15

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"இப்போ என்ன இருபத்தி எட்டு தேதிக்குள்ள கட்டணும். அவ்ளோ தானே?" என்றான் தரன்.

"ஆமா" என்றாள் அவன் மனைவி மாலினி.

"சரி கட்டிரலாம்." என்றான் அலுவலகத்திற்கு தயாரிக்க கொண்டே.

"அதில்லைங்க... அவங்க மிஸ். தினமும் எல்லோர்கிட்டயும் கேட்கிறாங்களாம். இன்னைக்கு கூட சொல்லிட்டு தான் போனான். மா என்னைக்கு பீஸ் கட்டுவிங்கன்னு டேட் கேட்டு வர சொன்னாங்கம்மா. அப்பாகிட்ட கேளுமா எப்போ கட்டுறாருன்னு... நான் சொல்லிடறேன். மிஸ் எல்லோரையும் கேட்டுகிட்டே இருக்கங்கம்மான்னு சொன்னான்." என்றாள் மெதுவாக தயங்கி.

சட்டை பட்டனை வேகமாக போட்டு கொண்டிருந்தவன் ஒரு நொடி நிறுத்தி, "அந்த மிஸ்சுக்கு நேரம் சரியில்லை. முதல்ல பிள்ளைங்ககிட்ட எதுக்கு பீஸ் விஷயத்தை சொல்லணும்? சின்ன குழந்தைங்க கிட்டயா சொல்லுவாங்க?" என்று பொறிந்தான்.

"சரி விடுங்க. நாம கட்ட வேண்டியதை கட்டிருவோம். அப்புறம் ஏன் மிஸ் கேட்க போறாங்க?" என்று முடித்தாள்.

"அடியேய் புரிஞ்சு தான் பேசுறியா?" என்று முறைத்தான்.

'என்ன?' என்பது போல் பார்த்தாள் மாலினி.

"என்னவோ முழு பீஸையும் கட்டாத மாதிரி பிள்ளைக்கிட்ட கேட்கிறாங்கன்னு கடுப்பில் இருக்கேன். நீ வேற கடுபேத்தாத." என்றான் கோபமாக.

ஒரு நொடி அவனை பார்த்தவள் எதுவும் பேசாமல் சமையலறைக்குள் சென்று விட்டாள்.

பெருமூச்சு விட்டவன் மெதுவாய் சென்று அவளின் இடையினை கட்டி கொண்டான்.

"நானே ஆபிசுக்கு நேரமாச்சுன்னு கிளம்பிட்டு இருக்கேன். இந்த நேரத்தில் தான் இதை பேசுவாங்களா? சரி கோவிச்சுக்காத... கட்டிரலாம். சரியா? வேலைக்கு கிளம்பும் போது நீ இப்படி முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா எனக்கு எப்படி வேலை ஓடும். என் செல்லம் தானே... கிளம்பட்டா?" என்றான்.

மனசுனக்கங்களை தள்ளி வைத்து புன்னகைத்து வழியனுப்பினாள்.

மாலை பிள்ளையின் பள்ளி குழுவில் க்ளாஸ் டீச்சர் ஒரு ஆடியோ போட்டிருக்க, என்ன என்று கேட்டு கொண்டிருந்தாள்.

"எல்லா பெற்றோர்களுக்கும் வணக்கம்... இந்த வருஷமே முடிய போகுது. பிள்ளைங்க அடுத்த கிளாஸ் போக போறாங்க. இன்னும் பீஸ் கட்டலைன்னா எப்படிங்க...? உங்களுக்கு பிரச்னை இருக்கு அதெல்லாம் சரி தான்... அதுக்காக பீஸ் கட்டாம இருந்தா ப்ரின்சிபால் மீட்டிங் போட்டு எங்களை திட்றாங்க. ஒரு பேரண்ட் வெறும் 250 ரூபா தான் கட்டணும்... எவ்வளவோ செலவு செய்றிங்க  ஒரு இறநூத்தி அம்பது ரூபா கட்ட முடியலையா?... ஒரு சிலர் முழு பீஸுமே கட்டலை. ப்ளீஸ் கொஞ்சம் எல்லோரும் கட்டிருங்க. இல்லைன்னா உங்க பிள்ளைங்களை எக்ஸாம் எழுத விடமாட்டாங்க ரிசல்ட் வராது. நெக்ஸ்ட் கிளாஸ் போனா ஆன்லைன் லிங் வராது. பார்த்துக்கோங்க..." என்று பேசியிருந்தார்.

வந்ததே கோபம் மாலினிக்கு...

பாடம் சொல்லிக் கொடுத்து பிள்ளைகளை சாப்பிட வைத்து உறங்க வைத்தாள்.

இரவு பத்து மணிக்கு கணவன் வந்ததும் எதுவும் பேசாமல் உணவு தந்தவன் எதுவும் பேசாமல் படுத்துக்கொள்ள...

'என்ன ஆச்சு காலைல தானே சமாதானம் செஞ்சுட்டு போனேன். மறுபடியும் என்ன?' என்று யோசித்தவன் அருகில் இருந்த மனைவியிடம் "நீ சாப்பிட்டியா? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு? உடம்பு சரியில்லையா?" என்று நெற்றியை தொட்டு பார்க்க, பட்டென கையை தட்டி விட்டாள்.

"ஏய் திமிரா இப்போ என்ன ஒரு மாதிரி இருக்கன்னு தானே தொட்டு பார்த்தேன். அதுக்கு கைய தட்டி விட்ற?" என்று கோபத்தில் திட்டினான்.

"இப்போ எதுக்கு சத்தம் போட்றிங்க? பிள்ளைங்க தூங்குறாங்க மெதுவா பேசுங்க." என்றாள் மாலினி.

"நா ஒழுங்கா தானே கேட்டேன். நீ தானே பதில் சொல்லல?" என்றான் கோபம் குறையாமல் மெதுவாய்.

எதுவும் பேசாமல் தன் அலைபேசியில் இருந்த ஆடியோவை கொடுத்தாள்.

அதனை கேட்டு முடிந்ததும் மிகவும் கோபமாக, "அந்த மிஸ்சுக்கு எவ்ளோ தைரியம்? நாளைக்கு ஸ்கூலையே போய் வைக்கிறேன் கச்சேரி." என்றான்.

"அதெல்லாம் எதுவும் வேண்டாம். எக்ஸாம்க்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு. இப்போ எதுக்கு பிரச்சனை? பீஸை கட்டிட்டு போலாம். அப்புறம் நம்ம ஏதாவது கேட்க போய் பிள்ளையை கரம் வச்சுருவாங்க." என்றாள்.

"அதெப்படி விட முடியும்? இருபத்தி ஒன்பதாயிரம் கட்டின எனக்கு இறநூற்றி ஐம்பது ரூபாய் கட்றது தான் கஷ்டமா? ஆன்லைன் போர்டல் ஒப்பேனே ஆகலை. நேர்ல ரெண்டு தடவை போய் கட்ட ஓவர் கூட்டதுல கட்ட முடியாம ஆபிசுக்கு லேட் ஆகி திரும்பி வந்தது தான் மிச்சம். எதுவுமே தெரியாம அந்த மிஸ்ஸு எப்படி குரூப்ல இப்படி பேசலாம். ஏன் தனியா கேட்க தெரியாதா? முதல்ல பிள்ளைங்க கிட்ட தினமும் கிளாஸ்ல கேட்டது தப்பு. அது பிள்ளைங்க மனசுல எவ்ளோ ஒரு டிப்ரெஸ்ஸன் உருவாக்குது. நம்மளை விடு. நாம கட்டிட்டோம். யாராவது வேணும்னே காசை கைல வச்சுக்கிட்டு பீஸ் கட்டாம இருப்பாங்களா? அவனவன் இந்த நேரத்துல வேலை இல்லாமவும் இருந்த வேலை போயி குடும்பத்தை நடத்தணுமேன்னு ஏதோ கிடைத்த வேலைக்கு கஷ்டப்பட்டுட்டு இருக்கான். கொஞ்சம் டைம் கொடுத்தா என்ன? குறைஞ்சா போயிடுவாங்க.. இல்ல முடியாதுன்னா நேரடியா பெரண்ட்ஸ கூப்பிட்டு பேசலாம் அட்லிஸ்ட் போன்லையாவது சொல்லலாம். எதுவுமே இல்லாம கிளாஸ்ல எல்லா குழந்தை முன்னாடியும் பீஸ் கட்டாத குழந்தைகளை எழுப்பி கேட்கிறது ரொம்ப தப்பு. அதைவிட பீஸ் கட்டலைன்னா நாளைக்கு ப்ரின்சிபால்கிட்ட கூட்டிட்டு போய்டுவேன்னு குழந்தைகளை மிரட்டுறது அதை விட தப்பு. விளையாட்ற குழந்தைங்க மனசுல பாரத்தை ஏத்துறது தப்பில்லை..." என்றான் ஆத்திரமும் வேதனையும் கலந்து.

"என்ன பண்றது பிள்ளைங்க படிக்குதுங்களே... சரி நாளைக்கு நான் போய் பேங்கில கட்டிட்டு வரேன் விடுங்க." என்று முடித்தாள்.

"சரி. நீ முதல்ல வந்து சாப்பிடு வா." என்று அமரவைத்து சாப்பிட வைத்தான்.

மறுநாள் வேலைக்கு சென்றுவிட, பிள்ளைகளை அழைத்து சென்று 8.30 மணிக்கு பள்ளியில் விட்ட பின், ஐந்து நிமிட நடையில் இருக்கும் வங்கிக்கு நடந்து சென்றாள்.

அதிகாலையிலேயே சூரியனின் வெப்பகதிர்கள் சுட்டெரிக்க, 'வெறும் இருநூற்று ஐம்பது ரூபாய் கட்டணும். அதுக்கு இவ்ளோ அலைச்சல்...' என்று புலம்பிக்கொண்டே  வங்கியின் முன் வந்து நின்றால் இன்னும் திறக்கவில்லை.

பத்து மணிக்கு தான் திறக்கும் என்று கூறவும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தபடி கணவனுக்கு போன் செய்தாள்.

மணியை பார்க்க, 8.45 என்று காட்ட, போனை எடுத்த கணவனோ, "இன்னைக்கு தான் கடைசி தேதி. சரி நீயும் எவ்ளோ நேரம் அங்க இருப்ப? நீ வேணா வீட்டுக்கு கிளம்பு. நாளைக்கு பாரர்த்துக்கலாம்." என்று வைத்துவிட இவளுக்கு தான் என்ன செய்வது என்று புரியவில்லை.

சரி வீட்டிற்கு சென்று விட்டு வரலாம் என்றால் வீட்டிற்கு போய் சேர கால் மணி நேரம் பின் ஒரு பத்து நிமிடம் இருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினால் பேருந்து கிடைத்து இங்கே வந்து இறங்கி வங்கிக்கு வர இருபது நிமிடங்கள் ஆகிவிடும்.

இதற்கே ஒரு மணி நேரம் போய்விடும் என்பதால் என்ன செய்வது , எங்கே செலவது என்று தெரியவில்லை. பத்து நிமிடம் நின்றவள் வெயிலின் தாக்கம் தாங்காமல் மீண்டும்  பள்ளியருகே சென்றாள் அங்கே நிழலிருக்கும் என்பதால் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

9.45 வங்கிக்கு நடந்தே வர, அப்பொழுது தான் திறந்திருப்பார்கள் போல மூன்று பேர் தான் இருந்தார்கள்.

சரி சீக்கிரம் கட்டிவிட்டு போய் விடலாம் என்று அனைத்தையும் நிரப்பிவிட்டு அங்கிருந்த இரண்டு கவுண்டரில் ஒன்றிடம் நின்று கொண்டாள்.

பள்ளி கட்டணம் தனியாக வசூலிப்பார்கள் என்று கூறியதால் அந்த வரிசையில் இரண்டாவதாக நின்றிருந்தாள்.

பக்கத்தில் இருந்த இன்னொரு கவுண்டரிலும் ஆட்கள் நிற்க தொடங்கினார்கள். மணி பத்து அஞ்சு லேசாக வர, எதிரே இருந்த வங்கி ஊழியரிடம் இந்த கவுண்டரில் வருவார்களா என்று கேட்டாள்.

இரண்டிலுமே வருவார்கள் என்றார். பின்னால் பார்த்தால் ஏக கூட்டம். பரவாயில்லை இரண்டாவதாக இருக்கிறோம் சீக்கிரம் கட்டிவிட்டு சென்று விடலாம் என்று யோசித்திருக்க பத்தேகால் வரை யாருமே வரவில்லை.

பத்து இருபதுக்கு பக்கத்து கவுண்டருக்கு வங்கி பணியாள் வந்து அமர, இங்கே வரவில்லையே என்று சலசலப்பு ஏற்பட்டது.

அலுவலகத்திற்கு நேரமாகிறது என்று நிறைய பேர் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இங்கே ஏன் வரவில்லை என்று கேட்கவும், இன்று அவர் விடுமுறை வரவில்லை எனவும் அதிர்ச்சியுடன் கூடிய எரிச்சல் உண்டானது.

திரும்பி பார்க்க எல்லோரும் இன்னொரு கியூவில் பின்னாடி போய் நிற்க தொடங்கினர். அப்பொழுது அரைமணி நேரமாக நின்றது இல்லாமல் இறநூற்று ஐம்பது ரூபாய் கட்ட மீண்டும் பின்னாலிருந்து வரவேண்டுமா என்றிருந்தது.

சில நொடி நின்றவள் பின்னால் போகாமல் கவுண்டர் அருகில் போய் நின்றாள்.

ஏற்கனவே அரைமணி நேரமாக அவள் நிற்பதை பார்த்த அங்கிருந்தோர் எதுவும் கூறவில்லை இரண்டு பேர் அந்த கியூவில் கட்டியவுடன் இவள் கட்டிவிட்டு வீட்டிற்கு வந்து சேர மணி பதினொன்றாரை.

சாப்பிடாமல் போனது வேறு களைப்பாக இருக்கவும் அமைதியாக சாப்பிட அமர்ந்துவிட்டாள்.

ஒரு பள்ளி கட்டணம் கட்ட இவ்வளவு இடையூரா? என்றிருந்தது. நிறைய பள்ளிகளில் இருப்பது போல வங்கி பணியாளரை குறிப்பிட்ட தேதிகளில் பள்ளிக்கு வரவழைத்து ஏன் கட்ட சொல்லக்கூடாது. முடிந்தவர்கள் கட்டிக்கொள்வார்கள். முடியாதவர்கள் மட்டும் வங்கிக்கு சென்று கட்டிக்கொள்ளலாம் அல்லவா என்று தோன்றியது.

******

"என்னண்ணா அண்ணிக்கு போன் பண்ணா எடுக்கவே இல்ல?" என்று தனி தன் பெரியம்மா மகனான அண்ணன் தரனிடம் கேட்டான்.

"அதை ஏன் டா கேட்கிற?" என்று நடந்ததை கூறியவன், "வீட்டுக்கு வந்துட்டு கூப்பிடுவா." என்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு அறைக்குள் நுழைந்தவன்.

கல்லூரிக்கு தயாராகி கண்ணாடி முன் தலைவாரி கொண்டிருந்தவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

அவனின் பார்வையை உணர்ந்தாலும் எதுவும் பேசாமல் தயாராகி கொண்டிருந்தாள்.
'இப்போ எதுக்கு மிட்டாய் கடைய மொறச்சி  பார்க்கிற மாதிரி பார்க்கிறான் இவன்.?' என்று தனக்குள் கேள்வி கேட்டவள் அறையை விட்டு வெளியே செல்ல போகவும்.

"ஒரு நிமிஷம்." என்று அருகில் வந்தான் ஷிவா.

'என்ன?' என்பது போல பார்த்தவளிடம்...

"காலேஜ் கு தானே போற?" என்றான்.

"பார்த்தா வேற எப்படி தெரியுது?" என்றாள் லேசாக முறைத்து.

'திமிரு... ஆமான்னு சொன்னா என்ன குறைஞ்சா போய்டுவா?' கேட்டு கொண்டே..

"கொஞ்சம்..." என்று திணற.

'இப்போ எதுக்கு தந்தி அடிக்கிறான்..?'

"என்ன கொஞ்சம்?" என்றாள் அதே தொனியில்.

'என்னத்துக்குடி மிரட்டுற. மாமாக்கு பயமா இருக்குல்ல?' என்று மனது சண்டை போட ..

'யாருக்கு உனக்கு பயமா இருக்கு? இதை நாங்க நம்பனும்... கொஞ்சமாச்சும் நம்புறா மாதிரி பேசுடா...' என்று மூளை முறைத்தது.

"பார்த்து முடிச்சுட்டிங்கன்னா போகட்டுமா? காலேஜுக்கு டைம் ஆகுது." என்று வாட்சை பார்த்தாள்.

"போகலாம் அதுக்கு முன்ன.." என்று அவள் அருகில் நெருங்க, உள்ளுக்குள் பயந்தாலும் ஒரு அடி கூட நகராமல் நின்றாள்.

'கொஞ்சமாச்சும் பயமிருக்கா பாரு.. எப்படி பார்த்துட்டு இருக்கான்னு' என்று அவளை நெருங்கியவன் அவள் கழுத்தில் இருக்கும் தாலியை தொட போக அவன் கையை தட்டி விட்டவள், " என்ன வேணும்?" என்றாள்.

"அந்த தாலியை கொஞ்சம் மறைச்சுட்டு போ." என்றான் தடுமாற்றமாக.

"ஏன் எதுக்கு மறைக்கணும்? நீங்க தானே கட்டினிங்க? அதெல்லாம் முடியாது?" என்றாள் பிடிவாதமாக.

'அய்யோ இவளுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது?' என்று நொந்து போனவன்.

"இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு காலேஜ். இப்போ இப்படி போனா எல்லோரும் உன்னை ஒரு மாதிரி பார்ப்பாங்க. உனக்கு தான் சங்கடமா இருக்கும்." என்றான் மெதுவாய்.

"அது என் ப்ராப்ளேம். நான் பார்த்துக்குறேன்." என்றதும் அவளை முறைத்தவன்.

"எனக்கு பொறுமை கொஞ்சம் கம்மி. அதனால சொல்லும் போதே ஒழுங்கா செஞ்சுடு..." என்றான் மிகவும் பொறுமையாய் அதே நேரம் அழுத்தமாகவும்.

அவன் விழிகளை அசராமல் பார்த்தவள் , "அதே தான் நானும் சொல்றேன். எனக்கும் பொறுமைக்கும் செட் ஆகாது. சோ தள்ளிருங்களா?" என்று போக முயன்றாள்.

"அப்போ நான் சொல்றதை கேட்க மாட்ட?" என்றான் கோபத்தை கட்டுப்படுத்தி.

அவள் பதிலளிக்கும் முன், "அறிவு" என்று சிவாவின் அம்மா குரல் கேட்கவும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவனை பட்டும் படாமல் உரசி கொண்டு வெளியேறினாள்.

அவளின் வாசம் தன்னை கடந்து போகையில் திணறித்தான் போனான் அவளின் காதல் கணவன்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro