உறவு 34

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தன்னை எங்கே அழைத்து செல்கிறான் என தெரியாமல் அவனுடன் வந்தவன், எதற்காக தனது வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான் என புரியாமல் கதிரை பார்க்க, வாங்க சார் உள்ள போய் பேசிக்கலாம் என அழைத்துச் சென்றான்.

எப்போதும் மிகுந்த புன்னகையுடன் வரவேற்கும் செல்வராஜ் இன்று கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு வரவேற்பதிலே விசயம் அவர் காதுக்கு வந்துவிட்டது என தெரிந்து கொண்டான் கதிர்.

அவர் கைகளைப் பற்றியவன் எழிலை அடித்ததற்கு மன்னிப்பைக் கேட்க, மனதில் வருத்தம் இருந்தாலும் அவனை மன்னித்துவிட்டார்.  அசோக் ஐசுவை சமாதனப்படுத்துவதிலே கவனமாய் இருந்ததால் இந்த செய்தி அறியாமல் இருந்திருக்க, விசயம் அறிந்ததும் கொத்தாக அவன் சட்டையைப் பற்றி " என் தம்பிய அடிக்க நீ யாருடா? " என உக்கிரமாய் கத்த ஆரம்பித்தான்..

அவன் சத்தத்தில் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த எழிலும் அவனுக்கு துணையாக இருந்த சாரதாவும் கீழே வந்துவிட்டனர்.. கதிர் செய்த தவறுக்காக அமைதியாக இருக்க, வீங்கிய முகத்துடன் வந்த எழிலைப் பார்த்த பின்பு, அசோக் இன்னும் கத்த ஆரம்பித்தான்..

செல்வராஜ் அவனைத் தடுத்தும் கதிரை அடிக்கப் போக, எழில் அவன் கையை தடித்துப் பிடித்தான்.

" அண்ணா..என்ன பண்றீங்க.. பர்ஸ்ட் அவர்மேல இருந்து கைய எடுங்க" என எழில் கோபமாய் சொல்ல, " டேய்..அவன் உன்னை.. என்னோட தம்பிய அடிச்சிருக்கான்டா..அவன எப்படி விட முடியும்.. உன் தகுதி என்ன..அவன் தகுதி என்ன ? " என அவனும் அதே கோபத்தில் பதில் சொல்ல,

" என்னை அடிக்கிற தகுதி என்னண்ணா? பணமா! அப்போ அந்த பணம் இருக்கவன் எவனா இருந்தாலும் என்னை அடிக்கலாமா? "

" டேய் "

" சும்மா கத்தாதீங்க.. அவர் இடத்துல யார் இருந்தாலும் அப்படிதான் நடந்துப்பாங்க.. அவர் ஒன்னும் உங்கள மாறி சொந்த தம்பியையும் பொண்டாட்டியையும் சந்தேகப்பட்டு என்னை அடிக்கல..தன் பொண்ணு மாறி நினைச்சவளுக்கு ஒரு கஷ்டம்னு நினைச்சு தான் ஆத்திரத்துல அடிச்சிட்டாங்க... அதும் அவர் செஞ்சது தப்புனு தெரிஞ்சதும் மன்னிப்பு கேட்க வந்திருக்கிறார்.. அது போதாதா அவரோட தகுதி என்னனு தெரிஞ்சுக்க.. " என்றான் எழில்

தன்னை எதிர்த்து பேசத் தெரியாதவன் கதிரின் முன்னே தன்னை இழிவாய் பேசுவதை தாங்க முடியாது அவனை பார்க்க " சத்தியமா உங்கள குத்திக் காமிக்கனும்னு பேசலண்ணா.. நீங்களும் யார் யார் எப்படினு தெரிஞ்சக்கனும்னு தான் சொல்றேன்..இப்போ நீங்க அவர அடிச்சது கூட என்மேல இருக்கற பாசத்துலதான்..ஆனா அந்தப் பாசம் என்மேல நம்பிக்கை இல்லாம சந்தேகப்பட்டீங்கள்ள அப்பவே அர்த்தம் இல்லாம போச்சுனா " என்று வருத்தம்  அடக்கப்பட்ட குரலில் கூற தன்னை செருப்பால் அடித்தது போல  இருந்தது அசோக்கிற்கு..

தன் சந்தேக புத்தியால் தம்பியின் பாசத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்து கொள்ளவே சில நொடிகள் தேவைப்பட்டது அவனுக்கு..
செல்வராஜ் அவர்களே பேசித் தீர்க்கட்டும் என தனது மனைவியை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல,
யாரும் என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாகிருந்தனர்.

அசோக் தன் செயலை உணர்ந்து கூனி குறுகி எழிலை நோக்கி " சாரிடா" என வாயைத் திறக்க அவனை மேலும் பேச விடாமல் அவன் வாய்மேல் விரல் வைத்து தடுத்தவன் " வேணாம்னா.. நீங்க திருந்திட்டிங்கனு எனக்குத் தெரியும்.. நானும் உங்கள அப்படி பேசி இருக்க கூடாது.. என்னோட ஹீரோ நீங்க..எங்கிட்ட சாரி கேட்காதீங்க.. என்னால அதை தாங்க முடியாது " என்றதும் அவனைத் தன் தோளோடு அணைத்துக கொண்டவன் " சாரிடா எழில்..ஐ அம் ரியலி சாரி.. ச்சே..நான் போய் எப்புடி அப்படி கேவலமா நடந்துகி்ட்டேனு தெரியல.. சாரிடா.. " என மூச்சு விடாமல் கூறியவன்
கதிரிடம் திரும்பி

" கதிர் நீங்களும் என்னை மன்னிச்சிருங்க.. ஆரம்பத்துல இருந்தே நான் பண்ண எல்லா தப்புக்கும் மன்னிப்புக் கேட்டுக்குறேன்
ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க " என கெஞ்ச ஆரம்பிக்க
" ஐயோ..என்ன சார்..கைய கீழ போடுங்க..விடுங்க சார் அதான் எல்லோரும் சொந்தமாயிட்டோம்ல..நமக்குள்ள என்ன சார்.. " என கைக்கூப்பியபடி இருந்தவனின் கையை இறுகப்பற்றி கூற " பரவால..என்னை மன்னிச்சிட்டேன் அசோக்குனு பேர சொல்லி கூப்டுங்க " என சிறுபிள்ளை போல அடம்பிடிக்க அவனின் இந்த அவதாரத்தை அறிந்திராத கதிரும்,

" சரி மன்னிச்சிட்டேன் அசோக் "  என்றதும் ஒரு நொடி அவனை அணைத்து விட்டு " நான் எங்கப்பாகிட்டயும் மன்னிப்புக் கேட்கனும்..கேட்டுட்டு வரேன்.. வெயிட் பண்ணுங்க.." என்றவன் வேலையாளை அழைத்து அவனுக்கு காபி கொடுக்க சொல்லிவிட்டு மாடியேறினான்.

அவன் தன் வாழ்நாள் எதிரியாக கருதும் கதிரிடமே மன்னிப்புக் கேட்டதிலே அவன் முழுவதும் திருந்திவிட்டான்   ஐசுவின் வாழ்வில் இனி எந்தப் பிரச்சனையும் வராது என்பதை எண்ணி கதிரும் எழிலும் நிம்மதி அடைந்தனர்..

அவன் சென்ற பிறகு எதிரெதிராய் அமர்ந்திருந்த இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.. நிலவிய அமைதியை கலைக்கும் விதமாக கதிர் " எழில் என்னதான் இருந்தாலும் யாரோ சொன்னத கேட்டு உன்னை நான் அடிச்சிருக்க கூடாதுபா.. இப்போ இவ்ளோ நடந்தும் நீ எனக்காக பேசும்போது ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்குது.. என்னை மன்னிச்சிடுப்பா " என்க..
" ஐயோ என்னண்ணா நீங்க.. எங்கிட்ட மன்னிப்பெலாம் கேட்டுட்டு.. உங்களோட அதிகம் பழக்கம் இல்லைனாலும்
நான் நீங்க பார்த்து வளர்ந்தவன்..என்கிட்ட நீங்க சாரி கேட்கனும்னு அவசியமே இல்ல.. ஐயோ..கொஞ்சம் சிரிங்க... அப்போதான் திம்ஸு சொல்ற மாறி உங்களோட கன்னக்குழி அழகா கியூட்டாத் தெரியும் " என சந்தோசமாக கூறிய பின்னரே பேச்சு வாக்கில் உலறிவிட்டதை உணர்ந்து பயத்துடன் கதிரைப் பார்க்க, கதிரோ புன்னகையுடன் அவனைப் பார்த்தான்.

" அண்ணா... " என அவன் இழுக்க,
" பரவால எழில்.. கனிம்மாவ உன்னை விட யாரும் நல்லா பார்த்துக்க முடியாது.. அவளோட செலக்சன் எப்பவுமே தப்பா இருக்காது.. " என்றதும் " அப்போ நீங்க எங்க காதல ஏத்துக்கிட்டிங்களா.. திம்ஷு..ம்ச்.. சாரி கனி மேல உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையே..  " என உற்சாகத்துடன் கேட்க,

" கண்டிப்பா இல்ல.. அவ விளையாட்டுத்தனமா  பேசுனாலும் அவ சரியாத்தான் முடிவெடுப்பா.. அவ
என்னோட குழந்தை.. அவ எது ஆசப்பட்டாலும் அதை நிறைவேத்ததான் நான் இருக்கேன்.. அவளோட சந்தோசம்தான் என்னோட நிம்மதியே.. நான் இங்க இப்போ வந்தது கூட உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டு கனிம்மாவ சமாதனப்படுத்த தான்..நான் செஞ்ச தப்பால அவளும் நிம்மதி இல்லாம இருக்கா... அவ முகத்துல பழையபடி சிரிப்ப பார்க்கறதுக்கு நான் எவ்வளவு இறங்கிப் போனாலும் பரவால...அவளோட சந்தோசம்.. இப்போ உன் கைல தான் இருக்கு.. அவள பத்திரமா பார்த்துக்குவல எழில் " என உணர்ச்சி வசப்பட கதிர் கூற அவனையே பார்த்திருந்த எழில் அவன் கேள்விக்கு பதிலளிக்காமல்

" எனக்கு திம்ஷு மேல ரொம்ப பொறாமையா இருக்குண்ணா பேசாம நான் அவளா இருந்திருக்க கூடாதான்னு... இப்ப தெரியுது அவ ஏன் நிமிசத்துக்கு நிமிசம் உங்க பேரையே சொல்றான்னு.." என்றான் அவர்களின் அன்பைப் பார்த்து பிரமித்து..

அந்த நேரம் மாடியிலிருந்து சிரித்தவண்ணம் செல்வராஜும் அசோக்கும் இறங்கி வந்தனர்..

" மனசு ரொம்ப நிறைவா இருக்கு கதிர்.. எம்பசங்க எனக்கு திரும்ப கிடைச்ச மாறி இருக்கு.. அடுத்து என்னோட சின்ன மருமகளும் இங்க வந்துட்டான்னா ரொம்ப சந்தோசமா போயிடும் " என்றவரை கதிரும் எழிலும் அதிர்ச்சியாக பார்க்க

" அசோக் சொல்லிட்டான்பா.. கனிக்குட்டியும் எழிலும் விரும்பறத " என்றார் அதில் தனக்கும் சம்மதம் என்பது போல,

" சார் அதுவந்து... " என கதிர் இழுக்க

" கல்யாணம்லாம் அவ படிப்பு முடிச்சதுக்கு பிறகு பண்ணிக்கலாம்.. இப்போ சின்னதா தட்டு மட்டும் மாத்திக்கலாம்பா " என ஆசையாக சொல்ல

" சார் நான் இதுல எந்த முடிவும் எடுக்க முடியாது.. எங்க அக்காவும் மாமாவும் சொல்றதுதான்..அவ படிக்கட்டும் சார்.. அதுக்கு பின்னாடி வேணா இதை பத்தி பேசிக்கலாம்.. " என்றவன் சிறிதுநேரம் பேசிவிட்டு அசோக்கையும் எழிலையும் அழைத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான்..

தனதறையில்  புத்தகத்தை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தவளின் காதில் கதிரின் பைக் சத்தம் விழுக, அவன் வீட்டிற்குள் காலடி வைத்த அடுத்த நொடி அவன் கால்களை இறுக பற்றியிருந்தாள்..

" மாமா.. நான் தெரியாம தப்பா பேசிட்டேன் மாமா.. என்னை மன்னிச்சிடு.. இனிமே நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்.. ஹாஸ்டலுக்கு கூட போயிடறேன்..எங்கூட பேசாம மட்டும் இருக்காத மாமா.. அவர்கிட்ட கூட நான் இனி பேச மாட்டேன்.. எனக்கு நீ போதும்.. அம்மா அப்பா ஐசு யாரும் வேணா.. என்ட்ட பேசு மாமா.. நான் இனிமே நல்லா படிக்கிறேன்.. கிளாச கட்டடிக்க மாட்டேன்.. ஆனா எங்கிட்ட பேசாம மட்டும் இருக்காத..என்னால தாங்க முடியல...செத்தர்லாம் போல இருக்கு.. பேசு மாமா..பேசு மாமா " என அவள் பாட்டிற்கு அவன் காலடியிலே படுத்து அழுதவாறே இருக்க அவளை தூக்கி நிறுத்தி தன் மார்போடு அணைத்துக் கொண்டவன்,

" அழாதடா..நான் பேசறேன்.. நான் உங்கிட்ட பேசாம எங்க போக போறேன்.. நான் தா தப்பு பண்ணிட்டேன்.. நீ சரியாதான் பேசுன.. அழுகாதடா.. இங்க பாரு என்னை பாரு.. " என இன்னும் புலம்பியவாரே இருந்த கனியிடம் ஆதரவாய் தலையை கோதியபடியே கூற,

" இல்ல.. நீ இன்னும் என்னை மன்னிக்கல.. அதான் கனிம்மான்னு என்னை கூப்ட மாட்டிங்குற.. என்னை கனிம்மான்னு கூப்புடு"

அவள் அன்பில் கண்கள் கலங்க
" கனிம்மா " என்று கதிர் அழைக்க
" இன்னொரு தடவை"
" கனிம்மா.. கனிம்மா ..
கனிம்மா " எனக் கூறியவன் மீண்டும் அவளை இறுக அணைத்துக் கொண்டான்..

வாசலில் நின்றிருந்த எழிலும் அசோக்கும் அவர்கள் அன்பை பூரித்துப் போய் பார்த்திருக்க, ஐசு, கந்தன் மற்றும் தேவிதான் என்ன
பிரச்சனை..என்ன நடந்தது..எதற்கு இந்த மன்னிப்பு என புரியாமல் விழித்தனர்..

அசோக் நடந்தவற்றை எடுத்துரைக்க, தன் மாமன் தனக்காக அனைவரிடத்திலும் மன்னிப்புக் கேட்டிருக்கிறான் என தெரிந்ததும் மீண்டும் அழுகையை ஆரம்பித்தாள் கதிரின் கனிம்மா.. அவனுக்காக தனது காதலையும் தூக்கி வீசிட நினைத்த கனியின் அன்பை எண்ணி மனம் குளிர்ந்து போனான் கனிம்மாவின் மாமா..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro