KADHAL 18

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மிருணாளினி "so....." என்று தொடங்க, அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் ஊர்வி.

"so . இப்போ என் முன்னாடி உக்காந்துட்டு இருக்கறது ஊர்வி. தமிழ்நாட்டில் முதல் இடத்திலும், இந்திய அளவில் மூன்றாம் இடத்திலும் இருக்கும் "A.M group of companies" உடைய JMD ஊர்வி. அப்படிதானே? one of the most elegible bachelorette of the country. எந்த ஒரு பிரச்சையையும் தீர அலசி, அதற்கான தீர்வை எளிதாக யோசிப்பவர் இல்லையா?"
" மிஸ். ஊர்வி, இந்த கம்பெனி ஆரமித்து ஒரு நிலைக்கு கொண்டு வந்தவர் உங்க அப்பாவா இருக்கலாம். இப்போ இந்த கம்பெனியோட MD யா உங்க அண்ணன் இருக்கலாம். ஆனா இன்னைக்கு இந்த பொசிஷன்ல இருக்கறதுக்கு ஒரு முக்கிய காரணம் நீங்க" என்று ஆள்காட்டி விரலை ஊர்வியை நோக்கி காட்டினாள் மிருணாளினி.

இதெல்லாம் எதற்கு இப்போது சொல்கிறாள், என்று யோசித்த ஊர்வி, "மிருணாளினி. நான் ஏற்கனவே ரொம்ப கொழப்பத்துல இருக்கன். நீங்க வேற இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க?" என்று தலையில் கை வைத்துக்கொண்டு கேட்டாள்.

"எதையும் தெளிவா யோசிப்பவர். எந்த பிரச்சனையாக இருந்தாலும் எளிதாக தீர்வு காண்பவர், பிசினஸ் இல் பெண் புலி. போன வருஷம் உங்க கம்பெனி ரொம்ப பெரிய லாஸ் ல இருந்தப்போ, உங்க யோசனைகளை வைத்து தான் பழைய நிலைக்கு வரமுடிந்தது என்று உங்க அப்பா குடுத்த பேட்டியில் கூறியது, இப்படியெல்லாம் உங்கள பத்தி கேள்வி பட்டுதான் இங்க வந்தேன். உங்கள பத்தி கேள்விப்படும்போதே, உங்கள பாக்கணும்னு ஆசை வந்துச்சு, உங்க கிட்ட இருந்து நெறைய கத்துக்கணும்னு ஆசை இருந்துச்சு. அந்த ஆசைல தான் இங்க வந்தேன்..." என்று கூறி நிறுத்தியவள் இதழ்களில் மென் புன்னகை மலர, "ஆனா இங்க வந்து பார்த்த நிலைமை தலைகீழா இருக்கு" என்று மிருணாளினி கூற "என்ன தலைகீழா இருக்கு?" என்று கேட்டாள் ஊர்வி.

"ஒருத்தர் கண்ணை பாத்தே அவங்க சொல்றது உண்மையா பொய்யான்னு கண்டுபுடிக்கலாம். அப்படியும் அவங்க நடிப்பு அவ்வளவு தத்ரூபமா இருந்தா அவங்க bodylanguage காட்டி கொடுத்துடும். தலைமை பொறுப்பில் இருக்கவங்களுக்கு இருக்க வேண்டிய பேசிக் குவாலிட்டி, ஒருத்தவங்க சொல்றது பொய்யா உண்மையானு கண்டுபுடிக்க தெரியணும்" என்று மிருணாளினி கூற, ஊர்வி சிரித்துகொண்டு "எனக்கு அந்த குவாலிட்டி இல்லனு சொல்லுறீங்களா?" என்று கேட்க,"இல்லை ஊர்வி. அந்த talent உங்க கிட்ட அதிகமாவே இருக்குனு எனக்கு தெரியும். ஆனா இப்போ அது எங்க போச்சுன்னு தான் கேக்குறேன். ஏதோ போன்ல கேட்ட குரலை வைத்து எப்படி சித்து அண்ணா தான் பண்ணிருப்பாருனு நம்புனீங்க. எனக்கு அண்ணாவை பத்தி அவ்ளோவா தெரியாது தான். இருந்தாலும் உங்கள இந்த நிலையில பாத்தது அவரு கண்ணுல அப்படி ஒரு தவிப்பு இருந்துச்சு. அதை வைத்து கண்டிப்பா என்னால சொல்லமுடியும். அவர் அதை பண்ணலன்னு. அந்த நம்பிக்கை ஏன் உங்களுக்கு வரல?" என்று மிருணாளினி கேட்டாள்.

உதட்டில் ஒரு வறட்டு புன்னகையுடன், குளமாக இருக்கும் கண்களுடன் பேச தொடங்கினாள். கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தாலும், அவை வழிந்தோடாமல் இருப்பதில் இருப்பதில் தான் அவளுக்கு எத்தனை கவனம். "நீங்க சொல்றது சரி தான். எதிரில் இருப்பவர்கள் சொல்றது பொய்யா இல்ல உண்மையானு கண்டுபுடிக்கலாம். அது எனக்கும் தெரியும். சித்தார்த்தை தவற வேற யாரு சொன்னாலும் கண்டுபுடிக்கலாம்" என்று ஊர்வி கூற, "அது என்ன சித்து அண்ணாவை தவற?" என்று விளங்காமல் மிருணாளினி கேட்க, "ஏன்னா என் பலவீனம் அவன் தான். ஒருத்தவங்க சொல்றது பொய்யா இருக்குமோனு சந்தேகம் இருந்தால் தான் நம்ப யூகத்துக்கு இடம் குடுக்க முடியும். அவன் சொல்றது பொய்யா இருக்குமோனு என்னால யோசிக்கவே முடியல. அது தான் என் பிரச்சினையே. வேற எந்த விஷயமா இருந்தாலும் யோசிச்சி முடிவு எடுக்குற நான், அவன் விசயத்துல மட்டும் தான் யோசிக்காம நம்பிடுறன். அதான் எனக்கு பயமே.. அவனை நம்பி நம்பி மோசம் போய்டுவானோன்னு" என்று ஊர்வி தெளிவு இல்லாமல் பேச, அவளை பார்த்து விழித்துக்கொண்டு நின்றாள் மிருணாளினி.
அவள் என்ன கூற வருகிறாள் என்று புரியாவிட்டாலும், அவள் காதல் நன்றாகவே புரிந்தது. அவள் இதழில் புன்னகை மலர்ந்தது.
"என்ன மிருணாளினி சிரிக்கரீங்க? " என்று ஊர்வி கேட்க,"என் அண்ணன் ரொம்ப லக்கி தான், இப்படி ஒரு காதலி கிடைக்க. ஆனா நீங்க ரொம்ப பாவம் தான், அவரை நம்பவும் முடியாமல், சந்தேகப் படவும் முடியாமல் ரொம்ப தவிக்கரீங்க" என்று கூற "நான் தவிக்கலாம். ஆனால் அவனுடைய தவிப்புக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்ல. அவனுக்குள் ஏதோ ஒரு இரகசியம் புதைந்து கிடக்குது. அதை அவன் மறைக்கவும் முடியாமல், சொல்லும் முடியாமல் அவன் ரொம்பவே தவிக்கிறான். அதுக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்ல. ஆனால் நான் பயப்படுவதற்கு காரணமே அவனுக்குள் புதைந்திருக்கும் அந்த மர்மம் தான். அந்த வலி ஓட வீரியம், என் காதலின் சக்தியை விட அதிகமாக இருக்குமோ அப்படின்னு ஒரு பயம் தான். இன்னைக்கு நடந்த அந்த கடத்தல் முயற்சி.. அது கண்டிப்பா அவன் பண்ணலன்னு எனக்கு தெரியும்" என்று ஊர்வி கூற, மிருணாளினி வியந்தாள்.
அவள் வியப்பைக் கண்ட ஊர்வி சிரித்துக்கொண்டு," அப்பறம் எதுக்கு அவனை அப்படி ஹர்ட் பண்ணேன்னு கேக்கறீங்கலா? " என்று கேட்க, ஆமாம் என்று தலை அசைத்தாள் மிருணாளினி.
" அவன் இதையெல்லாம் தனியாக செய்யல. அவன் கூட வேற யாரோ இருக்காங்க. இதையெல்லாம் அவன் கூட இருக்கவன்தான் செய்திருப்பான்னு தோணுது. சித்தார்த் மேல பழி போட்டு பேசுனாவாது, அவன் கூட இருப்பவனை பத்தி ஏதாவது ஒளருவான்னு பார்த்தேன். ஆனால் அவன் அவன் வாயே தொரக்கல" என்று ஊர்வி கூற," அண்ணாவோட கடந்தகாலத்தைப் பத்தியும், அவர் கூட இருந்து இதெல்லாம் செய்பவர் பத்தியும், அவர் கிட்டயே கேளுங்களேன்"என்று மிருணாளினி கூற," என் கிட்ட சொல்லக்கூடிய விசயமாக இருந்திருந்தால் அவனே என்னிடம் சொல்லி இருப்பான். அவன் என் கிட்ட சொல்லலேன்னா, அதுக்கு பின்னாடி கண்டிப்பா ஏதாவது காரணம் இருக்கும்" என்று கூறிய ஊர்வியின் நெற்றியில் யோசனை ரேகை படர்ந்தது." என்ன காரணமாக இருக்கும்ன்னு நினைக்கிறீங்க? " என்று மிருணாளினி கேட்க," யாருக்கு தெரியும். நான் வருத்தப்படுவேன்னு சொல்லாமல் இருக்கலாம், என்னால நம்ப முடியாத விசயமாக இருக்கலாம். இல்லை அந்த விசயத்தை சொன்னால், எங்க நான் அவனை வெறுத்துடுவேனோன்னு பயந்து இருக்கலாம்" என்றால் ஊர்வி.

" இவ்வளவு குழப்பத்தோட எதுக்கு இருக்கனும். அவர் கிட்ட ஒரு தடவை கேட்டுட்டா எல்லா பிரச்சனைகளையும் சரி பண்ண யோசனை கிடைக்கும்" என்று மிருணாளினி கூற," அதுவும் சரிதான் மிருணாளினி. கண்டிப்பா கேட்டு தான் ஆகனும். ஆனால் இப்போ இல்லை " என்று ஊர்வி கூற, மிருணாளினியும் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தாள். அவர் இருவருக்குமே அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை, சித்தார்த்தின் கடந்தகால இரகசியங்கள், அவன் வாயாலேயே வெளிப்படப்போகும் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்று.
" மிருணாளினி, நீங்க வேலைக்கு சேர்ந்தே கொஞ்சம் நாள் தான் ஆகுது. அதுக்குள்ள இப்படி அண்ணா அண்ணான்னு உருகரீங்க" என்று ஊர்வி கேட்டு சிரிக்க, மிருணாளினி பெயருக்கு இளித்து வைத்தாலே தவிர, எதையோ மறைக்கிறாள் என்பது அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதை ஊர்வி கவனிக்க தவறவில்லை. ஆனால் அதை பற்றி கேட்கவும் விரும்பவில்லை. சித்து தன்னிடம் மறைப்பதையே அறிய முற்படாதவள், மிருணாளினியிடம் கேட்டு விடுவாளா என்ன?

அங்கு நிலவும் அமைதியை குலைத்தது, மிருணாளினி யின் அலைபேசி சினுங்கும் ஒலி.

******************************
பாம் வெடித்த அந்த குடோனுக்கு சென்ற அபி பார்த்தது எல்லாம் வெடித்து சிதறி எதற்கும் பயன்படாத நிலையில் இருக்கும் கிரானைட் கற்கள் தான். அதை பார்க்கும் போதே அதை செய்தவனை சும்மா விடக்கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டான் அபிமன்யூ.

சந்தேகப் படும் படியாக யாரவது வந்து சென்றார்களா என்று குடோன் வாட்ச்மேனிடம் கேட்க, அவர் இல்லை என்பது போல் தலையாட்டி வெளியே நடக்க, அவன் கண்களில் பட்டது, பக்கத்து நகைகடை வாசலில் உள்ள CCTV கேமரா. அந்த கேமராவின் கவரேஜ் இந்த குடோன் வாசல் வரை இருக்கும் என்று அறிந்திருந்த அபி, அந்த CCTV footage இல் பார்த்தது வாட்ச்மேனிற்கு தெரியாமல், உள்ளே நுழைந்த விஷ்வாவை.

அவன் யோசனையை தடை செய்தது அவன் அலைபேசியின் சினுங்கள்.

அலைபேசியில் கேட்ட செய்தியை கேட்டு இன்னும் அதிர்ந்தான்.

Adutha ud la villian yarunu solliduvanu sonniye... Innum sollalanu keka koodadhu...

Next ud LA solliduvom. Promise.
As usual vote and comment pannitu poidunga.

Raja raja cholan Naan..... Apdinu oru short story potrukan. Adukum Unga support kudunga.

Bye

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro