பகுதி 11

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


அடுத்த ஒரு வாரம் சாதாரணமாகவே நகர்ந்தது. தாத்தா திருமணம் பற்றி எதுவும் பேசாததில் அருணுக்கு பெரிய நிம்மதி.ஆனால் நிம்மதியைக் கெடுக்க அவரே ஒரு வழி செய்தார்.

Office முடிந்து வந்தவன் தன் அறையில் இருந்தபடி ஒரு Fileஐ பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த தாத்தா அவனிடம் ஒரு கவரை நீட்டினார்.

ம்ம் ... என்ன இது?

ஒனக்கு பாத்த பொண்ணுங்க Photos. நீ பாத்து எந்த பொண்ணு Okன்னு சொன்னா நாளைக்கே பொண்ணு பாக்க போகலாம்.

அய்யோ! நாளைக்கா ? என்ன தாத்தா சொல்றீங்க?

அடுத்த 2 மாசத்துல கல்யாணம் நடக்கனும்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். சீக்கிரமா பொண்ணு பாத்து Date fix பண்ணனுமே. நீ மொதல்ல Photos பாரு.

நா மெதுவா பாத்து Select பண்றேன். நாளைக்கெல்லாம் எங்கயும் போக முடியாது, எனக்கு நெறய வேல இருக்கு.

அருணை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் தாத்தா.

அருணுக்கு வேதனையாய் இருந்தது. தாத்தாவை காயப்படுத்துகிறோமே என்ற எண்ணம் வேறு. தாத்தா கொடுத்த கவரை மேசையிலேயே வைத்துவிட்டு எழுந்து போய் அறைக்கதவை மூடிவிட்டு கட்டிலில் சாய்ந்தான்.

மனதில் தோன்றிய முதல் காதல் இப்படி ஓர் காயத்தை உண்டாக்குமென சில நாட்களுக்கு முன் அவன் எண்ணிப் பார்த்திருக்கக் கூட மாட்டான். ஆனால் இன்று .... எதிர்காலம் பற்றிய கனவுகள் எல்லாம் தூள்தூளாய் சிதறிப் போக, இனம் புரியாத வலி நெஞ்சுக்குள் போட்டு அழுத்தியது.

ப்ரியா ... அவள் முகம் மனதில் வந்து போனது. அவள் இடத்தில் இன்னொரு பெண்?? அது அவனால் முடியுமா?


Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro