31

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வரவேற்பு முடிந்து கூட்டம் களைந்து செல்கையில் நேரம் மதியம் மூன்றை தொட்டிருந்தது .காலையில் இருந்து உணவு உண்ணாதது ,காலையில் நேரமே எழுந்தது ,அலைச்சல் அனைத்தும் சேர்த்து மாறனிற்கும் இலக்கியாவிற்கும் பசியை நன்றாக தூண்டி விட்டிருந்தது .அவளின் முகம் சோர்வடைவதை பார்த்தே அவள் பசியில் துவளத் துவங்குகிறாள் என்று அறிந்தவன் கண்ணாலேயே கீழே நின்றிருந்த ராஜாவை அழைத்தான் .

தன் அண்ணனின் விழி மொழியில் மேலே சென்ற ராஜா என்ன என்று கேட்க மாறனோ "லயாக்கு பசிக்குது போலடா வர guesta சாப்டுட்டு ஒக்கார சொல்லு நாங்க சாப்பிட போறோம் "என்று கூற ராஜா தலையை ஆட்டியவன் அவன் கூறிய பணியை செவ்வெனே செய்தான் .பின் பெண்ணும் மாப்பிள்ளையும் உணவருந்த செல்ல அங்கே இவர்கள் நேரத்திற்கு பெரியவர்கள் அனைவரும் நேரமே உண்டிருக்க இளவட்டங்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர் .

இருவருக்கும் இலை போட்டு அனைத்தும் பரிமாறப்பட்ட இளவரசி "ஆங் ஸ்டாப் ஸ்டாப் "என்றாள்.

இலக்கியா பசியில் இருந்தவள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத ஏமாற்றத்தில் பாவமாய் முகத்தை வைத்தவள் "என்ன டி "என்க

அவளோ "அவ்ளோ சீக்ரம் சாப்பிட விட மாட்டோம் ஒரு கேம் இருக்கு ."என்க

மாறன் "என்ன கேம் குட்டிமா ?"என்க

அவளோ "நேத்து மஹாபாரதம் சீரியல்ல இருந்து சுட்டது தான் ஆனா நீங்க ரெண்டு பேரும் சீரியல் பாக்க மாட்டீங்களே .ரெண்டு பெரும் சாப்பிடணும் ஆனா உங்க கைய மடக்க கூடாது .answer தெரிஞ்சவங்க அமைதியா இருங்கடா"என்று கூற இருவருமோ பேந்த பேந்த முழித்தனர்.

இலக்கியா மேலே தூக்கி போட்டு போட்டு போட்டு வாயால் பிடித்துக் கொண்டிருக்க சுற்றி இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர் .அவளோ முகத்தை பாவமாய் வைத்து மாறனை பார்க்க அவனோ ஏதோ யோசித்து விடை தெரிந்தார் போல் தன் இலையில் இருந்த அல்வாவில் கொஞ்சம்
எடுத்து அவள் வாயருகே கொண்டு சென்றான் கை மடங்காமல் .

இலக்கியா ஒரு நிமிடம் விழித்தவள் பின் புதிருக்கான விடை தெரிய வாயை திறந்து வாங்கி கொண்டவள் ஒரு வித வெட்கம் கலந்த சிரிப்பை உதிர்த்தபடி அவனிற்கு அதே போல் ஊட்டி விட போட்டோக்ராபர் அந்த இனிமையான தருணங்களை புகைப்படம் ஆக்கிக் கொண்டார் இருவர் காதிலிருந்து புகை வந்தது அதில் பதிவாகவில்லை பாவம் .

இங்கே இந்த குட்டி கலாட்டாக்கள் நடந்து கொண்டிருக்க ஷிவாவோ காலையிலிருந்தே சந்தனமும் சிகப்பும் கலந்த லெஹெங்காவில் வளைய வந்த சுஜாதாவையே உணவுண்ணும் வேளையில் பார்த்துக் கொண்டிருந்தான் .அவள் எப்பொழுதும் போல் திமிராக உண்ண அவனோ அவளை  முறைத்துக் கொண்டிருந்தான் .

அவள் உண்டுவிட்டு கை கழுவ செல்ல அவனோ அவள் பின்னோடே சென்றவன் கை அவளிற்கு அருகிலேயுயே கை கழுவும் இடத்தில் நின்று அடிக்க குரலில் சீறினான் ."அறிவில்லையா ஒரு டிரஸ் போட்டா அதை எப்படி கட்டணும்னு ?"என்று கேட்க

அவளோ இது வரை ஒருவரும் கடிந்து பேசிடாத தன்னை அவன் திட்டுகிறான் என்று சுர்ரென்று எரிய கோபத்தில் "ஏய் தேவை இல்லாம பேசாத எப்படி டிரஸ் பண்ணனும் பண்ண கூடாதுனு எனக்கு தெரியும் நீ எனக்கு புத்தி சொல்லாத "என்க

அவனோ அவளின் திமிர் தனமான பேச்சில் கோபமுற்றவன் தனது pant பாக்கெட்டிலிருந்து இரண்டு கை பேசியை எடுத்து அந்த கை கழுவும் திண்டின் மேல் வைத்து விட்டு விறு விறுவென்று சென்று விட்டான் .அவன் சென்றதும் அந்த இரு கை பேசியையும் பார்க்க சொல்லி உள் மனம் உந்த அதை திறந்தவள் கண்ணில் கச்சிதமாய் விழுந்தது அவளின் வெற்று இடையையும் பின்னால் அவள் வைத்திருந்த அகலமான opening blouseayum அசிங்கமான கோணத்தில் எடுக்கப்பட்டிருந்த புகைப்படம் .அதை பார்த்தவளிற்கு கைகள் உதறத் துவங்க இருவர் புகைப்படம் எடுக்குமளவு தனது உடை கண்களை உறுத்தி இருக்கிறதே என்று அவமானமாக உணர்ந்தாள் அவள் .

தனது நன்மைக்கு கூற வந்தவனை கடும்சொல் கூறி அனுப்பி வைத்தது வேறு குற்ற உணர்வை கொடுக்க அவனை கண்களாலேயே தேடினாள் அவள் .அதற்கு முன் நலுங்கி இருந்த உடையை சரி செய்வதற்காக ஒரு அறைக்குள் சென்றவள் இடை முழுதும் மறையும் படி அந்த துப்பட்டாவை கட்டிவிட்டு வந்து அவனை தேடினால் .

அவனோ அங்கு மண்டபத்தின் ஒரு ஓரத்தில் நின்று சௌபாக்கியவதியின் பெண் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தான் அவள் உயரத்திற்கு மண்டியிட்டு .அலை அலையாய் புரண்ட கேசம் அவன் அணிந்திருந்த வெள்ளை நிற formal சட்டையும் கருநீல நிற jeansum சிறுகுழந்தையோடு குழந்தையாய் சிரிக்கையில் அவன் கண்ணா குழியையும் சிறிது நேரம் தன்னையும் மறந்து ரசித்தவன் பின் தலையை உலுக்கிக் கொண்டு அவன் அருகில் சென்று நின்று செருமினாள்.

அவன் அவள் வருகையை அவளின் பாவாடை நிறத்தை கண்டே உணர்ந்து கொண்டவன் முகம் இறுக குழந்தையை எடுத்துக்கொண்டு நகர பார்க்க அவளோ "ஒரு நிமிஷம் "என்றாள் .

அதில் நின்றவன் பின்னால் திரும்பாமல் அப்படியே நிற்க அவளோ "அது... அது.... முன்னாடியே என்கிட்ட சொல்லிருக்கலாம்ல திடீர்னு என் டிரஸ் பத்தி வந்து சொன்னா எனக்கு கோவம் தான் வரும் உன் மேல தான் தப்பு "என்க

அவனோ திரும்பியவன் "ஐயோ மஹாராணி நீங்க எல்லாம் எவ்ளோ பெரிய ஆளு நா அப்டி சொன்னது தப்பு தான் "என்று கூற அவளோ ஏதும் கூறாமல் மௌனமாய் தலை குனிந்து நின்றாள் .

அவள் அருகில் வந்தவன் "நானும் பாத்துகிட்டே தான் இருக்கேன் இவ்ளோ arrogance ,ஈகோ , நீ செய்றது எல்லாமே சரி ,நீ செய்றது தப்ப இருந்தா அதையும் அடுத்தவங்க மேல உள்ள தப்பா மாத்திருவ இங்க பாரு நீ எப்படியோ இருந்துட்டு போ கவலை இல்ல "என்க அவளோ அதற்கும் ஏதோ கூற வர அவனோ கையை உயர்த்தி நிறுத்து என்றவன் அவள் சரியாக தாவணியை கட்டி இருப்பதை பார்த்து உதடு வரை வந்த புன்னகையை விழுங்கியவன் "ஆனா எனக்கானது எனக்கானதா மட்டும் தான் இருக்கணும் வேற எவனும் பாத்தா நா சும்மா இருக்க மாட்டேன்"என்று அவள் அவன் கூறியதை உணரும் முன்னே அங்கிருந்து நகன்றுவிட்டான் ஒரு சிறு சிரிப்புடன் .

அவன் திட்டுவது எல்லாம் புரிய குற்றஉணர்வில் இருந்தவள் கடைசியாய் அவன் கூறிய வாக்கியம் புரியாமல் குழம்பினாள் "அவனுக்கானது அவனுக்கானதா மட்டும் தான் இருக்கணுமா ?என்ன ஒளறிட்டு போறான் "என்று நினைத்தவள் குழம்பியபடி சென்று விட

அவள் செல்வதை புன்னகையுடன் பார்த்தவன் "மங்கம்மா நல்லா குழம்புனியா .ஆனாலும் திமிரு ஜாஸ்தி தான் டி உனக்கு ஆனா என்ன அந்த திமிரு தான் உன்கிட்ட எனக்கு புடுச்சதே "என்று புன்னகைத்து விட்டு சென்றுவிட்டான் .(அட சைத்தான் கா பாச்சா 2k கிட்ஸ் இதெல்லாம் ரொம்ப ஓவர் டா )

வரவேற்பு முடிந்து மணமக்களை ஐந்து மணி அளவில் வீட்டிற்கு அழைத்து வந்தனர் .முதல் முதலாய் ஆரத்தி எடுக்க சாந்தி செல்ல மகாவும் வந்து நின்றாள் .சாந்தி அனைவர் முன்னும் மஹாவை "ஏய்ய் கல்யாணம் ஆகி வந்தவங்கள நீ எதுக்கு டி ஆரத்தி எடுக்குற "என்று கேட்க மகாவிற்கு சுருக்கென்று மனதில் வலி எழுந்தது .

தான் கணவனை இழந்தவள் இந்த சடங்குகள் ஏதும் செய்ய கூடாது என்று அனைத்திலும் ஒதுங்கி நிற்பவள் தான் எனில் அதை தாயின் வாயால் அதுவும் அத்தனை பேர் முன்னும் கேட்கையில் அவமானமாக இருக்க கண்களில் கண்ணீர் கூட கரித்தது .அவள் உள்ளே செல்ல போக அவளை தடுத்தது "அண்ணி" என்ற குரல் .திரும்ப இலக்கியா தான் அழைத்திருந்தாள் .

சாந்தியிடம் திரும்பிய இலக்கியா "அத்தை அண்ணியும் சேர்ந்து ஆரத்தி எடுக்கட்டும் "என்க

சாந்தியோ "அது... வந்து "என்று தயங்க

மாறனோ "அம்மா அது என் அக்கா தான் எப்போவும் வாழ்த்த நல்ல மனசு இருந்தா போதும் "என்று கூற இலக்கியாவும் அதை ஆமோதிப்பதை போல் தலை அசைத்தாள் .

அந்த செயலில் மஹாவின் இயல்பான இளகிய குணம் சற்று எட்டிப்பார்த்து இலக்கியாவின் மேல் சற்று மதிப்பை கொடுக்க அவள் வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் தந்த அவளின் மூர்க்க குணமோ அதையும் வக்கிரமாகவே யோசிக்க வைத்தது"இன்னைக்கு வந்தவ சொல்லி நா கேட்கணுமா என்னால முடியாது "என்று நினைத்தவள் அங்கு நிற்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு விறு விறுவென்று உள்ளே சென்று கொண்டாள்.அவள் செயலில் இலக்கியாவிற்கு சிறிது வருத்தம் வந்தாலும் அதை மறுத்தவள் இளவரசி மற்றும் சாந்தியின் கையால் ஆரத்தி எடுக்கப் பட்டு உள்ளே அழைத்து செல்லப்பட்டால் தன் கணவனுடன் .

உள்ளே சென்று விளக்கேற்றி கும்பிட்டவளின் மனக்கண்ணில் தன் அன்னை கூறிய வார்த்தைகளே ரீங்காரமிட்டது .மீனாட்சி "இலக்கியா உன்னோட அடாவடி குணம் எப்பொழுதும் ஒரு கூட்டு குடும்பத்துக்கு சரி வராது டா .சில இடங்கள்ல விட்டு குடுத்து தான் போகணும் .மாறனுக்கு அவரோட குடும்பம் தான் எல்லாமே .அவங்கள அவருக்காகவாச்சு நீ பொறுத்து தான் போகணும் உனக்கு புடிக்கலேனாலும் ."என்று கூறியது நினைவில் வர கடவுளிடம் "இறைவா என்னோட பிறவி குணத்தால் இந்த குடும்பம் உடைஞ்சுற கூடாது அதுக்கு எனக்கு பொறுமையா குடுப்பா "என்று வேண்ட கடவுள் என்ன நினைத்திருக்கிறாரோ .

பின் மாறன் அவளை தன் அறைக்கு அழைத்து சென்றவன் கதவை சாற்றிவிட்டு தனது மனைவியை பின்னிருந்து அணைத்தான் .

இலக்கியா அவன் கைக்குள் வாகாய் அடங்கியவள் "சார் கொஞ்சம் விட்டீங்கன்னா டிரஸ் change பண்ணிக்குவேன் ரொம்ப கசகசன்னு இருக்கு "என்க

அவனோ அவளை தன்னோடு இறுக்கியவன் "அதெல்லாம் பண்ணலாம் கொஞ்ச நேரம் எதுவும் பேசாம இரு "என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அப்படியே நின்றான் .

நேரம் கடந்தும் ஆன் அப்படியே நிற்க அவன் கையிலேயே வலிக்காமல் கிள்ளியவள் "விடுடா எவ்ளோ நேரம் இப்டியே புடுச்சுருப்பா "என்று கேட்க

அவனோ வலிக்கவில்லை என்றாலும் லேசாய் கத்தியவன் "ராட்சசி லைப் லாங் இப்டியே இருக்க சொன்னாலும் இருப்பேன் .இன்னைக்கு அவ்ளோ ஹாப்பியா இருக்கு. மீசை முளைக்க ஆரம்பிச்ச வயசுல இருந்து உன்மேல இந்த கிறுக்கு தனமான காதலும் முளைச்சுருச்சு .ஒன்பது வருஷம் என்னோட ஒவ்வொரு செல்லுலையும் நீ தான் டி நெறஞ்சு இருந்த.இன்னைக்கு கல்யாணம் ஆனதும் அது எப்படி சொல்றதுன்னு தெரில "என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட

அவளோ வெட்கத்தில் சிவந்தவள் "எல்லாம் சரி தான் அப்ரமா உன் சேட்டையை வச்சுக்கோ இப்போ என்ன விடு "என்று விடுபட நெளிய

அவனோ அவள் இடையில் கை வைத்து அழுத்தியவன் அவள் காதிர்கருகில் குனிந்து கிசுகிசுப்பான குரலில் "முடியாது பொண்டாட்டி "என்று கூறி கழுத்துவளைவில் முத்தமிட அவளோ அவன் தொடுகையில் சிலிர்த்து நின்றாள் .

அவளை தன் புறம் திரும்பியவன் இமை மூடி இருந்த அவளின் கயல் விழியில் மெல்ல முத்தமிட்டான் ,பின் அவளின் பிறை நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன் அவளின் இரு புற கன்னத்திலும் முத்தமிட்டான் .அவள் அவனின் ஒவ்வொரு முதத்திலும் சிலிர்த்து கால்கள் தள்ளாட அவனின் சட்டையை பற்றியபடி நின்றாள் .

அவள் நிலையை கண்டு சிரித்தவன் அவள் காதில் குனிந்து "லயாமா ஐ லவ் யூ "என்று கிசுகிசுப்பாய் கூறி அங்கொரு முத்தம் வைக்க பெண்ணவளோ வெட்கம் தாளாமல் ஆடவனவன் மார்பிலே தஞ்சம் அடைந்தாள் .அவளின் வதனத்தை நிமிர்த்தியவன் உலர்ந்து வரைந்திருந்த அவளின் இரு இளஞ்சிவப்பு நிற உதடுகளை கட்டை விரலால் வருடியவன் விரல்கள் ஸ்பரிசித்து உதடுகளை தன் உதடுகளால் உணர எண்ணி அவள் இதழ் நோக்கி இமை மூடி அவள் மூச்சை தான் சுவாசித்தபடி இதழ் நோக்கி குனிந்தான்.

இருவர் இதழும் நூலிடைவேளி இருக்கையில் தன் கை கொண்டு தடுத்த இலக்கியா "உன் சேட்டையை எல்லாம் அப்பறம் வச்சுக்கோ இப்போ வெளிய செல்லாரும் இருக்காங்க விடுடா "என்று கூறி திமிறி அவனிடம் இருந்து விடுபட்டவள் மெல்லிய வேலை பாடு கொண்ட சிஃபான் சேலையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் ஓடிவிட்டாள் .

அவள் சென்றதும் சிரித்தவன் தன் தலையை கோதி விட்டபடி அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடியில் தனது பிம்பத்தை பார்த்தான் அவனின் சேட்டைகள் ஆதாரமாய் அவனின் வெள்ளை சட்டையில் ஆங்காங்கே அவளின் குங்குமம் இருக்க அதை கண்டு சிரித்தவன் சட்டையில் இருந்து டீ ஷர்ட்டிற்கு மாறி அவள் வெளியேறும் முன் தான் வெளியேறிவிட்டான் அவளை சோதித்தது போதும் என்று.

வெளியே வந்தவன் சத்யமூர்த்தி அருகே அமர்ந்தான் .சத்யமூர்த்தி "அது மாறா ஒன்பது மணிக்கு முஹூர்த்தம் அது உன் ரூம்லயே ஏற்பாடு பன்னீரை சொல்லவா "என்று கூற அ

வனோ "அப்பா இங்க எந்த ஏற்பாடும் பண்ணாதீங்க நானும் இலக்கியாவும் இன்னும் ரெண்டு மணி நேரத்துல ஊட்டிக்கு கெளம்புறோம் "என்க

ராஜா அவனை வெறுப்பேற்ற வேண்டி "யோவ் அண்ணா உனக்கே இது நியாயமா இருக்கா உனக்கு முன்னாடி கல்யாணம் முடுஞ்ச நா இங்க சும்மா சுத்திகிட்டு இருக்கேன் உனக்கு இப்போவே ஹனிமூனா "என்று நக்கலடிக்க

மாறனோ சிரித்தவன் "எனக்கொன்னும் பிரச்னை இல்லடா வேணுனா இன்னும் ரெண்டு பஸ் டிக்கெட் எடுத்துறவா ?"என்று கேட்க

ராஜா "எனக்கு டபுள் ok what about you பொண்டாட்டி ?"என்க இளவரசியோ தலையில் அடித்தவள்"லூசு"என்று சிரித்தபடி சென்றுவிட்டாள் உள்ளே .

இரவு உதகைக்கு தங்களின் வாழ்வின் ஆரம்பத்தை நோக்கி பயணித்தனர் இளமாறனும் mrs . இலக்கியா இளமாறனும்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro