KADHAL 19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

CCTV footage இல் விஷ்வாவின் முகத்தை கண்ட அபி அதிர்ச்சியில் இருக்க, அந்த அதிர்ச்சியை கலைக்கும் வண்ணம் அவன் அலைபேசி அதிர்ந்தது. அதை எடுத்தவன் உமையாள் எண்ணில் இருந்து அழைப்பு வர, அதை எடுத்தவன், "ஹலோ" என்று கூற, பதறிய குரலுடன் உமையாள் பேசினாள், "ஹலோ. பெரியப்பாக்கு ஹார்ட் அட்டாக். நாங்க *** ஹொஸ்பிடல்க்கு போய்ட்டு இருக்கோம், சீக்கரம் வாங்க" என்று கூறி அழைப்பை துண்டித்தாள். 

(veetula enna achu nu paaathutu varuvom)

குடோனில் வைத்திருந்த க்ரானைட்ஸ் அனைத்தும் வெடித்து சிதறியதை அவர் அலுவலகத்தில் பணி புரியும் ஒருவர் மூலம் தெரிந்துகொண்டார் கிருஷ்னன். மதியத்தில் இருந்தே அவர் ஏதோ யோசனையாக இருப்பதை கவனித்தாள் உமையாள். அவள் என்ன என்று கேட்க, ஒன்றும் இல்லை என்று மறுத்தார் கிருஷ்ணன். ஏற்கனவே ஒரு முறை ஹார்ட் அட்டாக் வந்தவர் என்பதால், சின்ன அதிர்ச்சியும் ஆபத்தே என்று உணர்ந்த உமையாள் அவர் மீது கவனம் வைத்து கொண்டுதான் இருந்தாள். மாலை 5 மணிபோல அவர் நெஞ்சின் மீது கையை வைத்து, அம்மா என்று முனக, "என்ன என்ன" என்று பதறினாள் உமையாள். அப்பொழுதும் அவர் ஒன்றும் இல்லை என்று மறுக்க, அதை காதில் வாங்கிகொல்லாமல், டிரைவர் ஐ அழைத்து, அவர் உதவியுடன், கிருஷ்ணன் ஐ காரில் ஏற்றி மருத்துவமனைக்கு போக சொன்னால். அவர் முனகுவதை கண்ட ஜானகி, பதற, "பெரியம்மா. ஹார்ட் அட்டாக் வந்தவங்க பதறாம இருக்கனும். நீங்க வந்தா நீங்களும் பதறி, பெரியப்பாவையும் பதற வச்சிடுவீங்க. நீங்க இங்கயே இருங்க" என்று கூறி இவள் மட்டும் கிருஷ்ணனுடன் சென்றாள்.

வழியில் ஒரு aspirin மாத்திரை வாங்கி, அவரிடம் அதை நன்றாக மென்னு முழுங்குமாறு கூற, "இது எதற்கு?" என்று அவர் கேட்க, "இந்த சாப்பிடுங்க பெரியப்பா" என்று மிரட்டினாள் அவள். அவள் கூறியதை போலயே அவரும் வழியில் முனகிய படியே மென்று சாப்பிட்டார். "பெரியப்பா. மூச்சு நல்ல இழுத்து விடுங்க. டென்ஷன் ஆகா கூடாது" என்று அவர் முதுகில் நீவி விட்ட படியே கூறிவந்தாள். 

மருத்துவமனை செல்லும் வழியில் தான் அவள் அபிமன்யுவிற்கு போன் செய்து விஷயத்தை கூறியது. அதே நேரத்தில் வீட்டில் உள்ள ஜானகி அபிக்கு கால் செய்ய, subscriber busy என்று வர, தன் வயிற்றில் பிறவா மகனுக்கு அழைப்பு விடுத்தார்.

சித்து விஷ்வா இருவரும் ஊர்வியை கொல்ல யார் திட்டமிட்டு இருப்பர் என்று யோசித்து கொண்டு இருக்க, ஜானகி சித்துவிற்கு கால் செய்தார்.

"என்ன ஜானு" என்று அவன் கேட்க, "சித்து. அங்கிள் கு நெஞ்சு வலி வந்துடுச்சு பா. உமையாள் தான் ஹாஸ்பிடல்க்கு கூட போயிருக்கா. என்ன வீட்டுலயே விட்டுட்டு போயிட்டா பா. அபிக்கு போன் பண்ண பிஸின்னு வருது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு சித்து. நீ கொஞ்சம் ஹோச்பிடலுக்கு போயி பாருப்பா" என்று ஜானகி வருத்தத்துடன் கூற, "நீ கவலை படாம இரு டார்லிங். நா போய் பாக்குறேன்" என்று போனினை வைத்துவிட்டு, மிருணாளினிக்கு கால் செய்தான். "மிரு ஊர்வி உடைய அப்பாக்கு திடீருனு நெஞ்சு வலி வந்துடுச்சு. உமையாள் மட்டும் தான் அவரு கூட ஹோச்பிடலுக்கு போயிருக்கா. நா அங்க போறேன். ஜானகி அம்மா வீட்டுல தனியா இருக்காங்க. நீயும் ஊர்வியும் வீட்டுக்கு போயி அவங்களுக்கு ஆறுதல் சொல்லுங்க" என்று பட படவென்று பேசிவிட்டு காலை கட் செய்தான். 

"விஷ்வா. கிருஷ்ணன் அங்கிள் க்கு நெஞ்சு வலியாம். நான் போயி என்னனு பாத்துட்டு வரேன்" என்று கூற, அவனை முரைத்தான் விஷ்வா. "என்னடா முறைக்குற?" என்று சித்து கேட்க, "நான் சொல்லல, நீ மாறிட்டேன்னு. பழி வாங்க வந்த குடும்பத்துக்கு உதவி செய்ய இப்படி துடிக்கிற" என்று சீறினான் விஷ்வா. "விஷ்வா. அதை பத்தி எல்லாம் அப்பறம் பேசிக்கலாம். இப்போ நான் கெளம்புறன்" என்று சித்து கூற, "என்னோவோ பண்ணு. காதலி வந்த உடனே அம்மாக்கு பண்ணி குடுத்த சத்தியத்தை மறந்துட்ட நீ" என்று அவன் கத்த, "நா அப்பறம் பேசுறேன் விஷ்வா" என்று மட்டும் கூறிவிட்டு பறந்தான்.

"இந்த காதல் வந்தா மட்டும் எப்படி மாறிடுறானுங்க" என்று அவனுக்குள் சொல்லிவிட்டு, வீட்டுக்குள் சென்றான் விஷ்வா.

இங்கு ஊர்வியும், மிருணாளினி யும் வீட்டுற்க்கு வர, காயங்களுடன் இருந்த ஊர்வியை கண்டு பதறினார், ஜானகி." அதெல்லாம் ஒன்னும் இல்லை அம்மா. கீழ விழுந்துட்டேன். அவ்வளோதான்" என்றாள் ஊர்வி." கொஞ்சம் பார்த்து போயிருக்க கூடாதா" என்று தவித்தது தாய் உள்ளம்.

"இது யாரும்மா?" என்று மிருணாளினியை காட்டி ஊர்வியிடம் கேட்க, "அது உங்க மருமக..." என்று ஊர்வி கூறும் நேரத்தில் உமையாளிடமிருந்து அழைப்பு வர, கவனம் அதில் சென்றதால், ஜானகி ஊர்வியின் பதிலை கவனிக்கவில்லை. தன்னை மீறி உளரிவிட்டதை எண்ணி ஊர்வி உதட்டை கடித்து கொள்ள, மிருணாளினி பாவமாக ஊர்வியை நோக்கினாள். "சாரி..சாரி.." என்று மிருணாளினிக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள்.
"சொல்லும்மா.. அவருக்கு எப்படி இருக்கு?" என்று தன்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட உமையாளிடம் கேட்க, "பயப்படுவதற்கு ஒன்னும் இல்லை. அது சும்மா gastric trouble தான். நாளைக்கு காலையில் பெரியப்பா வீட்டுக்கு வந்துடுவாரு. அபி, சித்து ரெண்டு பேரும் வந்தாச்சு. நான் கிளம்பி வீட்டுக்கு வரேன்" என்று கூறினாள் உமையாள். "சரிம்மா" என்று கூறிவிட்டு ஊர்வியிடம், "அப்பாக்கு ஒன்னும் இல்லையாம்... சித்து, அபி ரெண்டு பேரும் கூட இருக்காங்களாம்" என்று கூற," அம்மா. நான் ஒரு தடவை அப்பாவை பாத்துட்டு வரேன். இவங்க நம்ப ஆபிஸ் ல வேலை செய்யறாங்க.. எனக்கு இவங்கள ரொம்ப பிடிக்கும். உன் பிள்ளைக்கு அதை விட ரொம்ப பிடிக்கும். உமையாள் வர வரைக்கும் அவங்க கூட பேசிட்டு இரு" என்று ஜானகியிடம் கூறி விட்டு, மிருணாளினியை பார்த்து சிரித்துவிட்டு சென்றாள் ஊர்வி."இப்படி போட்டு குடுத்துட்டு, சிரிச்சிக்கிட்டே போறா பாரு.. இவளை.......... ஒன்னும் பண்ண முடியாது.. " என்று அவளுக்குள்ளே புளம்பி தள்ள,"டென்சன் ல உன்ன உட்கார கூட சொல்லலை பாரு. உட்காரும்மா. நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்" என்று கூறிவிட்டு, இவள் வேண்டாம் என்று கூறுவதையும் பொருட்படுத்தாமல் கிட்சனுக்குள் நுழைந்தார் ஜானகி.

பேச்சுத்துணைக்கும் ஆள் இல்லாமல் போனதால், ஹாலில் அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருக்க, அவள் கண்களில் பட்டது, அபியின் சிறு வயது புகைப்படம். இப்பொழுது மிதமான அளவில், பிட்டாக இருப்பவன், சிறு வயதில் கொழுக்கு மொழுக்கென, பார்ப்பவருக்கெல்லாம் கில்லும் ஆசையைத் தூண்டும் பட்டு கண்ணத்துடன் இருக்கும் அந்த குழந்தையை பார்த்தவளின் இதழ்கள் தானாக மலர்ந்தன. அவன் தன்னிடம் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் கேட்டது வேறு ஞாபகம் வந்து அவள் கண்ணங்களை இன்னும் சிவக்க வைத்தது.

அந்த நேரத்தில் சரியாக அங்கு வந்து சேர்ந்தாள் உமையாள்.

மிருணாளினியின் பி்ன் பக்கம் மட்டுமே உமையாளின் கண்ணுக்குத் தெரிய, "யாரும்மா நீ.. எங்க வீட்டுக்குள்ளேயே வந்து, எங்க அண்ணன் போட்டோவை பார்த்து சைட் அடிக்குற..." என்று உமையாள் கேட்க அவள் புறம் திரும்பினாள் மிருணாளினி. அவள் முகத்தை பார்த்ததும் அபியின் செல்போனில் பார்த்த முகம் நினைவில் வர, இழித்துக்கொண்டே.. "அண்ணி.. நீங்க எங்க இங்க.. நான் வேற யாரோன்னு நினைச்சி பேசிட்டன்.. நீங்க வேற கண்ணம் சிவக்க சைட் அடிச்சிட்டு இருந்தீங்க. அதை கெடுத்துட்டேன்" என்று பேசிக்கொண்டே போக, மிருணாளினிக்கு தான் இவள் யாரென்று தெரியவில்லை. ஆனால் இவள் அபியை அண்ணன் என்று அழைப்பதால், இவள் உமையாளாக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்துக்கொண்டாள்.

" உங்களுக்கு இல்லாத உரிமையா... போட்டோ என்ன. நீங்க நேர்ல பார்த்து கூட சைட் அடிக்கலாம். You continue" என்று மிருணாளினியை பார்த்து கண்ணடித்து விட்டு, பெரியம்மா என்னும் கூவலுடன் கிச்சன் நோக்கி சென்றாள்.

"அட பக்கி பயலே... எல்லாருகிட்டையும் ஒலரி வச்சுருக்கானே.. இது அவனுக்கு மேல லூசா இருக்குது. போய் அபி அம்மா கிட்ட என்ன ஒலற போகுதோ.. அண்ணன் தங்கச்சி ரெண்டுக்கும் கண் அடிப்பதில் ஒன்னும் கொறச்சல் இல்ல.." என்று அபி, உமையாள் இருவருக்கும் மனதிற்குள் ஒரு பூசை போட்டாள்....

ஊர்வி மருத்துவமனையின் வரவேற்பில், தன் தந்தை இருக்கும் அறை எதுவென விசாரித்து அங்கு செல்ல, அவள் அந்த அறை வாசலுக்கு செல்லும் போது, சிந்துவின் குரல் கேட்க, தயங்கி நின்றாள்.

அந்த கடத்தல் காரனின் போனில் சித்துவின் குரலில் கேட்ட அதே வார்த்தைகள் கேட்க, வாசலில் மறைந்து நின்று, எட்டிப் பார்த்தவளின் கண்கள் பிரமிப்பில் விரிந்தன...

சித்துவின் குரலில் பேசிக்கொண்டிருந்து அவள் தந்தை. பேசியது, அவரை கோப பார்வையுடன் நோக்கும் சித்துவிடம்..

Avalo dhaan....detailed aa next ud la solluvom.. Ippo kelambunga..

Vote and comment pannitu ponga..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro