👨‍👩‍👧‍👦 உதவி 👉👈

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு


விளக்கம்: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை...


தர்மத்தை கடைபிடிக்காதவருக்கு கூட மோட்சம் என்பது உண்டு, ஆனால் செய்ந்நன்றி மறந்தோருக்கு மோட்சம் என்பது இல்லையேல்.....


உதவி என்பது யாதெனில், நாம் உண்ட உணவிற்கு பதிலாக அதேபோல அதே உணவை நாம் எவ்வாறு தர இயலாதோ அதே போல தான் நமக்கு ஒருவர் செய்த உதவியும்.....


இந்த உலகினில் எதை கொடுத்தாலும் நாம் பெற்ற உதவிக்கு சமமாக இவ்வுலகினிலும் சரி விண்ணுலகினும் சரி எதை கொடுத்தாலும் ஈடாகாது என்பதே உண்மை....


ஒருவர் நாம் இயலாமல் இருந்த தருணத்தில் நமக்கு செய்திடும் உதவியை மட்டும் நாம் என்றும் மறவாமல் இருக்க வேண்டும், அந்த உதவிக்கு ஈடு இணை என்று ஏதும் இல்லை....


சிறு உதவியே ஆனாலும் அதை பெற்றோமேயானால் அவருக்கு நாம் நன்றிக்கடன் செய்தே ஆகா வேண்டும்.....


நண்பர்களிடத்தில் நன்றி தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்க கூடாது, நண்பர்கள் ஆனவர்கள் மனித உருவில் நமக்கு கிடைத்த பொக்கிஷம் போன்றவர்களே ஆவர்....


நண்பர்கள் நம்மிடத்தில் பெரும் உதவியும் செய்யும் உதவியும் ஆனது உரிமையுடன் கேட்பதே ஆகும்... உரிமைக்கும் உதவிக்கும் வித்யாசம் உண்டு என்பதை மறவாதீர்....


நாம் செய்யும் உதவியில் எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது, அதே போல நாம் செய்த உதவியை சொல்லிக்காட்டுவதும் கூடாது.... அவ்வாறு செய்கையில் செய்த உதவிக்கு அர்த்தம் ஏது....


யாம் பெற்ற உதவிக்கு சமமான ஒன்று இன்னுலகினில் இல்லை, செய்யும் உதவியை இன்முகத்துடன் செய்து அதில் கிடைக்கும் ஆனந்தத்தை பெறுங்கள் காலம் முழுதும் அந்நினைவு மற்றவர் மனதினில் பயணம் செய்யும்....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro