31. அக்னிகா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


இரவு கம்பளியை அகற்றி விட்டு சூரியன் சுடர் விட தொடங்கும் நேரம்..

எப்பொழுதும் போல தன் ஜாகிங்கை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் ஏனோ தன் கண்மணி எழிலை பார்க்க வேண்டும் போல் இருந்தது அழகியின் கதிருக்கு.

'இப்போ தூங்கிட்டு இருப்பா.. மாலையில் சென்று பாப்போம்' என யோசித்தவன், வீட்டில் உள்ளே நுழைந்ததும் கை கால்களை சுத்தம் செய்துவிட்டு செய்தித்தாள் வாசிக்க முற்பட்டான்.

சட்டென்று ஒரு கணம் நடந்தவையெல்லாம்  மின்னல் வேகத்தில் வந்து சென்றது.

ஒரு வரி கூட படிக்க இயலவில்லை கதிருக்கு.. அவளின் தீ பற்றிய புடவையும், அத்தை அம்சவேணி பற்றியும் மாற்றி மாற்றி செய்தித்தாளில் உருண்டோடியது.

பின்பு ஒருநொடி கூட தாமதிக்காமல், எழுந்து வேகமாக கிளம்ப, வாசலில் இருந்து வந்த தன் தமக்கையை இடித்துவிட்டான்.

"டேய்.. ஆள்வரது கூட தெரியாம எங்கடா இவ்ளோ வேகமா போற..? இப்ப தான ஜாகிங் முடிச்சு வந்திருக்க.. இரு, உனக்கு புடிச்ச பருப்புவடை வாங்கிட்டு வந்திருக்கேன்.. சூடா டீ போடறேன்.. குடிச்சுட்டு அப்புறம் கிளம்பு.." என்று அவனை பிடித்து உக்கார வைத்தாள்.

"அக்கா.. அவசரமா ஒரு வேலையா வெளிய போறேன்.. போய்ட்டு வந்தபிறகு போட்டு கொடு.." என்று தன் கைபேசியை டயல் செய்தான்.

'அவசரமா வருதுன்னா உள்ள பாத்ரூம்ல போடா.. வெளில போற..' என்று கிண்டல் செய்தாள்.

"ப்பாஹ்ஹ்.. செம காமெடி.. மறக்காம போய்ட்டு வந்ததும் ஞாபகப்படுத்து.. சிரிக்கிறேன்.." என்று செல்லமாக அவளின் கன்னத்தில் தட்டிவிட்டு வெளியில் புறப்பட்டான்.

"காதல் கண்ண தான் கட்டும்ன்னு கேள்விபட்டருக்கேன்.. இவனுக்கு வாயையும் சேத்து கட்டி போட்ருக்கு போல.." என்று சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

**********
காலையில் கோலம் போட்டு முடித்து காபி கலந்து எடுத்து கொண்டு எழிலின் அறைக்குள் வந்த திவ்யா, எழிலின் செயலை கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்து போனார்.

"எதுக்கு மா இப்படி ஷாக் ஆகி நிக்கிற..?" என்று அவளின் கேள்வி திவ்யாவை நினைவிற்கு கொண்டு வந்தது.

"எப்பவும் எந்திரி எந்திரின்னு சொன்னா வேணும்னே படுத்து தூங்குவ.. இன்னிக்கு என்ன ஆச்சர்யமா எந்திரிச்சு உக்காந்து அந்த டப்பாவை தட்டிட்டு இருக்க.." என்றார் சந்தேகமாய்.

"என்னமோ தூக்கம் வரல.. அப்படியே உக்காந்திருந்தேன்.." என்று எழ முயற்சித்தாள்.

"இரு இரு.." என்று கை கொடுத்தவள், "உடம்புக்கு ஒன்னும் இல்லையே.." என்று நெத்தியில் கழுத்தில் கை வைத்து பார்த்தார்.

"மா.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அப்போ எல்லாம் காலேஜ் போய்ட்டு டயர்டா வருவேன்..அப்படியே தூங்கிருவேன்.. இப்போ அடிபட்டதுல இருந்து தூங்கிறது தான் முழு வேலையே.. அப்புறம் என்ன உடம்புக்கு வரப்போது..?" என்று திவ்யாவின் கையை பிடித்து சொன்னாள்.

"ரொம்ப யோசிக்காத மா.. எந்திரிக்க மட்டும் தான் செஞ்சிருக்கேன்.. இன்னும் பல்லு கூட தேய்க்கல.. ஒரே வாரத்துலலாம்  உன் பொண்ணால திருந்திர முடியாது." என்று சிரித்தவள்

"நீ பேசிட்டே இருக்காம அந்த காபியை இப்படி கொடுத்தா நல்லா  இருப்ப நாலு நாளைக்கு.." என்று அவளை செல்லமாக கிள்ளிவிட்டு காபியை வாங்கி குடித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

"பல்லு தேய்க்காம காபி.. ச்சை.. என்னைக்கு இந்த பழக்கம் போக போகப்போதோ தெரியல.." என்று திட்டி கொண்டே வெளியில் வர, அங்கு கதிர் அழைப்பு மணியில் தன் கைரேகையை பதியும் முன் கண்டுகொண்டார்.

"வாங்க தம்பி.. உள்ள வாங்க.." என்று கரம் கூப்பி வரவேற்றாள். 

"எப்படி இருக்கீங்க அத்தை..? மாமா எங்க..?" என்றான் உரிமையோடு.

அதை கேட்டதும் மனதில் மாரி மழை பெய்தது போல் ஜில்லென்ற நீராக ரத்தம் ஓடியது திவ்யாவுக்கு.

"அவர் பின்னாடி இருக்கார் மாப்ள.. இருங்க சூடா காபி கொண்டு வரேன்." என்று கூறிவிட்டு சமையலறைக்கு செல்லும் முன்..

"எழில்.. எந்திரிச்சுட்டாளா.. அதை?" என்றான் கதிர்.

"அதிசயமா இன்னைக்கு சீக்கிரமா எந்திரிச்சுட்டா.. உள்ள இருக்கா.. நான் அவளை வர சொல்றேன் பா.." என்று சொன்னதும் கதிருக்கு புன்னகை பூத்தது..

"எழில்.. ஏய்ய் இன்னும் என்னடி பண்ற..? சீக்ரம் வா.." என்று அறையின் கதவை தட்ட்டினாள்.

'நான் வந்திருக்கேன்னு சொல்லாதீங்க..' என்று ஜாடை காட்டினான்.

அவரும் புரிந்து கொண்டு புன்னகைத்தபடி சமையலறையை நோக்கி காபி கலக்க ஆயுதமானாள்.

சற்றும் முற்றும் திரும்பி பார்த்தவன், டிவி மேல் தன் கதிரழகியின் ஒரு வயது புகைப்படம் கண்ணில் பட்டது.

ஒரு பல்மட்டும் முளைத்திருக்க, கையில் குடுகுடுப்பு வைத்து கொண்டு, ராணி போன்று அழகாக சிரித்து கொண்டிருந்தாள்.

 அதன் அருகில் சென்று கையில் எடுத்து பார்த்து கொண்டிருக்க..

'ஏய் என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்.. உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன்..'

'எனக்கு ராஜாவா நான் வாழுறேன்.. எதுவும் இல்லாம.." என்று பாடிக்கொண்டே வெளியில் வந்தவள், கண் முன் ஒரு ஆண்மகன் திரும்பி இருப்பதை பார்த்து ஒரு கணம் நின்றாள்.

'இந்த பாடிய எங்கயோ பாத்திருக்கோமே..  இது.. இது.. அவரு தான..? என்ன காலங்காத்தால வந்து நிக்கறாப்ல..?' என்று யோசித்தாள்.

அந்த கருப்பு டிராக் பாண்ட் மற்றும் டி ஷார்ட் உடலோடு ஒட்டி இன்னும் அவனின் அழகான தேகத்தை அழகுகூடியது.

கலைந்த முடி.. கையில் ஸ்மார்ட் வாட்ச்.. மெல்லிதாக வெட்டிய நகங்கள்.. அனைத்தும் கண்களுக்கு விருந்து தான்..

'அடச்ச.. என்ன இப்படி ஓப்பனா சைட் அடிக்கிறோம்.. நல்லவேளை இந்த நெட்ட கொக்கு பாக்கல.. இல்லனா ஓட்டியே தள்ளிருப்பான்.' என்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டு..

"ஹலோ.." என்று அழைக்க.. சட்ரென்று திரும்பி பார்த்தான்..

ஊதா நிற நைட்டி மேல் வெள்ளை நிற துப்பட்டா.. சிறு முத்துக்கள் காது மடல்களை அலங்கரிக்க.. சூரியனை பார்த்து பூத்த தாமரை போன்று இவனை பார்த்து மிளிர்ந்தாள்.

அவனும் ஒரு கணம் தன்னை மறந்து அவளின் அழகை ரசித்து கொண்டிருந்தான்.

"எழில்.. இங்க வா.." என்று திவ்யாவின் குரல் இருவறையையும் சுயநிலைக்கு கொண்டு வந்தது.

"உக்காருங்க.." என்று சொல்லிவிட்டு சமைலறையைக்கு சென்றாள்.

'பரவாயில்லை சாதாரண நைட்டி போட்டாலும் கூட அம்சமா தான் இருக்கா..' என்று நினைத்து புன்னகைத்தான்.

"ஏய்ய் மாப்ள வந்திருக்காரு.. போ.. இந்த காபியை கொடு.." என்று அவளின் கைகளில் கொடுத்தாள் திவ்யா.

"நீ தானமா போட்ட.. நீயே கொடு.." என்று அவளிடமே நீட்ட்டினாள். 

"அடிவாங்க போற நீ.. ஒழுங்கா சொல்றத செய்.." என்று அதட்டவும்.. வேறு வழியின்றி அவளே சென்று கொடுத்தாள்.

"தேங்க்ஸ்.." என்று எடுக்க, "நீ குடிச்சுட்டியா..?"  என்று கேட்டான்.

"நான் தான் இங்க மொதல்ல காபி குடிப்பேன்.. அப்றம் தான் எங்க அப்பாவே குடிப்பாரு.." என்று இல்லாத காலரை தூங்கிவிட்டாள்.

"ஆஹா.. சிறப்பு.." என்று நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு காபியை உரிய தொடங்கினான்.

"என்ன விஷயம்.. இவ்ளோ காலைலயே வந்திருக்கீங்க..?" என்று கேட்டாள் ஆர்வமாய்.

"ம்ம்ம்ம்.." என்று முகர்ந்து விட்டு, "அத்தை போட்ட காபி என்ன அப்பிடியே இழுத்துருச்சு.." என்றான்.
 
"இந்த சுடுதண்ணி குடிக்க வா இவ்ளோ காலைல வந்தீங்க..?" என்றாள் நக்கலாக.

"நீ பொண்ணு பார்க்க வந்தப்ப ஒரு கழனி தண்ணிய கொடுத்தியே.. அதுக்கு இந்த சுடுதண்ணி எவ்ளோவோ பெட்டர்.." என்றான் அவனும் விடாமல்.

😒😒 எழில் கோபமாக முறைத்து பார்க்க

"என்ன லுக்கு..?" என்றான் உள்ளுக்குள் சிரித்தபடி.

"இனிமே தினமும் இந்த கழனி தண்ணிய தான் நீங்க குடிக்கணும்.. ஞாபகம் இருக்கட்டும்.." என்றாள் குறும்பாக.

"நான் க்ரீன் டீக்கு மாறிடலாம் னு பிளான்ல இருக்கேன்.. சோ நோ வொரிஸ்.." என்றான் அவனும்.

😏😏

"சரி சரி விடு.. உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.." என்றான் சீரியசாக.

"என்ன?" என்றாள் ஒன்றும் புரியாமல்.

"இரு.." என்று எழுந்தவன்.

"அத்தை, நான் எழில்கூட ஒரு பத்து நிமிஷம் மட்டும் தனியா பேசணும்." என்று காபி டம்ளர் சிங்கில்போடு விட்டு திவ்வியாவை கேட்டான்.

"தாராளமா பேசுங்க பா.. எழில் மாடிக்கு கூட்டிட்டு போ.." என்று கூற இருவரும் அங்கு சென்றார்கள்.

"இப்பவாச்சு சொல்லுங்க.. எனக்கு மண்டை வெடிச்சரும் போல.." என்று சலித்துக்கொண்டாள் எழில்.

"உன் அத்தை பத்தி நீ என்ன நெனைக்கிற..?" என்று கதிர் கேட்டான்.

"அம்சவேணி அத்தையா..?" என்றாள் அவளும்.

"ஆமா.." என்றான் கதிர்.

"நல்ல பாசமா இருப்பாங்க.." என்றாள்.

"அப்றம்.." கதிர்.

"எப்போவும் வீட்டுக்கு வரப்ப சிப்ஸ் காராபூந்தி லாம் வாங்கிட்டு வருவாங்க எனக்காக.." என்றாள் எழில்.

"🙄🙄" அவளை மேலும் கீழுமாக கதிர் பார்க்க.

"என்ன லுக்கு..?" என்றாள் எழில்.

"நான் கேட்டது அவுங்க கேரக்டர் பத்தி.. காராபூந்தி பத்தி இல்ல.." என்று வெளியே முறைத்தாலும் உள்ளுக்குள் சிரித்தான்.

"அதான் சொன்னேனே.. நல்ல பாசமா இருப்பாங்க.. அப்பான்னா ரொம்ப இஷ்டம்.. அண்ணா அண்ணா னு எப்போமே அப்பா பின்னாடியே உரிமையா சுத்தி சுத்தி வருவாங்க.. அப்பாக்கும் அத்தைனா உசுரு.. ஆனா.." என்று முடிக்காமல் இழுத்தாள்.

"என்ன ஒரு இக்கு வெக்கற.. சொல்லு.." என்றான் ஏற்கனவே தெரிந்திருந்தாலும் காட்டி கொள்ளாமல்.

"அவங்க பையனை எனக்கு மாப்பிள்ளை கேட்டாங்க. எனக்கு விருப்பம் இல்லன்னு தெரிஞ்சதும் ரொம்ப வருத்தப்பட்டாங்க.." என்றாள் லேசான வருத்தத்துடன்.

"ஓஹ்ஹோ.. அப்போ மேடம் பயங்கர டிமாண்ட் ல தான் இருக்கீங்க போல.." என்று புன்னகைத்து கண்ணடித்தான்.

"அவுங்க அண்ணன் பொண்ணுன்னு உரிமைல கேட்டாங்க.. எனக்கு அந்த டவரா தலையன பாத்தாலே பிடிக்காது.. எப்போப்பாரு என் பின்னாடியே சுத்திட்டு இருப்பான். 'உன்ன தான் கட்டிப்பேன்' னு பினாத்திட்டு இருப்பான்.. வீட்டுக்கு வந்தா கூட என்னையே பாத்துட்டு இருப்பான்.. சரியான பைத்தியம்.. " என்றாள் எரிச்சலாக.

"பின்ன இந்த அழகிய யாருக்கு தான் பிடிக்காது.. என்னையே பைத்தியக்காரன் ஆக்கினவ தான டி நீ.." என்று முணுமுணுத்தான்.

"என்ன காத்துல கானா வா.." என்று எழில் கையசைக்க..

"அதை விடு.. இதுக்கு முன்னாடி எப்டியோ.. இனிமே நீ கொஞ்சம் இல்ல ரொம்ப கவனமா இருக்கனும்..

முக்கியமா உன் அத்தை கிட்ட.." என்று நிறுத்தினான்.

புருவத்தை சுருக்கியவாறு, "அவுங்ககிட்ட ஏன் நான் கவனமா இருக்கனும்..?" என்றாள் எழில் ஒன்றும் புரியாமல்.

"நான் சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.. இப்போதைக்கு என்னால இவ்ளோ தான் சொல்ல முடியும்.. உன்னை இருபத்திநாலு மணி நேரமும் என்னால கண்காணிக்க முடியாது.. நீ தான் ஜாக்கிரதையாய் இருக்கனும்..

உங்க அத்தை வந்தாலும், எங்க கூப்பிட்டாலும், உஷாரா இரு.. என்ன சரியா..?" என்றான் கதிர்.

"என்ன பார்த்துக்க எனக்கு தெரியாதா..? நீங்க கவலை படாதீங்க.." என்றாள் எழில் அசால்ட்டாக.

"ஆமா ரொம்ப நல்ல பார்த்துக்கிட்டேங்களே.. அப்படி பார்த்து தான் புடவைல நெருப்பு பட்டது கூட தெரியாம இருந்தீங்க..?" என்றான் கதிர் கிண்டலாய்.

"அன்னிக்கு நானே கடுப்புல இருந்தேன்.. அதுனால சரியா கவனிக்கல.." என்றாள் எழில் சமாளிக்கும் விதமாக.

"அதான் சொல்றேன்.. அடுக்கு அடுக்கா நிறையா பட்டுட்ட.. இனிமே உனக்கு ஒரு கீறல் கூட விழக்கூடாதுன்னு நினைக்கிறேன்.. விளையாடாம நான் சொல்லறதை கேளு மா.." என்று அவள் கைகளை பற்றிக்கொண்டான்.

அவனின் அந்த "மா" வில் அதட்டலைவிட அக்கறை தூக்கலாக இருப்பதை உணர்ந்தவள்.

"சரி இனிமே கவனமா இருக்கேன்.." என்று லேசாக புன்முறுத்தாள்.

  "ப்பஆஹ்ஹ்!!! இந்த ஒரு வார்த்தைய சொல்ல வைக்கிறதுக்குள்ள எத்தனை அக்கப்போர்.." என்று சிரித்தான் அவனும்.

"மொட்டையா ஜாக்கிரதையா இருன்னு சொன்னா எனக்கென தெரியும்..? அதுனால தான் கேட்டேன்.." என்றாள் எழிலும் வேகமாக.

"இப்ப என்னால எதுவும் சொல்ல முடியாது.. நான் நினைக்கிறதெல்லாம் உண்மைன்னு தெரிஞ்ச அப்புறமா உங்கிட்ட தெளிவா சொல்றேன்.. சரியா..?" என்றான் அக்கறையாய்.

"ம்ம்ம்ம்" என்று தலையசைத்தாள்.

இருவரும் பேசி விட்டு கீழே சென்றனர்..

இவர்களின் உரையாடலை எதேட்சையாக கேட்ட தயாளன் மனதில் புதிதாய் ஒரு புயல் உருவாயிற்று...

'கதிர் ஏன் இப்படி சொல்லனும்..? அப்போ அன்னிக்கு தீ பத்திக்கிட்டதுக்கும் அம்சவேணிக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா..? நம்ம மேல உசுரையே வெச்சிருக்கிற பொண்ணு நம்ம பொண்ணுக்கே தீங்கு பண்ணிருப்பாளா..?' என பல கேள்விகளுக்கு பதில்களை எதிர்நோக்கி கலக்கத்துடன் காத்துக்கொண்டிருந்தார். 

***********
தன் கைபேசியில் கதிரின் பெயரை பார்த்ததும் சிறிதும் தயங்காமல் எடுத்து, "ஹாய் மாமா.. குட் மோர்னிங்.." என்றான் அகரன் உற்சாகமாய்.

"குட் மோர்னிங் டா.. ஒரு சின்ன ஹெல்ப் வேணுமே.." என்றான் கதிர்.

"சொல்லுங்க சிறப்பா செஞ்சரலாம்.." என்று சிரித்தான் அகரன்.

"உன் அத்தை வீட்டு அட்ரஸ் அப்புறம் போன் நம்பர் ரெண்டும் கிடைக்குமா..?" என்றான் கதிர் லேசாய் தயங்கியபடி.

"கொடுக்கிறேன் மாமா.. ஆனா..?" என்று அகரனும் இழுக்க,

"இவன் ஏன்டா கேக்குறான்ன்னு தான யோசிக்கிற..?" கதிர் கேட்கவும்

"அது.." என்று தயங்கினான் அகரன்.

"அவுங்கள பார்த்து பேசணும் னு தான் கேட்கிறேன்.. அத்தை மாமாட்ட கேட்க கொஞ்சம் தயக்கமா இருக்கு.. அகரா.. அதான் உங்கிட்ட கேட்டேன்.." என்று முடித்தான் கதிர்.

"சரி மாமா.. அதுனால என்ன.. வாட்சாப் பண்றேன்.. பார்த்துக்கோங்க.." என்று இருவரும் அழைப்பை துண்டித்தார்கள்..

**********

"என்னடி இது.. எப்ப பாத்தாலும் போனும் கையுமா இருக்க..? சட்னி அரைக்க கூப்பிட்டுட்டே இருக்கேன்.. காதுல விழுதா இல்லையா..?" என்று வர்ஷிகாவை  அம்சவேணி தாளித்து கொண்டிருந்தார்.

"மா ஒரு நிமிஷம்.. தோ வரேன்.." என்று சொல்லிகொண்டே,

'பேபி அம்மா கூப்புட்றாங்க.. நான் கிளம்பறேன்.. காலேஜ் ல பார்க்கலாம்.. பை பை.." என்று இங்கு மெசேஜ் தட்டி விட்டு ஓடி வந்தாள்.

"மொதல்ல அந்த சோப் டப்பாவை தூக்கி போட போறேன்.. அப்போ தான் நீ திருந்துவ.. போய் சட்னி அரைச்சு வை சீக்கிரம்.. நேரமாகுதுல்ல.. நான் குளிச்சுட்டு வரேன்.." என்று கூறி விட்டு குளியலறைக்கு செல்ல, அவளின் கைபேசி ஒலித்தது.

"என்ன இது நம்பர் புதுசா இருக்கே..?" என்று யோசித்து கொண்டே காதில் வைத்தவள்.

"ஹலோ.. யாரு..?" என்றாள்.

"அம்சவேணி தான..?" என்று ஒரு ஆணின் குரல் கேட்டது அந்த பக்கத்தில்..

"ஆமா.. நீங்க..?"

"நான் யாருனு உங்களுக்கு சொல்றேன்.. அதுக்கு முன்னாடி நான் சொல்ற விஷயத்தை கவனமா கேளுங்க.." என்றான் எதிரிலிருப்பவன்.

"எழில் கல்யாணத்த நிறுத்த நீங்க பண்ண வேலைலாம் எனக்கு தெரியும்.. ஆனா, நீங்க என்ன தான் நினைச்சாலும் இந்த கல்யாணத்த நிறுத்த முடியாது.." என்றான் எச்சரிக்கும் தொனியில் தெனவெட்டாய்.

"டேய்.. யாரு டா நீ..? என்ன என்னாலாமோ பேசுற.. நான் யாருனு தெரியாம நீ பேசிட்டு இருக்க..?" என்று கோபத்தில் கொதித்தாள் அம்சவேணி.

"ஆமா ஆமா.. நீங்க யாரு.. சொந்த அண்ணன் பொண்ணோட கல்யாணம் நிக்கணும் னு அவ புடவைல தீ வெச்சவங்க ஆச்சே.. பெரிய ஆள் தான் நீங்க.." என்றான் நக்கலாக சிரித்துக்கொண்டே..

சட்ரென்று வேர்த்தது அம்சவேணிக்கு..  உள்ளிருந்து வர்ஷிகா, "என்னாச்சு மா.. யாரு போன் ல.. என் கத்துற..?" என்று கேட்டாள்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை.. நீ போய் வேலைய பாரு.." என்று அவளை அதட்டி விட்டு விரைந்து அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டாள்..

'ஹ்ம்க்ம்ம்.. உன்னை ஒருத்தரும் கேள்வி கேட்க கூடாது.. ஆனா, என்னை மட்டும் எல்லாரும் கேக்கறீங்க.. ஏன் அம்மா மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு..? என்னன்னு கண்டுபிடிக்கனும்..' என்று யோசித்து கொண்டு சட்னி அரைத்து முடித்தாள்.

அறைக்குள் இருந்த கட்டிலில் பதட்டத்துடன் உக்காந்து கொண்டு, பயத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவன் யாரென்று தெரிந்து கொள்ள முற்பட்டாள்..

"ஏய்ய்.. என்ன.. என்ன நீ.. சும்மா ஏதேதோ சொல்ற.. மொதல்ல நீ யாரு டா..? நான் எதுவுமே பண்ணல.. இவ்ளோ பேசுற.. ஆதாரம் இருக்க உன்ட..?" என்று கேட்டார். 

"ஆதாரம் தான.. காட்னா ஒத்துபின்கலா மேடம்..ஒடனே உங்க வாட்ஸாப் ஓபன் பண்ணுங்க.. அதுல இருக்கு நீங்க கேட்ட ஆதாரம்.." என்று அழைப்பை துண்டித்தான் அவன்.

பதட்டத்துடன் அதை திறந்தாள்..

அதில் எழிலுக்கு தீ வைத்த புகைப்படத்தை பார்த்து ஒரு வினாடி அதிர்ந்து போனாள்.

மீண்டும் கைபேசி அழைத்தது..

கை நடுங்கியவாறே அதை ஆன் செய்தாள்..

"என்ன போட்டோ பாத்தீங்களா..? செம்மயா இருக்கா..? என்று நக்கலாக கேட்டான்.

மௌனம் சாதித்தாள் அம்சவேணி..

"என்ன பேச்சே காணோம்.. அவ்ளோ பேசினீங்க இதுக்கு முன்னாடி.. இப்ப என்ன பியூஸ் போன பல்ப் மாரி ஆய்ட்டேங்க..? என்றான் ஏகத்தாளமாய்."

"யாரு நீ.. உனக்கு என்ன வேணும்..?" என்று கேட்டாள்.

"இதை உங்க அண்ணன் மிஸ்டர் தயாளன் சார் கிட்ட சொல்லிடலாமா னு பார்த்தேன்.. சொந்த தங்கச்சியே இப்படி ஒரு காரியம் பண்ணா னு தெரிஞ்ச அந்த நல்ல மனுஷன் எப்படி தாங்கிப்பாரு.." என்றான் பொய்யான அனுதாபத்துடன்.

"ப்ளீஸ் அப்படி ஒன்னும் செஞ்சுறாதப்பா.. நீ என்ன சொன்னாலும் நான் செய்றேன் பா.." என்று அவனிடம் சரணடைந்தாள்..

"பரவாயிலயே.. இவ்ளோ சீக்ரம் ஒத்துக்கிட்டேங்களே.. சூப்பரு.. அப்போ நான் உங்கள நேர்ல பார்த்து பேசணும்.. சாயங்காலம் பக்கத்துல இருக்கிற பிள்ளையார் கோவில் கு வந்துருங்க.. தனியா..பை பை.." என்று கூறியதும், இவளின் பதிலுக்கு காத்திருக்காமல் அழைப்பு துண்டித்து போனது..

அம்சவேணியின் நிம்மதியும் கலைந்து போனது..

'இதென்னடா புது சோதனை.. கடவுளே..' என்று தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள்..

யார் அந்த நபர்..

கதிரா..? இல்லை வேறு ஒருவரா..? ஆதாரம் எப்படி கிடைத்தது..? அம்சவேணியின் அடுத்த நகர்வு என்ன..

இதை அடுத்த அடுத்த அத்தியாயங்களில் காண்போம்..

*********
வாட்டப்பட் ஐடி: Agnikaa (அக்னிகா)

*********



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro