நிஷாவின் தெளிவு

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

       

காலேஜ் சென்றுவிட்டு வீது திரும்பிய நிஷா குளித்துவிட்டு வர எல்லோரும் ஒன்றாக டைனிங்க் டேபிலில் சாப்பிட உட்கார்ந்தனர்.எல்லோரும் சாப்பிட்டு முடிக்க ப்ரியா கண்களால் அர்விந்துக்கு ஜாடை காட்ட அர்விந்தும் அவளை புரிகிறது என்று கண்களாலேயே கூறினான்.

நிஷா தன் அப்பாவிடம் வந்து "அப்பா ஒரு விசயம் சொன்னா என்ன தப்பா நினைக்க கூடாது"என்றவளை அர்விந்த்

"ஹேய் என்னடா செமஸ்டர் எக்சாம்ல ஏதும் பெயிலாகிட்டியா "என்று கலாய்த்த போது அவ்விடத்துக்கு ப்ரியாவும் 7 வயது கார்த்திக்கும் வர நிஷா மெதுவாக

"அப்பா அஷ்வின்னு ஒரு பையன் என்னோட பைனல் இயர் சீனியர்.என்ன பிடிச்சிருக்குறதாவும் என்ன லவ் பன்றதாவும் சொல்ராங்கப்பா"என்று கூறி ஒரு வித பயத்துடன் தலையை குணிய ப்ரியாவோ

"மேடம் அதுக்கு என்ன சொன்னீங்க"என்றால் புன்னகை மாறாமல்.

"பாருங்கப்பா அம்மா நக்கல் பன்றாங்க"என்று சினுங்கிய நிஷாவை

"அப்படி இல்லம்மா.அம்மா சீரியசாத்தான் கேட்குறாங்க.நீ என்ன சொன்ன"என்று அர்விந்தும் அதே கேள்வியை கேட்க

"நான் எங்க அப்பா அம்மா கிட்ட கேட்டு சொல்ரேன்னு சொன்னேன்பா"என்று கூறிய தன் மகளை பெருமையுடன் இருவரும் நோக்கினர்.

அர்விந்தோ "சரிடா .உனக்கு அந்த பையன பிடிச்சிருக்கா"என்று கேட்க நிஷா அதற்கு

"பிடிச்சிருக்குன்னும் இல்ல பிடிக்கலன்னும் இல்லப்பா.அவங்க ரொம்ப நல்ல சீனியர்"என்று அவனுக்கு சர்டிபிகேட் கொடுத்த நிஷாவை ப்ரியாவும் அர்விந்தும் ஒருவருக்கொருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டனர்.

"சரிடா நிஷாம்மூ நீங்க தூங்குங்க.அப்பா பார்த்துக்கிறேன் .ஓக்கே"என்ற தன் தந்தையை அணைத்து நெற்றியில் முத்தமிட்டி அவளும் அவளது அன்பு தம்பியும் தூங்க செல்ல அர்விந்த் ப்ரியாவிடம்

"டார்லிங்க்..எனக்கென்னமோ அவளுக்கு அந்த பையன பிடிச்சிருக்குன்னு தோனுதுடா"என்றவளை

"ஆமாங்க எனக்கும் அப்படித்தான் தோனுது"என்றாள் ப்ரியா.

அடுத்த நாள் காலை காலேஜ் சென்ற நிஷாவிடம் அவளது தோழி தர்ஷினி

"என்னடி ஆச்சு.சீனியர் நேத்து உன்ன ப்ரொபோஸ் பன்னாரே,நீ என்ன சொல்ல போறே"என்றவளை

"நான் என் அப்பா அம்மகிட்டே சொல்லிட்டேன்.சோ அவங்க பார்த்துபாங்க"என்று கூலாக கூறிய நிஷாவை

"லூசு,எருமை,பன்னி,குரங்கு,,,,அஷ்வின் சீனியர் எவ்வளவு நல்லவர்.அவரு எங்க கூடெல்லாம் கொஞ்சம் பேசமாட்டாரான்னு ஏங்கி இருக்கோம் .நீ என்னடான்னா ...அப்பா கிட்ட கேட்டேன் ஆட்டுகுட்டி கிட்ட கேட்டேன்னு..அடியே லூசு லவ் என்கிறது எவ்வளவு ரொமாண்டிக்கான விசயம் தெரியுமா.அத ப்ரெண்ட் கிட்ட டிஸ்கஸ் பன்னாம அப்பா அம்மா கிட்ட கேட்டாலாம்..போடி உன்னை எல்லாம் வெச்சுக்கிட்டு ஒரு மன்னும் பன்ன முடியாது" என்று கரிச்சுக்கொட்டிய தர்ஷினையை பார்த்து புன்னகைத்த நிஷா

"இங்க பாரு தர்ஷினி..ஏன் 36 வருசம் (நிஷா பிறந்தது 2017 ல்,அலைபாயுதே ரிலீஸ் 2001,இப்போ அவளுக்கு 20 வயது) ஆகியும் எல்லோருக்கும் இப்பவும் அலைபாயுதே படம் பிடிக்குதுன்னு தெரியுமா.அந்த படத்துல அவ்வளவு ரொமாண்டிக் கொட்டிக்கிடக்குடி.ஆனா எனக்கு அலைபாயுதே படத்தை விட எங்க வீட்டுல நடக்குற ரொமான்ஸ்தான் பெரிசா தெரியும்"என்றவளை தர்ஷினி

"என்னடி சொல்ர"என்று வியப்பாக கேட்க

"புரியலயா.நான் எங்க அம்மா அப்பா ரொமான்ஸ்ச சொல்ரேன்.உனக்கு தெரியுமா எங்க அப்பாவை விட எங்கம்மாக்கு ஒரு வயசு அதிகம்.எப்போ பாரு ஏதாச்சும் ஒன்னுக்கு சண்டை போட்டுகிட்டே இருப்பாங்க.ஆனா அடுத்த நாள் அந்த சன்டை இருக்காது.புதுசா ஒரு சண்டை போகும்.அதுக்கு அடுத்த நாள் இன்னொரு சண்டைனு தொடரா போய்க்கிட்டே இருக்கும்.சண்டைன்னு சொன்னது பெரிய சண்டைன்னு எல்லாம் நினைச்சுக்காத.சில நேரங்கள்ல எங்கம்மா கட்டியிருக்குற சாரி கலர்க்கும் போட்டிருக்குற ப்ளவுஸ் கலர் மெட்ச் ஆகலன்னு பெரிய சண்டை போகும்.இடைல பஞ்சாயத்துக்கு நான் போனா அவங்க ரெண்டு பேரும் ஒன்னாகிட்டு என்ன கலாய்க்க ஆரம்பிப்பாங்க.அப்படி இல்லையா எங்கப்பா எங்கம்மா இறுக்கி கட்டிப்புடிச்சு எங்க முன்னாலயே கன்னத்துல இல்லன்னா நெத்தியில கிஸ் பன்னுவாங்க.வெளியில இருந்து பார்க்குறவங்களுக்கு வேனும்னா அது விரசமா தெரியலாம்.ஆனா எனக்கு அதுதாண்டி பெரிய ரொமான்ஸ்.எனக்கு எங்க வீட்டிலயே இவ்வளவு ரொமான்ஸ் கொட்டி கிடக்கிறப்போ நான் ஏண்டி வெளில தேடி அலையனும்.நேத்து நான் சொன்ன விதத்துலயே அப்பாக்கு புரிஞ்சிருக்கும் எனக்கும் சீனியர பிடிச்சிருக்குன்னு.சோ வெய்ட் அண்ட் சீ"என்று அவள் கூறி முடித்து மூனாவது நாள் அவளிடம் வந்த அஷ்வின்

"தேங்க்ஸ் நிஷா.உங்கப்பா அம்மா மாதிரி இல்லன்னாலும் நம்மளும் கொஞ்சம் நல்லா வாழ்ந்து காட்டலாம்னு நம்பிக்கை இருக்கு.நீ அவருகிட்ட பேசினத வெச்சே அவரு உனக்கு என்மேல இண்டிரஸ்ட் இருக்குனு கண்டுபிடிச்சிட்டாரு,இப்படி ஒரு பேரண்ட்ஸ் கிடைக்க நீ கொடுத்து வெச்சிருக்கனும்.நானும் உங்க பேமிலல ஒருத்தனா ஆக போறேன்னு நினைக்கும் போது எனக்கும் பெருமையா இருக்கு.உங்கப்பா வந்து எங்கப்பா அம்மாவ என் படிப்பு முடிஞ்ச அப்புறமா வந்து பேச சொன்னாங்க.உன் படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறமா நம்ம வெடிங்க்.அது வரை நம்மல கொஞ்சம் நல்ல பிள்ளைங்களா இருக்க சொல்லிட்டாங்க.எனக்கு ஒக்கே .உனக்கு ஒக்கேயா"என்று சிரித்த முகத்துடன் கேட்டவனை அவள் வெட்கப்பட்டுக்கொண்டு

"சரி "என்று தலை அசைத்தாள்.

வீடு வந்ததும் அப்பாவின் அருகில் சென்று அர்விந்தின் அருகில் இருந்த அவளது தம்பியை இழுத்து தள்ளி உட்கார வைத்து விட்டு அப்பாவை அனைக்க செல்ல அர்விந்த்

"எவடி என் பிள்ளைய தள்ளுறது"என்றான்.

அதற்கு கிட்சனில் இருந்து வந்த ப்ரியா தன் மகனை தூக்கி

"எவண்டா என் மகளை திட்டுறது "என்று கூற ப்ரியாவின் கையில் இருந்த கார்த்திக் நிஷாவுக்கு ஒரு அடி கொடுக்க ப்ரியா

"டேய் இப்போ நீ எதுக்கு அக்காக்கு அடிச்ச"என்று செல்லமக மிரட்ட நிஷாவோ

"எவடி என் தம்பிய திட்றது "என்று கேட்க அர்விந்த் சிரிக்க தொடங்கினான்.அன்றைய நாள் மிகவும் குதூகலத்துடன் அவர்களுக்கு கழிந்தது.

===================================

இது போல இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் அடிக்கடி போடலாம்னு இருக்கேன்.என்ன சொல்ரீங்க எல்லோரும்.

என்னதான் புது கதை எழுதினாலும் ப்ரியா அர்விந்த் ஜோடிய மறக்க முடியலப்பா......

அப்பறம் உங்க எல்லோருடைய பிரார்த்தனையாலும் தொடர் காய்ச்சலில் இருந்த என் குட்டி மகளுக்கு ஓரளவு குணமாகிவிட்டது.எனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிய எல்லோருக்கும் நன்றிகள்,அந்த சந்தோசத்தில் எழுதிய பதிவுதான் இது

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro