💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தன் மனைவியை நீண்ட நாட்களுக்கு பிறகு அருகில் கண்டவுடன் வெகு நேரம் பார்த்துக்கொண்டே இருந்தவன் எப்பொழுது உறங்கினான் என்று அவனுக்கே தெரியாது.

இரவு பன்னிரெண்டு மணி, திடீரென்று அறை முழுவதும் சில்லென்ற காற்று வீச தொடங்கியது.

திரைச்சீலைகள் அங்கும் இங்கும் அசைந்தாடியது. வருணை யாரோ எழுப்புவது போல் தோன்ற, சிரமப்பட்டு கண் திறந்தான்.

அங்கே யாருமில்லை ஆனால் குளிரின் நிலை அதிகமாகியதால், மெதுவாய் "சங்கீ" என்றான்.

"மாமா" என்ற அசரீரி ஒலிக்க, ஒரு நொடி அருகிலிருக்கும் தாரணியை பார்த்தான்.

"பயப்படாதீங்க மாமா. அக்காக்கு கேட்காது. நான் உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும்" என்றாள் ஒலி வடிவில் சங்கீதா.

"சொல்லுடா?" என்றான் யோசனையாய்.

"மாமா! ஹாஸ்ப்பிட்டல்ல கேட்டேன் நீங்க பதிலே சொல்லலை. இப்போவது சொல்லுங்க?" என்றாள்.

"என்னடா கேட்ட?" என்றான் தூக்க கலக்கத்தில் எதுவும் புரியாமல்.

"இன்னைக்கு ஒருத்தன் வந்தானே அவன் யாருன்னு?" என்றாள்.

"அவன் தாரணிக்கு நிச்சயம் செய்யப்பட்டவன். பேரு மதன்." என்றசன் லேசான எரிச்சலுடன்.

"லூசுபய... நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு தெரிஞ்சதும். கோபத்துல வாய்க்கு வந்த மாதரி  ஏதேதோ உளரிட்டு போறான்." என்றான் கடுப்பாய்.

"இல்ல மாமா... அவன் உளரலை" என்றாள் மெதுவாய்.

"உனக்கு எப்படி தெரியும்? நானே அவனை இன்னைக்கு தான் பார்க்கிறேன்." என்றான் வருண்.

"உண்மை மாமா. நீங்க சொல்றது போல் இன்னைக்கு தான் அவனை பார்த்துருக்கிங்க. ஆனா, அவன்?" என்று நிறுத்தினாள்.

"அவனுக்கென்ன?" என்றான் வருண் குழப்பமாய்.

"அவன் தான் நிஷன்." என்றாள் மெதுவாய்.

"என்ன சொல்ற?" என்றான் அதிர்ந்து.

"ஷ்..ஷ்.. மாமா. பொறுமையா பேசுங்க. அக்கா எந்திரிக்க போறாங்க?" என்றாள் மெதுவாய்.

"சங்கீ.. நீ அவன் இறந்துட்டான்னு தான சொன்ன?" என்றான் சந்தேகமாய்.

"ஆமா மாமா. அப்படி தான் சொன்னாங்க" என்றாள்.

"நான் எவ்ளோ மறுத்தும் கேட்காம மூணு மாசம் என் பின்னால காதலிக்கிறேன்னு திரிஞ்சு... என்னை விரும்பியே ஆகணும் அடம்பிடிச்சு சம்மதிக்க வச்சான்... நான் தான் அவனோட உயிர்ன்னு ஒவ்வொரு விஷயத்துலையும் செஞ்சுக்காட்டிட்டே இருப்பான். அடுத்த மூணு மாசத்துல அவன் இல்லாம என்னால இருக்கவே முடியாதுன்ற அளவுல என்னை மாத்திருந்தான். எவ்வளவு சுய எச்சரிக்கையோடு இருந்தும் ஒரு கட்டத்துல எல்லை மீறி நடந்துகிட்டோம். இருந்தும் என்னை அடுத்த முகுர்த்ததுளையே வீட்ல பேசி கல்யாணம் பண்ணிக்கிறேன். அப்ப அம்மாகிட்ட பேசிட்டு நல்ல பதிலோட வரேன்னு போனவன் போகும்போது ஆக்சிடெண்ட்ல இறந்துட்டான்னு தகவல் மட்டும் தான் வந்துச்சு.

முழுசும் உடைஞ்சு போய்ட்டேன். ஏற்கனவே நான் பெங்களூருல ஹாஸ்டல்ல தங்கி படிச்சுட்டு இருந்ததால யாருக்கும் என்னை பத்தி தெரியலை.

இதுல எனக்குள்ள கரு உருவாவதை கவனிக்க தவறிட்டேன்.

திடீர் உடல்நல குறைவால் ஹாஸ்ப்பிட்டல் போனப்ப தான் நான் தாயாக போறேன்னு தெரிஞ்சுது.

தெரிஞ்சு என்ன பண்ண?? நாள் ரொம்ப தள்ளி போனதால எதுவும் செய்ய முடியலை..

இந்த நிலையில் வீட்லர்ந்து ஊருக்கு வர சொன்னாங்க.

நானும் வந்தேன். ஆனா, ரொம்ப நல்ல சம்மந்தம்னு என்கிட்ட சம்மதம் கேட்காம கல்யாண ஏற்பாடு பண்ணி மணமேடை ஏத்திட்டாங்க.

என்ன ஏது ன்னு நான் யோசிக்கிறதுக்கு கூட நேரமில்லை...

அப்புறம் தான் தெரிஞ்சுது மாப்பிள்ளையும் பெங்களூரு தான். என்னை பார்த்து பிடிச்சு தான் வீடு வரைக்கும் வந்து கேட்டு இதுவரைக்கும் முடிவு பண்ணிருக்காங்கன்னு..

என் துரதிஷ்டம் என்னை பார்த்த டாக்டரும் மாப்பிள்ளையும் பிரென்ட்...

அப்புறம் என்ன
நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே..

மண்டபத்தில் எல்லார் முன்னாடியும் சொல்லாம நம்ம வீட்டு ஆளுங்களை கூப்பிட்டு உண்மைய சொல்லிட்டு போயிட்டாரு.

வேரா வழி தெரியாம வாழவும் பிடிக்காம சாக போன என்னை நீங்க காப்பாதனிங்க...

ஆனா வீட்ல உள்ளவங்க கல்யாணம் நின்னா என்ன ஆகும்னு பயப்படும் அத்தையும் மாமாவும் உங்களை கட்டாயப்படுத்தி எனக்கு தாலி கட்ட வச்சாங்க..

அதோட நீங்க கொஞ்சம் கொஞ்சமா ஒரு கார்டியனா என்னை பார்த்துக்க ஆரம்பிச்சிங்க...

கடைசில குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு டிவோர்ஸ் கொடுத்துட்டு அக்காகூட சேர்த்து வைக்க முடிவு செஞ்சுருந்தேன்..

ஆனா, விதி பாருங்க..

எனக்கு வலி வந்து ஹாஸ்ப்பிட்டல் சேர்ந்த அன்னைக்கு என் வாழ்க்கையையே மிக பெரிய அதிர்ச்சி எனக்கு...

யார் என் வாழ்க்கைன்னு நினைச்சேனோ..
யாரை உயிருக்கு உயிரா விரும்பினேனோ...
அவனை அதே ஹாஸ்பிட்டல்ல பார்த்தேன்...
குழந்தை பிறந்த உடனே உங்ககிட்ட இதை பத்தி பேசனும்னு நினைச்சேன்.. ஆனா, அதுக்குள்ள நானே இல்லாம போய்ட்டேன்..." என்றாள் சோகமாய்.

"ஒன்னும் புரியலையே? அவன் செத்துட்டான்னா இவன் யாரு?" என்றான் வருண் குழப்பமாய்.

"மாமா! அவனை என்னால நெருங்க முடியலை அவனை சுத்தியும் அவன் வீட்டை சுத்தியும் மந்திரக்கட்டு பலமா இருக்கு." என்றவள் பொறுமையாய்.

"மாமா எனக்கு இப்போ சந்தேகம் வருது." என்றாள் சங்கீதா.

"என்ன சந்தேகம் டா?" என்றவன் அவள் கூறியதை கேட்டு வெளிறி போனான்.

"என் சாவுக்கும் இவனுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு?" என்றாள் சங்கீ.

"என்னடா சொல்ற? எனக்கு எதுவும் புரியலையே?" என்று தலையை பிடித்துக் கொண்டான் வருண்.

"மாமா! என் சாவு இயற்கை இல்லைன்னு எனக்கு ஆரம்பத்துல இருந்தே ஒரு டவுட் இருக்கு." என்றாள் தயக்கமாய்.

"ஏன்டா அப்படி சொல்ற? நான் அங்கே தானே இருந்தேன் பாப்பா பிறக்கும்போது." என்றான் குழப்பமாய் வருண்.

"உண்மை தான் மாமா. நீங்க இருந்திங்க. ஆனா வெளிலதானே?" என்றாள்.

"புரியல சங்கீ." என்றான் வருண்.

"எனக்கு ஆப்ரேஷன் செய்றதுக்காக மயக்கமருந்து கொடுத்திருந்தாங்க. ஆனாலும் முழுசா மயக்கம் வரல அவங்க பேசுறது எங்காதில விழுந்தது தான் இருந்தது. பாப்பா பிறந்து என்னை ரூமுக்கு மாத்தினப்பவும் அப்படித்தான்."

"அப்போ.. திடீர்னு ஒரு சத்தம்..

யாரு நீங்க இங்க என்ன பன்றிங்க? வெளிய போங்க? பேஷன்ட்டை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது" நர்ஸ் குரல்.

நீங்க தான்னு நினைச்சேன்...

"ஆனா, அந்த குரல் உங்களோடது இல்ல... அதுவில்லாம...

இங்க இப்போ நடக்குறதை வெளிய சொல்ல கூடாது.. சொன்னா நீயும் உயிரோட இருக்க மாட்ட.. இது தான் நான் சாகரதுக்கு முன்னாடி கேட்டது.

என்ன நடந்தது தெரியாது.

அடுத்த நிமிஷத்துல என் உடம்பு தூக்கி போட ஆரம்பிச்சுடுச்சு... நான் பிழைக்க மாட்டேன்னு எனக்கே ஒரு கட்டத்துல தெரிஞ்சுடுச்சு...

அதான் மாமா எனக்கும் சந்தேகம்...

அங்க வந்தது யாரு..

எனக்கு என்ன நடந்துச்சு...?

இப்போ வரைக்கும் தெரியலை..." என்றாள் சங்கீதா.

"இதை ஏன் என்கிட்ட நீ பேச ஆரம்பிச்சப்பவே சொல்லலை சங்கீ..?" என்றான் வருண்.

"மாமா நீங்களே பாபாவை வச்சுட்டு ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்திங்க... இதையெல்லாம் சொல்லி நீங்க என்ன ஏதுன்னு கண்டுபிடிக்க போய் உங்களுக்கும் பாப்பாகும் ஏதாவது ஆகிட்டா என்ன பண்றதுன்னு பயமா இருந்துச்சு மாமா. அதான் சொல்லலை.. ஆனா இன்னைக்கு அவனை ஹாசப்பிட்டல்ல பார்த்தேன்." என்றாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro