🚌 ஜன்னலோர பயணம் 🛤️

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அனைவரும் பேருந்தில் பயணிக்கும் போது
ஜன்னலோர பயணத்தையே எதிர்பார்க்கிறோம்
ஏன் என்று சிந்தித்து உண்டோ...


பேருந்தின் உள்ளே இருப்பது நமது வாழ்க்கை
பேருந்தின் வெளியே உள்ளவை நமது எதிர்காலம்
எதுவும் நாம் கொண்ட பார்வையின் தன்மை பொறுத்தது...


நம்மில் சிலர் நம்மை சுற்றி இருக்கும் வாழ்க்கையை
பற்றி சிந்தனையில்லாமல் எதிர்காலம் எனும்
சிந்தனையிலேயே மூழ்கிப்போகின்றோம்...


நாம் வெளியில் காணும் எதிர்காலம் அழகானதே
நம்மை சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை அதை விட
அற்புதமானது, ஏனென்றால் அவர்கள் நம்முடன்
வாழ்க்கையில் நம்மில் கலந்து பயணிக்கின்றனர்...


வாழ்க்கை என்றும் சுகமானதே எதிர்காலத்தை
மட்டுமே பொருட்டாக கொள்ளாமல் நிகழ் கால
வாழ்க்கையை அனுபவித்து வாழ்க்கையினில்...


எதிர்காலம் பல்வேறு எதிர்பார்ப்புகளையும்
பல ஏமாற்றங்களையும் சில துன்பங்களையும்
தரவல்ல ஒன்று...



ஆனால் நிகழ் கால வாழ்க்கையோ நம்மக்கு
எந்த வித எதிர்பார்ப்புகளையும் தருவதில்லை
எந்த வித ஏமாற்றங்களையும் ஏற்படுத்துவதில்லை
துன்பங்கள் இருந்தாலும் நிறைவு என்றும் இருக்கும்....


பேருந்து எனும் வாழ்க்கை நாம் பயணிக்க தான்
எனவே பயணத்தில் என்றும் தன்னை சுற்றி
உள்ள மனிதர்களை என்றும் மறவாதீர்கள்...


பயணங்கள் என்றும் நம் நினைவுகளை
வெளிப்படுத்தும் விதமாக இருப்பது
நம் சிந்தனைகளில் தான் உள்ளது...



வாழ்க்கை பயணத்தில் சில நேரங்களில்
அமைதியை அனுபவிக்கும் தருணத்தில்
கடந்த காலத்தை நினைவில் கொள்ளுங்கள்
என்றும் வாழ்க்கை ரம்மியமானதே...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro