16

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"பம்ப்ச் எஸ்கேப் ஆகிட்டாடா.." என்று வேகமாய் வெளியேறியவன் அழகியை தேட, அவசரமாக தன் பையை எடுத்து கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

"எங்க எஸ்கேப் ஆகுற? இதோ வரேன்." என்று அவள் முன் போய் நின்றான்.

"என்ன?" என்றாள்.

"சாப்பிட்டியா?"

"இல்ல. டைம் ஆகிருச்சு. எடுத்துகிட்டேன். அங்க போய் சாப்பிடறேன்." என்று நகர பார்த்தாள்.

"வா நான் கொண்டு போய் விடறேன்." என்றான் ஷிவா.

"இல்ல நான் பஸ்லையே போய்கிறேன்." என்றாள் அழகி.

"இப்போ நீ என்கூட வரலைன்னா காலேஜ்க்கு போக முடியாது. உனக்கே தெரியாம டி.சி வாங்கிடுவேன் எப்படி வசதி?" என்றான்.

அவனை முடிந்த வரை முறைத்தவள்,

"சரி வந்து தொலைக்கிறேன். எல்லாம் என் தலையெழுத்து." என்று முணுமுணுத்து கொண்டே நகர்ந்தாள்.

"என்ன சரியா கேட்கலை நீ பேசினது?" என்றான் ஷிவா.

"ஒன்னுமில்லை போகலாம். ஆன்டி நான் போய்ட்டு வரேன்." என்று வெளியேறினாள்.

தன்னை கடந்து போகும் அழகியை ரசிக்கும் நேரத்தில் கவனித்துவிட்டான் அவள் மறைத்துவிட்டாள் மங்கல்யத்தை என்று.

இருவரும் இருசக்கர வாகனத்தில் கிளம்பியதை பார்த்து கொண்டிருந்த பக்கத்து வீட்டு பார்வதி.

"என்னக்கா யாரு இந்த பொண்ணு புதுசா இருக்கு. அதுவும் நம்ம சிவாவும் அந்த பொண்ணும் ஜோடியா போறாங்க?" என்றாள் அவர்கள் போன திசையை பார்த்து கொண்டே.

"என் அண்ணன் பொண்ணு தான் பார்வதி. நம்ம சிவாவுக்கு இவளுக்கும் தான் பேசி முடிச்சிருக்கோம். இங்க தான் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறா. அங்க சாப்பாடு சரியில்லாம ரொம்ப உடம்பு சரியில்லாம போயிடுச்சு. இன்னும் காலேஜ் ஆறு மாசத்துக்கு தான் இருக்கு. அதான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன். காலேஜ் முடிச்சபிறகு கல்யாணமாகி இங்க தானே வர போறா." என்று விட்டு உள்ளே வந்தார்.

"சரியான கழுகு கண்ணு. அடுத்தவங்க வீட்ல என்ன நடக்கும்னே பார்த்துட்டு இருப்பாளுங்க போல.. ஊர் வம்பு பேச. சே.." என்று நகர்ந்தார்.

அழகியை கல்லூரியில் இறக்கி விட்டவன்.

"இங்க பாரு திரும்ப திரும்ப என்னால சொல்ல முடியாது. நான் தான் தினமும் உன்னை கூட்டிட்டு வந்து கூட்டிட்டு போவேன். நான் வரலைன்னா கண்ணன் வருவான். நீ தனியா போக கூடாது." என்றான் கடுமையாக எச்சரிக்கும் விதமாக.

"ம்ம்" என்று எதுவும் பேசாமல் உள்ளே சென்று கொண்டிருந்தாள்.

'புருஷன்காரன் கூட்டிட்டு வந்து விட்டுட்டு போறானேன்னு... போய்ட்டு வரேன்னு சொல்றாராளா பாரு. சரியான அழுத்தக்காரி.' என்றவன் கண்ணனுக்கு போன் செய்தான்.

"உன்னை பார்க்கணும். நம்ம வழக்கமா மீட் பண்ற இடத்துல வெய்ட் பண்றேன் வந்துரு." என்று வைத்தான்.

சிறிது நேரத்தில் ஒரு போன் வரவும்,"யார் இது? நம்பரே இல்லாம வருது?" எடுத்தவன்..

"ஹலோ!" என்றான்.

எதிரில் கொஞ்ச நேரம் மௌனமே நிலவ, "சரி நான் போனை வைக்கிறேன்." என்று வைத்துவிட்டான்.

மீண்டும் போன் அடிக்க,
"ஹலோ யாருன்னு கேட்கிறேன்ல?" என்று அதட்ட, "நான் சாப்பிட்டேன்.நீங்களும் சாப்பிடுங்க அதை சொல்ல தான் போன் பண்ணேன்." என்று வைத்துவிட்டாள்.

"அய்யோ நம்ம வேற நம்மாளு தான் போன் பண்ணுச்சுன்னு தெரியாம கேட்டுட்டோம். அதுக்கு அந்த குள்ள கத்திரிக்காய் வேற கோச்சிக்குது." என்று கூறிக்கொண்டான்.

வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வந்தான் கண்ணன்.

"என்னடா ஏதாவது அவசரமா? திடிர்னு இங்க வர சொல்லிருக்க?" என்றான் கண்ணன்.

"ஹ்ம்ம்.. நாம இத்தனை நாளாய் வெய்ட் செஞ்சிட்டு இருந்தஸ் விஷயத்துக்கு இப்போ தான் க்ளு கிடைச்சுருக்கு. இனி ரொம்ப உஷாரா மூவ் பண்ணனும். எந்த நேரமும் வெளிய வரமாதரி இருக்கும் ரெடியா இரு." என்றான் கண்ணன்.

சிறிது நேரம் இருந்துவிட்டு இருவரும் கிளம்பினர்.

தன் அலுவலகத்திற்கு சென்றவன் பாதியில் விட்டு சென்ற பணிகளில் மூழ்கினான்.

மணியை பார்க்க இரண்டரை காட்டியது. 'இந்த விக்னேஷ் மூணு மணிக்கு தசன் வரேன்னு சொன்னான்.இப்போ கிளம்பினா கரெக்டா இருக்கும்.' என்று ஊரிலிருந்து வரும் தன் நீண்ட வருட பள்ளி தோழனை பார்க்க பேருந்து நிலையம் சென்றான்.

மூன்று மணியானாலும் வெயில் வஞ்சனை இல்லாமல் காய்ந்து எல்லோராயும் பாடாய் படுத்தி கொண்டிருந்தது.

அது ஒரு பஸ் டிப்போ. நிறைய பேருந்துகளும் இங்கிருந்து தான் செல்லும் என்பதால் பெரிய மைதானம் போன்று இருந்தது. ஆங்காங்கு பெரிய  மரங்கள் இருந்தன. மதிய நேரம் என்பதால் அவ்வளவாக யாரும் இல்லை.

'இந்த பக்கி பய வராது தான் வரான் சாயந்தரம் இல்ல காலைல வெயில் இல்லாத நேரமா வரலாம் ல..? ஏன்னா வெயிலு தாங்க முடியலை...' என்று புலம்பிக்கொண்டே வெயில் அதிகம் இருந்தததால் சற்று நிழலில் எங்காவது உட்காரலாம் என்று யோசித்தவன் பார்வையை சூழல விட  ஒரு இடத்தில் கண்டா காட்சியில் ரத்தம் உறைந்து பேரதிர்ச்சி ஏற்பட பட்டென்று பார்வையை வேறு திருப்பியவன் கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து வேகமாக எறிந்தான்.

நாம் கனவிலும் நினைக்க தோன்றாத இன்றைய சமுதாயத்தின் சீர்கேடு ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.

ஆம் அங்கே நாளைய சமுதாயத்தின் தூண்கள் என்று நாம் நினைத்து கொண்டிருக்கும் பதினைந்தே வயதிருக்கும் இரு பள்ளி குழந்தைகள் நடத்தி கொண்டிருந்த கேடு செயல்.

பெற்றவர்கள் பெரியவர்கள் ஆசிர்வதித்து திருமணமெனும் பந்தத்தில் நுழைந்து மெது மெதுவாக நாம் ரசித்து கற்று கொள்ள வேண்டியதும், காலத்திற்கும் வாழ்க்கையின் இனிய நினைவுகளாக இருக்க வேண்டிய கணவன் மனைவி மட்டும் தனிமையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய தாம்பத்திய நிலையினை ஏதோ ஒரு வேகத்தில் எதுவுமே அறியும் முன்னரே அவசர கதியில் அருவருக்கத்தக்க நிலையில் நிகழ்த்தி கொண்டிருந்தனர்.

விடலை பருவத்தில் குழந்தைகளின் உணர்வுகளை தவறாக தூண்டும் சமூக ஊடகங்களின் தேவையற்ற காட்சிகளாலும் அலைபேசியெனும் கொடிய அரக்கனின் தேவையற்ற பதிவுகளாலும் மற்றும் அவர்களை சுற்றியிருக்கும் சில பேரின் வக்கிர பேச்சாலும் படிப்பிலும் விளையாட்டிலும் இருபாலர்களுக்குள் அரும்பும் மெல்லிய நட்பெனும் இனிமையை மட்டும் கண்ணியதோடு உணரவேண்டிய நேரத்தில் அவர்களை அறியாமலே மாபெரும்  இழிசெயல் செய்ய தூண்டபடுகின்றனர் என்பது மிகப்பெரிய அவலம்.

அவர்களின் நிலை சரி செய்து கொள்ள அவகாசம் கொடுத்து சில நிமிடங்கள் கழித்து திரும்பியவ ஷிவா அவர்களை முறைத்து அருகில் வர கூறினான்.

"மரியாதையா ரெண்டு பேரும் இங்க வாங்க." என்றான் கோபத்தில் முகம் சிவக்க.

மாட்டி கொண்ட அசிங்கத்தில் தலை குனிந்தபடி பயத்தில் நடுங்கிக்கொண்டு அவன் அருகில் வந்தார்கள்.

இருவரையும் நெருப்பிருந்தால் பஸ்பமாகிவிடும் முடிவோடு முறைத்தவன் ஓங்கி ஒரு அரை விட்டான் அந்த சிறுவனை.

"உன் பேர் என்னடா?" என்றான்.

"மணி" என்றான் அந்த சிறுவன்.

"உன் பேர் என்ன?" என்றான் அந்த பெண்ணை பார்க்காமலே...

எதுவும் கூறாமல் அமைதியாய் தலை குனிந்தபடி அழ, "இப்போ பேர் சொல்லல நேரா உங்க ஸ்கூல்கு கூட்டிட்டு போயிடுவேன்." என்றான்.

"காவேரி" என்றாள் அந்த சிறுமி.

"ரெண்டு பேரும் என்ன படிக்கிறீங்க?" என்றான் ஷிவா.

"லெவெந்த்" என்றனர் இருவரும்.

என்ன வயசாகுது உங்க ரெண்டு பேருக்கும்? சின்ன பசங்க நட்பா இருக்கிறது தப்பில்லை... ஆனா இந்த மாதிரியெல்லாம் சே சே... நின்சிகவே அசிங்கமா இருக்கு. படிக்கிற வயசு இது. நல்லா படிச்சு உங்க குறிக்கோளை அடைய எவ்ளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு. போட்டி நிறைந்த உலகமிது. படிக்க வேண்டிய காலத்துல பிடிக்காம கவனத்தையும் மனதையும் சிதறவிட்டா வாழ்க்கைல பின்னாடி ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும்." என்றவன் அந்த சிறுவனிடம்.

"ஏன்டா இப்போ இப்படி ஏதோ அவசரத்துல தப்பு பண்ணிட்டு வருந்தி என்ன பயன்? நாளைக்கு நீ வளர்ந்து நல்லா படிச்சு கல்யாணமான பிறகு உன் மனைவி ஸ்கூல்ல படிக்கும்போது வேற ஒரு பையனோட இது மாதிரி நடந்துருக்கான்னு தெரிஞ்சா உன்னால ஒழுங்கா நிம்மதியா வாழ் முடியுமா?" என்றவன் அந்த பெண்ணை பார்க்காமலே, "அவன் தான் ஆம்பளை நீ போட்ட பிள்ளை தானே உனக்கு அறிவில்லை. படிக்கிற வயசுல படிகரதை விட்டு இந்த மாதிரி விஷயங்களாள பாதிக்க பட்டு போறது யாரு? ஒரு இப்போ இந்த நிமிஷம் என் இடத்துல உங்க ரெண்டு பேரோட அப்பா அம்மா இங்க இருந்திருந்தா எப்படி துடிச்சு போயிருப்பாங்க. உங்களை மாதிரி பிள்ளைங்களை பெத்துததுக்கு அந்த நிமிஷமே உயிரை விட்டுருப்பாங்க. பிள்ளைங்க மேல நம்பிக்கை வச்சு தானே ஸ்கூலுக்கு அனுப்புறாங்க. மனசை அலைபாயவிடாம படிப்புல மட்டும் கான்செண்ட்ரேட் பண்ணி ஜெய்ச்சு காட்டிட்டு அவங்க நம்பிக்கையை காபாத்திட்டு அப்புறம் உங்களுக்கு பிடிச்சங்களை கல்யாணம் செய்துகிட்டு சந்தோஷமா வாழுங்க. இப்போதைக்கு இந்த மாதிரி தேவையில்லாத வேலையில ஈடுபடாதிங்க. போங்க" என்று அனுப்பி வைத்தான்.

*******

அனைவருக்கும் வணக்கம்!

கதையில் ஏன் திடீரென்று இப்படி காட்சி ? என்று சிலர் நினைத்திருப்பீர்கள்... மேலே கூறிய செய்தி உண்மையில் நடந்தது. இன்னும் எங்கோ ஓரிடத்தில் நடந்து கொண்டிருப்பது... இப்படி ஒரு செய்தியை தெரிந்தவர் ஒருவர் கூறியபொழுது நெஞ்சமெல்லாம் பதற தொடங்கிவிட்டது. எப்படி ஒரு சமுதாய சீர்கேட்டை நோக்கி நம் இளம் தலைமுறையினர் சென்று கொண்டிருக்கின்றனர் என்று எண்ணும்பொழுது ஒரு தாயாய் என் மனதில் ஏற்படும் பதற்றமும் பயமும் கூறுகின்ற அளவில் இல்லை என்றே சொல்லலாம். நிச்சயமாக இங்கே படித்துக் கொண்டிருக்கும் சிலர் தாயாகவும் தந்தையாகவும் சகோதரனாகவும் சகோதரியாகவும் இருக்கலாம். நம் குழந்தைகள் இப்படி பாதை தவறி போவார்கள் என்று கூறவில்லை. நம் குழந்தைகள் மாணிக்கமாக இருக்கலாம் ஆனால் அவர்களை சுற்றியுள்ள சூழ்நிலைகளை புரிந்துகொள்ள முடியாமல் சில நேரம் திணறலாம் ஆகையால் நாம் எல்லோருமே நம் குழந்தைகளின் அன்றாட செயல்களை சந்தேக கண்ணோடு உற்று நோக்காமல் அவர்களின் மனதில் வாழ்க்கையில் எவ்வாறு உன் குறிக்கோளை நீ அடையலாம் எவ்வாறு அதை நோக்கி ஓடலாம் என்ற நல்ல விதைகளை விதைக்க முயல்வோம். நான் கூறியவற்றில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro