கனவே - 18

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வா என் வசம்
வாழ்க்கையே உன்
வசம் வாசமாய் மாறுதே
சுவாசமாய் ஆகுதே
ம்ம் என் உயிரிலே
இன்று நீ துடிக்கிறாய்
உலகமே காணோமே
பறவையாய் ஆனோமே
கொஞ்சம் உன்
கன்னங்களில் முத்த
துளிகளை மெல்ல
தெளிக்கிறேன் கொஞ்சம்
உன் புன்னகையில் மட்டுமே
என்னை மறக்கிறேன்

பரிதாபமாய் தரையில் வீழ்ந்திருந்த பைக்கையும் அஞ்சுவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த வருணை அவளும் அதேவாறு பார்த்துக் கொண்டிருந்தாள்.

"சனா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நிற்கிறியா? நான் இதை மட்டும் தூக்கிடுறேன் " எனக் கூறி கெஞ்சும் பார்வை பார்த்தவனை அப்படியே கிள்ளி கொஞ்சும் எண்ணம் எழ அதை அப்படியே மனதில் அடக்கியவாறு ம்ம் என்று தலையசைத்தாள்.

கீழே இறக்கி நிற்க வைத்தவன் அவளைப் பார்த்தவாறே பைக்கை தூக்க ஆஆ என்றவாறு விழ போனவளைத் தாங்கினான் விஷ்வா.

"என்னமா ஆச்சு? " என்றவன் அவள் பார்வை போன திசையைப் பார்த்து "அய்யோ என் பைக்குக்கு என்னாச்சு? " என்று கத்த

"நல்லா தான் இருக்கு ஒன்னும் ஆகல" என்றவனோ விஷ்வாவைத் தான் முறைத்துக் கொண்டிருந்தான்.

"என்னடா முறைக்கிற? பைக்கை தூக்கு " என்றவாறு அஞ்சுவின் கைகளைப் பிடித்தவாறு விஷ்வா நின்றிருக்க பாதி தூக்கிய பைக்கை மறுபடியும் கீழே போட்டவன் அஞ்சுவின் அருகில் வந்து அவளின் இடது கையைப் பிடித்து தன்புறம் வேகமாக இழுத்து அணைத்தவாறு நின்றுக் கொண்டான்.

"என்னால தூக்க முடியல, நீ போய் தூக்கு " என்று கூறி வருண் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொள்ள , அவன் புறம் திரும்பிய அஞ்சு மனதில் " ஸ்டாப் பீயூங் சோ க்யூட் வரு" என நினைத்து அழகாக புன்னகைத்தாள்.

அவளின் புன்னகையும், அவனின் இந்த செயலும் விஷ்வாவுக்கு சரியாக படாமல் போக கடவுளின் மீது பாரத்தைப் போட்டு பைக்கை தூக்க போனான்.

"கிளம்பலாமா?" என்ற விஷ்வா வருணைப் பார்க்க , "நாங்க கேப்ல வரோம்" என்றவனின் பார்வையோ துளியும் அஞ்சுவை விட்டு நகரவில்லை.

" கேப் ஆச்சும் நீ புக் பண்ணுறியா? இல்லை அவளைத்தான் இப்படியே பார்த்துட்டு இருக்கப் போறியா? "
என்றவனின் கேள்வியில் அஞ்சு தன் விழிகளை விரித்துப் பார்க்க
"சனா யுவர் ஐஸ்!!! வாவ்! அகைன் அதே மாதிரி பண்ணு " என்றவனை என்ன செய்யலாம் எனத் தான் தோன்றியது விஷ்வாவிற்கு.

"இங்கே நான் பேசிட்டு இருக்கேன்கிறதையே மறந்துட்டு இப்படி பச்சையா சைட் அடிச்சுட்டு இருக்கானே!! இதைச் சொன்னா "சைட் லாம் இல்லை டா! சனா அழகுனு மட்டும் சொல்லுவான் , ஆண்டவா இது காதல் அளவு மட்டும் வந்துடக் கூடாது ! " எனப் பிராத்தனை செய்து கண்களைத் திறக்க பாவம் அவன் கண்களை மூடிய நொடியே கடவுள் அவுட் ஆப் ஸ்டேஷன் சென்று விட்டார் என விஷ்வா அறியவில்லை.


நொடிகள் நிமிடங்களாகி நேரம் கடந்துக் கொண்டே இருக்க இருவரின் செயலில் கடுப்பான விஷ்வாவோ கேப் புக் செய்துவிட்டு "இப்போ கேப் வரும் ஒழுங்கா ஏறி வாங்க! இங்கேயே நின்னுட்டு இருக்கலாம்னு ப்ளான் போடாதீங்க!!! வருவீங்களா மாட்டீங்களா? டேய் வருண் " என்று பற்களைக் கடித்தவனது கதறல் எல்லாம் வருணிற்கு கேட்கவே இல்லை.

"வரு வலிக்குது" என்ற அஞ்சுவின் குரலில் சுயநினைவிற்கு வந்தவன்
"அச்சோ சனா !" என பதறி அவளை அப்படியே தூக்கிக் கொண்டு அவள் கண்களைக் காண, வார்த்தைகள் எல்லாம் மறந்து அவனைத் தான் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

"சும்மா பாத்துட்டு தான் இருக்கானு பாத்தா!!! இது என்னடா அவளைத் தூக்கிட்ட" என்று மறுபடியும் குரல் கொடுத்தவனைப் பார்த்து முறைத்தவன் "சனாக்கு கால் வலிக்குது டா" எனக் கூற

"அந்த கால் வலிக்குக் காரணம் நீதான் அதை மறந்துடாத! இவனே கால் உடைப்பானாம் இவனே அய்யோ வலிக்குதானு தூக்கி வெச்சுப்பானாம் !!! போடா போடா கேப் வந்துடுச்சு வந்து சேருங்க " எனக் கூறி கிளம்பிவிட
குற்றவுணர்வுடன் தன் புறம் பார்வையைத் திருப்பிய வருணைப் பார்த்து அழகாக புன்னகைத்து அவனுள் புதைந்துக் கொண்டாள் அவனின் சில்லிபவுடர்.

அவளின் இந்த செய்கையில் இதழோரம் புன்னகைப் பூக்க கைகளில் ஏந்தியவாறே கேப் நின்றிருக்கும் இடத்திற்கு சென்றான்.

சிறிது நேர பயணத்தில் ஹாஸ்டலிற்கு வந்தவர்கள் கீழே இறங்கி நின்றிருக்க  "வார்டன் கிட்ட பேசிட்டேன் டா! கீழே ரூம் அரேன்ஜ் பண்ணுறேனு சொல்லிட்டாங்க...கெஸ்ட் ரூம் பக்கத்துலேயே அஞ்சுவுக்கு ரூம் ரெடி பண்ணுறாங்களாம்!! நீயும் அடிக்கடி பர்மிசன் வாங்கிட்டு போய் பாத்துக்கலாம் " என கூடுதல் இன்பர்மேஷனையும் சேர்த்து தர "இப்போதான் டா உருப்படியா வேலை பார்த்துருக்க!" என்ற வருணிடம் "என்ன மாமா வேலையா" எனப் பற்களைக் கடித்துக் கொண்டு விஷ்வா கேட்டான்.

" அதை விடு!! அந்த நேந்திரம் சிப்ஸை வர சொன்னியா ? " என வருண் கேட்க "சொல்லிட்டேன்,  இன்னும் காணோம்!! இரு என்னனு போய் பார்த்துட்டு வரேன்...
அவளுக்கு கால் வலிக்கும் அந்த சேர்ல போய் உட்காருங்க!! சூப்பர் மேன் மாதிரி அவளை இங்கேயும் தூக்கிட்டு  நிக்காத" என மிரட்டிவிட்டே விஷ்வா நகர

"போடா போடா " என மனதில் நினைத்தவனோ "சனா மா உனக்கு கால் வலிக்குதுல இரு " எனக் கூறி அவளைத் தூக்கியவாறு உள்ளே சென்று அவளை அமரச் செய்து அருகில் தானும் அமர்ந்தான்.

"வரு நேந்திரம் சிப்ஸ் யாரு ?" என்ற கேள்வியை அவளிடம் எதிர்ப்பார்த்தது போல அவளைப் பார்த்தவாறு திரும்பி அமர்ந்துக் கொண்டவன் "உன் கூட சுத்துவாளே பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்துட்டு ஒரு பொண்ணு, அவ பேரு தெரியாது!! அவ கேரளாவாம்...அதுனால நேந்திரம் சிப்ஸ்" எனக் கூறிக் கண்ணடித்தவனை முறைத்தவள்

"அப்போ எனக்கும் பேரு இருக்கா"எனக் கேட்க "ஏன் இல்லை? சில்லி பவுடர் " என்றவனோ அவள் மூக்கை பிடித்து வலப்புறம் இடப்புறம் என ஆட்டி
"நீ கோவப்படுறப்போ இதைப் பார்க்கணுமே சில்லி கலர்லயே சிவந்து அழகாக இருக்கும் " என்றவன் கையை நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

"ஆஆஆ" என்று அலறியவனோ
" உன் சில்லி பவுடர் முகத்தை ரொம்ப மிஸ் பண்ணுறேன் சனா!! நீ ஏன் இப்போ கோவப்படுறதே இல்லை?? நான் தான் நீ இப்படி இருக்கக் காரணம்!! ஆனால் நான் உன்னை வலுக்கட்டாயமா என் கூட கூட்டிட்டு வந்தும் நீ ஏன் என்மேல கோவப்படலை" எனக் கேட்டவன் அவள் முகம் பார்ப்பதைத் தவிர்த்து வேறுபுறம் பார்க்க

அவனைத் தன்புறம் திருப்பியவளோ "நீ வேற யாரையாவது அடிச்சா தான் கோவம் வரும்!!! நமக்கு பிடிச்சவங்க நம்மளை எவ்ளோ ஹர்ட் பண்ணாலும் நமக்கு அவங்க மேல கோவமே வராது.
அதே மாதிரி தான் இப்போவும் " என்றவள் கண்களில் என்ன இருக்கிறது என்பது தான் இந்த வளர்ந்த வெள்ளை பன்னிக்குத் தெரியவில்லை.(அய்யோ ரசகுல்லாவிற்கு)

"நான் யாரையாவது அடிச்சா கோவம் வருமா?" என்றவனின் கேள்விக்கு அவள் ஆமாம் என தலையசைத்து வேடிக்கைப் பார்க்க
சரியாய் வந்து சிக்கிக் கொண்டது வெள்ளை நிற ஆடு ஒன்று...

" வருண் உனக்கு என்ன உரிமை இருக்குடா ? என் தங்கச்சியை கூட்டிட்டு வர !! இல்லை இல்லை கடத்திட்டு வர?? " எனத் திட்டிக் கொண்டே வருணின் சட்டைக் காலரைப் பிடித்த அனிருத்தைப் பார்த்து பாவமாக சிரித்தவன்

"சனா உன் அண்ணனை நான் அடிச்சுட்டா நீ என்னை தப்பா நினைக்கக் கூடாது...உன் அண்ணன் ஆகிட்டானே சோ அடிக்க மாட்டேன் பட் அப்படி அடிச்சுட்டா டோண்ட் மிஸ்டேக் மீ !!ஓகே வா ? " எனக் கூறியவாறே சட்டையின் காலரை பற்றியிருந்த அவன் கரங்களை விடுவித்தவன் "டேய் குழந்தை அந்தப்பக்கமா போய் விளையாடு!! அவ என் சனா, எப்போமோ என்னோட சனா மட்டும் தான்!! என் வாழ்க்கைல இரண்டு தடவை எனக்கு எல்லாமுமாவும் இருந்த தேவதைகளை இழந்துட்டேன்!! இவ கடவுள் எனக்கு கடைசியா கொடுத்த தேவதை...யாருக்காகவும் " என்றவன் தலையை சிலுப்பி, கோதியவாறே எவனுக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டேன் ...என்ன சொன்ன ? கடத்திட்டு வந்தேனா ? ஹாஹா" என சிரித்தவாறே

"சனா மா உன் அண்ணா செமையா காமெடி பண்ணுறான்!! உன்னைக் கடத்திட்டு வந்தேனாம்...எங்கே நீ சொல்லு உன்னைக் கடத்திட்டு வந்தேனா? " அவன் கேட்ட தோரணையிலும் , அவன் கண்கள் இல்லை எனக் கூறி விடு என்ற பாவணையிலும் அவள் தலை தானாக இல்லை என அசைத்தது.

செல்லமாக அவள் தலையை கலைத்தவன் " இங்கே பாருங்க குழந்தைகளா!! என் சனாவுக்கு கால் வலிக்கும் , அவ போய் ரெஸ்ட் எடுக்கணும் ! ப்ளீஸ் நீங்க உங்க கூட்டத்தை கலைச்சுட்டா நன்னாருக்கும் " என்றவன் சனாவின் புறம் திரும்பி "உன் பாஷை லைட்டா கத்துக்கிட்டேன்! நன்னாருக்கா ?" எனக் கண்களைச் சிமிட்டிக் கேட்க அவளும் அதே மாதிரி கண்களைச் சிமிட்டி சூப்பர் என்றாள்.

"நம்ம அஞ்சுவா இது ?" என்பது போல் விக்ரம் மற்றும் அனி பார்த்துக் கொண்டிருக்க அவர்களுடன் பார்வையிலேயே மன்னிப்பை யாசகமாக கேட்டுக் கொண்டிருந்தாள் அஞ்சனா.

"சனா நீ உள்ளே போ!! ஏய் நேந்திரம் அங்கே நின்னுட்டு என்ன வேடிக்கை?  இவளை உள்ளே கூட்டிட்டுப் போ? " என  பதமாய் வந்த அவனின் குரலிலேயே பயந்தவள் சற்று நடுக்கத்துடன் அவர்களீ அருகில் வந்து "சரிங்க சீனியர் " எனக் கூறி கைத்தாங்கலாக அஞ்சுவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

"கிளம்பலாம்னு நினைக்கிறேன்! " என்றவன் கேட்டை நோக்கிக் கை காட்ட பற்களைக் கடித்துக் கொண்டு கோபத்தைக் கட்டுப்படுத்திய அனி "ஏய் அஞ்சு...எல்லாம் பேக் பண்ணி ரெடியா இரு! அத்திம்பேரை வர சொல்லுறேன் " என அவன் கூறிய அடுத்த நொடி இடியென இறங்கியிருந்தது வருணின் கரம்.

அனியை அடித்த மறுகணமே திரும்பி அஞ்சுவைப் பார்க்க அவன் எதிர்ப்பார்த்து போலவே அவள் மூக்கு  மிளகாய் போல் சிவந்து வருணை முறைத்துக் கொண்டிருந்தது.

"டேய் விக்ரம்! "என்ற வருணின் குரலில் அதிர்ச்சி அடைந்த விக்ரம் அவனைப் பார்க்க "இவனைக் கூட்டிட்டு போ!! இனிமேல் நீங்க இரண்டு பேரும் என் கண் முன்னால தான் இருக்கணும்! எனக்குத் தெரியாம என் சனாவைக் கூட்டிட்டு போக ஏதாவது ப்ளான் போட்டீங்க!! ஜாக்கிரதை " என மிரட்டியவாறு அங்கிருந்து கிளம்ப , அவன் சென்ற பிறகும் விக்ரம் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்.

"வருண் நீ விக்கிக்கிட்ட பேசிட்ட டா" என்ற சந்தோஷக் கூவலில் அணைத்துக் கொண்ட விஷ்வாவை விலக்கியவன் "அவன் துரோகி தான் மச்சி, ஆனாலும் அவன் உயிரோட இருக்கணும் !! அவனை நான் பத்திரமா பார்த்துக்க அவன் என் கூடவே இருக்கணும்!! அதுக்குதான் டா நான் அஞ்சுகிட்ட இப்படி நடந்துக்கிட்டதே " எனக் கூறி வருண் முன்னால் நடக்க

"அப்போ அஞ்சு மேல காதல் இல்லையா டா?" எனக் கேட்டு அங்கேயே நின்றவனை

"காதல்" கசந்த புன்னகையைச் சிந்தியவன் " இரண்டு உயிர் போனது போதும் மச்சி!!
இன்னொரு உயிரும் போக வேணாம்...
என் சனா உயிரோட இருக்கணும்...
அதுக்கு மேல அவள் மேல எனக்கு அந்த எண்ணமும் இல்லை!!" எனத் தெளிவாக கூறியவனின் செய்தியில் தான் இவன் குழம்பிவிட்டான்.

"ஒருவேளை அஞ்சு உன்னை காதலிச்சா? " என்ற கேள்வியில் வேகமாக விஷ்வாவின் அருகே வந்து அவனை உற்று நோக்கி "அவ பண்ணமாட்டா? அப்படி பண்ணா , அவளை விட்டு நான் தூரமா போயிடுவேன்" என்றவன் வருண் வருண் என விஷ்வா அழைப்பதைக் கூட கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டான்.

"அஞ்சு நான் ஒன்னு கேட்பேன் தப்பா நினைக்க மாட்ட தானே!!" என்ற பூஜாவிற்கு புன்னகையைப் பரிசாக அளித்தவள் " நானே சொல்லுறேன்! எஸ் ஐ யம் இன் லவ் வித் வரு...வருசனா !!!" அழகா இருக்குள்ள கனவுகளில் மிதந்தவளை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர் பூஜா மற்றும் பூஜாவின் மொபைலில் அஞ்சு பேசிக் கொண்டிருந்ததை கேட்ட இன்னொரு நபரும்!!!!








வணக்கம் நண்பர்களே!!!

பலநாட்கள் காணாமல் போய் இன்று உங்கள் வருசனாவுடன் வந்துவிட்டேன்.

முதலில் சாரி!!!
வொர்க் ப்ரம் ஹோம்னு சித்திரவதை செய்யுறாங்க!!
அதுமட்டுமில்லாம நிறைய டெஸ்ட் வேற...
ஸ்கூல்,காலேஜ்லயே டெஸ்ட்டுனு சொன்னா ஓடிப் போற ஆளு நான்..
இங்கே அப்படி போக முடியாது இல்லையா😕😖

லேட்டா வந்ததுக்கு சாரி...
உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு மன்னிச்சிடுங்க😂

விழிகள் பேசுதே கதையை எல்லாரும் படிச்சிருக்கீங்களானு தெரியல🤔அந்த கதையை ரீ ரன் பண்ணலாம்னு ப்ளான்...
யாருக்கெல்லாம் ஓகே வோ சொல்லுங்க...அது தினமும் அப்டேட் வந்துடும்😂

நானும் எழுதுவேனு ஆரம்பிச்சேன்...
இப்போ 1k பாலோவர்ஸ் எனக்கும்😍ரொம்ப சந்தோஷமா இருக்கு...

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்❤

ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro