முடிவுரை

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"அம்மாஆஆஆஆஆஅ" என்று ப்ரியா அலறுவதை கேட்ட ரம்யா உடனே ஹாலில் இருந்தவள் பெட்றூமுக்குள் செல்ல

"என்னக்கா பன்னுது"என்று கேட்டால்.

"ரம்யா என்னால முடியலடா.ரொம்ப பெயினா இருக்கு.ஹாஸ்பிடல் போகலாம்டா"என்றவளை

"சரிக்கா.ஒரு 2 நிமிசம் பொறுத்துக்க"என்று கூறிவிட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து நிஷாவிடமும் தன் மகளான வைஷ்னவியிடமும் கொடுத்துவிட்ட..ரம்யா 9 மாத கர்ப்பினியான ப்ரியாவை கைத்தாங்களாக அழைத்து வந்து காரின் பின் இருக்கையில் அமர்த்தி வேகமாக ஹாஸ்ப்பிடலை நோக்கி சென்றனர்.

"அர்விந்த் ப்ரியாவுக்கு திடீரென்று பிரசவ வலி வந்துட்டுடா"என்றவளை

"என்ன சொல்லுற .அவளோட டெலிவரிக்க இன்னும் 2வாரம் இருக்கே "என்றவனை

"இல்லடா திடீரென இப்படி ஆகிட்டு,இப்போ நான் சொல்ரத கொஞ்சம் பொறுமையா கேளு"என்ற ரம்யாவை

"சொல்லு "என்ற அவனின் குரல் கொஞ்சம் பிசிரி காணப்பட்டது.

"டேய் டென்சன் ஆகாத ஓக்கே.வாட்டர் பேக்ல வாட்டர் லெவல் கம்மியாகிட்டாம்.இப்போ ப்ரியாக்கு 2 ஊசி போடனுமாம்.ஏன்னா இப்போதான் 36 வாரம் ஆரம்பிச்சிருக்கு,சோ குழந்தையோட போன்ஸ் அண்ட் உள்ளுறுப்புக்கள் எல்லாம் முழுமையா 38ல இருந்து 40 வாரத்துலதான் வளருமாம்.இப்போ வாட்டர் லெவல் குறைந்ததால பேபிய அவசரமா சீசர் பன்னி வெளில எடுக்கனும்.நான் சைன் பன்ன போறேன் என்ன சொல்ர"என்றவளை

"நீ என்ன வேனா பன்னு ரம்யா..ஆனா ப்ரியாக்கு ஏதும் ஆக கூடாது.குழந்தையா ப்ரியாவான்னு வந்தா அது ப்ரியா மட்டும்தான் ஒக்கே.எதாச்சும் எடக்கு மடக்கா பன்னே.அப்புறம் உன்ன கொல்லவும் தயங்க மாட்டேன்"என்றவனை

"போடாங்....நீ இப்படி சொல்ர.அவ குழந்தைய காப்பாத்துனு சொல்ரா..தாயும் சேயும் நல்லபடியா இருக்க 40% சான்ஸ் இருக்கு.எனக்கு தெரியல.என்ன பன்னனும்னு"என்றவளை

"நீ ஒன்னும் புடுங்க வேனாம்.நான் சொல்ரத மட்டும் செய்.ப்ரியாவ மட்டும் காப்பாத்த பாருங்க.என் குழந்தை எங்க கூட வாழனும்னு அதோட தலைல எழுதி இருந்தா எங்கூட இருக்கும்"என்று தொண்டை அடைக்க கூறியவன்

"நான் எப்படி சரி இன்னைக்கே டெல்லில இருந்து வரப்பார்க்குறேன்,நான் போக முதல்லயே தலப்பாடா அடிச்சிக்கிட்டேன்.டெலிவரிக்கு அப்புறமா போறேன்னு.எங்க அவ கேட்டாதானே.புது காட்ன்றாக்ட் சைன் பன்ன போய் பாரு இப்போ மழைல மாட்டிகிட்டேன்.எப்படியும் நாளைக்கு வரப்பார்க்குறேன்"என்றான் கவலையாக

"சரிடா.நான் இங்க உள்ள நிலமைய சமாளிக்கிறேன்.நீ ஒன்னும் கவலைபடாத .நீ வரும் போது தாயும் பிள்ளையும் நல்லபடியா இருப்பாங்க சரியா"என்றவளை

"ஹம்ம்"என்று கூறிவிட்டு காலை கட் செய்தான்.

மறு நாள் மழை அதிகமாக இருக்க அவனால் அன்று ஊர் திரும்ப முடியவில்லை.திடீரென்று ரம்யாவின் அழைப்பு வர

"டேய் மாம்ஸ்..நீ அப்பா ஆகிட்டடா..அம்மாவும் பிள்ளையும் எந்த பிரச்சினையும் இல்லாம சூப்பரா இருக்காங்க"என்றவளை

"முதல்ல நீ போன ப்ரியா கிட்ட கொடு"என்றான்

"இல்லடா அவ இப்பதான் தூங்குறா.நீ எப்போ கிழம்புற "என்றவளை

"இன்னும் 4 மணித்தியாளத்துல அங்க இருப்பேன் .ஓக்கே "என்றான்.

அவன் ஹாஸ்பிடலை வந்தடைந்ததும் உடனே ப்ரியாவை பார்க்க அவள் அறைக்குள் செல்ல கசங்கிய ரோஜா மலராக அவளை கண்ட அர்விந்திற்கு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.அவளைக்கண்டதும் அவளை அணைத்தவன் குழந்தையை கூட கவனிக்கவில்லை...ரம்யாதான்

"ஹ்ஹ்ம்ம்ம்கும்..கொஞ்சம் பையனையும் பாருங்க சார்.பொண்டாட்டிய அப்புறமா கொஞ்சலாம்"என்றவளை

நிஷா கையில் வைத்திருந்த தன் தம்பியை அப்பாவிடம் கொடுத்தவள்

"அப்பா உங்க பையன் பா"என்றவளை கொஞ்சம் வித்தியாசமாக பார்ர்தவனை ரம்யாவோ

"டேய் அவகிட்ட நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்"என்றாள்.

அவன் ஏன் ரம்யா இப்படி பன்னே என்பது போல முகத்தை கவலையாக வைத்துக்கொண்டவன் தன் பிஞ்சி மகனை கூட கையில் ஏந்தாமல் மகனை ஏந்தியிருக்கும் நிஷாவை அணைத்து

"என்ன இருந்தாலும் எங்க வாழ்க்கைக்கு ஒளி ஏற்ற வந்த தேவதைடா நீ.உங்கம்மாக்கும் எனக்கும் உனக்கு அப்புறமாத்தான் மத்த யாருமே"என்றவனை

"அப்பா என்னப்பா பேசுரீங்க.என்ன இருந்தாலும் என்னைக்கும் எனக்கும் நீங்க மட்டும்தான் அம்மா ,அப்பா சரியா.இப்ப இந்த சின்ன குட்டி தம்பிய பிடிங்க.என் தம்பிய நான் எப்படி பார்த்துக்கிறேன்னு மட்டும் பாருங்க.சரியா"என்ற தன் மகளை தன் அருகில் அழைத்த ப்ரியா

"நிஷாமா...சாரிடா உனகிட்ட மறைச்சதுக்கு"என்றவளை

"அடப்போமா நீ வேற.நீங்க குணமாகிட்டு வாங்க..என்ன தனியா விட்டுட்டு போக பார்த்தீங்கள்ள.அதுக்கெல்லாம் சேர்த்து உங்களுக்கு இருக்கு"என்று செல்லமாக மிரட்டிய தன் மகளை வாரி அணைதுக்கொண்டாள்.

இவர்களின் குடும்ப நெருக்கத்தை பார்த்த ரம்யாவுக்கு உண்மையிலேயே பொறாமையுடன் கூடிய சந்தோசம் வந்தது.

------------------

நிஷா பற்றி சிலர் கேட்டதுக்காக இந்த எபிலோக்..என் உயிரினில் நீ இல் இருந்து விடைபெறும் நான்

---மர்யமின் 👨‍👩‍👧 தந்தை---
புது கதையில் லிங்க்
https://my.w.tt/UiNb/ordy6k3XtK

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro