பாகம் 39

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng



Date published: 5 October 2023

Word count: 1849

வீடு முழுதும் நிறைந்திருந்த ஏலக்காய் வாசனையும், சாம்பிராணியின் தெய்வீக மணமும், நெடு நாளைக்குப் பிறகு மெல்லிய குரலில் ஒலித்த திருவாசகமும், பூரணியின் துயிலை கலைக்க, புன்முறுவலோடு எழுந்து நேராக அன்னையை தேடி போனாள் பூரணி.

அம்மா என்ற வார்த்தையை கேட்டதும் நம்மில் பலருக்கும் மனதில் துளிர்க்கும் வடிவம் பெரும்பாலும் இதுவாக தான் இருக்கும்.

ஈரக்கூந்தலை நுனியில் முடிந்து, பருத்தி சேலையை அள்ளி சொருகி கொண்டு, வேர்வை வடிய சமையலில் ஈடுபட்டிருந்தார் கோகிலா.

'எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே...'

சமையலறை வாயிலில் நிழலாடவும் கோகிலா புன்னகையோடு மகளை நோக்கி திரும்பினார்.

"Happy Birthday அன்னம் "

"தாங்க்யூ அம்மு டார்லிங்க்" என்று அவரை கட்டிகொள்ள முற்பட,


"அடி! அழுக்கு மூட்டை!" கரண்டியை ஓங்கினார். "குளிக்காம என்னை தொடக்கூடாதுன்னு எத்தனை தரம் சொல்றது? நான் இன்னும் பூஜை முடிக்கலை. குளிச்சு புதுசு போட்டுகிட்டு, சாமி கும்பிட வா. சீக்கிரம் ஓடு..."
கோகிலா போட்ட போலி அதட்டலுக்கு

வீட்டில் அணிந்திருந்த skirt கைலி போல எடுத்து மடித்து கட்டிக் கொண்டு
"ரொம்ப தான் சீன் போட்ற கோகி நீ.. இதெல்லாம் நல்லாயில்லை சொல்லிட்டேன்" விரலை ஆட்டி மிரட்டி

"நீ கட்டிக்காட்டா என்ன? நான் உன் புருஷனை கட்டிக்கிறேன் போயேன்!" பழிப்பு காட்ட கோகிலா அடிக்க வரவும் குளியலறைக்கு ஓடினாள் பூரணி.

===

குளித்து முடித்த மகளின் நெற்றியில் குங்குமம் திருநீறு வைத்து அவளை உச்சி முகர்ந்து ஆரத்தழுவி ஆசிர்வதித்து அகமகிழ்ந்தார் கோகிலா. கண்கள் பனிக்க நின்றனர் சில வினாடிகள் தாயும் சேயும்.

"இந்தா.. இதை போட்டுக்க"
பிரபல துணிக்கடையின் பையை மகளிடம் நீட்டினார் கோகிலா.

"மா.. என்ன இது? ஏதுக்கு மூணு செட்... அதுவும் இப்படி விலை அதிகமா.." பையை ஆராய்ந்ததில் அவளுக்கான ஆடைகள் மட்டுமே இருந்தன.

கோபமாய் மறுத்தாள். "இல்லை எனக்கு வேணாம்.. எக்ஸ்சேஞ்ச் பண்ணிட்டு எல்லாருக்கும் வாங்குங்க. உங்களுக்கு ஒரு புடவை and அப்பாவுக்கு ஷர்ட் பேண்ட்..."

"அன்னம் இரு நான் சொல்றதை கேளு" மகளின் தோளில் லேசாக அழுத்தம் கொடுத்து, "சுகந்தி அர்ஜுன் கல்யாணம்னு வந்தா இரண்டு நாளைக்கு நல்லா டிரஸ் பண்ண வேண்டாமா? எனக்கு அப்பா வாங்கி கொடுத்த பட்டு புடவை மூணு இருக்கு. போதா குறைக்கு உன்னோட school farewell, college culturalsக்கு வாங்கினது ரெண்டு மூணு ஃபேன்சி சாரி இருக்கு. நான் ஹாஸ்பிடலுக்கு யூனிஃபார்ம் சாரி தான் கட்றேன் இருக்கற புடவையே வேஸ்ட்டா தான ஆகுது மா.."

பூரணி முறைத்தவிதமே அவள் சமாதானம் ஆகவில்லை என்பதை உணர்த்தியது.

"இது சீட்டு கட்டி வாங்கினது தான் டா. சுகந்திக்கு கல்யாணத்துக்கு நாம சீர் செய்யணுமில்லை. அந்த நேரத்துல அவ்வளவு பெரிய தொகைக்கு நான் என்ன பண்ணுவேன். அதான் மூணு நாலு வருஷமா நகை சீட்டு, புடவை சீட்டுனு போட்டு கொஞ்சம் கொஞ்சமா வாங்கி வைக்கிறேன்."

மகளின் கன்னத்தில் தடம் பதித்த கண்ணீர் கோடுகளை தன் புடவை தலைப்பால் துடைத்து
"நாளைக்கு உனக்கே கல்யாணம் நிச்சயம் ஆச்சுன்னு வை, புகுந்த வீட்டுக்கு போகும் போது நல்ல துணிமணி வேணுமில்லை."

மூக்கை உறிஞ்சி, முகம் சுருக்கினாள் கவலையில்.

"இப்படி ஆடம்பரமா செஞ்சா தான் ஊரு ஒத்துக்குமா? வசதி இல்லாத பெத்தவங்க என்ன செய்வாங்களாம்?"

"கேள்வி நியாயம் தான். ஆனா..."

"இப்படிலாம் செஞ்சா தான் சிவா என்னை கல்யாணம் பண்ண ஒத்துக்குவானா? அதெல்லாம் அவன் சொன்னா புரிஞ்சுக்குவான்." மீண்டும் அன்னையின் அரவணைப்பில் புதைந்து கொண்டாள்.
"நீங்க ரெண்டு பேரும் என்னால கடனாளி ஆனா என்னால நிம்மதியா வாழமுடியாது மா."


திருமணத்திற்கு ஆகும் செலவுகளை சமாளிக்கவும் தான் சம்பாதித்து கொஞ்சமேனும் பெற்றோரின் சுமையை குறைக்கவும், அவகாசம் வேண்டுமென்றால் விஷ்வாவிடம் பேசவேண்டும் என்று மனதில் குறித்து கொண்டாள்.


ஆதூரமாக மகளின் தலையை வருடி உச்சிமுகர்ந்த கோகிலா
"சமுதாயத்தோட கட்டாயத்துனால ஆடம்பரமா சீர் செனத்தி செஞ்சு கடனாளியாகுற பெத்தவங்க நிலை ரொம்ப வேதனையானது ஒத்துக்கறேன். எங்களுக்கும் அப்படி செய்ய விருப்பமில்லை. அதோட விஷ்வா தம்பியும் அப்படி எதிர்பார்க்குறவன் இல்லை. ஆனா, நமக்குன்னு ஒரு கௌரவம், கடமை இருக்கே மா. ஊரை வளைச்சு பந்தல் போடலைன்னாலும், டீசெண்டா கல்யாணம் பண்ணிக் குடுக்கணுமில்லையா?"

அவளை ஆசுவாசப்படுத்தும் விதமாக முதுகை தட்டிக்கொடுத்தார்.

"புகுந்த வீடு போகும்போது என் பொண்ணு என்னை மாதிரி பை நிறைய பழைய துணியும், மனசு முழுக்க பாரமும், உறவுகளோட கசப்பையும் சுமந்துகிட்டு, கையில காலணா காசில்லாம போகக் கூடாதுன்னு நான் முடிவு பண்ணி ரொம்ப வருஷமாச்சு." திடுக்கிட்டு நிமிர்ந்தாள் அன்னப்பூரணி.

"என்னோட இந்த சபதத்தை நிறைவேத்த தடை சொல்லாத அன்னம்..."
கடந்த காலத்தை நினைக்கையில் கோகிலாவின் நெஞ்சு விம்மியது.

மேலும் அவரை மனச் சங்கடத்திற்கு ஆளாக்காமல் ஒப்புக்கொண்டாள் பூரணி.

======

சற்று நேரத்தில் கோகிலா வேலைக்கு கிளம்ப, பூரணி கல்லூரிக்கு புறப்பட்டாள்.

பத்மா, சுரேஷ், மூரத்தி, யமுனா அனைவரிடமும் ஆசி பெற்றதும். காவேரியிடமும் ஆசி பெற சென்றாள்.

"விடிய காலைலேயே ஆபிஸ் கிளம்பிட்டான் டா கண்ணு. இன்னிக்கு அந்த புது கட்டடத்துக்கு பூமி பூஜை போடுறாங்களாமே..."

"தெரியும் அத்தை.. சொன்னான்"

"இந்தா தேங்காய் பர்பி செஞ்சேன், உனக்கு பிடிக்கும்னு அர்ஜுன் சொன்னான்."

அவர் கொடுத்த பர்பியை சுவைத்து "அச்சோ... விட்டா அந்த டப்பாவோட கிளம்பிடுவேன் வீட்டுக்கு. ரொம்ப நல்லாருக்கு" குதூகலித்தாள்.

"உனக்கில்லாததா? எடுத்துக்க.."

"உன் பிறந்த நாளன்னைக்கு அவனோட புது வேலை ஆரம்பிக்குது. இதை நான் நல்ல சகுனமா பாக்கறேன் டா என் ராஜாத்தி" நெட்டி முறித்து அவளை அரவணைத்துக் கொண்டார்.

" ஆமா உனக்கு வாழ்த்து சொன்னானா இல்லையா?" அவர் ஆர்வமாக கேட்டபடி உள்ளே வந்த சுகந்தியிடம் இனிப்பை நீட்டினார்.

"அதெல்லாம் விடிய காலைல போன் பண்ணி விஷ் பண்ணிட்டான். இல்லைன்னா அவனை சும்மா விடுவேனா?"

"ஹும்.. யாரு? நீயி?" சுகந்தி நமுட்டு சிரிப்பு சிரித்து, "அண்ணா பேபி பேபினு ரெண்டு தரம் கூப்பிட்டா ஐஸ்க்ரீம் மாதிரி கரையிரவ.. இவ கோவபடுறாளாம். ஆத்தாடி பயமா இருக்கு!" என போலியாய் நெஞ்சில் கைவைத்து பயப்படுவது போல பாவனை செய்து, "இந்த உடான்ஸ்லாம் வேற யார்கிட்டயாச்சும் வச்சுக்கடி. நீ யார்னு எனக்கு தெரியும் நான் யார்னு உனக்கு தெரியும். நம்ம ரெண்டு பேரை பத்தி இங்க எல்லாருக்கும் தெரியும்.."


"ஓஹோ! கவுண்டர் டயலாக்லாம் அடிக்கிற அளவுக்கு வளர்ந்திட்ட நீ?
சரி சரி வா எதோ என் பிறந்த நாள்னு உன்னை பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விடுறேன்...."

காவேரி இவர்களது சம்பாஷணையை கேட்டு சிரித்துவிட

"பெரிய அத்தை அண்ணா பிறந்த நாள் அடுத்த வாரம் தானே?" சுகந்தி காவேரியிடம் கேட்டு தெளிவு படுத்தி கொண்டாள் தோழியை ஓரக்கண்ணால் அளந்தபடி.


அவரிடம் விடைபெற்று இருவரும் கல்லூரிக்கு புறப்பட்டனர்.

அவனது Royal Enfield பைக் கம்பீரமாக நின்றிருந்தது வாகனங்கள் நிறுத்துமிடத்தில். அதை பார்த்ததும் சில நாட்கள் முன்பு அவனை வண்டி நிறுத்துமிடத்தில் எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது நினைவு வந்தது பூரணிக்கு.

=====

பைக்கை சுத்தம் செய்து கொண்டிருந்தான் ஒரு சனிக்கிழமை.

"யாரோட வண்டி சிவா?" நிமிர்ந்து ஏதோ ஜாடை காட்ட, வண்டியின் நம்பர் ப்ளேட்டை பார்த்தாள் அவன் பெயர் அதில் பொறிக்க பட்டிருந்தது.


"டெல்லியிலேருந்து கொஞ்ச நாள் முன்னால தான் ரோட் டிரான்ஸ்போர்ட்ல வந்தது வண்டி"

குனிந்து வேலை செய்த வண்ணம் இருந்தாலும் ஓரக்கண்ணால் மஞ்சள் நிற சுடிதாரில் இருந்தவளை ரசித்து கொண்டிருந்தான்.
"எங்க கிளம்பிட்ட?"

கையில் பிடித்திருந்த புத்தகங்களை காட்டி, "saturday வேற எங்க? லைப்ரரிக்கு தான்"

"ஆமா, அர்ஜன் அண்ணா வண்டி ரிப்பேர் ஆனப்போ உன் வண்டியை எடுத்திருக்கலாமே. ஏன் எடுக்கலை? அவ்ளோ கஞ்சனா சிவா நீ"? அவனை வம்பிழுத்தாள்.


"செல்லம்மா முதல்ல வண்டியை ஒழுங்கா கவனி" என்றான். வண்டியில் பின் இருக்கை இல்லாததை அவன் உணர்த்திய பிறகே கண்டாள்.

"இதுல நான் பேக் சீட் வச்சு வாங்கலை. ஏன்னா அது உனக்கான இடம். வேற யாரும் உட்கார கூடாது. இன்னிக்கு தான் சீட் பிக்ஸ் பண்ண என்ஃபீல்ட் ஷோரூமுக்கு கொண்டுபோக போறேன்" எழுந்து நின்றான்.

உள்ளுக்குள் சில்லென்றது அவன் சொன்ன விதத்தில். அதை வெளிகாட்டாமல்,

"ஆமா நீ இன்னிக்கு சீட் ஃபிக்ஸ் பண்ணி நாம நாளைக்கே லாங்க் டிரைவ் போக போறோம் பாரு" சிறிது ஏக்கமும் எதிர்பார்ப்பும் கலந்து ஒலித்தது அவள் குரல்.

"கூட்டிட்டு போக நான் ரெடி செல்லம்மா. நீ வரியா? ஷோரூம்லேருந்து வந்ததும் போலாமா? எங்க போகலாம்?" என அவசரமாக திட்டம் போட தொடங்கினான்.

"ஐயோ! விளையாடாத சிவா" என அவள் பதறியதும் சிரித்தான்.

"பயப்படாத ஜானு! இன்னிக்கு இல்லை. என் பிறந்தநாள் அன்னிக்கு ரெடியா இரு. ஃபுல் டேவும் என் கூட தான்" பதில் பேச வாய் திறந்தவளிடம் "நீ எனக்கு குடுக்கற பரிசும் அது தான், மாட்டேன்னு சொல்லிடாத"

பேசிவாறு வண்டியில் அமர்ந்தான். அவனின் ஆகிருதியான தோற்றத்திற்கு பொருத்தமாக இருந்தது அந்த வண்டி. அவனை ரசித்து கண்ணிலும் இதயத்திலும் நிறைத்து கொண்டாள்.

கறுப்பு கண்ணாடியை மாட்டியவாறு
"இதே மாதிரி ரொமான்டிக்கா பாத்துட்டு இருந்தேனு வை, அப்படியே கடத்திட்டு போயிடுவேன்டி மக்கு பொண்டாட்டி" என கண்ணாடியை இறக்கி கண்ணடித்தான்.

"நீ செஞ்சாலும் செய்வ கேடி! சரி நிதானமா, கவனமா ஓட்டு".

"நிதானம் எப்பவுமே இருக்கும்.. கவனம் தான்..."

வண்டியை உயிர்பித்து, தலைகவசத்தை அணிந்து கொண்டான், "கவனம் பூரா இங்க மஞ்சள் மேனியில மாட்டிகிச்சு" என கிறங்கிய குரலில் சொல்லிவிட்டு அவன் பறந்துவிட, அவள் முகம் காட்டிய எதிர்வினையை நல்லவேளையாக யாரும் பார்க்கவில்லை.

======

"பூரி" சுகந்தி உரக்க அழைத்ததும், நினைவு மீண்டாள். "என்ன யோசனை?"

"அவன் பர்த்டேக்கு எங்கேயோ வெளியே கூட்டிட்டு போறானாம் என்னை. எப்படி டீ? வீட்டுல எல்லாரும் என்ன நினைப்பாங்க?"

"அண்ணா உன்னை என்ன கடத்திட்டா போறாங்க? ஏன் டீ இப்படி இருக்க பூரி? எத்தனை முறை நானும் அர்ஜுனும் வெளியே போய்ட்டு வந்திருக்கோம். அண்ணா எதாச்சும் ஐடியா பண்ணுவாரு..."

"உங்க விஷயம் வேற டி சுகு, வீட்டுல எல்லாருக்கும் தெரிஞ்சு ஒத்துகிட்ட பிறகு, பர்மிஷன் வாங்கிட்டு போனீங்க. எங்க லவ் பத்தி இன்னும்.."

"எங்க அப்பாவுக்கும் மாமாவுக்கும் மட்டும் தான் தெரியாது. அவங்களும் எதிர்ப்பு சொல்ல மாட்டாங்கனு தான் எல்லாருக்கும் தோணுது".

"எனக்கு அவங்கள்ட்ட விஷயத்தை மறைக்கிறதே கில்டியா இருக்கு.."

"ஒண்ணு செய்.. இப்பவே மாடிக்கு போய் மாமாகிட்டயும் என் அப்பாகிட்டயும் உண்மைய சொல்லிட்டு பர்மிஷன் கேளு."

"அடிப்பாவி பிறந்த நாளன்னைக்கே போட்டு தள்ள ப்ளான் போடுறியே"

"அப்ப தேவையில்லாம யோசிக்கிறதை விடு. எல்லாம் நேரம் வரும்போது தானா நடக்கும். இப்ப வா காலேஜுக்கு லேட் ஆகுது."

====

"ஹாய் ஃப்ளவர் பேபி ஒரு ஸர்ப்ரைஸ்.. வா என் கூட".
அவளது கல்லூரியில் மாலை ஷர்மிளாவை எதிர் பார்க்கவில்லை பூரணி. ஆனால் சுகந்திக்கு அவள் வருவது தெரியும். அவளது கார் ஒதுக்குப்புறமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஷர்மிளா பூரணியின் கண்களை கட்டி கார் அருகில் அழைத்துச் சென்றாள்.

"ஷ்ஷ்ஷ்.... எந்த கேள்வியும் கேட்க கூடாது. இது பர்த்டே சர்ப்பிரைஸ். உட்காரு கார்ல. நான் சொல்ற வரை எதுவும் பேசக்கூடாது. பேசுன.. காரை நடுரோட்ல நிறுத்திட்டு அம்போனு விட்டுட்டு போயிருவேன்."

"நீங்க செய்யக்கூடிய ஆள் தான்.."

"ஹான்....அந்த பயம் இருக்கட்டும்"

சிறிது நேரத்தில் கார் ஒரு இடத்தில் நிற்க, "ம்ம்.. இப்ப ஓகே" ஷர்மிளா அவளை காரிலிருந்து கீழே இறக்கிவிட்டதும் விஷ்வா கண்கட்டை அவிழ்த்தான். கண்சிமிட்டி பார்வையை சரிசெய்து கொண்டு நிமிர்ந்த பூரணிக்கு இன்ப அதிர்ச்சி.

"சிவா..."

அவர்கள் நின்றிருந்த இடத்தை பார்த்து ஆச்சரியம். பரந்தாமன் அட்மிட் ஆகியிருந்த மருத்துவமனை வாயிலில் நின்றிருந்தனர்.

வண்டியிலிருந்து இறங்கி கண் கலங்கி நின்றிருந்தவளிடம்,
"ஏய் செல்லம்மா... இப்ப எதுக்கு அழற? பர்த்டேவுக்கு அப்பா blessings வேண்டாமா?" அழுது கொண்டிருப்பவளை அணைத்து ஆறுதல் சொல்ல விழைந்தாலும் பொது இடமாதலால் தவிர்த்தான்.

கண்ணை துடைத்து கொண்டு, "வா போகலாம்" மருத்துவமனையினுள் நுழைந்தனர்.


வரவேற்ப்பறையில் அவர்களை எதிர்ப்பார்த்து நின்றிருந்தார் பரந்தாமன். ஓடிச்சென்று அப்பாவை கட்டிகொண்டாள் பூரணி.

பல நாட்களாக சந்தித்து கொள்ளவில்லை, தந்தையும் மகளும். தங்களை சமன் படுத்தி கொள்ள சில நிமிடங்கள் தேவைபட்டது.


அருகே இருந்த ஒரு அறையில் அமர்ந்து பேசலாம் என ஊழியர் ஒருவர் கூறினார். பரந்தாமனை இன்று சந்திக்க பிரத்யேக அனுமதி பெற்றிருந்தான் விஷ்வா டாக்டர் சிவநேசனிடம்.


"அம்முலு.. ஹாப்பி பர்த்டே மா" மேலே பேசமுடியாமல் நா தழுதழுக்க மகளை அரவணைத்துக் கொண்டார்.
அவர்களை பார்த்த விஷ்வாவிற்கு மனம் ஏங்கியது.

பரந்தாமன் விஷ்வாவை ஜாடையால் அருகே அழைத்ததும் அவன் குனிந்து அவரை வணங்க முற்பட, அவனை தடுத்து நிறுத்தி,.அணைத்து கொண்டார்.

"நன்றினு ஒரே வார்த்தையில சொல்லி முடிச்சுற முடியுமா விஷ்வா நீ எங்களுக்கு செஞ்சது எல்லாத்துக்கும்?"

"நன்றி எதுக்கு மாமா? நமக்குள்ள என்ன? தகப்பன் ஸ்தானத்துல உங்க ஆசி, அன்பு தான் எங்களுக்கு வேணும்."



"அஞ்சு வருஷம் முன்னாடி நீ இல்லைனா என் பொண்ணை..."

அவர் சொல்ல வருவது எதை என உணர்ந்தவன் சட்டென்று அவரை இடைவெட்டினான்.


"மாமா தயவு செஞ்சு பழசையே நினைச்சுட்டு இருக்காதீங்க. இந்த டிரீட்மெண்ட் சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிருக்கீங்க. இன்னும் கொஞ்ச நாளுல டிஸ்சார்ஜ் ஆகிடலாம்னு சிவநேசன் டாக்டர் நேத்து பேசினப்ப சொன்னாங்க. சாதிச்சிட்டீங்க! எவ்வளவு சந்தோஷமான விஷயம்.."




"நிஜமாவா சிவா? ரொம்ப சந்தோஷமா இருக்கு பா. நீங்க எப்ப வீட்டுக்கு வருவீங்கனு வெய்ட் பண்ணிட்டிருக்கேன். அப்பா நீங்க வேலைக்கு போயே ஆகணும்னு கட்டாயம் இல்லை நான் உங்களையும் அம்மாவையும் பாத்துக்கறேன். ஆனா உங்களுக்கு பழைய படி தன்னம்பிக்கை வரணும். நீங்க வீட்ல டியூஷன் எடுக்கலாம். நீங்க தான் Commerce honours student ஆச்சே. ஒரு வேளை உங்க ஹெல்த் ஒத்துழைக்கலைனா வேண்டாம்."

மகள் மருமகன் வார்த்தைகளில் பரந்தாமன் புத்துணர்ச்சி பெற்றார்.
"உங்க ரெண்டு பேரையும் சேத்து பாக்கும் போது ரொம்ப நிறைவா இருக்கு மனசுக்கு. இப்ப தான் ரியலைஸ் பண்றேன் எவ்வளவு சந்தோஷம் வாழ்க்கையில தொலைச்சுட்டேன். உறவுகள், பந்தம், பாசம், நட்பு - இதுல இல்லாத ஒரு இன்பமா அந்த குடிபோதையில் இருந்தது..."


"அப்பா இனி இந்த பேச்சே எடுக்கவே கூடாது எனக்கு சத்தியம் பண்ணி குடுங்க" கண்டிப்புடன் மகள் எச்சரித்ததும் சிரித்தார்.

"சரி மா பேசலை பேசலை. உங்க கல்யாணம் பத்தி நான் வந்தவுடனே மூர்த்திகிட்டேயும் உங்க அம்மாகிட்டேயும் பேசறேன் விஷ்வா. ஆனா இவளுக்காக எதுவுமே..."

"மாமா" பரந்தாமனின் கையை பற்றிய விஷ்வா "ப்ளீஸ் எல்லாத்தையும்விட முக்கியம், உங்க ஆரோக்கியம். உங்ககூட சண்டை போட்ட நேரத்துல கூட இவ பிறந்தநாளைக்கு உங்க ஆசி வாங்காம இருந்ததில்லைன்னு சொன்னா. இந்த வருஷம் அது மிஸ் ஆக கூடாதுன்னு தான் கூட்டிட்டு வந்தேன்."

ஊழியர் ஒருவர் வந்து கதவை தட்டி நேரமாவதை நினைவுபடுத்தினார்.
"சரி நாங்க கிளம்பறோம், விசிடிங்க் டைம் முடிஞ்சிடுச்சு. நீங்க சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகி வாங்க மத்த விஷயம் எல்லாம் அப்புறம் பேசலாம்".


அப்பாவின் தோள் சாய்ந்து கொண்டு, கண்ணீர் வடிக்க, "சீக்கிரம் வீட்டுக்கு வந்துருப்பா. ஸாரி!" புரியாமல் ஆண்கள் இருவரும் விழித்தனர்.

"நான் உன்கிட்ட இத்தனை வருஷமா பேசாம இருந்து உன்னை காயப்படுத்திட்டேன். நடந்த சண்டைக்கு காரணம் தெரியாம உன்ன தப்பா நினைச்சிட்டேன்ப்பா ஸாரி'


செல்லம் கொஞ்சும் போது அவரை ஒருமையில் அழைக்கும் வழக்கம் இருந்தது பூரணிக்கு. பல வருடங்களுக்கு பிறகு அதை அவள் பின்பற்ற பூரித்து போனார்.

"உன் மேல எனக்கு எப்படி அம்முலு கோவம் வரும்? நான் செஞ்சது தப்பு தான். நான் அவளை கை நீட்டினது தப்பு தானே. நீ பேசாம இருந்தப்ப எனக்கு என் அம்மா நினைவு வந்துடுச்சு"

குழந்தையின் முகம் நிமிர்த்தி "அவங்க இப்படி தான் யார் மேலயாச்சும் கோவமோ வருத்தமோ இருந்தா உடனே அமைதியாகிடுவாங்க. நீ அதே மாதிரி இருக்க. அது மட்டும் இல்லை நீ எங்க அம்மா ஜாடை தான் தெரியுமா? அதனால தான் நான் உன்னை பேர் சொல்லி கூப்பிடுறது இல்லை"

விஷ்வாவிற்கு பிரகாஷ் கூறியது அனைத்தும் நினைவிற்கு வந்தது.

மகளின் நெற்றியில் முத்தமிட்டு "பத்திரமா போய்ட்டு வாங்க" வழியனுப்பினார் பரந்தாமன்.

வண்டி நிறுத்துமிடத்திற்கு வந்ததும், "அனகோன்டா எனக்கு உன்னை கட்டிக்கணும்" அழுகை வெடித்து விடுவது போல் முகத்தை உம்மென வைத்திருந்தாள்.

"என்ன டா?" உள்ளுக்குள் உருகி கரைந்தான் அவன், வாரி அணைத்து கொள்ள அவனுக்கும் ஆசை தான் இயலாது போக, கை பற்றி நின்றான்.

"பொது இடத்துல வேண்டாம் மா. நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலை உன்னை யாராச்சும் தப்பா பேசிடுவாங்க. அது வேணாம். வீட்டுக்கு போனப்புறம் பாக்கலாம் நீயே விடு டா அனகோன்டானு திட்டுற வரை...சரியா பேபி" குனிந்து அவள் முகம் பார்த்தான்.

"ம்ம்ம்... தாங்க் யூ"

"போடி மக்கு பொண்டாட்டி"

காரை செலுத்தியபடி மெல்ல அவள் பெற்றோரின் குடும்பத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டான். அதோடு பூரணிக்கு அந்த இரு குடும்பத்தை பற்றியும் என்ன அபிப்ராயம் என்பதையும் அறிந்து கொண்டான். பரந்தாமனின் சகோதரர் உதவி செய்ய மறுத்தார் என்று மட்டுமே அவளிடம் கூறி இருந்தார் கோகிலா. கோகிலாவின் குடும்பத்தினரின் இருப்பிடம் பற்றிய விவரம் இல்லை.

ஆனால் கண்டுபிடிப்பது சிரமம் இல்லை இந்த நவீன யுகத்தில். அவரிடம் ஒப்புதல் பெற்று செய்யவேண்டும் என தீர்மானித்தான். இடையில் கோகிலா அழைக்க, அவரிடம் பேசி பரந்தாமனை சந்தித்தது பற்றி தெனிவித்தனர்.

ஷர்மிளாவின் தோழி வீட்டிற்கு சென்று அங்கு காத்திருந்த ஷர்மிளா, சுகந்தியிடம் பூரணியை ஒப்படைத்து விட்டு ஆட்டோ பிடித்தான். அலுவலகத்திலிருந்து அப்போது தான் திரும்புவது போல, வீட்டை அடைந்தான்.


'Thank you for the surprise Siva! Best birthday gift from my purushan 😘😘"

பூரணியிடமிருந்து வந்த வாட்ஸ்அப் பதிவை பார்த்து அவனது பதிலை பதிவு செய்தான்.

'இந்த உப்பு சப்பு இல்லாத எமோஜி உம்மாலாம் வச்சு என்ன செய்யிறது? கணக்கு வச்சிருக்கேன் பேபி. நானே நேரம் பாத்து வசூல் பண்ணிக்கறேன்...'

அவள் எதிர்பார்த்தது தான் அந்த பதில், படித்துவிட்டு உரக்க சிரித்து கட்டிலில் விழுந்தாள்.

🌹🌹🌹🌹🌹🌹

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro