30. ஸஹ்ரா நஸீர் Zaro

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அதிக கோவம் ஒருவனை முட்டாளாக்கும்...

அதிக பொறாமை ஒருவனை குற்றவாளியே ஆக்கிவிடும்...

இரண்டுமே சேர்ந்து ஒருவன் மனதில் இருக்குமானால்...

கதிருடன் பேசிவிட்டு ஒரு சில வேலைகளை முடித்த கையோடு நேராக வீட்டுக்கு சென்ற அகரனது மனதெங்கும் ஒரே சிந்தனை 'அக்காவை தான் அத்தைக்கு பிடிக்குமே, அப்பறம்  ஏன் நெருப்பு வைக்கனும்? ஒருவேளை அப்படிலாம் நடக்க வாய்ப்பு இருக்குமோ?' என்று யோசித்து யோசித்தே மண்டயை போட்டு உடைத்து கொண்டிருந்தவன், அப்படியே உறங்கியும் போனான். 

திடிரென்ற மொபைல் அலறலில் திடுக்கிட்டு எழுந்த அகரன், அதே தூக்க கலக்கத்தில் பக்கத்தில் இருந்த அலைபேசியையே பத்து வினாடிகள் கடந்தபின் தான் தேடி எடுத்தான்.

அதே சோம்பலுடன் நம்பரை கூட கவனிக்காது, காதில் வைத்ததும் கனீர் என்ற கம்பீரமான குரல் சொன்னது அதன் சொந்தகாரன் யார் என்று.

தூக்கம் சோம்பல் இரண்டுமே சென்ற இடம் தெரியாமல் போனது.

"சொல்லுங்க மாமா..." என்று மறியாதையோடும்  பொறுப்போடும் அவன் பேசிய விதம் கதிரை துன்பம் மறந்து இதழ் விரிக்க வைத்தது.

'அவங்க அக்காக்கு ஒண்ணுன்ன உடனே நான் தான் காரணம்னு நினைச்சு, எப்படி எல்லாம் பேசினான்? இப்போ உண்மை தெரிஞ்சதும் மரியாதையும் தருகிறான்... நல்ல பையன் தான்...' என்று புன்னகைத்தவன்.

"டிஸ்டப் பண்ணிட்டேனா அகரன்?" என்றான்.

"அய்யோ இல்ல மாமா... சொல்லுங்க.." என்றான் அகரன்.

"ஹம்... எனக்கு எழிலோட ஜாதகம் வேணும்.. எங்க வீட்ல கேட்க முடியாது... அதனால நீ அங்க இருந்து கொண்டு வந்து தரமுடியுமா?" என்றான்.

கதிருக்கு ஜாதகம் ஜோசியம் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும், அதை நம்பும் தம் குடும்பத்து உறுப்பினர்களின் நம்பிக்கையை பொய்யாக்கவும் அவன் விரும்பவில்லை.

பெற்றவர்கள் விருப்பம் இல்லாமல் அவன் காதலித்த பெண்ணின் கரம்பிடிக்கவும், தன் வாழ்க்கையை தன் இஷ்டப்படி அமைத்து கொள்ளவும் அவனால் முடியும் என்றாலும் தன்னை பெற்றவர்களை நோகடிக்க விருப்பமில்லை. அதுதான் மீனாட்சியின் வளர்ப்பு.

"ஏன் மாமா நீங்க தான் ஜாதகம் மேல எல்லாம்  நம்பிக்கையில்லைன்னு சொன்னீங்களே..." என்று 'இவருக்கு என்னாச்சு.. ஏன் திடீர்னு கேட்கிறாரு...' என்ற சந்தேகத்தோடு கேட்டான்.

"எனக்கு நம்பிக்கை எந்த அளவுக்கு இல்லயோ... எங்கம்மாவுக்கு அதே அளவுக்கு இருக்கு அகரன். அதான்... அதோட... எழில் சந்தோசம் இல்லாம தவிக்கிற காரணம் உண்மையில்லாம இருக்குமோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு..." என்ற அவன் குரலில் ஒரு புரியாத நிசப்தம் தான்.

"அய்யோ சாரி மாமா... நீங்க அப்சடாக  வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்துல நான் எடுத்துட்டு வரேன்" என்று கூறியவனை தடுத்து, "அய்யோ... இந்நேரத்துக்கு வேண்டாம் அகரா. காலைல வாங்கிக்கிறேன். நீ தூங்கு" என்று கட் செய்து விட்டான்.

மொபைலை காதில் இருந்து கீழே இறக்கிய அகரனின் சிந்தனை முழுக்க, "நாம தூங்கினது மாமா வரை தெரிஞ்சு போச்சா..." என்று முனங்கி கொண்டே சுற்று முற்றும் பார்த்தான்.

வீட்டின் வெளியில் இருட்டாக இருக்கவும் தான் அவன் மண்டைக்கு உரைக்கவே ஆரம்பித்தது. உடனே கடிகாரத்தை பார்த்தவன் பத்து மணியை காட்டவும் அதிர்ந்தான்.

"அடியாத்தி இது என்ன மப்புல இருந்தவன் மாதிரி நேரம் காலம் தெரியாம தூங்கி இருக்கேன்."

நேராக கிச்சன் சென்று  தண்ணீர் குடித்துவிட்டு பின் ஒரு குளியலை போட்டு விட்டு வந்து மொபைலில் பார்த்து கொண்டிருந்தவன் அப்படியே உறங்கியும் போனான்.

காலையிலே அம்மாவின்  வால்ட்ரப்பை திறந்து தன் ஜாதகத்துக்கு மேலே இருந்த அக்கா ஜாதகத்தை எடுத்து கொண்டு நேராக கதிரை சந்திக்க சென்றான்.

"தேங்க் யூ அகரன். ஆமா, எழில் இப்போ ஒகேல்ல" என்று கேட்டதும் கதிரின் கையை பற்றி "ஷீ இஸ் குட்" என்று விட்டு அவனே, "அவ வாழ்க்கை உங்ககூட தான் மாமா... எதை நினைச்சும் கவலை படவேண்டாம்... அவ கவலைபடுறது உங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கோ அவளுக்கும் அப்டி தானே" என்றதும் கதிர் புன்னகைத்து விட்டு "ஹம்" என்றான்.

"மாமா நானும் வரட்டுமா..?" என்று கேட்டான் உடனே தலையசைத்து சம்மதித்தான்.

அகரனை வர சம்மதிக்க காரணம் இருக்கு.‌‌.. நானாக வந்து ஜோசியர் சொன்னதாக எதை சொன்னாலும் யார் நம்புவது  என்பது தான்.

_________________

"எழில் உனக்கு என்னாச்சி... நீ ஏன்டா உன் சநதோசத்த தொலைச்சிட்டு பொய்யா நடிக்குற?" என்று பேச்சுக்கு நடுவில் திடீர் என்று மகளை பார்த்து கேட்டார் திவ்யா.

ஒரு நொடி தாய் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் பார்த்துவிட்டு அமைதியாக தலையை கவிழ்த்து கொண்டாள்.

"சொல்லு எழில். எதற்காக நீ உன் காதல எங்ககிட்ட இருந்து மறைச்ச...?" என்று கோவமாக கேட்டு வைக்கவும் அதிர்ச்சி கலந்த சோர்வுடன் சட்டென்று தாயை கட்டி கொண்டாள்.

வலி எவ்வளவு ஆழமாக இருக்குமானால் இப்படி கட்டி கொண்டிருப்பாள். இதற்கு மேலும் கேட்டு கேட்டு நச்சரிப்பது நாகரீகமல்லவே.. 

கேட்க வேண்டியதை கேட்டுவிட்டோம் இனி அவள் பேசட்டும் என்று மவுனமாக நின்ற திவ்யாவிடம் மெதுவாக சொல்ல ஆரம்பித்து விட்டாள் எழில்.

"எப்டிமா... எல்லாம் தெரிஞ்ச நானே  கதிர் வாழ்க்கைய நாசமாக்கலாம்...? எப்படிமா நான் அப்படி செய்வேன்...? உங்க மக நல்லா இருக்கனும்ன்னு நீங்க கல்யாணம் செய்து வைக்கலாம். ஆனால், நான் நேசிக்கிற ஒருத்தரை என் சுயநலத்துக்காக எப்படிமா ஆபத்துல தள்ளலாம்... நீங்க பண்ணது சரின்னா நான் பண்ணதும் சரி தானே ம்மா...?" என்று அழகான ஒரு விளக்கத்தை கொடுத்து திவ்யாவின் வாயை மூடினாள்.

திவ்யா மகள் கேட்ட கேள்வியில் பேச்சின்றி நிற்கும் போதே, "என்னை விட்டு விலகி போனா என் உயிர காப்பாற்றலாம்னு நினைத்த நீ... உன் குடும்பத்த விட்டு மட்டும் விலக நினைக்காத காரணத்தை சொல்றியா...? நீ கூட இருந்தும் உன் குடும்ப ஆளுங்களுக்கு எதுவும் ஆகாம இருக்குன்னா என்ன அர்த்தம்?" என்று கேட்ட படியே வேகமாக அறைக்குள் வந்தான் கதிர்.... பின்னாடியே அகரனும்.

அவன் கேட்ட கேள்வியில் திவ்யா பதறி தான் போனாள். 'அய்யோ அவ இனி எங்ககிட்ட இருந்தும் விலக நினைச்சிருவாளோ?', ஆனால் எழில் அப்போது தான் சிந்திக்கவே ஆரம்பித்தாள்.

'ஆமால்ல  என் கூடவே இருந்த யாருக்கும் எதுவும் ஆகலயே?'

வேகமாக அவர்களின் அருகில் சென்று நின்றவன் எழில் கண் முன்பு சொடக்கிட்டு, "நிறையவே யோசிச்சு யோசிச்சு செஞ்சது எல்லாம் போதும். இனி உன் உருப்பிடாத மண்டையில் வர்ற ஒரு மசாலாவும் இங்க செல்லுபடி ஆகாது" என்று விட்டு திவ்யாவை நோக்கி, "அத்தை நாஙக ஜோசியரை போய் பார்த்துட்டு தான் வர்றோம்" என்று அகரனை பார்க்க, அவனும் "ஆமாம்மா நீங்க அக்கா எல்லாம் நினைக்குற மாதிரி எதுவுமே இல்லம்மா.." என்று கூறி விட்டு கதிரை பார்த்தான்.

எழிலும் கதிரை தான் பார்த்தாள்.

"ஆமா. நான் இப்போ தான் உன்னோட ஜாதகத்தை எடுத்துட்டு போய் பார்த்தேன். நீங்க எல்லாம் நினைச்சிட்டு இருக்குற மாதிரி எதுவுமே... இல்ல" என்று விட்டு ஜோசியர் சொன்னதை சொன்னான்.

திவ்யாவுக்கு மண்டையே வெடித்து விடும் போல் இருந்தது.

 

"தம்பி... நாங்க ஜாதகம் பார்த்த இடத்துல..." என்று எதையோ கூற வந்தவரை தடுத்து, "அதெல்லாம்  எதுவுமே உண்மை இல்ல அத்தை. சரி. நான் போன ஜோசியர் வேண்டாம். நீங்க போன ஜோசியர்கிட்டயே போவோம் உங்க கண் முன்னாடியே  பார்ப்போம் என்ன சொல்றீங்க?"  என்று கேட்டதும் திவ்யா சிறிது நேரம் யோசித்து, "சரி போலாம்" என்று தயாராகினாள் உடனே எழில், "நான் என் கண்ணால பார்த்தா தான் நம்புவேன். நீங்க ரெண்டு பேரும் என்னை கண்வின்ஸ் பண்ண ஏதாவது காரணத்தை சொல்விங்க.. நான் நம்ப மாட்டேன். சோ, நான்  டிஸ்சார்ஜ் ஆன பிறகு போலாம்" என்றாள் சிறுபிள்ளை தனமாக.

எழில் சிறுபிள்ளை போல் வீம்பாக சொன்னதும் அவள் பக்கம் தலை சாய்த்து, "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்" என்று கூறிவிட்டு மேசை மேல் இருந்த அவளது மொபைலை எடுத்து அவள் கையில் கொடுத்து,  "அகரன் நீ உங்க அறிவாளி அக்கா கூட இங்கயே இரு. நாங்க அங்க போனபிறகு  வீடியோ கால் பண்றேன்..  ஜோசியர்க்கிட்ட போறது பேசுறது வர்றதுன்னு எல்லாமே  உங்க அக்கா பார்க்க வைக்கிறது தான் நீ எனக்கு செய்ற உதவி" என்றான்.

அகரனும் சரியென்று புன்னகைத்தான்.

______________

ஜாதகத்தை நன்றாக பார்த்துவிட்டு ஏதேதோ முனங்கியபடி இருந்த ஜோசியர், "மகாலட்சுமி...  மகாலட்சுமி... பிறந்த இடம் புகுந்த இடம் என்று அனைவரையும் சந்தோசமா வச்சிப்பா... மகாராசி... சிரித்த அவள் முகம்  போன்று தான் மனமும்... எவ்ளோ பெரிய ஆபத்து வந்தாளும் அவ விதி அவள காப்பாற்றும்... அவள சார்ந்து இருப்பவங்களையும் காப்பாற்ற கூடிய... சக்தி இருக்கு..." என்று விட்டு அமைதியாக நின்றவரிடம், "அவ கல்யாண வாழ்க்கை பற்றி சொல்ல முடியுமா சாமி?" என்று கேட்ட திவ்யாவை ஒரு பார்வை  பார்த்துவிட்டு "அவ வாழ போற வீடு புண்ணியம் செய்திருக்கனும்" என்றார் சுருக்கமாக, மனம் முழுக்க மகிழிச்சியில் திளைக்க,  ஆனந்த கண்ணீரோடு விடை பெற்றனர் .

திவ்யாவை ஹாஸ்பிடல் கேட் அருகில்விட்ட கையோடு அகரனும் கதிரும் ஒன்றாக கிளம்பிவிட்டனர்.

தாயை கண்டதும் இத்தனை நாள் மனதளவில் ஏற்பட்டிருந்த காயம் துக்கத்தில் தொண்டையடைக்க, கண்ணீர் வழிய கட்டியணைத்து கொண்டாள் எழில்.

'இப்போ இப்படி சொன்ன இதே ஜோசியர் அன்னைக்கு ஏன் எழில் பத்தி பொய் சொன்னார்?'  என்று தன்னுள் எழுந்த கேள்வியை அவளிடம் கேட்காமலே இருந்தாள் திவ்யா.

__________

"அகரா! எனக்கு ஒரு சந்தேகம்... உங்க அத்தை அப்சவேணிக்கு எழிலை பிடிக்குமா பிடிக்காதா...?" என்று கேட்டான்.

 "என்ன மாமா இப்படி கேட்டுடீங்க?  அத்தைக்கு அக்காவ ரொம்ப பிடிக்கும். பிடிக்காமலா அவங்க பையனுக்கு பொண்ணு கேட்டாங்க?" என்றதும் கதிர் உள்ளுக்குள் அதிர்ச்சியானாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், "என்ன சொன்ன பொண்ணு கேட்டாங்களா?" என்றான்.

அகரன் கேஷுவலாக "ஆமா.. மாமா.. அவங்களே வந்து அவங்க பையனுக்கு அக்காவை ரொம்ப பிடிச்சிருக்கு அதனால பொண்ணு கொடுங்கன்னு கேட்டாங்க.. அக்கா தான் முடியவே முடியாதுன்னு முடிவா சொல்லிட்டா. அதனால்தான் இப்போ உங்க ரூட் க்ளியரா இருக்கு போல.. இல்லைன்னா என்னைக்கோ அத்தை பையனுக்கு மனைவியாகிருப்பா.. எங்க அக்கா" என்றான் குறும்பாக.

அதை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் கதிர் இல்லவே இல்லை. "தலைவலிக்கிற மாதிரி இருக்கு அகரன்.  நான் கொஞ்சம் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கிறேன்." என்றான்.

"சரி மாமா. நீங்க கிளம்புங்க. நானும் வீட்டுக்கு போறேன் வெயில்ல அலைஞ்சது எனக்கும் தலை வலிக்குது" என்று கூறிவிட்டு சென்றான்.

_________

வீட்டுக்கு சென்றவன் மனதில் ஆயிரம் குழப்பங்கள்.. சந்தேகங்கள்... எவ்வாறு தெளிவு பெறுவது என்று யோசித்தவன் அபியை அழைத்து அருகில் இருக்கும் பூங்காவிற்கு வர சொன்னான்.

"என்ன மாமா திடீர்னு வர சொன்னிங்க?" என்றான் அபினவ்.

"நீ வர்ஷிகாவ விரும்புறியா அபி?" என்று நேரடியாக கேட்டான்.

ஒரு நொடி பதற்றம் பயம் என்று உள்ளுக்குள்  நடுநடுங்கிய அபினவ் பின் மெதுவாக "ஹம்" என்றான்.

"உன் காதலுக்கு நான் முழு ஆதரவா இருக்கேன். எனக்காக நீ ஒரு உதவி செய்யணும்." என்றான் கதிர்.

'என்ன நாம ஹெல்ப் கேட்டாலே செய்ய மாட்டாரு...? இப்போ தானா வந்து ஆதரவு தரார். இதுக்கு பின்னாடி ஏதாவது சூழ்ச்சி இருக்குமோ?' என்று உள்ளுக்குள் யோசிக்க.

"ரொம்ப யோசிக்காத.. உதவி செய்ய முடியுமா முடியாதா? முக்கியமான விஷயம் உன்னால தான் எனக்கு உதவ முடியும்னு தான் கேட்கிறேன். நீ ரொம்ப யோசிக்கிற? விடு நானே பார்த்துக்குறேன்"  என்று கதிர் எழவும்...

"மாமா எதுக்கு இப்போ பொசுக்குன்னு எந்திரிக்கிறீங்க? நான் என்ன செய்யணும் சொல்லுங்க?" என்றான் அபினவ்.

ஒரு சிலவற்றை கூறி அதன்படி  வர்சிகாவுடன் பேச சொன்னான்.

மொபைலை லவுட் ஸ்பீக்கரில் போட்டபடி  பேச தொடங்க, அவன் எதிர்பார்த்த உண்மை வெளிவருமா என்று ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தான் கதிர்.

பொதுவாக பேசியபின், "உங்க அண்ணாவுக்கு எழில் அக்காவை கேட்டிங்களாமே?" என்றான்.

"ஆமா. அது எப்படி உனக்கு தெரியும்?" என்றாள் வர்ஷிகா.

"எனக்கு இந்த விஷயம் இப்போ தான் தெரிஞ்சுது. எதேட்சையா ஏதோ பேசிட்டு இருக்கும்போது அகரன் சொன்னான். நீ சொல்லு.. பொண்ணு கேட்டிங்களா? என்கிட்ட சொல்லவே இல்லை?" என்றான் பொய் கோபம் கொள்வது போல்.

"ஆமா அபி. அது முதல்ல நடந்தது. அதான் உன்கிட்ட சொல்லல. எங்க வீட்ல எல்லாருக்குமே எழில்னா பிடிக்கும். அதுவும் அண்ணன் எழிலை மட்டும் தான் கட்டிக்குவேன்னு பிடிவாதமா சொல்லிட்டான். அம்மாவுக்கும் சந்தோஷம் தான் அண்ணன் பெண்ணே மருமகளா  வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சங்க.. அதான் அம்மாவும் வந்து பொண்ணு கேட்டாங்க. ஆனா அவங்களுக்கு விருப்பம் இல்லன்னு சொல்லிட்டாங்க.  அப்போலருந்து அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் தான் கொஞ்சம்  வருத்தம்" என்றாள் வருத்தமாக.

"என்ன வருத்தம்?" என்றான் அபினவ்.

"ஹம் நான் சொல்றேன் பட் யார்கிட்டயும் சொல்ல மாட்டல்ல"

"ச்சீ ச்சீ என் வாயால இத பற்றி சொல்லவே மாட்டேன்மா.." என்றதும்

"அண்ணாவுக்கு பொண்ணு கேட்டப்பா எழில் முடியாதுன்னு சொன்னது அண்ணாவுக்கு வருத்தம்... அம்மா அண்ணா கிட்ட 'எழில் உனக்கு தான்' என்று வாக்கு கொடுத்து இருந்தாங்க. பட், அது பொய்யாச்சுன்னு அண்ணா அம்மா கூட அவ்ளோ பேசுறதில்ல... அதுவுமில்லாம அப்ப இருந்து அண்ணன் வீட்ல யார்கூடவும் பேசுறதில்லை.. வீட்ல சாப்பிடறதில்லை.. எந்த நேரமும் வெளில தான் இருப்பான். அதுதான் அம்மாவுக்கு கொஞ்சம் கோவம்.. எழிலால தான் தன் மகன் இப்படியாகிட்டான்னு எப்பவுமே வருத்தமாவும் கோபமாவும் சொல்வாங்க" என்றாள் வர்ஷிகா.

"சரி பேபி. அத்தைகிட்ட சொல்லு கவலை பட வேண்டாம்  உனக்கு ஒரு நல்ல மருமகன் கிடைப்பான் அப்பறமாக நீ சந்தோசமா  இருப்பன்னு" என்று ஆரம்பித்து விடவும் கதிர் எழுந்து சென்று விட்டான்.

"அகரன் நான் உன்னை பார்க்கணும்" என்றான் கதிர்.

"இப்போ தான மாமா பார்த்தோம். அதுக்குள்ளவா?" என்று சிரித்தான் அகரன்.

"அடேய்! நீ என்ன என் லவ்வரா? முக்கியமா பேசணும். நேரத்தை கடத்தாம சீக்கிரம் வா" என்றதும், "சரி மாமா. இதோ வரேன்." என்று அந்த பூங்காவிற்கே சென்றான்.

"என்ன மாமா? எதுக்கு வர சொன்னிங்க?" என்றான் அகரன் கதிர் அருகில் வந்து அமர்ந்தபடி.

"அகரன் நீ உங்க அத்தைய பத்தி என்ன நினைக்கிற?" என்றதும்..

"அவங்களை பத்தி நினைக்க என்ன இருக்கு மாமா.. பாசமானவங்க தான். அவங்க அண்ணன் கூட இருக்க வரைக்கும்.. அதுக்கு பிறகு காட்றது போலி அன்புன்னு எப்பவோ நானும் அக்காவும் தெரிஞ்சுகிட்டு விலகிட்டோம். என்னாச்சு மாமா?" என்றான் அகரன்.

"

உறுதியா எழில் புடவைய தீ வச்சது உங்க அத்தை தான் தெரிஞ்சுடுச்சு. இப்போ ஜோசியரை எல்லாத்தையும் மாத்தி சொல்ல சொன்னதும் அவங்க தான்." என்றான் கதிர்.

"என்ன மாமா? எப்படி அவ்ளோ உறுதியா சொல்றிங்க?" என்று அகரன் கேட்டதும் சற்று முன் அபினவ் வர்ஷிகாவிடம் பேசியதை கூறினான்.

"அடகடவுளே! அத்தைக்கு அவங்க பையனை அக்கா வேணாம்னு சொன்னதுக்கு கோபம் இருக்கும்னு தெரியும். அதற்காக ஜோசியருக்கு பணம் கொடுத்ததாக சொல்றதும் நிச்சய புடவைல நெருப்பு வைக்கிறதுன்னு இவ்ளோ பண்ணுவாங்களா...? அதுக்காக அக்கா உணர்வுகளோடவும் உயிரோடவும் விளையாடற அளவுக்கு இருக்கும்னு நினைக்கல? இதனால அக்கா எவ்ளோ மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கா? சே! இவங்க எல்லாம் எங்க அப்பாகூட பிறந்தவங்களா? முதல்ல இதை பத்தி அப்பாகிட்ட சொல்லணும்" என்றான் அகரன் அதிர்ச்சியாய்.

"இல்ல அகரா. அவசர படாதே.. அவங்க பையனை வேண்டாம்னு சொன்னது மட்டும் காரணமா இருக்கும்னு தோணலை. வேற ஏதோ ஒண்ணு பெருசா நடந்திருக்கு. அது என்ன? அதை தான் நாம இப்ப கண்டுபிடிக்கும்?" என்றான் கதிர்.

'அவர் சொல்வதும் சரி தானே' என்பது போல் யோசிக்க தொடங்கினான் அகரன்.

*********

வாட்பெட்   (Zaro_Faz)

பிரதிலிபி (ஸஹ்ரா நஸீர் zaro)

*********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro