பகுதி 10

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


ஹேய், . யாருடா இது? ரொம்ப அழகா இருக்கா .

ப்ரியா ...

அருணின் முக வாட்டமே அவனை காட்டிக்கொடுத்தது.

இப்ப ... எங்க?

US போய்ட்டா.

Break up ஆஹ்?

இல்ல அனு. நா Propose பண்றதுக்கு மொதல்லயே அவ வீட்ல Marriage fix பண்ணிட்டாங்கலாம் .

ஓஹ் ...

அதற்கு மேல் அனு அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. School படிக்கும் காலத்தில் இருந்தே அருண் எந்த பெண்ணிடமும் பெரிதாக ஈடுபாடு காட்டியதில்லை. கல்லூரியில் கூட அவனுக்கு பெரிய ரசிகைகள் பட்டாளமே இருந்தாலும் அவன் யாரையும் பெரிதாக கண்டுகொண்டதில்லை. அருண் ரொம்பவே காயப்பட்டிருக்கிறான் என்பது அனுவுக்குப் புரிந்தது.

அவனை அப்படிப் பார்க்கப் பிடிக்காமல் மெதுவாக பேச்சை மாற்றினாள்.

விக்கி எங்க வேல பாக்குறான். உன் Officeலயே அவனுக்கு வேல போட்டுக்கொடுத்திருக்கலாமே?

இல்ல நான் BE முடிச்சதும் MBA start பண்ணிட்டேன். அவன் அப்பவே Jobல சேர்ந்துட்டான். அது அவன்அப்பா Work பண்ண Office, so sentiment ஆஹ் அதுலயே இருந்துட்டான், அதனால நானும் அவன Force பண்ணல. .... இப்ப அவன் ஆளு வேற அதே Office. So அவன் அங்கருந்து வர மாட்டான்.

ஆளா? யாரு First year படிக்கிறப்போ பின்னாடியே அலைவானே, அந்த பொண்ணா?

ஹ்ம் , அவளே தான் சிந்து.

அய்யோ செம்ம News, இவ்ளோ Lateஆ சொல்ற!!

ம்ம், ஒனக்கு இதுவே ஒரு மாசம் தாங்கும், இல்ல?

"பின்ன, விக்கிய ஓட்றது தான் இனிமே எனக்கு வேலையே. " உற்சாகமாய் சொன்னாள்.

அவள் பழைய படி இயல்பாய் பேசியது அருண் மனதிற்கு நிறைவாய் இருந்தது.

அன்றைய நாளில் எல்லாமே நன்றாக இருந்தது, தாத்தா அருணின் திருமணம் பற்றி பேசியதைத் தவிர.


Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro