உறவு 35

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கதிரும் கனியும் உணர்ச்சிக் கடலில் மூழ்கியிருக்க, ஐசுவும் தேவியும் உணவு தயாரிக்க சமையலறைக்குச் சென்று விட்டனர்..
எழில் கனி தன்புறம் அப்போது திரும்புவாளா.. இப்போது திரும்புவாளா என ஏக்கமாய் கனியையே பார்த்திருக்க அவளோ அவன் பார்வை தன்மீது படர்வது புரிந்தாலும் நேற்று கதிர் அவனை அடித்த பிறகு அவனை வெளியே கூட்டி வந்த கனியிடம்
" இனி நாம எப்பவும் ஒன்னு சேர வேணா கனிமொழி..அதான் எல்லார்க்குமே நல்லது.. நம்ம காதலால எல்லார்க்கும் தர்ம சங்கடம்தான்.. நாம பிரிஞ்சரலாம் " என்று சொல்லி விட்டு தன்னை திரும்பிக்கூட பாராமல் சென்றதை எண்ணி அவன் இருக்கும் திசைப்புறம் கூட திரும்பவில்லை..

அசோக்கின் மன்னிப்புக் கேட்கும் படலம் கந்தனிடத்திலும் தொடர்ந்தது..

" நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் அங்கிள்.. ஐசு எவ்ளோ தடவை எங்கிட்ட எடுத்து சொல்லியும் கதிர் மேல இருக்குற வன்மத்தால நான் செத்துருவேனு சொல்லி பிளாக் மெயில் பண்ணி அவள கல்யாணம் பண்ணிட்டேன்.. உங்க குடும்பத்த அத்தனை பேர் முன்னாடியும் தலைகுனிய வெச்சிட்டேன்.. எனக்கு ஐசு மட்டும் போதும்னு சுயநலமா யோசிச்சிட்டேன்.. ஆனா அவளோட உறவுகளும் முக்கியம்னு எனக்கு லேட்டாதான் புரிஞ்சுது.. நான் இத்தனை தப்பு பண்ணியும் உங்ககிட்ட நேரடியா மன்னிப்பு கூட கேட்டதில்ல.. ஆனா நீங்க அதைப் பத்தி பெரிசா எடுத்துக்காம பொண்ணு வாழ்க்கைக்காக பொறுமையாவே இருந்திட்டிங்க..உங்க முன்னாடி நான் ரொம்ப சின்னவனா போயிட்டேன் அங்கிள். உறவுகளோட அருமை எனக்கு இப்போதான் புரியுது.. என்னை விட சின்னவன் எழிலுக்கு இருக்குற அறிவும் பொறுமையும் எனக்கு இல்லாம போயிடுச்சு.. ஐ அம் சாரி அங்கிள்.. ஐசுவ இனிமே நான் பத்திரமா பார்த்துக்குவேன் .. என்னை நம்புங்க.. " என்றான் மிகுந்த வருத்ததுடன்..

தன் மகள் வாழ்வில் இனி எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உணர்ந்து " ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை.. நீங்களும் என் பொண்ணும் சந்தோசமா வாழ்ந்தாலே எங்களுக்குப் போதும்பா " என்றார் சிரித்த முகத்தோடு..
இவர்கள் பேசி முடித்த பிறகு தேவி அனைவரையும் இரவு நேர சாப்பாட்டிற்கு அழைக்க, ஐசு " எல்லோரும் ரொம்ப நாள் கழிச்சு ஒன்னு சேர்ந்திருக்கிறோம்ல..நாமயேன் காத்தோட்டமா  மொட்டை மாடியில உட்கார்ந்து ஜாலியா  நிலாச்சோறு சாப்பிட்டா என்ன? என்க என்றதும்  அனைவரும் சரியென்று தலையாட்டினர்..

தேவி அனைவருக்கும் சாதத்தை உருண்டை பிடித்து கையில் கொடுக்க, கனி மட்டும் தன்னை அவர் அடித்ததற்காக அவரிடம் பேசாமல் முரண்டு பிடித்துக் கொண்டு தானும் சாப்பாட்டை ஒரு தட்டில் போட்டு தனியாக சாப்பிட ஆரம்பித்தாள்.

தேவி அவளை முரைக்க அதனை கண்டு கொள்ளாதவள் கதிருக்கும் அசோக்கிற்கும் மட்டும் உருண்டைகளை கொடுத்து விட்டு தன் வேலையை செய்ய ஆரம்பித்தாள்..
அனைவரும் போதுமென்று எழ, எழில் மட்டும் இப்படி சாப்பிட்டு பழக்கம் இல்லாததால் கீழே சிந்தாத வண்ணம்
மெதுவாக சாப்பிட, அவன் திணறுவதைப் பார்த்து
அடுத்த வாய் அவன் கையில் கொடுக்காமல்
தேவியே  ஊட்டி  விட்டார்..   அவனுக்கு இதெல்லாமே புதிது.. ஆனந்தத்தில் கண்கள் கலங்கிய வண்ணம் அவன் சாப்பிட, அவனை தற்போதுதான் பார்த்த கனிக்கு பாசத்திற்கு ஏங்குபவனைப் பார்த்து ஏதோ செய்ய
அவனை தானும் நோகடிக்கிறோமே என உணர்ந்து

" ஏம்மோ.. போ.. உன் பிள்ளைய தவிர எல்லாத்தையும் மடில தூக்கி வெச்சு கொஞ்ச வேண்டியது.. என்னை மட்டும் துவைக்க வேண்டியது..போதும் நீ சாப்பிட ஆரம்பி..என்கிட்ட ரெண்டு வாய் சோறு மிச்சமாகிடுச்சு.. என்னால கீழலாம் கொட்ட முடியாது.. இதை இவங்களுக்கு நான் கொடுத்துக்கறேன்.. நீ சாப்பிடு.. " என்று சொன்னவள் அவன் தாவாயை திருப்பி வாயில் சோற்றைத் திணிக்க ஆரம்பித்தாள்..

" ஏண்டி அந்தப் புள்ளைய அந்த பாடு படுத்துற.. " என்றவர் அவள் முரைப்பில் சாப்பிடத் துவங்க, அவனுக்கு சாப்பாட்டை ஊட்ட துவங்கினாள்..
அவன் கண்ணாலே மன்னிப்பைக் கேட்க அவளோ ' ஏதோ..இந்த தடவை விடறேன் ' என்றவாறு வேலையைத் தொடர்ந்தாள்.

இதுதான் கனி.. கோபப்பட்டு ரோசத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் பாசத்தைக் காட்டி,
இதுதானே என்ற சாதாரண விசயத்தை பெரியதாக்கி சண்டைப்போடும் சாகசக்காரி..அவளைப் பார்த்தவாறே உண்ட
எழிலுக்கு பசியோடு காதலும் நிரம்பியது..
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄தனது தந்தையின்
சத்தம் கேட்டு கீழே வந்த தர்ஷினி வழக்கம் போல தந்தையின் எதிரே பதுங்கி நடுங்கி நிற்க, ஏனோ அபியும்  வீட்டிற்குள் செல்லாமல் வாசலில் நின்றான் .
அவளின் தந்தையோ அவளை வெறித்து நோக்கியவாறு "ஒழுங்கா படிச்சு கவர்மென்ட் வேலைக்கு போகவும் வக்கில்லை... சொன்ன எதையும் கேட்கறதும் இல்ல.. வாழ்க்கைல இந்த ஒரு தடவையாச்சும் பெத்தவன்னு ஒரு மரியாதைக்கு நா சொல்றத கேளு...கேட்ப தான.. "என்று அதிகாரமாய்  சொல்ல அவளோ பயத்தில் தானாக மண்டையை ஆட்டினாள்.

அவள் கையில் ஒரு கவரை கொடுத்தவர் "இதுல ஸ்னாக்ஸ் பூ இருக்கு. நாளைக்கு உன்ன பொண்ணு பார்க்க வராங்க "என்க
அவளோ சட்டென கலங்கிய கண்களுடன் அவரை நிமிர்ந்து பார்க்க அவரோ அவளின் அதிர்ந்த முகத்தை கவனியாதவர் போல, மேலும் தொடர்ந்து "மாப்ள கவர்மேன்ட் ஆபிசர்.. கை நெறய சம்பளம் நல்ல குடும்பம்.. பையனுக்கு உன்னை புடுச்சுருக்காம் நாளைக்கு வருவாங்க .ஒழுங்கா பொம்பள புள்ளய லட்சணமா நாளைக்கு அவங்க முன்னாடி என் மானத்த வாங்காம வந்து நில்லு.இப்போ நீ போகலாம் "என்க,
அவள் கண்ணீர் நிறைந்த கண்களுடன் "ஆனா அப்...." என்று ஏதோ கூற வர அவரோ அவளை திரும்பி பார்த்தவர் "நா உன்ன தூங்க சொன்னேன் பிரியா "என்று விட்டு உள்ளே சென்று விட்டார் .
தன் கையிலிருந்த கவரையே  வெறித்து பார்த்தவள்  கீழே அமர்ந்து அழ
ஆரம்பித்தாள்.
இந்த செய்தியை கேட்ட அபிக்குமே இது அதிர்ச்சியாக தான் இருந்தது

துக்கம் தொண்டையை அடைக்க தனது வீட்டிற்கு வந்தவன் தனது கட்டிலில் அமர்ந்து என்ன செய்வது என்று யோசித்து இனி என்ன ஆனாலும் சரி என்று ஒரு முடிவோடு தூங்கிப் போனான்.
இங்கு தர்ஷினியோ கண்கள் வீங்கும் அளவு அழுது தீர்த்தவள் பின் நாளை என்ன நடந்தாலும் தான் சம்மதம் தெரிவிக்க போவதில்லை என்ற நினைப்போடு உறங்கி போனாள்.

அடுத்த நாள் காலை எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு  வெளியே வந்தவள் அவளது தந்தை பேப்பர் படித்துக்கொண்டிருப்பதை பார்த்து என்ன ஆனாலும் சரி.. இன்று இவரிடம் பேசா விட்டால் தன் வாழ்வில் மகிழ்ச்சி என்றும் இராது என்று முடிவு செய்து 
" அப்பா " என அழைக்க வாயெடுக்க

அதற்குள் வாசலில் ஒரு பெண்மணியின் குரல் கேட்டது "நாங்க உள்ள வரலாமா ?"என்று

இருவரும் ஒரே நேரத்தில் திரும்பி பார்க்க அங்கே அபி அவனது தாய் துளசி மூவரும் நின்றிருந்தனர். அபி ஒரு இளநீல சட்டை அணிந்து கீழே கருப்பு பார்மல் பேண்ட் அணிந்து வந்திருக்க துளசியின் கையிலோ ஒரு தட்டு இருந்தது. அவர்களை புரியாமல் பார்த்த விருமாண்டி பின் தர்ஷினியை திரும்பி முறைத்துவிட்டு, வந்தவர்களை வெளியே செல்ல சொல்ல கூடாது என்பதற்காக அவர்களை உள்ளே அழைத்தார் .

தர்ஷினியின் தந்தை அவர்களை உள்ளே அழைக்க மூவரும் உள்ளே வந்து அமர்ந்தனர். பின் தர்ஷினியிடம் திரும்பிய பார்வதி
"எப்படிம்மா இருக்க ?"என்று கேட்க அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை மட்டும் ஆட்டி வைத்து  "இருங்க ஆண்ட்டி காபி போட்டு எடுத்துட்டு வரேன் "என்று ஆள விடுங்கடா சாமி எனும் ரீதியில் சமயலறைக்குள் புகுந்து கொள்ள துளசியும் அவள் பின்னோடே சென்று விட்டாள் .

சற்று நேரம் அமைதி நிலவ அபியின் தாயாரே பேச்சை ஆரம்பித்தார்.. "வந்து தர்ஷு அப்பா... உங்க பொண்ண என் பையனுக்கு பொண்ணு கேட்கலாம்னு வந்துருக்கேன் .உங்களுக்கே தெரியும் அபியும் தர்ஸுவும் சின்ன வயசுல இருந்து  பிரண்ட்ஸ்...
நம்ப பசங்களும் ஆசை படறாங்க..அவுங்க விருப்பத்த நாமதான நிறைவேத்தனும்..
அபியும் நல்ல வேலைல தான் இருக்கான்.. வெளிய நீங்க பொண்ண குடுக்குறதுக்கு என் பையனுக்கே கொடுக்கலாமே ராணி மாறி வச்சு பாத்துப்பான்" என்று தன்  மகனின் மீதுள்ள நம்பிக்கையில் கூற

பார்வதி பேச பேச முகம் இறுகியவரோ
"அபி ரொம்ப நல்ல பையன்தான்.. உங்க குடும்பமும் ரொம்ப நல்ல குடும்பம் தான்..உண்மைய சொல்னும்னா அவன மாறி ஒரு பையன் எனக்கில்லையேனு ஏங்கி கூட இருக்கேன்.. " என்றவர் ஒரு நொடி நிதானித்து
" நான் ஒத்த பிள்ளைய வெச்சிருக்கேன்மா..நாளைப்பின்ன..
எனக்கு எதாச்சும் ஆனா பிறகு அவளுக்கு ஒன்னுனா தட்டி கேட்க, கூடப் பொறந்தவுங்களோயோ நெருங்கன சொந்தங்களையோ கடவுள் எங்களுக்கு கொடுக்கல.. குறைஞ்சது அவளோட உத்யோகமாச்சும் நிரந்தரமா இருந்துதுன்னா அவ வாழ்க்கைல எந்த சூழ்நிலைலும் தாக்குப் பிடிச்சிருவான்னு சொல்லிதான் அவளுக்கு படிப்பு வராதுன்னு தெரிஞ்சும் படிக்க சொல்லி டார்ச்சர் பண்ணேன்..எப்படியாச்சும்
  என் பொண்ண கவர்மேன்ட் ஆபிசர் ஆக்கணும்னு ரொம்ப ஆச பட்டேன்..ஆனா அவ அதை நிறைவேத்தல..அதான் கல்யாணம் பண்ணி தராதாவது கவர்மேன்ட் உத்யோகத்துல இருக்குறவனுக்கு கட்டி கொடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.ஒவ்வொரு நாளும் இப்போ வேல போய்டுமோ அப்ப வேல போய்டுமோ.. நம்ம பொண்ணு என்ன செய்வா பணத்துக்குனு..வயித்துல நெருப்பை கட்டிகிட்டே இருக்க என்னால முடியாதும்மா.அபி குணத்துக்கு உங்களுக்கு நல்ல பொண்ணு கெடைக்கும்மா"என்று அவர் வாதத்தை மறைமுகமாய் பெண்ணை கொடுக்க இஷ்டம் இல்லை என்று கூறி முடித்து விட

அபியோ சிறிதும் யோசிக்காமல்"உங்க பொண்ணு கவர்மென்ட் எக்ஸாம் எழுதி பாஸ் பன்னாலோ இல்ல நா  எக்ஸாம் எழுதி பாஸ் பன்னாலோ எனக்கு உங்க பொண்ண கட்டி குடுப்பீங்களா அங்கிள் ?"என்று உறுதியாக கேட்க அவன் குரலில் உள்ள தீவிரத்தை உணர்ந்த தர்ஷினியின் தந்தையோ திரு திருவென்று முழித்தார்.

அபி "சொல்லுங்க அங்கிள் அப்டி நாங்க எக்ஸாம்  பாஸ் பண்ணா எனக்கு உங்க பொண்ண தருவீங்களா? " என்று கேட்க உள்ளே இவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டே காபி போட ஆரம்பித்த
தர்ஷிக்கோ பதட்டத்தில் கையிலிருந்த பாத்திரம் நடுங்க ஆரம்பித்தது .

அவளின் பதட்டத்தை உணர்ந்து அதை வாங்கிய துளசி காபியை கலக்க தர்ஷினியின் மனமோ தனக்கு தெரிந்த அனைத்து கடவுள்களிடமும் விண்ணப்பம் இட்டுக்கொண்டிருந்தது .

சற்று நேரம் அமைதியே நிலவ
தனது மகளின் கவலை படிந்த முகத்தை நினைவு படுத்திய
தர்ஷினியின் தந்தையோ " கிளியர் பண்ணா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல "என்று கூறினார்.. தர்ஷினியோ அங்கே
நடப்பது கனவா நினைவா என்பது புரியாமல் இருக்க, துளசி  சந்தோசத்தில்
துள்ளி குதித்து தர்ஷுவை இழுத்து அணைத்து கன்னத்தில் முத்தமிட்ட
பின்னரே சுய நினைவிற்கு வந்தாள்..

அபி "இன்னும் நாலு மாசத்துல எக்ஸாம் வருது.. நாங்க கண்டிப்பா clear  பண்ணுவோம் அங்கிள் "என்க அவரோ சம்மதமாய் இமை மூடி திறந்தவர் சமயலறைப்பக்கம் திரும்பி "தர்ஷு வந்தவங்களுக்குலாம் காபி குடு "என்க, அவளோ அவர் கூறியது தான் தாமதம் அடுத்த நொடி துளசி தயார் செய்து வைத்த
காபீ ட்ரேயுடன் ஹாலிற்கு வந்து விட்டாள். .
முதலில் தந்தைக்கு கொடுத்தவள் பின் அபியின் அன்னைக்கு கொடுத்துவிட்டு அபியிடம் செல்ல, ஏனோ இன்று அவன் முகத்தை ஏறிடவே அவளிற்கு தயக்கமாய் இருந்தது.
தன்னை பெண் பார்ப்பது போல வெட்கப்பட்டுக் கொண்டே குனிந்த தலை நிமிராமல் அவனிடம் காபியை நீட்ட,
நேரமாகியும் அவன் எடுக்காமல் இருக்க அவன் முகத்தை தர்ஷு நிமிர்ந்து பார்த்தாள்.. அவனோ தனது மந்தகாசப்புன்னகையை சிதற விட்டு அவளை நோக்கி ஒற்றை கண்ணை சிமிட்ட அதில் இடம் பொருள் அனைத்தும் மறந்து அவன் வசீகரத்தால் சிலையாகிப் போனாள்..
இதுவரை அவள் வெட்கத்தை கண்டிராதவனுக்கும் கோதையின் நாணம் கண்டு..அந்த நாணம் தனக்காக என்றும் அறிந்து அவனும் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தான்..

துளசிதான் இவர்கள் நடு ஹாலில் செய்யும் அலப்பரையை கண்டு சிரித்துக் கொண்டாலும் அவர்களை கனவுலகத்திலிருந்து மீண்டு வரவைக்க,
" பொண்ணு பார்க்க வந்தவங்களுக்கு நைட் டிரஸ் போட்டுக்கிட்டு கொண்டையோடு வந்து பொண்ணு காபி கொடுக்கறது இந்த வீட்ல தான்பா நடக்குது." என கேலி பேச,

அவள் குரலில் தெளிந்த  அபி
பின் காபியை எடுத்துக்கொள்ள தர்ஷுவோ சிவந்த முகத்தை மறைக்க பாடுபட்டவாறே தந்தை அமர்ந்திருந்த சோபாவின் பின் சென்று நின்றுகொண்டாள்.
அபியின் அம்மா "அப்போ சரிங்க..நாங்க வேலை  வந்ததுகப்றோம் மேற்படி பேசறதை பேசிக்குவோம் "என்று கூறி விடை பெற அவரும் எழுந்து வணக்கம் வைத்து அனுப்பி வைத்தார் .

சந்தோசமாக தனதறைக்கு வந்தவளுக்கு தெரியவில்லை இனி தான் அபியிடம் படப்போகும் பாடு..

🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄

என்னப்பா..கதை எப்படி போகுது.. எதும் குறை இருந்தா சொல்லுங்கப்பா.. திருத்திக்கிறேன்..😊😊😊

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro