32

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


மாறனும் இலக்கியாவும் ஒரு வாரம் உதகையில் தங்கள் தேனிலவில் திகட்ட திகட்ட காதலையும் ஆனந்தத்தையும் அனுபவித்து விட்டு வந்தனர்.இலக்கியாவின் தந்தைக்கு புற்றுநோயால் மேலும் உடல் நலிவடைய தனியாக இருக்க வேண்டாமென்று ராமன் அவர்களை தன்னுடன் அழைத்து சென்று விட்டான் .

நாட்கள் அதன் போக்கில் செல்ல இலக்கியாவின் குணத்தால் சத்தியமூர்த்திக்கு அவள் மேகலாவை போல் செல்ல மருமகளாகிப் போக சாந்தியும் கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் குணத்தால் ஈர்க்கப்படவே செய்தார்.அதற்கு முக்கிய காரணம் அவள் ஒவ்வொரு முடிவிற்கும் மாறனை கேட்பதோடு சத்யமூர்த்தி சாந்தியிடமும் கேட்பது தான்.

தேனிலவு முடித்து வந்த அடுத்த நாள் அவ்வாறே அனைவருக்கும் காபி கலந்து வந்தவள் அனைவருக்கும் கொடுத்தாள்.சத்யமூர்த்தியும் சாந்தியும் சிபியாவில் அமர்ந்திருக்க இருவரிடமும் கோப்பையை கொடுத்தவள் அங்கே நிற்க சத்யமூர்த்தி "என்னம்மா ஏதும் சொல்ல நெனைக்குரியா?"என்றார்

அவள் "அது மாமா நா மறுபடியும் வேலைக்கு போகவா ?"

ஷாந்தி ஏதோ கூற வர அதற்குள் அவரே "உனக்கு விருப்பம் இருந்தா தாராளமா போமா இதுக்கு எதுக்கு என்கிட்ட பெர்மிஸ்ஸின் கேக்குற ?"

அவளோ சாந்தியிடம் திரும்பியவள் "அத்தை உங்களுக்கு ஏதும் பிரச்சன இல்லையே ?"

அவரோ சத்யமூர்த்யை எதிர்த்தால் அரை விழும் என்று "போயிட்டு வா "என்றார் .

இதை கேட்ட மகா வெளியே ஆங்காரத்தோடு வந்தவள் "ஒஹோஒ நீ நோகாம வேலைக்கு போயிட்டு வருவ உனக்கு இங்க நானும் என் அம்மாவும் சேவகம் பண்ணிக்கிட்டு இருக்கணுமா ?இங்க என்ன எங்க தலைல வேலைக்காரிகள்னு எழுதி ஒட்டிருக்கா? "என்று மாறன் இருப்பதை மறந்து கூறி விட

அவனோ இறுகிய முகத்துடன் "லயா"என்றழைத்தவன் அவள் அருகில் வந்து நின்று "ஸ்கூலுக்கு டைம் ஆச்சு கெளம்பு "என்று கூறியவன் பின் மஹாவின் புறம் ஒரு முறைப்பை வீசியவன் "என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த ஒரே காரணத்துக்காக அவளும் ஒன்னும் வேலைக்காரி கிடையாது.முடுஞ்ச அளவுக்கு அவளும் உனக்கு ஹெல்ப் பண்ண தான செய்றா ?தேவை இல்லாம வார்த்தையை விடாத"என்று கூற

மகா "அப்போ எனக்கு இந்த வீட்ல எதையும் சொல்லவும் உரிமை இல்லையா ?"என்று கத்த

அவனோ "என்ன சொல்றதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு அவளை சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல "என்று கூறி விறு விறுவென்று சென்றுவிட்டான் .மகா கோபஜூவாலையில் நிற்க ஷிவாவோ அவளின் இஞ்சி தின்ற குரங்கு போன்ற முகத்தை பார்த்து சிரித்துவிட்டு வெளியேற ராஜாவோ குளிர் சாதனப்பெட்டியில் இருந்து குளிர் பானத்தை எடுத்து ஒரு குவளையில் ஊற்றி மகாவின் கையில் இருந்த காபி கோப்பையை எடுத்து விட்டு அதை அவள் கையில் வைத்தவன் "ரொம்ப சூடா இருக்க இதை குடி கூல் ஆகிடுவா "என்று கூறி இளவரசியை அழைத்துக் கொண்டு வெளியேறினான் .

உள்ளே அறைக்குள் வந்த மாறன் இலக்கியா இன்னும் தயாராகாமல் கோபத்தை கட்டுப்படுத்திய முகத்துடனே இருப்பதை பார்த்து கனிந்தவன் "லயா "என்றழைக்க

அவளோ தன் கோபத்தை மறைத்து முயன்று சிரித்தவள் "இதோ ரெடி ஆகிருறேன் இளா"என்று கூறி ட்ரெஸ்ஸிங் tabelil அமர்ந்து ஒன்றை எடுப்பதும் வைப்பதுமாய் இருக்க அவனோ அவளின் செயலில் சிரித்து அவள் பின்னே வந்து நின்றவன் பின்னிருந்து அணைத்தபடி "ரொம்ப control பண்ணுற போல கோவத்தை வேணுனா என்ன திட்டிருரியா"என்று சிரித்தபடி கூற

அவளோ "ப்ச் போடா உன்ன திட்டி என்ன ஆக போகுது .உன் அக்காவுக்கு ஏன் டா முதல்ல இருந்து என்ன புடிக்கவே இல்ல "என்று கேட்க

அவனோ"அதெல்லாம் ஒன்னும் இல்லடி இளவரசியை கட்டி கொடுக்கணும்னு நெனச்சாங்க அது நடக்கல அதான் இப்டி behave பண்றாங்க சரி ஆயிடும் .என் ஜான்சி ராணியை யாருக்காச்சு புடிக்காம போகுமா "என்று கேட்க

அவளோ சிரித்தவள் "சரி சரி நேரமாச்சு கெளம்பு "என்று அவன் கையை தட்டி விட

அவனோ "ஏய்ய் நில்லு டி "என்று அவளை நிற்க வைத்தவன் "குங்குமம் எங்க ?"என்று கேட்க

அவளோ வகிட்டில் தொட்டு பார்த்தவள் அசடு வழிந்தபடி "ஈஈ மறந்துட்டேன் இப்போ வச்சுருறேன் "என்று கூறி குங்குமச் சிமிழை திறக்க அவனே அதை வாங்கி சிந்தாமல் சிதறாமல் தன்னவளின் வகிட்டில் நிறைந்தவன் வழக்கம் போல் அவள் நெற்றியில் இதழ் பதித்து அவளை பள்ளியில் விட்டு விட்டு வந்தான் .

மகாவிற்கு மனம் ஆறவே இல்லை .தன வார்த்தையை எதிர்த்து பேசிடாத தனது தம்பி இவளிற்காக தன்னை எதிர்கிறானே என்று .இளவரசி ராஜாவை திருமணம் செய்தது முதல் இன்று வரை நடந்த அனைத்திற்கும் இலக்கியாவை காரணகர்த்தா ஆக்கியது அவளின் மனது .இவளை ஏதாவது செய்ய வேண்டமென்று நினைத்துக் கொண்டிருந்தவள் மனதில் மிகவும் வக்கிரமான ஒரு எண்ணம் தோன்ற அதை செயல் படுத்த துவங்கினாள் மகா .

இப்படியே நாட்கள் செல்ல அனைவரின் வாழ்வும் தெளிந்த நீரோடை எனவே சென்று கொண்டிருந்தது .ஏதேனும் சுடு சொல் இலக்கியாவை மகா கூறி விட கூடாது என்பதற்காக இலக்கியா முடிந்தளவு வீட்டு வேலைகள் செய்ய இளவரசியும் அவளுடன் சேர்ந்து வேலை செய்வாள் .பள்ளி பருவத்திலேயே இருவரும் மிகவும் நெருங்கி அக்கா தங்கைபோல் பழக இப்பொழுது மேலும் நெருங்கி சொந்த அக்கா தங்கை போல் விளையாட ஆரம்பித்து விட்டனர் .

முதலில் ஷாந்தி அவளிடம் ஒட்டியும் ஒட்டாமலும் உறவாடிக்கொண்டிருந்தார்.வந்த ஒருவாரத்தில் ஷாந்தி ஐந்து புடவைகளையே மாற்றி மாற்றி கட்டுவதை பார்த்தவள் வேலை செய்துக்க கொண்டிருக்கையில் அவரை கேட்டார் "அத்தை நீங்க ஏன் கட்டுனதையே திருப்பி திருப்பி கட்டுறீங்க ?"என்று கேட்க

அவரோ "எனக்கு கேட்டு வாங்கி துணி உடுத்துறது புடிக்காது அவங்களா வாங்கி தரணும்னு நெனப்பேன் ."என்று கூறி விட அவளோ அதை மனதில் வைத்துக் கொண்டவள் வேலைக்கு சென்றாள் .

மாலை ஐந்து மணி அளவில் மாறன் அவளை அழைத்து செல்வதற்காக பள்ளியின் வாசலில் நிற்க அவளோ கணவனை பார்த்து புன்னகைத்தபடி வந்தவள் அவனின் தொழில் காய் வைத்து அமர்ந்தபடி "இளா கொஞ்சம் போத்திஸ்க்கு போயேன் "என்க

அவனோ தலை கவசம் மாட்டும் முன் "எதுக்கு லயாமா ?"என்க

அவளோ அவன் தலையிலேயே தட்டியவள் "துணிக்கடைக்கு எதுக்கு போவாங்க போ "என்று கூற

அவனோ "இந்த பொண்ணுங்களுக்கு இந்த சேலைங்க மேல அப்டி என்ன தான் பைத்தியமோ எப்போ பாரு எடுத்துகிட்டே இருக்காளுங்க"என்று கூறி அவளை அழைத்து செல்ல அவளோ காதிலேயே வாங்கி கொள்ளாமல் அவனுடன் சென்றாள்.

அங்கே சென்று ஆறு காட்டன் சேலைகளும் நான்கு உயர்ரக சேலைகளும் எடுத்தவள் அதற்கு தானே பணம் செலுத்த அவனோ "இந்த designlaam ரொம்ப பழசா இருக்கே லயா எதுக்கு எடுக்குற ?"

அவளோ அவனை பார்த்தவள் "எனக்கு எடுக்கல அத்தைக்கு எடுக்குறேன் "என்று கூற

அவனோ குழம்பினான் "அம்மாக்கு எதுக்கு இப்போ ?"என்க

அவளோ அவனை இடுப்பில் கை வைத்து முறைத்தவள் "நமக்கும் ,அண்ணிக்கும் நல்ல நல்ல துணி நெறையா எடுத்து குடுத்துருக்கீங்களே நீயும் ராஜாவும் அத்தைக்கு எடுத்து குடுத்தியா ?நாலு புடவை தான் ஒழுங்கா இருக்கு மத்த எல்லாம் பழசா இருக்கு "

அவனோ "அது ... அவங்க ரெண்டு பேரும் கேட்டுருவாங்க டி தேவையானதை வாய தெறந்து அம்மா கேக்காது கவனிக்கல நானும் "என்று சொல்ல

அவளோ முறைத்தவள் "நீயா பார்த்து வாங்கி தரணும் இளா எல்லாத்தையும் வாய தெறந்து கேக்க மாட்டாங்க "என்று கூற அவனும் அதை மனதில் பதிய வைத்துக் கொண்டான் .இருவரும் பில் போட்டு உடைகளை வாங்கியபடி வெளியே வர வாசலில் மல்லிகை பூ விற்றுக் கொண்டிருந்தனர் .

அவளின் கண்கள் ஆசையாய் மல்லிகை பூவினை தொட்டு மீள்வதை பார்த்தவன் பூ விற்க்கும் ஒரு மூதாட்டியிடம் சென்று ஒரு முழம் வாங்கியவன் அவள் தலையில் தானே வைத்து விட அவளோ அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள்.

அவளின் ஆச்சர்யம் கலந்த பார்வையில் சிரித்தவன் "வாய தெறந்து கேக்காமயே புடுச்சவங்க தேவையை நிறைவேத்தணுமாம் ஒரு பெரிய மஹான் சொன்னாங்க "என்று கூறி சிரிக்க அவளோ செல்லமாய் அவன் தோளில் அடித்தவள் அவனுடன் வீடு வந்து சேர்ந்தாள் .வீட்டிற்கு அவர்கள் வந்து சேர்கையில் மணி ஏழை தாண்டி இருக்க மகாவோ இங்கே சாந்தியிடம் குறை வாசித்துக் கொண்டிருந்தாள் .

மகா "பார்த்தியா அம்மா இவ்வளவு நேரமாச்சு ரெண்டு பேரும் எங்க ஊர் சுத்துறானுங்களோ.இவங்க வரதுக்கு நாம எல்லா சேவகமும் பண்ணனுமா "என்று கூற சாந்தியோ எதுவும் கூறாமல் துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தார் .

அவள் அடுத்து பேச துவங்கும் முன் மாறன் வந்து விட இலக்கியா உள்ளே வந்தவள் அத்தை என்று அழைத்தாள் .

சாந்தி குழப்பமாய் அவளை பார்த்தவர் "என்ன இலக்கியா ?"என்று கேட்க

அவளோ சிரித்தபடி அவர் கையில் புடவைகள் இருந்த கவரை கொடுத்தவள் "இதுல 12 சேலை இருக்கு அத்த .அந்த நாலு சேலையும் ரொம்ப பழசாயிடுச்சு அதா தூக்கி போட்டுருங்க "என்று கூறி கொடுக்க

அவரோ கண்களில் சந்தோஷம் மின்ன அதை எடுத்து பார்த்தவர் அனைத்தும் தனக்கு பிடித்த நிறமாய் இருக்க அவளை கனிவுடன் பார்த்தவர் மாறனிடம் திரும்பி "இப்போ வந்த புள்ள இவ எனக்கு என்ன தேவைனு பாத்து வாங்கிட்டு வரா நீயும் இருக்கியே "என்று கூறி அவளை அழைத்து சென்று விட இலக்கிய மாறனை நோக்கி கண்ணடித்தபடி அவளை பார்த்த மாறனோ அட பாவி என்று வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் .

அதன் பின் சாந்தியின் செல்ல பிள்ளையாக மாறிப்போனாள் இலக்கியா. மாறன் ஏதேனும் அவளை கூறினாலும் அவளிற்கு பரிந்து பேசி வரிந்து கட்டிக்கொண்டு வருவது ஷாந்தி தான் .இளவரசியும் அவளும் வேறில்லை என்ற நிலை வந்தது அந்த வீட்டில்.மகாவோ அனைத்தையும் பார்த்து வயிறெரிந்தாலும் விஷமமாய் சிரித்துக்கொண்டாள் அவள் தினம் இரவு குடிக்கும் horlicks கலந்த பாலை பார்த்து .

இன்னும் 6-8  சாப்ட்டர்ஸ்ல முடுஞ்சுரும் கதை

.இது வரைக்கும் ஆதரவு குடுத்த எல்லாருக்கும் ரோம்ப நன்றி பா .எத்தனை பேருக்கு இது புடுச்சுருக்குனு தெரில பட் எனக்கு ஒரு குடும்ப பாங்கான கதை எழுதுன சந்தோஷம் இருக்கு .இந்த கதையோட போக்குல ஏதாச்சு புடிக்கலேனா சொல்லுங்க .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro