19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இருவரும் ஏர்போர்ட் சென்று போடிங் முடித்து செக் இன் செய்யும் நேரம்

"ஹேய் ப்ரியா,எப்படி இருக்க" என்று யாரோ கூப்பிடுவதை இருவரும் பார்க்க அங்கு ப்ரியாவின் வகுப்புத்தோழன் கௌசிக் நின்றுகொண்டிருந்தான். அவனைக்கண்ட ப்ரியா

"ஹே கௌசிக் எப்போ யூ எஸ்ல இருந்து வந்தே.நீ போனதையும் சொல்லல.வந்ததையும் சொல்லல.சோ பேட்" என்றாள்.

"இல்ல ப்ரியா அவசரமா அப்பா அமெரிக்கா வர சொன்னாங்களா அதான் யார்கிட்டயும் சொல்லக்கூட  டைம் இல்லாம போயிட்டேன்.இப்போ ஜஸ்ட் 2 வீக்ஸ் முன்னாடிதான் வந்தேன்.சரி நீ என்ன படிக்கும் போது இருந்தத விட ஒரு சுத்து பெருத்துட்ட" என்று கலாய்த்தவன் அருகில் இருந்த அர்விந்தை பார்த்து

"ஹேய் இது மைதிலி,ரம்யாவோடா ப்ரெண்ட்தானே"என்றவனை

"ரம்யா ப்ரெண்டான்னு தெரில.ஆனா மைதிலியோட ஹஸ்பண்ட்"என்று அவள் ,அர்விந்தும் மைதிலியும் தங்கள் உயிர் தோழிக்கே தெரியாமல் திருமணம் செய்ததை வைத்து கலாய்த்தாள்.

"ஒஹ்ஹ் மைதிலி கல்யானம் பன்னிக்கிட்டாலா!!! அவ எங்க" என்று அங்குமிங்கும் பார்வையால் தேடியவனை ப்ரியா

"இல்லடா அவ இப்போ உயிரோட இல்ல.நான் எல்லாம் உனக்கு டீடைல்லா சொல்ரேன்"
என்று ரத்தினசுருக்கமாக அவனுக்கு கூறினால்.
மைதிலிக்கு நடந்ததை என்னி வருந்தியவனை "ஆமா நீ எங்க போக வந்திருக்க" என்று ப்ரியா கேட்க கௌசிக்

"இல்ல.ஒரு பெரிய ப்ராஜக்ட் ஒன்னு நம்மூர் கம்பனி ஒன்னுக்கு கிடைச்சிருக்கு.அந்த ப்ராஜக்ட்கு எப்டியும் ஆட்கள் எல்லா டிபார்ட்மண்டிலும் தேவைப்படும்.எங்க கம்பனி ஒரு அவுட்சோர்சிங் செக்சனை சமீபத்துல ஸ்டார்ட் பன்னோம்.அதான் இன்னைக்கு அந்த ப்ராஜக்ட் கிடைச்ச கம்பனி சைன் பன்ன டெல்லி போறாங்க.நானும் டெல்லி போய் அங்க அவங்கள மீட் பன்னி ஏதும் சப் காண்ட் ராக்ட் கிடைக்குதான்னு பார்க்கனும்" என்றவனை ப்ரியா

"ஹேய் ரியல்லி அதுக்காகத்தான் போறியா.சப்ப்பா.என்னோட பாதி தலைவலி ப்ராஜக்ட் சைன் பன்ன முதல்லயே தீர்ந்திடுச்சு"என்றவளை அவன் ஒன்றும் புரியாமல் "என்ன சொல்ர "என்று கேட்டான்.அவள் அதற்கு உடனே 
"ப்ராஜ்க்ட் மொத்தமா எங்க கம்பனிக்குத்தாண்டா கிடைச்சிருக்கு.நீ வேற அதே ப்ராஜக்ட்கு சப் காண்ட்றாக்ட் டிரை பன்றியா .சோ என்னோட பாதி தலைவலி முடிஞ்சி பா" என்றவளை

"ஹேய் ப்ரியா ரியல்லி, சோ என் வேல கம்ப்ளீட் ஆகிடுச்சு.அப்போ டெல்லி வர்த்தேவையில்ல" என்றவன் உடனே

"பரவாயில்ல, நானும் வரேன்.3 பேருமா போகலாம்" என்றான்.இதுவரை எதுவும் பேசாமல் நின்றிருந்த அர்விந்தோ

"சும்மா எதுக்கு கௌசிக் உனக்கு வீன் அலைச்சல்.நாங்க போய்ட்டு வந்து நம்ம சப் காண்ட்றாக்ட் பத்தி பேசலாம்" என்றவனை

"இல்ல அர்விந்த் நானும் ப்ரியாவ பார்த்து ரொம்ப நாளாச்சா.எப்டியும் டெல்லில 2 நாள்தானே ஸ்டே பன்னுவீங்க.உங்க வேலை எப்படியும் 3 இல்லன்னா 4 ஹவர்ல முடிஞ்சிடும்.அப்றம் டெல்லிய சுத்திப்பார்க்கலாம்.எல்லாருமா சேர்ந்து" என்றான்.

அர்விந்திற்கு ப்ரியாவுக்கும் அவனுக்குமிடையில் கௌசிக் வருவது பிடிக்கவில்லை.இருந்தாலும் ப்ரியா ஒன்றும் கூறாமல் இருப்பதை கண்டவன் "சரி" என்று ஒற்றை வார்த்தையிம் முடித்தான்.

ப்ளைட்டின் உள்ளே ஏறியவர்களுக்கு.... ப்ரியாவிற்கு ஜன்னலிருக்கையும் அர்விந்த் அவளுக்கு அருகிலும் அமர செல்ல உடனே கௌசிக்

"ஹேய் அர்விந்த் ப்ளீஸ் நீ என்னோட சீட்ல உட்கார்ரியா.நான் ப்ரியா கூட கொஞ்சம் பேசனும்.இதை விட்டா வேற சந்தர்ப்பம் அமையாது" என்றான்

இவனும் மறுப்பேதும் கூற முடியாமல் "ஒக்கே கௌசிக் "என்று கூறிவிட்டு கௌசிக்கின் இருக்கையான சரியாக ப்ரியாவுக்கு பின் உள்ள இருக்கையில் அமர்ந்தான்.அந்த ப்ளைட் ஒரு சிறிய டொமஸ்டிக் ப்ளைட் என்பதால் இருக்கைகளுக்கிடையில் பெரிய இடைவெளி எல்லாம் இல்லை.அர்விந்த் ஏன் பின்னிருக்கைக்கு செல்கிறான் என்று  ப்ரியா திரும்பி பார்க்க கௌசிக் உடனே

"இல்ல ப்ரியா பின்னாடி 2 சீட்டு ப்ரீயா இருக்கா.அதான் அர்விந்த் அதுல கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டா உட்கார்ந்து வரலாம்னு என்ன உன்கூட உட்கார சொல்லிட்டாரு "என்று கூறி அர்விந்திடம் கண்களாலேயே அவனின் செயலுக்கு மன்னிப்பு கேட்டான்.

"ஓஹ் சாருக்கு ரிலாக்ஸ்ட்டா வரனுமாமா,ஒரு பிரச்சினையும் இல்ல.தாராளமா வரட்டும்.நம்ம ரெண்டு பேரும் பேசிக்கிட்டே போவோம் என்று கூறி உட்கார ,இருவர் தோலும் ஒன்றோடு ஒன்று உரசியது.இதைக்கண்ட அர்விந்திற்கு பொறாமைத்தீ உடலெங்கும் பற்றி எரியத் தொடங்கியது.

ப்ளைட் கிளம்ப தொடங்கி 20 நிமிடத்திலேயே கௌசிக்கும் ப்ரியாவும் அவனின் ஐபேட்டில் fault in our stars திரைப்படத்தை ஒரு ஹெட்செட்டை போட்டு ஆளுக்கொரு பக்கம் காதில் வைத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.இன்னும் இருக்க போகும் 2 மணித்தியாளமும் 30 நிமிடமும் எப்படி கழிப்பது என்று தெரியாமல் (சென்னை -டெல்லி ப்ளைட் 2hr 50 Mins) முழித்துக்கொண்டிருந்தான் அர்விந்த்.கடைசியில் ஒரு வழியாக ப்ளைட் டெல்லியை அடைய அர்விந்தும் ப்ரியாவும் fraser suits ஹோட்டலுக்கு செல்ல கௌசிக் அவர்களிடம் காலை சந்திப்பதாக கூறி அவனின் சித்தப்பாவின் வீட்டுக்கு சென்றான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro