8

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலையில் ஆபிஸ் சென்ற அர்விந்துக்கு ப்ரியா செயல்களில் வித்தியாசம் தெரிந்தது. அவனிடம் தேவை இல்லாத விடயங்களுக்கெல்லாம் ஏதோ ஒரு காரணத்தை ஏற்படுத்திக்கொன்டு பேசுவது போல இருந்தது.இப்படியே நாள் போய்க்கொன்டிருக்க ஒருநாள் ப்ரியா அவனிடம்

"ஹேய் அர்விந்த் இன்னைக்கு சங்கீதா வீட்ல பார்ட்டி இருக்காம் நீ வரியா"

"ஹே என்ன பார்ட்டி ,அந்த லூசு என்கிட்ட சொல்லவே இல்ல" என்றவனை (சங்கீதாவை லூசு என்று அழைக்கும் அளவு அவர்களின் நட்பு விரிந்திருந்தது).

"ஓஹ் அப்டியா அப்போ நீ இன்விட்டேசன் இல்லாம எப்டி போவ.சரி நானும் போகலடா" என்று கூறியவலை அதுவும் முதன் முதலாக அவனை ப்ரியா டா போட்டுக்கூப்பிட்டதை கேட்டவன் நிமிர்ந்து அவளை ஆச்சரியமாக பார்க்க அவளோ தன் நாக்கை கடிந்துகொன்டால்.

அவளின் நிலையை உனர்ந்தவன் உடனே அதை இயல்பு நிலைக்கு மாற்ற என்னி "ஹேய் எனக்காகலாம் ஒன்னும் நீ போகாம இருக்க வேண்டாம்.இன்னும் டைம் இருக்குல்ல. எப்படியும் அவ என்ன கூப்புடுவா.சரியா.நானும் வரேன்"

"ஆமா நீ எப்டி வருவ" என்று கேட்டவலை

"வேற எப்படி ,எல்லாம் கால் டெக்சி இல்லன்னா உபர்தான் "என்றான்.

"அதெல்லாம் ஒன்னும் வேனாம் ,நீ ரெடியாகி இரு .நான் கரக்டா ஏழு மணிக்கு உன் வீட்ட வாரன் ஓக்கே.அவ இன்வைட் பன்னா என்றால் பார்ட்டிக்கு போகலாம்.இல்லன்னா உன் பொண்ணு நிஷாவ கூட்டிட்டு வெளில எங்க சரி போகலாம்.எனக்கு இன்னும் அவள தெரியாதே"என்றவளை ஆச்சரியமாக அர்விந்த் பார்த்து

" இல்ல என்ன இன்வைட் பன்னலன்னு நான் வராம விட்டா ஒக்கே.அதுக்காக நீயும் போகாம இருக்கிறது சரி இல்லை" என்றவன்

"திஸ் இஸ் யுவர் பாஸ் ஓடர் மிஸ்டர் அர்விந்த்.கோ அன்ட் டூ யுவர் ஜாப்.டொட்"என்றவலை இதழில் புன்னகை விரிய

"ஒக்கே மேம்"என்று நக்கலாக கூறிவிட்டு சென்றான்.

வேலை முடிந்து அர்விந்த் அவசரமாக வீடு செல்ல ப்ரியா ஆபீஸ் விட்டு செல்ல கொஞ்சம் நேரமானது.அர்விந்த் வீடு வந்து சேர்ந்த நேரம் சங்கீதா கால் செய்தால்.

"ஹேய் தம்பி சரியா 9 மணிக்கெல்லாம் என் வீட்டுக்கு வந்துடு ஒக்கே.அதுவும் உன் ஆளோட"என்றவளை குழப்பத்துடம்

"ஹேய் அப்டிலாம் ஏதுமில்ல,நீ சும்மா புரளிய கிழப்பாத..."என்றவனை

"டேய் லூசு நான் சொல்ல வந்தது நிஷாவ கண்டிப்பா கூட்டி வர சொல்லி.ஆமா நீ எப்டி வருவ.ஏன் ஹஸ்பண்ட வேனும்னா அனுப்பட்டுமாடா,கால் டெக்சில வரேன்னு சொன்ன செருப்பு பிஞ்சிடும்" சங்கீதா.

"அம்மா தாயே நான் ப்ரியா கூடவே வரேன்.அவ என்ன பிக் பன்றன்னு சொல்லிர்க்கா"என்றவனை உடனே

"ஓஹ்ஹோ அதான் தம்பியா ஆளோட வான்னு சொன்னதும் அப்படி பதறினீங்களா.வாடி மாப்ள இன்னைக்கு நீ செத்தடா.இன்னைக்கு சைட் டிஷ் இல்ல மெயின் டிஷ்ஷே நீதாண்டி."

"ஹேய் சங்கீதா அப்டிலாம் ஏதுமில்ல ப்ளீஸ் சும்மா இருக்குற குட்டைய குழப்பிடாத"

"ஒஹ்ஹ் அப்ப குட்டை இருக்குன்னு சொல்ர.அதுவும் குழப்பமில்லாம.பார்க்கலாம் பார்க்கலாம்"

"ஹேய் இப்போ நான் ரெடி ஆகனுமா வேனாமா.முதல்ல போன கட் பன்னு "என்று அழைப்பை கட் செய்தான்.

சங்கீதாவுடன் பேசியதில் அவள் ப்ரியாவையும் அவனையும் சேர்த்து பேசியதை நினைக்கும் போது அவனுக்கு கொஞ்சம் ஒரு மாதிரி நல்ல உணர்வை ஏற்படுத்தியது.இதுதான் காதலின் முதல் படியோ என்று என்ன தொடங்கியவனை நிஷாவின் அழுகை சத்தம் கலைத்தது.உடனே மனதில் என்ன காரியம் பன்ன பார்த்தேன் .என் வாழ்வில் காதல் என்ற அத்தியாயமே இல்லை என்று சபதம் செய்தவன் நிஷாவை நோக்கி ஓடினான்.

அவனுக்கு தெரியவில்லை இன்றிரவே அவன் ஒருத்தி மீது காதல் புயலில் சிக்கி சின்னாபின்னமாகப் போகின்றான் என்று.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro