32

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நாட்கள் நகர ப்ரியா ஆபிஸ் செல்வதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டால். அர்விந்தும் ஏன் என்று அவளை கேட்கவில்லை.திடீரென்று ஒருநாள் தான் இனிமேல் ஆபீசே வரப்போவதில்லை என்றவளை அர்விந்தும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சரி என்றான்.இப்போதெல்லாம் அர்விந்த் ப்ரியாவை வார்த்தைகளால் காயப்படுத்துவதில்லை.ஏனென்றால் அவனால் அது முடியவில்லை.ப்ரியாவை காயப்படுத்த நினைக்கும் போது மைதிலி அவன் நினைவுகளில் வந்து அவனைத்தடுத்தால்.அதைவிட முக்கியமாக நிஷா ..அவன் ப்ரியாவை மனதளவில் காயப்படுத்துவது தன் மகளான நிஷாவுக்கு பிற்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பயம் வந்ததால் அவளை தண்டிக்க வேண்டும் என்ற என்னத்தை கைவிட்டான்.ஆனால் அவள் நிஷாவின் அருகில் வர அனுமதிக்கவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக அர்விந்தின் செயற்பாடுகளில் மாற்றத்தை கண்டவளுக்கு

கண்ணா உன்னை நான் அடையும் நேரம் தொலைவில் இல்லையடா...
என் காதலால் நான் மூழ்கி  உன் காதலால் நான்  சுவாசிக்க வேண்டுமடா...
என் காதலும் உன் காதலும் கடைசியி நம் காதலாக மாற காத்திருப்பேனடா கண்ணா ..

என்று தன் மனதில் தோன்றும் என்னங்களை தன் நாட்குறிப்பில் எழுதி வரத்தொடங்கினால்.

ப்ரியா ஆபீஸ் வருவதை முற்றிலும் நிறுத்தியவுடன் அர்விந்த் நிஷாவை தினமும் ஆபீஸ் கொண்டு போவதை விடவில்லை.அர்விந்த் திருமணத்தின் பின் தினமும் மகளை ஆபிஸ் கொண்டு போய்விடுவான்.அது போலவே இப்பொழுதும் தொடர்ந்தான்.

சில வாரங்களின் பின் ப்ரியாவின் வீட்டிற்கு அர்விந்தும் ப்ரியாவும் வந்திருக்க அர்விந்த் வழமை போல நிஷாவை கூட்டிக்கொண்டு ஆபிஸ் சென்று விட்டான்.இங்கு வீட்டில் அவளுக்கு ஒரு வேலையும் இல்லை என்பதால் ப்ரியாவுக்கு போர் அடிக்க ஆர்ம்பித்தது.வீட்டில் சும்மாதானே இருக்கிறோம் இன்று ஆபிஸ் போய் வரலாம்.எல்லோரையும் பார்த்து ஒரு ஹாய் சொல்லலாம் என்று என்னியவள் அவர்களின் ஆபீசுக்கு சென்றாள்.

ஆபீசில் லன்ச் டைம். ஆபீசில் யாருமில்லாததால் நேரடியாக தன் பழைய அறைக்குள் நுழைய அங்கு அவள் கண்ட காட்சி அவள் மனதை வருந்தச்செய்தது.ரேனு ஒரு கையில் நிஷாவையும் மறுகையால் அர்விந்துக்கு காபியும் கொடுக்க ....திடீரென்று இவள் நுழைந்ததும் ரேனுவுக்கு சங்கடமாகிப் போனது.ப்ரியாவின் முகத்தில் தோன்றிய உனர்ச்சிகளை ஆராய்ந்தவள் நிலமையை மாற்றும் முகமாக

  "ஹாய் ப்ரியா, எப்படி  இருக்க" என்று கூறியவள் நிஷாவை அவளிடம் கொடுக்க என்னி "பாருங்க அம்மா வந்திருக்காங்க..அம்மாகிட்ட போறீங்களா" என்றவள் ப்ரியாவை நோக்க அவள் கண்கள் கலங்கியிருப்பதை கண்டவள் ஏதோ ஒன்று சரியில்லை என நினைத்து

"சரி நான் நிஷாவ வெளில கொண்டு போய் வரேன் .நீங்க பேசிகிட்டு இருங்க "என்று கூறிவிட்டு வெளியில் சென்றாள். ரேனு வெளியில் சென்றதும் ப்ரியா முகத்தில் கடுகடுப்புடன் அர்விந்திடம்

"அர்விந்த் நான் நிஷாக்கு அம்மா இல்லாம இருக்கலாம்.ஆனா இன்னைக்கு வர உங்களுக்கு நான் பொண்டாட்டி.உங்க மனசுல நான் இல்லை என்றாலும் லீகலி ஐம் யுவர் வைப். நான் இப்போ சொல்ரேன் அர்விந்த் நீங்க எப்படி வேனா இருங்க.நான் எதுவுமே கேட்கமாட்டேன்.ஆனா நிஷா எனக்கு வேனும்.ஒரு அம்மாவா இல்லன்னா கூட ஒரு ஆயாவா நான் பார்த்துக்குறேன்.ப்ளீஸ்.நான் நிஷாகிட்ட நெருங்க கூடாதுன்னு நீங்க சொன்னப்போ எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்திச்சி.ஆனா இப்போ நிஷா வேறொருத்திகிட்ட ஐ மீன் ரேனுகிட்ட இருக்குறத பார்க்குறப்போ உசிரே போர மாதிரி இருக்கு.எனக்கு குழந்தைங்கன்னா உயிர்.குறைந்தது 10 பிள்ளையாச்சும் பெத்துக்கனும்னு என் ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லுவேன்.ஆனா என் வாழ்க்கைல அது இனிமே நடக்காதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.ஏன்னா நீங்க என்ன காதலிச்சத விட மைதிலி மேல வெச்சிருந்து அன்பு அதிகம்.அதனாலதான் நான் உங்க நட்ப கேவலமா பேசினத உங்களால இன்று வரை மறக்க முடியல.நீங்க மறந்து ஏத்துக்கோங்க இல்ல ஏத்துக்காம போங்க.அது உங்க இஷ்டம்..ஆனா நிஷாகூட பழகுறதுக்கு எனக்கு பெர்மிசன் குடுங்க அர்விந்த்.காலத்துக்கும் உங்களுக்கு அடிமையா இருக்கேன்.ப்ளீஸ்" என்று கெஞ்சியவளை என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தான் நம் நாயகன் அர்விந்த் குமார்.

வேறேதும் பேசாமல் கண்ணீருடன் வெளியில் சென்றவளை ரேனு "என்ன ப்ரியா வந்ததும் போற " என்றதும்

"இல்ல இனிமே நாளைல இருந்து நானும் ஆபீஸ் வருவேன்.உனக்கு எவ்வளவோ வேல இருக்கும்.நீ அத பாரு.என் புருசனையும் என் மகளையும் பார்த்துக்க நான் நாளைல இருந்து ஆபீஸ் வருவேன்" என்று கூறிவிட்டு வேகமாக சென்றுவிட்டால்.

அர்விந்தின் அறையில் நுழைந்த ரேனு "டேய் ஏண்டா இப்படி பன்ற.பாரு அவ ஏதோ நான் உன்ன மயக்குற மாதிரி  எங்கிட்ட பேசிட்டு போறா.பாவம்டா அவ.அன்னைக்கு நடந்தத மறந்துட்டு அவ கூட வாழுற வழியைப் பாரு" என்று கூறி முடிக்க அவனோ

"நான் எப்பவோ அதை மறந்துட்டேன் ரேனு.ஆனா என்னால ப்ரியாவ ஒரு பொண்டாட்டியா ஏன் ஒரு தோழியாக்கூட பார்க்க முடியல்ல.அப்படி பார்க்க நினைக்கும் போது அவ பேசினது எப்படியோ ஞாபகம் வந்துடுது.நான் என்ன செய்ய.நானும் மனிசன் தானே.அந்த சம்பவத்த மறந்து அட்லீஸ்ட் அவ கூட ஒரு ப்ரெண்ட்டாச்சும் ஆகலாம்னு பார்த்தா இந்த பழைய ஞாபகம் வந்து என்ன கொல்லுதுடி.என்னால பொய்யாலாம் நடிக்க முடியாது.அதான் கொஞ்ச நாளைக்கு இப்படியே போகட்டும் என்று நினைச்சுருக்கேன்.அவளுக்கு தண்டனை குடுக்கனும்னு நினைச்சது என்னமோ உண்மைதான்.அதனாலதான் ஆரம்பத்துல நான் அவள நிஷா கூட நெருங்க விடல.அப்படி அவ நெருங்கினா நான் நிஷாவ கூட்டிக்கிட்டு கண்காணாத இடத்துக்கு போய்டுவேன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக அவ இன்னும் நிஷாகிட்ட வாரதே இல்ல.ஆனா இன்னைக்கு நிஷாவ உன்கிட்ட பார்த்ததும் அவளுக்கு பொறாமை வந்திடுச்சு.அதான் ரொம்ப பீல் ஆகி போறா.சரி இன்னைல இருந்து அவகிட்ட நிஷாவ கொடுக்க போறேன்.அவளே இவள வெச்சுக்கட்டும்.எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்படும்.மனசுதானே.கொஞ்ச நாள்ள மாறிடும் "என்றவனிடம்

ரேனு "மாற்றம் ஒன்றே மாறாதது "என்று புன்னகையுடன் கூறினாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro