7

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வீடு வரை அர்விந்தோ அல்லது சங்கீதாவோ எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.மெளனமாகவே இருபது நிமிடமும் கழிய அர்விந்தின் வீடு வந்ததும் அவன் இறங்கிக்கொண்டான்.

"சங்கீதா, வீட்டுக்கு வாங்க.ஒரு காபி சாப்பிட்டு போகலாம்" என்றவனை முறைத்தவள்

"உன் வீட்ல நான் காபி குடிச்சா என்வீட்ல இருக்குற ரெண்டு செல்லக்குட்டிக்கும் யாரு சமைச்சுப் போடுறதாம்"என்றவளை

"ஹேய் உனக்கு பசங்க இருக்காங்கலா.சொல்லவே இல்லை"

"போடா பேக்கு எங்களுக்கு கல்யானமாகியே மூன்று மாசம்தான்" என்றவளை வித்தியாசமாக அர்விந்த் பார்க்க

"தம்பி உன் கற்பனா சக்தியை கொஞ்சம் நிப்பாட்டிக்க.நான் சொன்னது என் புருசனையும் அவரு அப்பாவையும்.இரண்டு பேருமே எனக்கு குழந்தைங்கதான்.அதுலயும் அவரு அப்பா,யப்பப்ப்பா அவரு அலும்பு தாங்க முடியாது.அவங்க வீட்ல அவரு வைப் அதான் என் மாமியார் இறந்ததுமே பெண்களே இல்லாம இருந்துட்டாங்க.இப்ப நான் வந்ததும் ஒரு அம்மாவா,ஒரு மகளா எல்லாமே அவங்களுக்கு நான் தான் இருக்கேன்"
என்று கூறியவளை பெருமையாக பார்த்தான்.

"சரிடா நான் போயிட்டு வரேன்.டேக் கேர்.குட்டி மைதிலிய பார்த்துக்க.ஆமா பேரு என்ன சொன்ன மறந்து போச்சு"

"நிஷா.இதுதான் எங்க பொண்ணோட பேரு.இதுக்கப்புறம் மறந்துடாத.ஒக்கே.டேக் கேர்.அண்ட் பாய்.போய் உன் குட்டீஸ்கு சமைச்சு போடு" என்றவனை முறைத்து விட்டு சங்கீதா சென்றாள்.

வீடு போய் சேர்ந்ததும் சங்கீதா சிறு குளியல் ஒன்றை போட்டுவிட்டு காதுக்குள் போனின் ஹெட்செட்டை வைத்தவள் உடனே ப்ரியாவுக்கு கால் செய்தவாறே சமையல் வேலையை ஆரம்பித்தாள்.

"ஹேய் சங்கி,இப்பதானடி ஆபிஸ் விட்டு போன அதுக்குள்ள என்னடி கால்" என ப்ரியா கேட்க

"ஆமா இவ அப்டியே அவ பாய் ப்ரெண்ட் கூட பேசுரா.நாங்க இவங்கள தொந்தரவு பண்றோம்.ஹேய் ரியா நான் எதுக்கு தெரியுமா அவசரமா கால் பண்ணேன்"என்றவளை ப்ரியா நிறுத்தியவளாக

"என்ன அர்விந்த பத்திதானே சொல்லு"

"ஹேய் ,உனக்கு அப்போ தெரியுமா.ஏண்டி எங்கிட்ட சொல்லல முன்னாடி "என்றாள் சங்கீதா.

"லூசு எனக்குலாம் ஒன்னும் தெரியாது.அவன இன்னைக்கு நீதான் வீட்ட விட போன.அதான் புதுசா ஏதும் இன்பர்மேசன் கிடைச்சிருக்கும் .உனக்குதான் ஒரு விசயம் தெரிய வந்தா யார்கிட்டயாச்சும் உளறிக்கொட்டனுமே.அதான் அர்விந்த் மேட்டர்னு கெஸ் பண்ணேன்"

"நீ இண்டீரியர் கம்பனி ஸ்டார்ட் பண்ணதுக்கு பதிலா.ஒரு டிடக்டிவ் ஏஜென்சி வெச்சிருக்கலாம்.சூப்பரா கல்லா கட்டிருக்கும்.சரி அதவிடு உனக்கு தெரியுமா அர்விந்த்கு மூன்று மாசத்துல ஒரு பொண்னு இருக்கு.பேரு நிஷா.அதவிட பெரிய மேட்டர் என்னன்னா மைதிலி இப்போ உயிரோட இல்லடி.நிஷா பொறந்ததுமே அவ இறந்துட்டாலாம். வூம்ப் கேன்சராம்."என்றவளை

"ஏய் என்னடி சொல்ர,மைதிலி இப்போ உயிரோட இல்லயா.அப்போ அவ இறந்து மூன்று மாசமாச்சா" என்று அதிர்ச்சியாக கேட்க சங்கீதா

"ஆமாடி "என்றவள் இன்று ஆபீசில் அர்விந்த் தவறுதலாக உளறிக்கொட்டி கடைசியில் இனிமேல் இது பற்றி பேச கூடாது என்று சொன்னது வரை ஒன்று விடாமால் ஒப்பித்தாள்.

"சரிடி நம்ம குட்டீஸ் வர்ர நேரமாச்சுடி.சமையல முடிக்கனும்.நாளைக்கு பார்க்கலாம்" என்று சங்கீதா காலை கட் செய்தாள்.

சங்கீதா போனை வைத்ததும் ப்ரியாவுக்கு தலையே வெடிப்பது போல் இருந்தது.ப்ரியாக்கா என்று தன்னை எப்போதும் அன்போடு அழைக்கும் மைதிலி இப்போது உயிரோடு இல்லை என்பதை நினைக்கும் போது அவளுக்கு கண்ணீர் தானாக வழிந்தோடியது.அதைவிட இந்த விடயத்தை ரம்யா அறிந்தால் எப்படி ரியாக்ட் செய்வால் என்பதே ப்ரியாவுக்கு பெரிய வேதனையா இருந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro