கொஞ்சம் அதிர்ச்சியும் ஏமாற்றமுமாய் இருந்த போதிலும் ருத்ரியின் பேச்சில் அதை மறந்தால் ஆரோஹி. அவள் எடுத்து சென்றிருந்த கேக்கை ஆதிக்கும் ருத்ரிக்கும் கொடுத்து விட்டு இன்று இரவு அவளது பிறந்த நாள் விழாவுக்கு இருவரும் நிச்சயம் வர வேண்டும் எனக் கூறி விட்டு விடை பெற்றுக் கொண்டு ஆரு கிளம்ப ஆயத்தமாக ருத்ரியும் அவளோடு கூட சேர்ந்து எழுந்து கொண்டாள்.

ஆரு யோசனையோடே வீட்டுக்கு வந்த போது ராதா மோகன், ப்ரித்வி மற்றும் பல்லவி என அனைவரும் வீட்டில் இருந்தனர். வீட்டுத் தோட்டத்தில் பிறந்த நாள் விழாவுக்காக ஒரு சிறிய மேடை அமைத்துக் கொண்டு இருந்தனர். ஆருவுக்கு உள்ளே வந்து பார்த்த போது ஒன்றும் புரியவில்லை.

"என்ன அங்கிள் நடக்குது இங்க?? நீங்க இந்த நேரத்துல வீட்டுல என்ன பண்ணிட்டு இருக்கிங்க?" என்றாள் ஆரு. ராதா மோகனின் அருகில் சென்று குழப்பமாக.

"என்னம்மா இப்படி கேட்குற? நம்ம வீட்டுல Function நடக்கும் போது நான் எப்படி ஆபிஸ்ல இருக்க முடியும்?" என்று விட்டு மேடை போடப்படும் இடத்தை நோக்கி விரைந்தார் அவர்.

"ஏன் பல்லவி இத்தனை வீண் செலவு? நீங்கள்லாம் சேர்ந்து என்னை கடன் காரியா ஆக்குறிங்க... I'm not sure whether I deserve all this love..." என்றாள் பல்லவியைப் பார்த்து.

"Of course you do!! நீங்க வரும் வரை இது வெறும் கல்லும் மண்ணும் வச்சு கட்டுன வீடா தான் இருந்திச்சு. இந்த வீட்டை அன்பால கட்டிப் போட்டது நீங்க தான். நாங்க தான் உங்களுக்கு காலத்துக்கும் நன்றி கடன் பட்டிருக்கோம்" என்று கூறி விட்டு அலங்கார வேலைகளை பார்க்க சென்றாள் பல்லவி.

"நமக்குள்ள சின்னதா ஒரு கேக் கட்டிங்னு தானே நீ என்கிட்ட சொன்ன? இப்போ என்ன ஸ்டேஜ்லாம் போட்டு இருக்காங்க? என்னடா நடக்குது இங்க? எதுக்குடா இதெல்லாம்???" என்றாள் ப்ரித்வியிடம் சென்று.

"ஏனென்றாள் உன் பிறந்த நாள்" என்றான் அவன் சிரித்துக் கொண்டு.

நெஞ்சத்தை வெதுப்பகமாக்கி
அணிச்சல் செய்திடுவேன்
மெழுகுப் பூக்களின் மேலே
என் காதல் ஏற்றிடுவேன்
நீ ஊதினால் அணையாதடி
நீ வெட்டவே முடியாதடி
உன் கண்களை நீ மூடடி
என்ன வேண்டுமோ அதைக் கேளடி
கடவுள் கூட்டம் அணிவகுத்து
வரங்கள் தந்திடுமே
இந்நாளே முடியக் கூடாதென்று
உலகம் நின்றிடுமே
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro