6

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அன்றைய நாள் வேலை முடித்து வீடு செல்ல ஊபர் டெக்சிக்காக போனை நோண்டிக்கொண்டிருந்தான் அர்விந்த்.அந்தப்பக்கமாக வந்த சங்கீதா

"ஹே அர்விந்த் என்ன பண்ற.போன்ல ரொம்ப பிசியா இருக்க போல" என்றதும்

"இல்ல சங்கீதா,ஊபர் புக் பண்றேன் "என்றவனை

"ஏண்டா கார் இல்லனா பைக் இல்லயாடா"

"நம்மகிட்ட எங்க அதெல்லாம். இப்பதானே வேலைக்கு சேர்ந்திருக்கோம்.இனிமேல் வாங்கிட்டா போச்சு "என்றவனை

"அப்போ அப்ராட்ல உழைச்சதெல்லம் எங்க தம்பி.ஏதும் வட்டிக்கு விட்டிருக்கியா "என்று நக்கலாக கேட்டவலை
ஏதோ யோசனையில்

" எல்லாமே மெடிக்கல் செலவுக்கு போய்ட்டுப்பா" என்று தான் உளறிக்கொட்டியதை என்னி நாக்கை கடித்துக்கொண்டான்.உடனே நம் சங்கீதாவின் ஜேம்ஸ்பாண்ட் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.

"ஹே என்னடா சொல்ர?என்ன மெடிக்கல் செலவு?என்ன ஒரு நல்ல ப்ரெண்டா நினைச்சேன்னா சொல்லு" என்றவள் மனதுக்குள்

'ஆமாமா இவரு க்லோஸ் ப்ரெண்ட கல்யானம் பண்ணத அடுத்த ப்ரெண்ட் கிட்டவே சொல்லலயாம் .இதுல நம்மலவேற ப்ரெண்டா நினைச்சு சொல்லதான் போறாரு' என்று எண்ணியவளின் மனதை பொய்ப்பிக்கும் முகமாகா

"சங்கீதா ஒன்னு சொல்ரேன் கேட்டுக்க. மைதிலி இப்போ உயிரோட இல்ல.எங்க பொண்ணு நிஷா பிறந்ததுமே அவ இறந்துட்டா.அவளுக்கு கர்ப்பப்பையில கேன்சர்.தயவு செஞ்சு இதோட மைதிலிய பத்தி கேட்கிறத விட்று ப்ளீஸ்.அவ நினைவா எனக்கு அவளோட குட்டி தேவதைய எங்கிட்ட தந்துட்டு போய் இருக்கா.சோ அவல நல்லபடியா வளர்க்குரது மட்டும்தான் இனிமே என்னோட வேல "என்றவனை அதிர்ச்சியோடு சங்கீதா நோக்கி

"ரம்யா,ப்ரியாவுக்கு இது தெரியுமாடா"

"இல்ல அவங்க யாருக்குமே இது தெரியாது.நீயும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேணாம்"என்றவனை

"எனக்கு என்ன சொல்ரன்னு தெரில அர்விந்த் ,ஆனா கண்டிப்பா என்னால ப்ரியா கிட்ட இருந்து இதை மறைக்க முடியுமான்னு தெரில.கண்டிப்பா அவகிட்ட சொல்லுவேன் ,சாரி" என்றாள்.

அப்படி கூறியவளை முறைத்து பார்த்தவன் "சரி சொல்லிக்க.அப்டியே இன்னொன்னும் சொல்ரேன் கேட்டுக்க. இனிமேல் யாரும் இதைப்பத்தி பேசாம இருந்திங்கன்னா என் லைப் கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டா போகும்.இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா அவ இழப்புல இருந்து மீண்டு வரேன்.மறுபடியும் இந்த விசயத்த தோண்டாம இருந்தா உங்களுக்கெல்லாம் புண்ணியமாக போகும் " என்று கை கூப்பியவனை

"சரி அர்விந்த் நான் இனிமே மைதிலி பத்தி பேசமாட்டன்.அப்படியே ரியா கிட்டவும் சொல்லிடுரேன்.நீ இப்போ என்கூட வா.நானே உன்னை டிராப் பண்றேன்" என்றாள்.

அவிந்த் இருந்த மன்நிலைக்கு "இல்ல ,நான் ஆல்ரடி டாக்சிய புக் பண்ணிட்டேன். நீ கிழம்பு.எனக்கு இப்போ டாக்சி வந்துடும் நான் போய் விடுவேன்." என்றவனை முறைப்பாக பார்த்தவள்

"ஆமா பெரிய ஒபாமா கூட அப்பாய்ன்மெண்ட் வாங்கிருக்காரு.கேன்சல் பண்ணா அவனே காசு கேட்க மாட்டான்" என்றவளுடம் மேலும் ஆர்கியூமண்ட் செய்யாமல்

"சரி உன்கூடவே வர்றேன்" என்று கூறினான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro