20

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இரவு தூங்கி எழும்பியதும் காலையில் இருவரும் ப்ரேக்பாஸ்ட்டிற்கு ஹோட்டலின் ரெஸ்டாரண்டை வந்தடைந்தனர்.ப்ரியாவோ அழகிய மஞ்சள் நிற சேலை அணிந்து அதற்கு பொருத்தமாக ஒரு பிங்க் நிற சால்வை ஒன்றை குளிருக்கு போர்த்தி பார்ப்பவர் கண்களை கவரும் தேவதை போல வந்தால்.வைத்த கண் வாங்காமல் அவளையே அர்விந்த் பார்த்துக்கொண்டிருக்க பக்கத்தில் வந்த ப்ரியா

"என்ன் சார்,நேத்து நல்ல ரிலாக்ஸ்ட்டா வந்தீங்களா."என்றவள் உடனே

"ஹேய் அர்விந்த் நேத்து கௌசிக் கூட ஒரு மூவி பார்த்தேண்டா.செம்ம படம்.கேன்சர் வந்து சாகப் போற ஒரு பொண்ணுக்கு லவ் வருது.சூப்பரா இருந்திச்சிடா.படத்தோட பெயர் கூட பொருத்தமாவே வெச்சிருக்கானுங்க.
அதுவும் அந்த பொண்ணு ஏதோ புது ஹீரோயின் போலடா.ஆனா என்னம்மா நடிச்சிருக்கா,சான்ஸே இல்ல" ப்ரியா

"ஹேய் உனக்கு செய்லீன் வூட்லி தெரியாது.நீ டைவர்ஜண்ட் மூவி சீரிஸ் பார்த்ததே இல்லயா?நான் அந்த மூவி பார்த்ததுல இருந்து அவளோட எல்லா மூவியும் பார்த்தேன்,இது மட்டும்தான் மிஸ்ஸிங்.நிறயவாட்டி பார்க்க டிறை பன்னேன்,ஏதோ நேரம் அமையலடி" என்றவனை முறைத்தவள்

"வேறு யாரோட மூவில்லாம் நீங்க இப்படி ஹீரோயின பார்த்து பார்த்துக்கிருக்கீங்க சார்"என்றதும், அவள் அவனை கலாய்க்க கேட்கின்றாள் என்று கூட விளங்காமல் அவன் சீரியசாக

"ஹேய் அலீசியா விகாண்டர் பா.செம்ம அழகு.அவளோட எக்ஸ் மெசினா சூப்பர் மூவி.அதுக்கு அப்புறமா தான் jason bourn மூவில நடிச்சா.அதுவும் செம்ம.இப்போ நம்ம தலைவி ஏஞ்சலினா ஜூலி நடிச்ச டொம்ப்ரைடரோட அடுத்த பார்ட்ல அவதான் ஹீரோயின்.டிரைலர் செமயா இருந்திச்சி.நீ பார்த்தியா" என்றவனை கண்களில் கோபத்துடன் ப்ரியா முறைத்துக்கொண்டிருந்தால்.

அவள் ஏதோ பேச வாய் எடுக்கும் நேரம் அவளின் போன் சினுங்கியது.போனை எடுத்தவள் "ஹாய் கௌசிக்.சொல்டா.
..............
ஓஹ் அப்டியா நாங்க இப்ப ஹோட்டல் ரெஸ்ட்டூரண்ட்ல இருக்கோம்.
.............
உனக்கு எதுக்கு வீண் சிரமம்.

............

சரி வா எல்லோரும் சேர்ந்தே போகலாம்" என்று போனை கட் செய்தவள் ,

"கௌசிக் இப்பொ வரானாம்.நம்மகூட சேர்ந்த்து அவனும் ப்ராஜக்ட் சைன் பன்ன போக வரேன்னு சொல்ரான்.நான் ஏன் வீன் சிரமம் என்று கேட்டும்,அதெல்லாம் ஒன்னுமில்ல நானும் வரேன்னு சொல்ரான்.நானும் சரி வா என்று சொல்லிட்டேன்" என்றாள்.

"பரவாயில்ல ப்ரியா வரட்டும். " என்றவன் மனதுக்குள் இந்த நாயி எதுக்கு இன்னைக்கு நம்ம கூட வருது.ப்ரியா கூட தனியா டைம்ம ஸ்பெண்ட்லாம்னு பார்த்தா இவன் விடமாட்டான் போலயே என் நினைத்தான்.அவர்கள் காலை உணவை முடிக்க கௌசிக் இவர்களைத்தேடி ஹோட்டல் வந்தவன் ரெஸ்ட்டூரண்ட்டிற்கே வந்துவிட்டான்.கௌசிக் வந்ததும் ப்ரியா

"நான் கை கழுவிட்டு வந்த்துர்ரேன் "என்று எழும்பி சென்றாள்.அவள் சென்றதும் கௌசிக் அர்விந்திடம்

"மச்சி இன்னைக்கு ப்ரியாவ தனியா வெளில கூட்டி போகலாம்னு இருக்கேன் .ப்ராஜக்ட் சைன் பன்னதும் நீ தலைவலிக்குதுன்னு சொல்லிட்டு கிளம்பிடுடா.ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் "என்று கெஞ்ச

அர்விந்தோ என்ன சொல்வது என்று தெரியாமல் ஏதோ மனதில் தோன்ற "சரி கௌசிக் நான் அப்டியே சொல்ரேன் "எண்றான்.

ப்ராஜக்ட் சைன் பன்னதும் மூவரும் வெளியில் சென்று சுத்திப்பார்க்கலாம் என்று ப்ரியா கூற அர்விந்தோ தனக்கு தலைவலிப்பதா கூறியவனை பார்த்து ப்ரியாவின் முகமோ ஒரு கணம் மாறினாலும்
" சரி கௌசிக் ,அப்போ நானும் வரல்ல.நாம நாளைக்கு ஊர் போகனுமே.அதுக்கு தேவையானத அர்ரேஞ்மண்ட பன்னலாம்" என்றவளை கௌசிக் வலுக்கட்டாயமாக

"ஹேய் என்ன விளையாடுறியா.உங்க கூட டெல்லிய சுத்தி பார்க்கலாம்னு வந்தா...அர்விந்த் என்னடான்னா தலவலிக்குதுன்னு சொல்ரான்.நீயும் வரமாட்டேங்குற.அதெல்லாம் எனக்கு தெரியாது நீ வர்ரே இப்போ."என்று கூற அவளோ அர்விந்தின் முகத்தை பார்க்க அவன் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல நின்றுகொண்டிருந்தான், அவனை பார்த்த ப்ரியா "சரி கௌசிக் நாம போகலாம் "என்று கூறிவிட்டு அவர்கள் இருவரும் சென்றனர்.

அர்விந்த் தனியாக ஹோட்டல் அறைக்குள் வந்தவன் ...மனதுக்குள் ,,கௌசிக் ப்ரியாவை விரும்புகிறான் என்று தெளிவாக விளங்குகின்றது.நானும்தான் ப்ரியாவை விரும்புகிறேன்.ஆனால் நான் அவளை விரும்பிவது ப்ரியாவுக்கே தெரியாது.இதுல கௌசிக்கிற்கு எங்க தெரிய போகுது.அவன் இப்போது என்னை திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தந்தையாகவே பார்க்கின்றான்..நான் இப்போது ப்ரியாவை விரும்புவதாக கூறினால் என்னைப்பற்றி கேவலமாக நினைப்பான்..என்று மனதுக்குள் குழம்பியவன் வந்ததற்கு இன்னும் நிஷாவுடன் பேசாததை நினைத்தவன் உடனே அம்மாவிற்கு வாட்சப்பில் வீடியோ கால் எடுத்து பேசினான்.ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை.அதன் பிறகு டீவியை ஓன் செய்ய மூவி ஒன் டிமாண்டில் நேற்று ப்ரியாவும் கௌசிக்கும் பார்த்த Fault in our stars படத்தை பார்க்க தொடங்கினான.படத்தில் மூழ்கியவன் சில இடங்களில் மைதிலியின் ஞாபகம் தோன்ற கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது.

"எங்க எல்லாரையும் இப்படி தனியா விட்டுட்டு போய்ட்டியே மைதிலி.அம்மா இல்லாம நிஷாவ இவ்வளவு நாளா வளர்த்துட்டன்.ஆனா இனிமே அவளுக்கு அம்மாவோட அரவணைப்பு கண்டிப்பா தேவைப்படும்.அப்போ நான் என்ன செய்ய" என்று புலம்பியவனுடைய செல்போன் சினுங்கியது.

போனை எடுத்து பார்த்தவனுக்கு  ப்ரியாதான் கால் செய்தால்."அர்விந்த் நான் இப்போ ஜபானீஸ் பார்க்குல இருக்கேன் ,கௌசிக்கிற்கு அவசரமா அவன் சித்தப்பாக்கிட்ட இருந்து அவன வர சொல்லி கால் வந்திச்சு.அவன் என்ன டிராப் பன்னிட்டு போறேன்னு சொன்னான்.நாந்தான் தேவல்ல உங்களுக்கு கால் பன்னி உங்கூட போய்க்கிறேன்னு சொன்னேன்.நீங்க வரீங்களா என்று கேட்டவளுக்கு உடனே

"சரி ப்ரியா நான் வரேன் "என்று கூறி போனை கட் செய்து கால் டெக்சியில் ஏறி ப்ரியா இருக்கும் ஜபனீஸ் பார்க்கிற்கு சென்றான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro