31

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அடுத்த வாரம் அர்விந்தின் வீட்டை அவர்கள் வந்து சேர வீடு வெறிச்சோடி இருந்தது.அம்மாவும் அபினயாவும் யூ எஸ் சென்று நான்கு நாட்களாகியிருக்க வீடோ அவர்கள் இல்லாமல் ஏதோ பாலைவனம் போல இருந்தது.அர்விந்த் ப்ரியாவிடம்

வீட்டிற்கு வந்ததும் வீட்டை கொஞ்சம் ஒதுங்க வைத்து நிஷாவை சோபாவில் மர்த்தி வைக்கக்க அவள் ப்ரியாவை கண்டதும் "ம்ம்ம்ம்மா..ம்ம்ம்ம்ம்ம்ம்மா" என்று பேசத்தொடங்கினால்.அதைக்கண்ட ப்ரியாவுக்கு ஓடிச்சென்று அவளை அணைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அர்விந்தோ இதை அறிந்து ப்ரியாவை பார்த்து முறைக்க அவள் ஏதும் கூறாமல் கண்களில் கண்ணீர் வடிய அவனை பார்த்தால்.ஆனால் இவனோ அவளை சட்டை செய்யாமல் நிஷாவை தூக்கிக்கொன்டு

"நான் வீட்டுக்கு தேவையானத வாங்க போறேன். உனக்கு என்னன்ன வேனும்னு சொல்லு.கூடவே வாங்கிட்டு வரேன்.அப்புறம் எனக்கு நானே சமைச்சுக்குவேன்.உனக்கு சமைக்க தெரியுமான்னு எனக்கு தெரியாது.ஏன்னா ரம்யாக்கு காபி கூட போட தெரியாது.நீ எப்படியோ எனக்கு தெரியல.வேனும்னா நீ கடைல வாங்கிக்க.இல்ல சமைக்க தெரியும்னா சமைச்சு சாப்பிடு.இது இரண்டுமே உனக்கு ஒத்து வரல்லன்னா நானே உனக்கு சேர்த்தும் சமைக்குறேன்.அப்புறம் இதெல்லாம் பார்த்து நான் உன்ன விரும்புறதா நினைக்காத.நான் உன்ன உடல் ரீதியா எந்த விதத்திலையும் காயப்ப்டுத்த மாட்டேன்.ஆனா உன்ன எங்கள நெருங்க விடாம உனக்கு தினம் தினம் தண்டனை  தருவேன்" என்றவனை

"பரவால்ல.நீங்க வீட்டுக்கு தேவையானத மட்டும் வாங்கிக்கோங்க.முடிஞ்சா ஒரு நூடில்ஸ் பக்கட் ஒரு டசன் வாங்கி வாங்க.நீங்க ஆபீஸ் போன பிறகு பசிச்சா நான் போட்டு சாப்பிடுவேன்.நீங்க சொன்ன மாதிரி எனக்கு சமைக்க தெரியாதுதான்.உங்க சமையல்லயே கொஞ்ச நாளைக்கு சாப்பிடுறேன்.வெளில எல்லா வேனாம்.நம்ம முதலிரவு அன்னைக்கு சொன்னதுதாங்க இன்னைக்கும் சொல்ரேன்.நீங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அதை நான் ஏத்துக்கிறேன்.ஆனால் உங்கள கெஞ்சி கேட்டுக்குறன்,நிஷா கூட என்ன பழகவிடுங்க.எனக்கு குழந்தைங்கன்னா உசுரு.ப்ளீஸ்.ஐ அம் பெக்கிங்க் யூ (i am begging you)" என்றவளை

எரிச்சலாக பார்த்துவிட்டு நிஷாவை தூக்கி கொண்டு வெளியில் சென்றான்.

வெளியில் கோவத்துடன் செல்பவனை முகத்தில் புன் சிரிப்புடன் பார்த்தவள் வீட்டினை ஒழுங்கு செய்ய தயாரானாள்.முன்னமே அந்த வீட்டிற்கு வந்தவள்தான் என்றாலும் அப்போது இந்த வீட்டின் மீது உரிமையில்லையே.அன்றைய நாள் அவள் மைதிலியின் அடர் நீல நிற சல்வாரை அணிந்திருந்த போது அர்விந்த் அவளை வைத்த கண் வாங்காது பார்த்ததை என்னி அவள் வெட்கப் புன்னகை புரிந்தால்.வீட்டை சுத்தம் செய்து முடித்ததும்  குளித்துவிட்டு அர்விந்தையும் நிஷாவையும் எதிர்பார்த்து காத்திருந்தவள் அப்படியே சோபாவில் உறங்கிப் போனால்.

வீடு வந்த அர்விந்துக்கு ப்ரியா செய்திருந்த காரியம் அவனை கோவம் கொள்ளச்செய்தது .கையில் இருந்த பாட்டிலை கீழே போட்டு உடைக்க நிஷா பயத்தில் வீறிட்டு அழத்தொடங்கினால்.அரவம் கேட்ட விழித்த ப்ரியாவோ என்ன நடக்கின்றது என்று புரியாமல் முழிக்க கோவத்துடன் அவள் அருகில் வந்து கையை ஓங்கவும் நிஷா விடாமல் அழுது கொண்டிருப்பதை உனர்ந்தவன் ப்ரியாவை முறைத்து

"நீ என்ன மயித்துக்கு என் மைதிலியோட டிறஸ்ஸ எடுத்து போட்டிருக்க" என்றவனை ப்ரியா புரியாமல் ஏறிட்டவள் சோபாவை விட்டு எழுந்திருக்கும் போதுதான் கவனித்தான் அவள் அணிந்திருந்தது ,மைதிலியின் அதே நிற சல்வார்.ஆனால் என்ன இவளின் சல்வாருக்கு இளநீல நிற லேஸால் பாடர் பிடிக்கப்பட்டிருந்தது.சோபாவில் அவள் தூங்கியதால் வெளியில் இருந்து வந்தவனுக்கு அவள் அணிந்திருந்த சல்வாரின் இள நீல நிற பாடர் விளங்கவில்லை.தன் தவறை உனர்ந்தவன் உடனே தலையை கீழே குனிய ப்ரியாவோ

"வேனாங்க.நீங்க தப்பு ஒன்னும் செய்யல.அன்னைக்கு நீங்க போட்டுக்க கொடுத்த மைதிலியோட டிறஸ் இருந்த அதே கலர்ல என்கிட்டயும் இருந்திச்சு.அதத்தான் நான் இப்போ போட்டிருக்கேன்.வெளில இருந்து வந்த உங்களுக்கு அதே சல்வார் மாதிரி தெரிஞ்சிருக்கும்.பரவாயில்லை,ஒன்னும் பீல் பன்னவானாம்.அப்புறம் உங்களுக்கு என்னை பழிவாக்கனும்னா..சாரி எனக்கு தண்டனை கொடுக்கனும்னா அதை நிஷா முன்னாடி பன்னாதீங்க.உங்க பொண்ணுக்கு நீங்க எப்பவுமே ஹீரோவாத்தான் இருக்கனும்.இனிமே நான் நிஷா பக்கமோ இல்ல உங்க பக்கமோ தலை வெச்சி கூட பார்க்கமாட்டன்.எனக்கு நீங்க தண்டனை தருவதை பார்த்து  நிஷாஉங்கள பத்தி தப்பா நினைச்சிட போறா.சோ, நான் உங்க ரெண்டு பேரயும் விட்டு தள்ளியே இருக்கேன்"என்று கண்கலங்க கூறியவளை பார்த்த அர்விந்திற்கு மனதை ஏதோ ஒன்று பிடித்து பிசைவது போல இருந்தது.தான் செய்வது தவறோ என்ற என்னத்துடன் தன் அறைக்குள் சென்றவன் உள்ளே மைதிலி,ரம்யாவுடன் இருக்கும் போட்டோவை பார்க்க கோவம் தலைக்கேறி

"நீ இதே ரூம்லதான் எங்க கூட இருக்கனும்.ஆனா நிஷாவ பார்க்காம பேசாம" என்று கூறிவிட்டு மனதுக்குள் "ப்ரியா ,உன்மேல காதல் மட்டும் திரும்ப வரக்கூட்டாதுன்னு கடவுளை வேண்டிக்கிறேன்.வராதுன்னும் நினைக்குறேன்.ஏன்னா நான் உன்மேல வெச்ச காதல விட மைதிலி மேல வெச்சிருந்த நட்பு பெருசு.நீ அந்த நட்பை கொச்சைப்படுத்தினத  என்ன செய்தாலும் அது மறக்க போறதில்ல".....என்று பெருமூச்சு விட்டான்.

நாட்கள் இப்படியே நகர தினமும் இரவில் அர்விந்த் செய்யும் உணவை அவனுடன் சேர்ந்து மூக்குப்பிடிக்க சாப்பிடுவாள்.அவனும் விதம் விதமாக சமைத்துக்கொடுப்பான்.ஒரு நாள் இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது நிஷா தூக்கத்தில் அழத்துவங்க ப்ரியா திடீரென்று எழுந்து அறைக்குள் செல்ல முற்பட்டாள். அர்விந்தோ

"எங்க போற, சொன்னதெல்லாம் மறந்திடுச்சா. என் பொண்ண நான் பார்த்துக்குவேன்.நீ உன் வேலைய மட்டும் பாரு.இல்லை இன்னும் என்ன எபடியெல்லாம் கேவலமா பேசலாம்னு யோசிச்சி வெச்சிக்க.எப்படியும் எங்கள விட்டும் போகும் போது என்ன திட்டிட்டுதான் போக போற.அன்னைக்கு தேவைப்படும் "என்றவனை அவள் மெல்லிய குரலில்

"என் உடம்புல இருந்து உயிர் போனாலும் போகுமே தவிற உங்க இரண்டு பேரையும் விட்டு நான் போக மாட்டேன்.உங்களுக்கு என்ன தலமுழுகனும்னு தோனிச்சின்னா சொல்லுங்க "என்றதும் அர்விந்தின் உள்ளம் ஒரு கணம் ஆடிப்போனது

"நீங்க நிஷாகிட்ட என்ன நெருங்க விடமாட்டீங்கன்னு தெரியும்.நானும் உங்க அனுமதி இல்லாம அவகிட்ட நெருங்கமாட்டன்.இருந்தாலும் அவகூட அவ பக்கத்துல இருக்கிறதே எனக்கு சந்தோசம்.என் ஆயுசுக்கும் அது ஒன்னு போதும்"என்றால்.

இரவு தூங்க இருவரும் அறைக்குள் செல்ல அவிந்தின் வீட்டு படுக்கை அறையோ ப்ரியாவின் வீட்டு அறை போல பெரிதாக இல்லை.எனவே ப்ரியாவுக்கு எங்கே தூங்குவதென்ற குழப்பம்.அர்விந்தோ ப்ரியாவிடம்

"நீயும் கட்டில்ல தூங்கு பரவாயில்ல"என்றவனை 

"இல்ல நான் ஹால்ல தூங்குறேன் "என்றால்.

அதற்கு அர்விந்த் அவளை முறைத்து 

"ஒரு ம...தேவையில்ல இங்கேயே தூங்கு"என்று அவளுக்கு போர்வையை எடுத்துக் கொடுத்து 

"தூங்கும் போது நிஷா பக்கம் வந்திடாத.அவ நமக்கு நடுவுலதான் தூங்குவா"என்றவனை இவள் மனதுக்குள் 

"ஏன் நிஷாவ உங்க பக்கத்துல போட்டு நீங்க என் பக்கம் வந்தா என்னவாம்"என்று கிண்டலாக என்னியள் சிரித்துவிட அர்விந்தோ "நம்ம இவள திட்டிக்கிட்டு இருக்கம்.இவ என்னடான்னா லூசு மாதிரி இருக்கா.ஒரு வேலை நாம பன்ன டாச்சர்ல லூசாகிட்டாலோ "என்று என்னியவாறு படுக்கையில் சாய்ந்தான்.

ஆனால்அர்விந்திற்கு ஒரு விடயம் மனதில் தோன்றவில்லை.அதுதான் ப்ரியாவை தண்டிக்க வேண்டுமென்று என்னியவன் அவளை பழிவாங்க நினைக்காதது ஏன் என்பது .பழி உணர்வு என்பது உயிர் உள்ளவரை இருக்கும் .ஆனால் தண்டனை .....குற்றவாளிக்கு தண்டனை காலம் முடிந்ததும் சுதந்திரமாக வெளியில் உலவ முடியும்.அது போலவே ப்ரியாவும் தண்டனைக்காலம் முடிந்து சுதந்திரமாக அவனின் குடும்பத்தில் ஒருத்தியாக வாழ தொடங்குவாளா அல்லது ஆயுள் தண்டனை கிடைத்து மனதால் வருந்தியே தன் உயிரை மாய்ப்பாளா, இல்லை என்றால் அவளை அன்பினால் ஆட்சி செய்ய புதிய உறவு ஏதும் அவளுக்கு கிடைக்குமா.பொறுத்திருந்து பார்ப்போம்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro