கனவே - 17

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சந்தோசமும் சோகமும் சேர்ந்து வந்து தாக்கக் கண்டேனே
சந்தேகமாய் என்னையே நானும் பார்த்துக் கொண்டேனே
ஜாமத்தில் விழிக்கிறேன் ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ காய்ச்சலில் கொதிக்கிறேன் கண்ணுக்குள்ளே காதல் விழா விழா

மருத்துவமனையில் மெத்தையின் மேல் படுத்துக் கொண்டிருந்தவள் கண்களோ விட்டத்தை வெறித்துக் கொண்டிருக்க கண்ணீரோ அவளிடம் அனுமதி கேட்காமல் மெத்தையை நனைத்துக் கொண்டிருந்தது.

வருண்! ஏன் அவனைப் பிடித்தது என இந்த நொடி வரை அவளுக்குத் தெரியவில்லை.
ரௌடி , பொறுக்கி என அவன் முன்னே திட்டிக் கொண்டிருந்தவள் எப்போது அவனைக் காதலிக்க ஆரம்பித்தாள் அதுவும் தெரியவில்லை!
அவன் தந்த சிறு வலிகள் கூட அஞ்சுவின் மனதை ரணமாக்க யாரிடமும் பேசக் கூட தோன்றாமல் கண்ணீர் சிந்த ஆரம்பித்துவிட்டாள்.

"நோ அஞ்சு! அவன் வேணாம், அவனை அதிகமா காதலிக்கிறனால தான் உன்னால அவன் செய்றதை தாங்கிக்க முடியல...
இது ரொம்ப தப்பு! தோப்பனாருக்குத் தெரிஞ்சா அவ்வளவு தான்.
உன் காதலுக்கு அவன் தகுதியே இல்லை அஞ்சு" என்று புலம்பிக் கொண்டிருந்தவள் கதவு திறக்கும் ஓசை கேட்டு கண்களை மூடிக் கொண்டாள்.

மூடிய கண்களைத் தாண்டி வழிந்தோடிய கண்ணீர் அவளின் நிலையைக் காட்டிக் கொடுக்க
அவள் முகத்தையே சில நேரம் ஆராய்ந்த விக்கி " பொம்மு " என அழைத்தான்.

மாலு அவளின் வருங்கால மருமகளை அவ்வாறு தான் அழைக்க ஆசைப்படுவதாய் விக்கியிடம் அவ்வப்போது கூறுவார்.
அவளை மகளாக பாவிக்க வேண்டும், இருவரும் சேர்ந்து வெளியே சுற்ற வேண்டும், சமையல் செய்ய வேண்டும் என பல ஆசைகள் உண்டு அவருக்கு...

அதையெல்லாம் நினைத்துப் பார்த்து தான் அஞ்சுவை விக்கி பொம்மு என்று அழைக்க ஆரம்பித்தான்.

அவள் பொம்மு வா என்று ஆச்சரியப்பட்டதற்கு "நீ பொம்மை மாதிரி இருக்க அதுனால " என்று பல பொய்களை கூறி அவளை சமாளித்தான்.

அவன் அழைத்தும் கண்களைத் திறவாமல் இருந்தவளின் கருமணிகள் மட்டும் அவள் முழித்துக் கொண்டுதான் இருக்கிறாள் என்பதைக் காட்டிக் கொடுக்க "இங்கே பிரட் அண்ட் மில்க் இருக்கு பொம்மு , நீ தூங்கலனு எனக்குத் தெரியும் எழுந்து சாப்பிடு" என்றவன் வெளியே செல்ல கண்களைத் திறந்து பார்த்தவள் ஒரு பெருமூச்சுடன் மறுபடியும் கண்களை மூடினாள்.

அவளுக்கே அவளைப் பிடிக்கவில்லை!
யாரோ ஒருவனுக்காக தன் இயல்பை மாற்றி இப்படி கண்ணீர் சிந்துவது சுத்தமாக பிடிக்கவில்லை!

ஒரு முடிவுடன் எழுந்து அமர்ந்தவள் பிரட் மட்டும் எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.
எத்தனை முறை இப்படி முடிவு எடுத்தாலும் அது அவனுக்காக எனும் போது சாம்பாலாகி விடும் என அவள் அறியவில்லை.

"சௌரவி " என்று உச்சரித்தவனைக் கண்டு விரக்தியாக புன்னகைத்தவள் இல்லை என்பதாய் தலையசைத்தாள்.

"அப்புறம் " என்றவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய "நான் ரவீணா , அவ சிஸ்டர்" என்றவள் ரவியின் நினைவுகளில் கண் கலங்கினாள்.

அவளைக் கூர்ந்து கவனித்தவன்
" அவ இப்படி ஒரு சிஸ்டர் இருக்கிறதா சொன்னதில்லையே!" என்று புருவம் சுருக்கியவனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவள்

"அவளுக்கே தெரியாதப்போ எப்படி சொல்லுவா? கடைசி வரை இப்படி ஒரு தங்கச்சி இருக்கேனு தெரிஞ்சுக்காமலே என்னை விட்டு போயிட்டா " என்றவள் கண்கள் கலங்க அவள் கரங்களை ஆதரவாக பற்றியவன் "எனக்கு புரியவே இல்லை" எனக் கூற அவள் தனக்குத் தெரிந்ததைக் கூற ஆரம்பித்தாள்.

"ஜாதவ் குடும்பத்துக்கு பெண் குழந்தைகளே பிடிக்காது, தப்பித் தவறி நாங்க பிறந்துட்டோம்!" என்றவள் கண்கள் இப்போதும் வெறுமையைப் பிரதிபலித்தது.

"நாங்க டிவின்ஸ் , எனக்கு ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி அவ பிறந்தாள்! இரண்டு பேரையும் வேணாம்னு சொல்லி கொல்ல முடிவு பண்ணிருக்காங்க.
ஆனால் பெண் குழந்தை பிறந்துருக்குனு ஊருக்குத் தெரிஞ்சிருச்சு, அதுனால சௌரவியை மட்டும் விட்டுட்டு என்னைக் கொல்ல முயற்சி செஞ்சாங்க " என்றவள் சிரிக்க

"இவ என்ன இதுக்கு சிரிக்கிறா " என்ற ரேஞ்சில் வருண் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஏன் வரு இப்படி பார்க்கிற ? அவங்க வயித்துல பிறந்தனு நினைக்கிறப்போ அருவருப்பா இருக்கு ஆனாலும் என்ன பண்ண ?
கொல்லலாம்னு கொண்டு போனப்போ தான் தூரத்து சொந்தம் ஒருத்தங்க என்னை அவங்க தத்து எடுத்துகிறதா சொன்னாங்களாம்.
முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க, ஜாதவ் குடும்பத்துக்குத் தெரியாம என்னைக் கடத்திட்டு போயிட்டாங்களாம் அதான் சிரிச்சேன் " என்றவள் மறுபடியும் சிரித்தாள்.

"சனியன் தொலைஞ்சுதுனு விட்டாங்களா ? ம்க்கும் தேடிக் கண்டுபிடிச்சு என்னைத் தூக்கிட்டு போய் பத்திரமா பாத்துக்கிட்ட ரமண் அப்பாவைக் கொன்னுட்டாங்க" என்றவள் குரல் கம்ம வருண் ஆதரவாக தலையை வருடிவிட்டான்.

"மைத்ரி அம்மா தான் அவங்க கிட்ட இருந்து காப்பாத்தி என்னை பத்திரமா பாத்துகிட்டாங்க.
நான் வளர்ந்ததுக்கப்புறம் தான் இதெல்லாம் தெரியும்...
சௌரவியைத் தேடி இங்கே வந்தேன் " என்றவள் கண்கள் சிவந்து கைகள் இறுக எழுந்து நின்று கொண்டாள்.

" அன்னைக்கு ரவி! ரவி அதோ அந்த இடத்துல இருந்து குதிச்சா, ஒரு நொடி உறைஞ்சு போயிட்டேன்...அதுக்கு மேல என்னால அங்க நிற்க முடியல!
ஆறு மாசம் வருண்...
ஒழுங்கா சாப்பிடாம , ரூமுக்குள்ளேயே என் அக்காவை நினைச்சு அழுது பைத்தியமாவே மாறிட்டேன்! ஆனால் என் அக்கா ஏன் வருண் இறந்தா ? இந்த வயசு சாகுற வயசா? அவ பூ மாதிரி , அவளை எப்படி நோகடிக்க மனசு வந்துச்சு ? சொல்லு வருண் " என்று அவன் சட்டையைக் கொத்தாக பற்றி கதற ஆரம்பித்தவள்

" கொல்லணும் அந்த விக்கியை என் கையால கொல்லணும் " என்றவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

அவள் இறுதியில் கூறியதைக் கண்டு அதிர்ந்தவன் "ரவீ " என்று அழைப்பதற்குள் அவள் மாயமாகியிருந்தாள்.

ரவி இறந்ததற்கு விக்கி தான் காரணம் என அவனுடன் பேசாமல் இருந்தான் தான், ஆனால் அவனைக் கொல்லும் அளவு கோபம் வந்ததில்லை...
ஏன் ரவியே அதை விரும்பமாட்டாள்.
அவளுக்கு விக்கி என்றால் எவ்வளவு பிரியம் என்பதை அறிவானே!
அவனுக்கு ஏதாவது என்றால் ரவியே இவனை மன்னிக்க மாட்டாள்.
ரவீ கூறியது தவறு என மனம் சொல்ல எப்படியாவது அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என நினைத்தவன் கனத்த மனதுடன்
விடுதியை நோக்கிச் சென்றான்.

இந்த நினைவுகளிலே உலன்றவன் அஞ்சுவையே மறந்திருந்தான்.

கதிரவனுக்கும் இவர்களின் மன பாரத்தைக் தாங்கிக் கொள்ள முடியாமல் சீக்கிரமாகவே தன் கதிர்களை பூமியில் பரவ விட காலைப் பொழுது அழகாக விடிந்தது.

"அஞ்சனா " என்றழைத்தபடி வருண் அவர்களின் வகுப்பறை முன் நிற்க , பூஜாவோ அவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"அஞ்சு இன்னைக்கு வரல வரு " என்ற ரவியின் பதிலில் "என்னாச்சு?" என்று கேட்டவனுக்கு அப்போது தான் உரைத்தது.

தன்னைத் தானே நொந்துக் கொண்டவன் கால்களோ அடுத்த நொடி மருத்துவமனையை நோக்கி நடக்க ஆரம்பித்தது.

பார்க்கிங்கிற்கு சென்று தன் வண்டியை உயிர்ப்பித்தவன் மறக்காமல் ரவீயிடம் என்ன மருத்துவமனை என்று விவரம் கேட்டறிந்து கொண்டான்.

போகும் வழியெங்கும் அஞ்சுவின்
நினைவுகளே மனதில் இருக்க அவன் நேற்று நடந்து கொண்டதுக்கு மனம் வேறு அடித்துக் கொண்டது.
அவள் விக்கி என்று கூறும்பொழுதெல்லாம்
எங்கிருந்து தான் கோபம் வருகிறதோ!!
தனக்குப் பிடித்த பொம்மை வேறு ஒருவனுக்கு சொந்தமாவதைப் போல் பிரம்மை உண்டாக அந்த பொம்மையை இறுக்கிப் பிடித்துக் கொள்ள நினைக்கிறான்.

அவள் மேல் ஏன் இந்த உணர்வு என இதுவரை நினைத்துக் கூட பார்க்க தோணவில்லை!
ஆனால் அவள் வேண்டும் அதுவும் இவன் அருகிலேயே இருக்க வேண்டும்...
அதுபோதும் வருவிற்கு!

எதிரில் வந்த காற்று முகத்தை வேகமாக அடித்துச் செல்ல கண்கள் அந்த வேகத்தால் சிறிது கலங்க ஆரம்பித்தது.

கண்களில் வழிந்தோடும் நீரின் அளவை வைத்தே தெரிந்துவிடலாம் அவனின் பைக் அவளைக் காண அதீத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று!

மருத்துவமனை வாசலில் நின்றவன் வேகமாக அவளைத் தேடி ஓட அவன் வந்த பைக்கோ அநாதையாக கேட்பார் யாருமின்றி கீழே விழுந்து கிடந்தது.

அஞ்சுவின் கண்களில் கண்ணீரைக் கண்டதும் வெளியே சென்ற விக்கி ஒருவித யோசனையுடன் நின்றிருக்க அவனருகில் வந்த வந்த அனியைக் கூட கண்டுகொள்ளவில்லை.

"பே" என்று காதில் கத்திய அனியை முறைத்தவன் "என்ன டா எரும " என்று கத்த " என்ன யோசனை மச்சான்? எந்த கோட்டையைப் பிடிக்க இப்படி ஒரு யோசனை ?" என்றவனை இழுத்துக் கொண்டு கதவருகே சென்றவன் அஞ்சுவைக் கண் காட்டினான்.

"அவளுக்கென்ன டா, நல்ல தானே தூங்குறா!" என்றவன் முதுகில் சட்டென்று அடித்த விக்ரம் "அவ அழுகுறா டா, தூங்குற மாதிரி நடிக்கிறா " என்று கூற அப்போது தான் அனியும் கவனித்தான்.

உடனே அவன் முகம் சிவக்க "வருண் தானே காரணம் " என்றவன் பற்களை நறநறவென்று கடிக்க அவன் கைகளைப் பிடித்து வெளியே இழுத்து வந்த விக்கியோ
"மச்சி கோபப்படாத டா! என்ன நடந்துச்சுனு இன்னும் தெரியல, தெரியாம நாம எதுவும் டிசைட் பண்ணக்கூடாது...
பேச வாய்ப்பே குடுக்காம முடிவு எடுக்கிறது ரொம்ப தப்பு டா!
அதுனால நான் எந்தளவு நரக வேதனையை அனுபவிக்கிறேனு உனக்குத் தெரியும்" என்றவன் குரல் கம்ம அனி விக்கியை அணைத்துக் கொண்டான்.

"மச்சி அஞ்சு முகம் கொஞ்சமா வாடுனா கூட எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா...
அவகிட்ட உனக்கு நான் இருக்கேனு சொல்ல தோணுது" என்றவனைப் பார்த்து சிரித்தவன்

"இப்போவே சொல்லிடலாம் வா " என்று கூறி இழுத்து சென்றான்.

உள்ளே நுழைந்தவர்கள் கண்டது
எங்கோ வெறித்தபடி பிரட்டை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் அஞ்சுவைத் தான்.

இருவரையும் அவள் கேள்வியாக நோக்க "விக்கி ஏதோ சொல்லணுமாம்" என்ற அனி விக்கியை நோக்கி கண் காட்ட,
திருவிழாவில் காணாமல் போன குழந்தைப் போன்ற விக்கியின் முக பாவனையைக் கண்டு அஞ்சு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

"என்ன விக்கி?" சிரித்துக் கொண்டே அஞ்சு கேட்க

இந்த சிரிப்புக்காக என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என நினைத்தவனோ "அன்னைக்கு ஒரு காமெடி பண்ணியே அதே மாதிரி இன்னும் ஒன்னு வேணுமாம் இந்த அனிக்கு " என்று கூற அனியோ விக்கியைக் கொன்னுவிடும் தோரணையில் பார்த்தான்.

அன்று காமெடி என்ற பெயரில் அஞ்சு கடித்த கடி அப்படி!!

"விக்கி திஸ் இஸ் டூ மச் நான் ஏதோ அன்னைக்கு ஒரு நல்ல காமெடி பண்ணிட்டேன் அகைன் என்ன காமெடி சொல்ல சொல்லி கம்பெல் பண்ணாத ப்ளீஸ் " என்றவளை கொலைவெறியில் பார்த்துக் கொண்டிருந்தனர் அனியும்,விக்கியும்.

விக்கி ஏதாவது சமாளிக்கலாம் என்று தான் இதைக் கூறினான் !!
ஆனால் அதற்கு இப்படி ஒரு பதில் அவளிடமிருந்து வரும் என அவன் நினைத்துப் பார்க்கவே இல்லை.

"குரங்கே!" என்ற அனி அவளின் வலது காதைப் பிடித்து திருக விக்கியோ இடது காதைப் பிடித்துக் கொண்டான்.

அஞ்சுவிற்கு என்ன ஆனதோ என பதறி அடித்து ஓடிவந்தவன் இவர்களின் இந்த நிலையைக் கண்டு கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்க்க முதலில் அவனைக் கண்டது விக்கி தான்.

அவன் கை தானாக கீழே இறங்க அப்போது தான் மற்ற இருவரும் அவன் பார்வை செல்லும் இடத்தை கவனித்தனர்.
அவனை அங்கு எதிர்ப்பார்க்கவில்லை என்பதை அஞ்சுவின் விழிகளே வருணிற்கு காட்டிக் கொடுக்க
"அப்படி என்ன காமெடி பண்ணேனு சொன்னா நானும் சிரிப்பேன் " என்றவன் குரலில் எகத்தாளமா , கோபமா, நக்கலா எது என தெரியவில்லை.

வாய் திறக்காமல் அவனையே தான் பார்த்திருந்தாள்.
கலங்கியிருந்த கேசமும் , இரத்த சிவப்பு நிறமேறிய கண்களும் அவனை விட்டு பார்வையை விலக்க விடவில்லை.

அவன் வந்தது தனக்காகவா! என்ற எண்ணமே மனதில் சூறாவளியாய் சுழற்றி அடிக்க இமைக்க மறந்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"சொல்லு" என்றவனின் கர்ஜிக்கும் குரலில் பயந்தவளின் உதடுகள் அவளின் அனுமதியின்றி வார்த்தைகளை உச்சரித்தது.

"ஒரு பெரிய காடு அந்த காட்டுக்குள்ள ஒரு குட்டி குரங்கு மாட்டிக்கிச்சு...
திடீருன காட்டுக்குள்ள வெள்ளம் வந்துடுச்சு...அந்த குட்டி குரங்கு எப்படி தப்பிச்சிருக்கும் ?" என்றவளோ பின்குறிப்பு "மரத்து மேல ஏறி போகல, காட்டுக்குள்ள எப்படி வெள்ளம் அப்படினுலாம் சில்லியா பதில் சொல்லக்கூடாது " முடித்தவள் அவனையேப் பார்க்க

"ம்ம் ஆன்சர் சொல்லு " என்றவனை மனதில் திட்டிக் கொண்டே
பதிலலித்தாள்.

"இவ்ளோ பெருசா வளந்துருக்க பெரிய குரங்கு உனக்கே தெரியல, குட்டி குரங்குக்கு எப்படித் தெரியும்!" என்றவளின் பதிலில் "வாட் அ ஜோக்" என்று கைகளை வேகமாக தட்டியவன் "கேட்டாச்சுல வெளியே போங்க " என்று விக்கி மற்றும் அனியை நோக்கி கத்த

அவனின் கத்தலில் அஞ்சு பயந்து கண்களை மூடிக் கொண்டாள்.
"பெருமானே பெருமானே " அவள் உதடுகள் உச்சரித்து கண்களைத் திறக்க அது அதிர்ச்சியில் விரிந்து
"ருத்து அண்ணா " என்று கத்த
வருணோ அவளை கேள்வியாக நோக்கிக் கொண்டே அனியின் மூக்கில் ஒரு குத்துவிட்டான்.

வருணின் சட்டையை அனி பிடித்துக் கொண்டிருக்க வருணோ ஒரு படி மேலே சென்று அவன் மூக்கில் தன் முத்திரையை பதித்தான்.

விக்கி இருவரையும் விலக்க போராட கால் வலியையும் மறந்து வேகமாக அனியின் அருகில் வந்தவள் மூக்கில் வழிந்துக் கொண்டிருக்கும் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே கண் கலங்கிக் கொண்டிருந்தாள்.

வேகமாக அஞ்சுவைத் தன் அருகில் இழுத்த வருண் அவளை ஒரு பார்வை பார்த்து தன்னுள் புதைத்துக் கொண்டு மற்ற இருவரையும் தீப்பார்வை பார்த்தவாறே வெளியே செல்ல "வருண் " என்ற அனியின் கத்தலை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை...
வாங்கிக் கொண்டால் அது வருண் அல்லவே!!

அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு நடந்தவன் "வரு வலிக்குது " என்ற குரலில் நின்று அவளை நிதானமாக பார்க்க , அவள் கண்ணீர் இவனை அசைத்துப் பார்த்தது என்பது தான் உண்மை.

அப்படியே அலேக்காக தூக்கியவன் "இப்போ வலிக்காது" என்று கூறியபடியே தன் பைக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.


ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro