அத்தியாயம் (30)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நேரம் நள்ளிரவு இருக்கும் ஆரோஹி நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். யாரோ தூக்கத்தில் அவளை தட்டி எழுப்புவது போலிருக்க தூக்க கலக்கத்தோடேயே ஒரு கண்ணை மட்டும் லேசாக திறந்து பார்த்து விட்டு கனவிலிருந்து விழித்தவள் போல் மறுபடியும் தூங்கினாள். மறுபடியும் அதே உணர்வு இப்பொழுது காதுக்கு மிக அண்மையில் வந்து யாரோ கிசுகிசுப்பாக எதுவோ சொல்லுவது போலிருந்தது. ஏதோ ஒன்று அசாதாரணமாய்த் தோன்றவும் சட்டென்று பயந்து எழுந்து அமர்ந்து கொண்டாள். அருகில் இருந்த உருவத்தைக் கண்டவுடன் அவள் கண்கள் தன்னால் பெரிதாகி அவள் கத்துவதற்கு குரலெடுக்கும் முன் ஒரு வலிய கரம் உடனே அவள் வாயை தன் ஒரு கையால் அழுத்தி மூட,

"Happy Birthday to you
Happy Birthday to you
Happy Birthday dear Aaru
Happy Birthday to you" என்று பாடல் பாடினான் அவன்.

ஓரளவுக்கு நடப்புக்கு வந்து என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று புரிந்தாலும் இன்னும் முழுதாக அதிர்ச்சியில் இருந்து மீழவில்லை அவள். பெரிது பெரிதாக மூச்சுகளை இழுத்து விட்ட வண்ணம் இன்னும் அவன் முகத்தையே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு,

"எப்படி.... வந்த???" என்றாள். வார்த்தை குழறியது அவளுக்கு.

"இப்படித் தான்" என்று பால்கனியை கை காட்டினான் அவன்.

"நிஜமாவா????" என்றாள்.

"உன்னை நேர்ல பார்த்து விஷ் பண்ணனும்னு ஏழு கடல் ஏழு மலை தாண்டி, உன் வீட்டு சுவரு, பால்கனி எல்லாம் எகிறி குதிச்சு வந்திருக்கேன். வேணும்னா ஒரு பெரிய Birthday hug கொடுத்து இது நிஜமான்னு செக் பண்ணி பார்த்துடலாமா???" என்று கூறிய வண்ணம் அவன் அந்த கட்டிலில் முழங்காலிட்டு தன் கைகள் இரண்டை அவளை நோக்கி விரிக்க. அதற்கு மேல் எதுவுமே யோசிக்காமல் அவள் அவன் நீட்டிய கைகளுக்குள் அடைக்கலம் புகுந்து கொண்டாள். அவளை இருக்கமாக அணைத்துக் கொண்ட ஆதி மறுபடியும்,

"ஹாப்பி பொறந்த நாள்டி" என்றான்.

ஆதியும் ஆருவும் இன்னும் ஒருவர் பிடியிலிருந்து ஒருவர் விலகக் கூட இல்லை. அதற்கிடையில் திடீரென்று ஆருவின் அறைக் கதவை Happy Birthday என சத்தமிட்ட படி திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ப்ரித்வியும் பல்லவியும் ஆருவின் அறையில் வேறு ஒரு நபரை அவளோடு அவ்வளவு நெருக்கத்தில் எதிர்பாராத அதிர்ச்சியில், போட்ட சத்தம் எல்லாம் அப்படியே அடங்கிப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு வினாடி திருதிருவென முழிக்க, இங்கு வேறு எதுவும் நடக்கவில்லை என்பதைப் போல ஆருவும் ஆதியும் சட்டென்று விலகிக் கொள்ள அதற்குள் சுதாகரித்துக் கொண்ட ப்ரித்வியோ,

"Sorry guys.... Sorry..." என்று சொல்லி விட்டு பட்டென்று தன் கையிலிருந்த பிரம்புக் கூடையையும் பல்லவியின் கையிலிருந்த கேக்கையும் அருகில் இருந்த மேசையின் மீது போட்டு விட்டு கதவை சாத்திக் கொண்டு அந்த அறையை விட்டு பல்லவியோடு வெளியேறினான்.

ஆருவுக்குத் தான் பெரிய தர்ம சங்கடம் ஆகிப் போனது.

"நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா??" என்றான் ஆதி. அவன் முகத்திலும் உள்ளே வந்த போது தெரிந்த பிரகாசம் சட்டென்று மறைந்திருந்தது.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கட்டிலில் சம்மணமிட்டு அம்ர்ந்து ஒரு தலையணையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டவள்.

"எப்போ வந்த?" என்றாள்.

அவள் இயல்பு நிலைக்கு திரும்பியது அவனையும் தொற்றிக் கொள்ள அவனும் அவளுக்கு எதிரே Comfortable ஆக அமர்ந்து கொண்டு "நேத்திக்கு early morning flight ல வந்தேன்" என்றான்.

"என்ன surprise இதெல்லாம்? யாருமே என்கிட்ட சொல்லலை... உன்னை பார்த்த அதிர்ச்சில எனக்கு heart attack வராமல் இருந்ததே பெரிய புண்ணியம்" என்றாள்.

"அந்த heart க்கு உள்ளயும் நான் தான் இருக்கேன். வெளியவும் நான் தான் இருக்கேன். So அப்படிலாம் ஒன்னும் ஆகாது..." என்றான்.

"ஐயே..." என்றாள் அவனைப் பார்த்து முறைத்த வண்ணம்.

"நீ என் Birthdays க்கு கொடுக்காத Surprise ஆ நான் உனக்கு கொடுத்துட்டேன்? நீ தான் எல்லா வாட்டியும் புதுசுபுதுசா ஏதாச்சு செய்வ.அது தான் இந்த வாட்டி நம்மலும் ஏதாச்சு செய்யலாமேன்னுட்டு...."

"என்னை வெச்சு செஞ்சிட்ட" என்று அவன் ஆரம்பித்த வார்த்தையை இவள் முடிக்க அதற்கு மேல் பொறுக்க முடியாமல் இருவரும் கலகலவென சிரித்தனர்.

"உனக்காக நான் என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு" என்று சொல்லி கட்டிலுக்கு கீழே இருந்து ஒரு சிறிய Ice cream tub ஐ எடுத்தான் ஆதி.

ஆருவுக்கு ஐஸ்கிறீம் என்றாள் கொள்ளை பிரியம். அதுவும் இரவில் ஐஸ்கிறீம் சாப்பிடுவதென்றாள் கேட்கவே வேண்டாம். 'Birthday க்கு கத்தி வச்சு Cake தான் வெட்டணுமா?? Ice Cream ல ஒரு கரண்டி போட்டு சாப்பிட்டா தப்பா??' என்று சொல்லி சிறு வயதில் எல்லாம் பிறந்த நாளன்று நள்ளிரவானால் Ice Cream Tub ம் கையுமாகத் தான் இருப்பாள் அவள். அவளது பிறந்த நாளைக்கு இருவரும் ஒன்றாக எத்தனை Ice cream tub களை காலி செய்திருப்பார்கள். அதை எல்லாம் அவளே மறந்து விட்டிருக்க ஆதி ஐஸ்கிறீம் டப்பா சகிதம் வந்தது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அந்த ஆச்சர்யம் அவள் கண்ணில் அப்பட்டமாகத் தெரிய அவள் நெஞ்செங்கும் அவள் இத்தனை நாள் தம் கட்டி மூடி வைத்திருந்த காதல் தடல்புடலாகப் பரவ அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவன் கொடுத்த ஐஸ்கிறீம் டப்பாவை பிரித்து அவளும் சாப்பிட்டு அவனுக்கும் ஊட்டி விட்டாள். அவன் மறுபடியும் ஹாப்பி பர்த்டே டூ யூ என பாடல் பாடினான். ஒரு வழியாக அந்த டப்பாவை இருவரும் சேர்ந்து தயவு தாட்ச்சண்யம் பார்க்காமல் காலி பண்ணி முடிக்க,

"எங்க தங்கி இருக்க?" என்றாள்.

"அந்த சோகக் கதையை ஏன் கேட்கற? ஆன்லைன்ல தான் புக்கிங் போட்டேன். ஃபோட்டோல பார்க்க நல்ல Five Star மாதிரித் தான் இருந்திச்சு. ஆனால் வந்து பார்த்தால் ரொம்ப மீடியம் தான். ரூம் ஒகே ஆனால் எவனுக்கும் சுத்தமா English தெரியலை. சாப்பாடு ரொம்ப கொடுமை ஆரு. உப்பும் கிடையாது காரமும் கிடையாது மூனு வேளையும் ஏதோ மாவுல உருண்டை மாதிரி புடிச்சு கொடுத்தாங்க. சாப்பாட்டு விஷயத்துல மட்டும் நான் உன்னை தான் நம்பி இருகேன் ஆரு... நான் சென்னை போய் சேரும் வரை நீ தான் என்னை காப்பாத்தணும்" என்று மூச்சு விடாமல் பேசி முடித்தவனைப் பார்த்து நமுட்டு சிரிப்பொன்றை சிரித்தாள் அவள்.

"சரி உன்னோட address கொடு நாளைக்கு காலேஜ் முடிஞ்சதும் நான் வந்து பார்க்கிறேன் உன்னை" என்றாள்.

"அது சரி... ஊர்ல இருக்கும் போது நல்லா மகாலக்‌ஷ்மியாட்டம் இருப்பியேடி.. இங்க வந்து இது என்ன டிரஸ்? Victoria secret model ஆட்டம்?" என்றான்.

அவன் அப்படிக் கேட்டதும் தான் அவள் தனது Robe ஐ அணியாமல் நைட்டியோடு இருப்பதை உணர்ந்தவள் அவசரமாக அருகில் இருந்த Robe ஐ எடுத்து மாட்டிக் கொண்டாள். அவளை வெட்கம் பிடிங்கித் தின்றது. அவனை நேராக பார்க்க முடியாமல் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

"இப்ப மாட்டி என்ன பிரயோஜனம்? ஆனால் நான் எதையும் பார்க்கலைப்பா.. என்று முணுமுணுத்து விட்டு ஒகே ஆரு அப்போ நான் கிளம்புறேன் ஹோட்டல்ல தான் கார் கேட்டு வாங்கிட்டு வந்தேன். டிரைவர் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கான்" என்று சொல்லி எழுந்து கொண்டு அவன் பால்கனி பக்கமாக நடக்க அவளும் எழுந்து கொண்டாள்.

"மறுபடியும் அங்க எங்க போற? வா இப்படியே வாசல் வழியாவே போகலாம்."

"இப்படியே தானே வந்தேன். இப்படியே போய்டுறேன். ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. நீ போய் தூங்கு. குட் நைட்!" என்று சொல்லி அவள் கையை பிடித்துக் கொண்டான்.

அவள் அவன் கண்களையே பார்த்த வண்ணம் ஒரு நிமிடம் அமைதியாக இருந்து விட்டு "நீ வருவன்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கலை. Thank you!" என்றாள்.

அவன் எப்பொழுதும் செய்வது போல அவள் தலையை தடவி விட்டு மிகவும் இலகுவாக தாவித் தாவி கீழே குதித்து "Happy Birthday டி" என்று கீழே இருந்து இன்னும் ஒரே ஒரு முறை கடைசியாக கத்தி விட்டு அவளை நோக்கி கை காட்டி விட்டு Gate ற்கு பின்னால் இருந்த காரில் சென்று ஏறிக் கொள்ள கார் வேகம் எடுத்து பறந்தது.

நடந்து முடிந்த அனைத்தும் ஏதோ கனவு போலிருக்க கண்களை மூடி ஒரு விசை தன் உடலை குலுக்கி விட்டு உள்ளே சென்று தன் கட்டில் மீது மீண்டும் பழைய படி சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள் ஆரு. நினைத்துக் கூட பார்க்காதது எல்லாம் அவசர அவசரமாக நடந்து முடிந்தது போல இருந்தது அவளுக்கு. காலி ஐஸ்கிறீம் டப்பா இன்னுமும் கட்டிலின் கீழே தான் கிடந்தது. ஆனால் அவன் தான் மின்னல் மாதிரி கண் முன் தோன்றிய வேகத்திலேயே மறைந்து விட்டான். ஏன் வந்தான்? எதற்காக வந்தான்? அவளை பார்ப்பதற்காகவே வந்தானா? இந்த ஐஸ்கிறீமை அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று flight பிடித்து வந்தானா? வேறு எந்த பெண்ணும் வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்தானா? வீட்டில் பார்த்த பெண்ணிடம் அவனுக்கு வேறு காதலி பாரிஸில் உண்டென்று கூறி விட்டு வந்தானா?

ஏன்? ஏன்? ஏன்? எதுவும் புரியவில்லை அவளுக்கு! அவளுக்கு அவன் மீதான கோபம் எங்கு சென்றது? அவன் நீட்டிய கைக்குள் இவளும் யோசனைகள் எதுவுமின்றி சென்று சரணாகதி அடைந்தாளே!! அப்படி என்றாள் இவளுக்கு அவன் மேல் கோபமே இல்லையா? இல்லை இவ்வளவு மெனக்கெட்டு வந்திருப்பவன் மீது எப்படி கோபத்தை கட்டுவது என்று விட்டு விட்டாளா? இல்லை இத்தனை நாளாக அவன் மேலே கோபமாக இருப்பதைப் போல தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு இருந்தாளா??? ஆனால் இதை எல்லாம் தாண்டி அவன் இன்னும் கொஞ்சம் நேரம் இங்கேயே இருந்திருக்கக் கூடாதா என்ற எண்ணமே அவள் மனதில் மேலோங்கி இருந்தது.

இந்த யோசனைகளின் நடுவே அவள் கண் தற்செயலாக அவள் அறையின் ஒரு மூலையில் இருந்த அந்த மேசையின் மீது விழ கட்டிலில் இருந்து தாவி குதித்து சென்றவளுக்கு அப்பொழுது தான் ப்ரித்வி மற்றும் பல்லவியின் ஞாபகம் வந்தது. அது ஒரு இதய வடிவிலான சிவப்பு நிறக் கேக். அதன் அருகிலேயே சிவப்பு நிற Gas balloon கள் கைப்பிடியில் கட்டப்பட்டு மூடி வைக்கப் பட்டிருந்த ஒரு பிரம்புக் கூடை. அந்த பிரம்புக் கூடையை திறந்த போது அதனுள் பிறந்து சில நாட்களேயான ஒரு Labrador குட்டி படுத்திருந்தது. அதன் கழுத்தில் ஒரு சிவப்பு நிற பெல்ட் கட்டி இருந்தது. நாய்க்குட்டியைப் பார்த்ததும் ஏனோ ஆருவின் கண்கள் பனித்து விட்டன. அன்று தனது பிறந்த நாள் என்பதை அவளே மறந்து போயிருந்தாள். ஆதி நட்ட நடு ராத்திரியில் எழுப்பியதும் தான் அதுவே அவளுக்கு நினைவில் வந்தது. சொல்லாமல் கொல்லாமல் ஆதி முன்னால் வந்து நின்றது எவ்வளவு பெரிய அதிர்ச்சியோ, அந்த நேரத்தில் பார்த்து ப்ரித்வியும் பல்லவியும் உள்ளே நுழைந்தது அதனிலும் பார்க்க அதிர்ச்சி. ஒரு நிமிடம் ஆருவுக்கு மூலையே வேலை செய்யவில்லை என்பது தான் உண்மை. இந்த Situation ஐ இதை விட better ஆக எப்படி handle செய்திருக்கலாம் என்றும் அவளுக்கு சத்தியமாக புரியவில்லை.

ஆசையாக அந்த நாய்க்குட்டியை தூக்கி எடுத்து முத்தங்களை வாரி இரைத்தவள் குட்டியை தன் முகத்தின் அருகில் கொண்டு வந்த போது தான் அதன் கழுத்தில் இருந்த பெல்ட்டில் I love you என்று எழுதப்பட்டு இருப்பதை கவனித்தாள். அவள் எது நடக்கவே கூடாது என்று எண்ணி இருந்தாளோ அது நடந்து விட இப்பொழுது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தோன்றாததால் நெற்றியில் ஒரு கையை மட்டும் வைத்துக் கொண்டு அப்படியே தரையில் சரிந்து அமர்ந்து கொண்டாள் ஆரோஹி. இது எதையும் அறியாத அந்த குட்டி Labrador தனக்கு ஒரு புதிய இடமும் புது எஜமானியும் கிடைத்த சந்தோஷத்தில் அங்கும் இங்குமாக ஓடி விளையாடிக் கொண்டு இருந்தது.

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வழியா சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம்
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro