உறவு 36

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலையில் ஐந்து மணிக்கே கதிரின் வீட்டில் சுப்ரபாதம் இசைக்கத் துவங்கியது.. வாசித்துக் கொண்டிருப்பது ஐசு தான்..
நான்கு மணிக்கே கனியை எழுப்பி அவள் தூங்கி தூங்கி வழிவதையும் பொருட்படுத்தாமல் பாடம் நடத்திக் கொண்டிருந்தாள்.. பாவம் அவள் போடும் சத்தத்தில் மொத்தக் குடும்பமும் தூக்கத்தினை விடுத்து ஹாலில் குழுமியிருந்தது..

" இப்படி பொறுப்பே இல்லாமல் இருந்தா எப்படி கனி..துளசி உன் பிரண்ட் தானே.. அவளப் பார்த்தாச்சும் கத்துக்க வேணாமா.. உன்னை நான் டிஸ்டிங்சனா வாங்க சொல்றேன்.. என்னோட தங்கச்சி அரியர் வைக்காம பாஸ் பண்ணா போதும்னு தான சொல்றேன்.. இந்தா இந்த யுனிட்ல வெறும் மூனே மூனு மாடல்தான் ..அதை மட்டும் பாருடி.. " என சொல்லி கொடுக்க,

கனி மனதுக்குள்ளோ ' பாவி..பாவி.. என் தூக்கத்த கெடுத்தது பத்தாம..அவர் இங்க தான் இருக்காருனு தெரிஞ்சும் என்னை வேணும்னே டம்மி பண்ணி என் மானத்தை வாங்கறாளே..நான் வேற படிக்காம எழுந்து போனா மாமா வேற கோச்சுக்கும். பேசாம துளசிகிட்டயே சரண்டர் ஆக வேண்டியது தான்..அவளாச்சும் கத்தாம..பொறுமையா சொல்லி தருவா.. இவ தங்கச்சி பெயில்னு வெளிய தெரிஞ்சா மானம் போயிரும்னு என்னை போட்டு சாவடிக்குறா.. சீக்கிரம் இவள அவுங்க வீட்டுக்கு பார்சல் பண்ணி அனுப்பிடனும் ' என நினைத்திருக்க அவள் மண்டையில் கொட்டி..

" நான் இங்க உயிர் போக கத்திட்டிருக்கேன்..உன் காதுல விழுகுதா..இல்லையா..நெக்ஸ்ட் சம் சால்வ் பண்ணிப் பாரு.. நான் உனக்கு காபி கொண்டு வரேன்.. " என மிரட்டி விட்டு நகரந்ததும்தான் கனி மூச்சே விட்டாள்.

அவனிடமிருந்து யாராவது தன்னை காப்பாற்றுவார்களா என ஒவ்வொருவராய் பார்க்க
கதிரும் அசோக்கும்  அவளைப் பார்த்து சிரித்து வைத்து இடத்தைக் காலி செய்து விட, எழில் தான் சோபாவில் அமர்ந்த வண்ணம் தூங்கிக் கொண்டிருந்தான்.

ஆக மொத்தம் தன்னை யாரும் இந்த இராட்சசியிடமிருந்து காப்பாற்ற வர மாற்றார்கள் என்பதை புரிந்தவள் சின்சியராக படிக்கத் துவங்கினாள்.

காலை 8 மணி.. காலிங் பெல் அடிக்க,
கனி ஜாலி யாரோ வந்துட்டாங்க என்று சந்தோசமாக  கதவைத் திறக்க அங்கே துளசி, அபி மற்றும் பார்வதியும் நின்றிருந்தனர்.. துளசியைக் கண்டவள் தாயினைக் கண்ட சேயாய் கட்டியணைக்க, அவளோ
" ஒரு போன் பண்ணி கூட பேசல..உங்க அத்தானும்  மாமாவும்  வந்தவுடனே என்னை மறந்துட்டல " என்றவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. துளசியை கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்பு அசோக்கை சந்திக்க செல்வதற்கு முன் கதிர் வந்தால் சமாளித்துக் கொள்  என்று கல்லூரியில் சொல்லிவிட்டு செல்லும்போது பார்த்ததோடு சரி..அதற்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறாள்.. அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது கூட இவளுக்குத் தெரியாது.

" என்னமா குட்டிப்பிசாசே...எங்கள வாசலோட துரத்திடலாம்னு நினைக்கிறியா.. வழிய விடும்மா " என்று அபி கூறிய பிறகே
" ஐயோ..சாரி..வாங்க.வாங்க." என உள்ளே அழைத்தாள்..

கந்தன் " அடடே..வாமா..பார்வதி.. என்னமா...இவ்ளோ காலைல வந்திருக்கிங்க.. உட்காருங்க..தேவி..யாரு வந்துருக்காங்கனு பாரு... " என உபசரிக்க..சிறிது நேர உபசரிப்புகளுக்கு பின்பு,

பார்வதி துளிசியின் உடல்நிலையையும் தாங்கள் வீடு மாற்றி வந்ததையும் கூற, கந்தனும் தேவியும்தான் தங்களிடம் துளசிக்கு உடம்பு சரியில்லை என கூறாமல் விட்டதற்கு அபியையும் கதிரையும் சலித்துக் கொண்டனர்.. கனிக்குத்தான் இதைக் கேட்டதும் ஒரு மாதிரி ஆகி விட்டது.. தனது மாமா கூட தன்னிடமிருந்து இதை மறைத்து விட்டதை எண்ணி.. தனக்கென்றால் முதல் ஆளாய் வந்து நிற்கும் துளசிக்கு தன்னால் உதவ முடியாமல் தனியாக தவிக்க விட்டு விட்டேனே என உள்ளுக்குள் துடித்துப் போனாள்..

" என்ன துளசி... எங்கிட்ட சொல்லியிருந்தானே வந்து பார்த்திருப்பேனே..உடம்பு சரியில்லாம நீயேன் இங்க வந்த " என துளசியின் கைகைளை தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டு அவள் கேட்க,

அதற்கு பார்வதியே " எல்லாம் உங்களுக்கு நல்ல செய்தி சொல்றதுக்குதாம்மா.. நம்ம அபிக்கு பொண்ணு பார்த்து முடிவு பண்ணிட்டோம்.. இன்னும் 6 மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணிருவோம்.. " என்றவர்
" அபிக்கு எல்லாமே கதிர்தான்..அதான் அவங்கிட்ட நேரடியா இதை சொல்னும்னு வந்துட்டோம்.. பொண்ணு பூர்வீகம் கூட நம்பூரு பக்கம்தான்.. என்ன பொண்ணோட அப்பாதான் கொஞ்சம் கோபக்காரரு..மத்தபடி பொண்ணு சொக்கத்தங்கம்..நேத்து நைட் தான் அவனே எங்கிட்ட சொன்னான்.சரி நம்ம பசங்க சந்தோசம்தான நமக்கு முக்கியம்..அதான் காலைலயே அவுங்க வீட்ல பேசி உறுதி பண்ணிட்டோம்
" என்று  தனது மகனின் திருமண செய்தியை உற்சாகமாக கூறினார்.. கதிர் சந்தோசத்தில் அபிக்கு வாழ்த்துகளை தெரிவிக்க, அவனையே இதுவரை பார்த்திருந்த கந்தனுக்குத்தான் வருத்தமாகிப் போனது..
கதிரை விட அபி மூன்று வருடங்கள் சிறியவன்.. அவனுக்கே திருமணம் கூட போகிறது..ஆனால் கதிருக்கு?...
தனது மகள் தானே அதற்கு காரணம்..

சிறிது யோசனைக்குப் பிறகு, " பார்வதி.. நானும் கதிருக்கு வரன் பார்க்கனும்.. நம்ப சொந்தத்துல அவனுக்கு ஏத்த பொண்ணு இருந்தா விசாரிச்சு சொல்றியாம்மா.. " என்றார் தயங்கியவண்ணம்..

கதிரின் திருமணம் நின்று போனதே அவரின் தயக்கதிற்கு காரணம் என்பதை உணர்ந்தவர் " இதுல என்னங்கண்ணா இருக்கு..கதிரோட குணத்துக்கு நான் நீன்னு போட்டி போட்டுட்டு பொண்ணு கொடுப்பாங்க.. நானும் எனக்குத் தெரிஞ்ச இடத்துலெலாம் சொல்லி வைக்கிறேன்.. " என்றார்..

" மாமா ..இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்" என கதிர் கூறி முடிப்பதற்குள் " நீ எதும் பேச வேணா கதிர்.. நாங்க செஞ்ச தப்ப நாங்க தான் சரி செய்யனும்.. உன் கல்யாண விசயத்த நாங்க பார்த்துக்கறோம்..நீயும் என் பையன்தான்.. உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கற அந்த உரிமை எனக்கு இருக்கன்னு நான் நினைக்கிறேன்.. இருக்குதான ?" என்று கோபமாக வினவவும் அவரைப் பார்க்க கதிருக்கு கூட உதறல் எடுத்தது..

அவன் துளசியைப் பார்க்க, அவள் அப்பவோ இப்பவோ என அழும் நிலையில் இருந்தாள்..

நிலைமை புரியாமல் அசோக் " அங்கிள்..கதிர்க்கு எங்க ஆபிஸ்ல கூட நிறையா கேர்ள் ஃபேன் பாளோயர்ஸ் இருக்காங்க..நானே அவுங்கள்ள நல்ல பொண்ணா பார்த்து சொல்றேன்.. " என்று வாலண்டியாராக என்ட்ரி கொடுத்தான்..

ஐசுவும் தன் பங்கிற்கு, கந்தனின் காலடியில் அமர்ந்து பொறுமையாக  " அப்பா நான்தான் மாமா கல்யாணத்துல ரொம்ப தப்பு பண்ணியிருக்கேன்..ஆரம்பத்துலயே நான் உண்மைய சொல்லியிருந்தா அவருக்கு இந்நேரம் வேறொரு பொண்ணோட கல்யாணம் நடந்திருக்கும்.. அதுனால நானே அதுக்கொரு தீர்வு சொல்றேன்..என் கூட படிச்ச சியாமளா மாமாவ ரொம்ப சின்சியரா லவ் பண்ணா.. ஆனா அதை எனக்கு பயந்து அவர்கிட்ட எக்ஸ்பிரஸ் பண்ணல.. இப்போ அவளும் என் காலேஜ்லதான் வொர்க் பண்றா..இப்ப கூட அவரு கனிய டிராப் பண்ண வரும் போதெல்லாம் தூரத்துல நின்னு பார்த்துட்டே இருப்பா.. எனக்கு கூட அவ மாமாக்கு கரெக்ட் ப்பேர்னு தோனுது.. அவகிட்ட வேணா பேசி பார்க்கலாம்பா " என்றாள்.. அதைக் கேட்டதும் கந்தனும் புன்னகைக்க, அதுவரை தலையைக் குவிந்த வண்ணம் இருந்த துளசி கதிரை நிமிர்ந்து பார்க்க இதுவரை விழவா வேண்டாமா என போக்கு காட்டிக் கொண்டிருந்த கண்ணீர் முத்துகள் கன்னத்தில் உருளத் துவங்கியது..அவள் பார்வை
" இனி அவ்வளவுதான்.. எல்லாம் முடிஞ்சிடுச்சுல " என்பதைப் போல தோன்றியது கதிருக்கு..

துளசியின் காதல்
விசயம் தெரிந்த கனி, அபி மற்றும்  எழில்  மட்டும், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க, அது தெரியாமல் ஐசு சியாமளாவைப் பற்றி அடுக்கிக் கொண்டிருந்தாள்..

கந்தன் " என்னப்பா.. கதிர் ..அந்தப் பொண்ணு வீட்ல போய் ஈவ்னிங் பேசிட்டு வந்தரலாம்தான ? " என கேள்வியை பதில் போல் வினவினார்.

தேவி " டேய்..கதிரு..அவுரு இவ்ளோ சொல்றார்ல..ஒத்துக்கோடா.. " எனக் கெஞ்ச
மொத்தக் குடும்பமும் கதிரின் ஒற்றை வார்த்தைக்கு காத்திருந்தது..

துளசிக்கு இதற்கு மேல் தாங்க முடியாமல் கனியின் தோள்களில் தூங்குவது போல சாய்ந்தவள் கதறாமல் அழுது தீர்க்க, கனி தனது மாமனை முரைத்துக் கொண்டிருந்தாள்.

" மாமா..என்னை மன்னிச்சிடுங்க.. என்னால இன்னும் 3 வருசம் கல்யாணத்தைப் பத்தி நினைச்சுப் பார்க்க முடியாது " என துளசியின் படிப்பு படிப்பை மனதில் கொண்டு சொல்ல,

கந்தன் " பரவாலப்பா..கல்யாணம் உன் இஷ்டப்படியே வெச்சுக்கலாம்.. இப்போ உறுதி மட்டும் பண்ணிட்டு வந்துக்கலாம் " என்று விடாப்படியாக கூற,

" நான் வேறொரு பொண்ண மனசார காதலிக்கறேன்.. அவ இப்போ படிச்சிட்டு இருக்கா.. அவ படிப்பு முடிஞ்ச உடனே நானே உங்ககிட்ட சொல்றேன்.. நீங்களே கல்யாணம் பண்ணி வைங்க.. இப்போதைக்கு என்னை தொல்லை பண்ணாதீங்க " என்றவன் நிற்காமல் " எனக்கு ஆபிஸ்க்கு டைமாச்சு.. நான் கிளம்பறேன் " என்று விட்டால் போதுமென கிளம்பி விட்டான்..

தேவி " என்னங்க.. இவன் இப்படி குண்டை தூக்கி போட்டுட்டு போயிட்டான் " என குறைப் பட்டுக் கொள்ள,  பார்வதி தான்
" பரவால விடுங்க.. அவன் இவ்ளோ தூரம் மாறுனதே போதும்.. அவனோட நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்.." என ஆறுதல் படுத்தினார்..

துளசிக்கு இப்போது தான் போன உயிர் திரும்பி வந்தது.. அவள் காதில் " ஒரு பெண்ணை நான் மனதாற விரும்புகிறேன்" என்ற கதிரின் குரலே விடாமல் ஒலித்தது.. அபிக்கும் கூட கதிர் துளசியை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டது சந்தோசத்தைத் தந்தது..

கனி ஐசுவின் காதில் " இங்கப்பாரு..புருசனும் பொண்டாட்டியும் அவுங்கவுங்க வேலைய மட்டும் பாருங்க..அதை விட்டுட்டு புரோக்கர் வேலைல இறங்குனது தெரிஞ்சது.. காதை திருகி காக்காய்க்கு போட்ருவேன்.. " என்று மிரட்டி விட்டு சென்றாள்..

ஐசுதான் நாம நல்லதுதான பண்ண நினைச்சோம்..அதுக்கு ஏன் இவ திட்டிட்டு போறா..சரி என்னவோ கதிர் தனக்கான ஒரு வாழ்க்கைய அமைச்சிக்கிட்டாதான் நாமளும் சந்தோசமா இருக்க முடியும்.. என நினைத்தவள் சீக்கிரம் கதிரின் காதலி யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டாள்..

அங்கே இருந்து தப்பித்தாள் போதும் என நினைத்து ஆபிஸ் வந்த கதிருக்குத்தான் அழுது கொண்டிருந்த துளசியை அப்படியே விட்டுவிட்டு வந்து விட்டோம் என மனது அடித்துக் கொண்டது.
திருமண ஏற்பாட்டைப் பற்றி கந்தன் கேட்டதுமே அவன் மனதில் அவளது முகம் மட்டுமே தோன்றியது.. ஆரம்பத்தில் அவளது படிப்பிற்காக ஒத்துக் கொண்டாலும் அவளது காதல் அவனது மனதையும் ஆட்கொண்டு விட்டது என்பதே உண்மை..

தயங்கிய வண்ணம் அவளின் அலைபேசி்க்கு அழைத்தவன்  ரிங்டோன் அடிப்பதைக் கூட பொறுமையின்றி கேட்டுக் கொண்டிருந்தான்.

அழைப்பை ஏற்றதும் அந்தப்புறம் துளசியின் உற்சாகமான குரலில் " ஹலோ " என்ற வார்த்தையை  கேட்டபிறகே நிம்மதி உற்றவன் தற்போது என்ன பேசுவது என தெரியாமல் தட்டுத்தடுமாறி
" சாப்பிட்டியா... டேப்ளெட் எடுத்துகிட்டயா " என்க, அந்தப்புறம் பதில் வராமல் போகவும்.. " ஹலோ.. ஹலோ " என்க..அங்கிருந்து தூரத்தில்
" கனி அடி வாங்காத..போன கொடு.. " என்ற துளசியின் குரலும் கனியின் சிரிப்புச் சத்தமும் மாறி மாறி கேட்டது.. அவள் கனியிடம் மாட்டிக் கொண்டாள் என்பதை புரிந்தவன் புன்னகையுடன் அழைப்பைத் துண்டித்தான்..
அவனுக்கே தன்னை எண்ணி சிரிப்பாக இருந்தது.. இது தான் தானா என சந்தேகித்துக் கொண்டவனின் முகத்தில் சிறிது வெட்கமும் ஒட்டிக் கொண்டது..
அனைத்தும் காதல் படுத்தும் பாடு என தலையைத் தட்டிக் கொண்டவன் வேலையைக் கவனிக்க துவங்கினான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro