💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-13

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"என்ன சொல்றிங்க? அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுள்ள? இப்போ நீங்க வந்து கல்யாணம் செய்துக்க போறவர்னு சொல்றிங்க?" என்று கேள்விகளை நர்ஸ் அடுக்கி கொண்டே போக, தாரணிக்கு திருமணம் நடந்துவிட்டது என்றதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் மதன்.

"சிஸ்டர்.. நான் தான் அவங்க ஹஸ்பண்ட் சொல்லுங்க. என் வைப் எப்படி இருக்காங்க?" என்றான் வருண்.

"அவங்களுக்கு ப்ளட் நிறைய லாஸ் ஆகிருக்கு. டாக்டர் வந்து சொல்வாங்க" என்று உள்ளே சென்றுவிட்டாள்.

அவனின் குரலில் சுயநினைவுற்கு திரும்பிய மதன் வருணை கண்டதும் வெறிப்பிடித்தவன் போல் கத்திக்கொண்டு வருணை தாக்க முற்பட்டான்.

'என்னோட இத்தனை வருஷ கனவு எல்லாத்தையும் ஒன்னுமில்லாம பண்ணிட்டியேடா.. அன்னைக்கே உன்னை கொலை செஞ்சிருக்கணும். நான் தப்பு பண்ணிட்டேன். போனா போகுதுன்னு பிரிச்சு வச்சது தப்பா போச்சு. கல்யாணம் பண்ணிவச்சா எங்க வாழ்க்கைல திரும்பி வரமாட்டேன்னு நினைச்சேன். ஆனா, நான் திட்டம் போட்டபடி எல்லாம் கணிந்தகு வர நேரத்துல இப்படி கெடுத்துட்டியேடா? உன்னை இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன்" என்று தாக்க முயல,

"நிறுத்துங்க.." என்று அதட்டினார் உள்ளேயிருந்து வெளி வந்த மருத்துவர்.

"படிச்சவங்க தான நீங்க ரெண்டு பேரும். அறிவில்ல... இது உங்க வீடு இலை. ஹாஸ்பிடல். நிறைந்த பேசன்டஸ் உயிருக்கு போராடி மீண்டு வந்துருக்காங்க... அவங்களுக்கு ரெஸ்ட் வேணும். சந்தகடை மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க? போங்க வெளில" என்று உள்ளே சென்றார்.

இரண்டு  வார்டபாய்ஸ் வந்து மதனை திமிர திமிர வெளியேற்றினர்.

"என்னோட இத்தனை வருஷ பிளானை ஒன்னுமில்லாம பண்ணிட்ட, இனி உன் சாவு என்கைல தாண்டா?" என்று கத்திகொண்டே வெளியேறினான் மதன்.

'லூசாகிட்டானா? ஏதேதோ உளறிட்டு இருக்கான்.' என்று அங்கிருந்த நாற்காலியில் தலையை பிடித்தபடி அமர்ந்து கொண்டான் வருண்.

"தம்பி! நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அவனின் தோளை தொட்டார் தாரணியின் அப்பா.

"கண்டிப்பா பேசலாம் மாமா. ஆனா இப்போ இல்ல. தாருவ முதல்ல வீட்டுக்கு கூட்டிட்டு போவோம். அவ நல்லபடியா வரவரைக்கும் எனக்கு மூளையே வேலை செய்யாது. அவ சரியாகிடுவா. நீங்க கவலை படாம வீட்டுக்கு போங்க. அத்தை பயப்படுவாங்க." என்றவன் சற்று நிறுத்தி, "நீங்க மட்டும் தனியா போகவேண்டாம். அந்த மதன் சொல்லிட்டு போனதில் ஏதோ இருக்கு. இப்போ சூழ்நிலை சரியில்ல. தாருவ வீட்டுக்கு கூட்டிட்டு வரவரைக்கும் நம்ம உஷாரா தான் இருக்கணும்" என்றவன் தன் நண்பன் தினேஷுக்கு அழைத்தான்.

"என்னடா இப்போ பண்ணிருக்க?"  என்றான் தினேஷ்.

"எங்கடா இருக்க?" வருண்.

"இப்போ தான் வீட்டுக்கு கிளம்புறேன்." என்றான் தினேஷ்.

"சரி. அப்டியே நான் சொல்ற ஹாஸ்ப்பிடலுக்கு வா" என்றவுடன் தினேஷ் பதறினான்.

"ஹாஸ்ப்பிட்டலுக்கா எதுக்கு? யாருக்கு என்ன ஆச்சு?" என்று பதற, "யாருக்கும் ஒன்னும் இல்ல. நீ முதல்ல இங்க வா" என்று மருத்துவமனையின் விலாசத்தை கூறினான்.

"சரிடா. நான் வந்துடறேன்" என்று வைத்தான் தினேஷ்.

"மாமா என் பிரென்ட் வரான். நீங்க அவன்கூட போங்க. மீதி வீட்ல வந்து பேசிக்கலாம்" என்றான்.

"சரி பா" என்றார்.

சிறிது நேரம் கழித்து வந்த தினேஷிடம் விவரத்தை கூறி அனுப்பிவைத்தான்.

அவர்கள் சென்றதும் பெருமூச்சுவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கண்ணைமூட, அருகில் மிக குளிர்ந்த காற்று வீசவும் விழி திறந்து பின் மூடிக்கொண்டான்.

அவனின் தலையை யாரோ வருடுவது போல் இருக்க.. "சங்கீ" என்றான் மெதுவாய்.

வேகமாய் காற்றடிக்க, வெறுமையாய் சிரித்தவன்.

"பார்த்தியா? நீ தான எப்பவும் சொல்லுவ, போய் அவகிட்ட பேசுங்கன்னு? இப்போ பாரு என்ன பண்ணி வச்சுருக்கான்னு.." என்றான் கண்ணீர் வழிய.

அவனின் கண்ணீர் துடைக்கப்படுவது யார் கண்ணுக்கும் தெரியாது ஆனால் அவன் உணர்கிறான்.

தன் வலது கரத்தில் ஏதோ எழுதப்படுவது போல் தோன்ற கரத்தை பார்க்கிறான்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க ஒருத்தன் வந்தானே? அவன உங்களுக்கு தெரியுமா?" என்று இருந்ததை பார்த்து அதிர்ந்தவன் சட்டென திரும்பி இல்லாதவளை தேடினான்.

"ஏன்?" என்றான் தனக்கு தெரியாமல் நிறைய மர்மங்கள் தன்னை சூழ்ந்திருப்பதை போல் உணர்ந்து.

"அது... வந்து... மாமா..." என்னும் பொழுதே, "சார்! பேஷன்ட் கண்ணு முழிச்சிட்டாங்க. டாக்டர் உங்களை கூப்பிடறாங்க" என்றாள் நர்ஸ்.

அப்பொழுது பேசிக்கொண்டிருந்த அனைத்துமே மறைந்து போனது. ஒரு புது உற்சாகம் பிறக்க துள்ளியபடி உள்ளே ஓடினான்.

"வாங்க மிஸ்டர் வருண். உங்க வைப் இப்போ கொஞ்சம் நார்மல் தான். பட் கைல கொஞ்சம் டீபா கட் ஆகிருக்கு. அதனால தான் இவ்ளோ நேரம் அவங்களை கண்காணிப்புல வச்சிருந்தோம். நீங்க அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். ட்ரெஸ்ஸிங் பண்ணிருக்கோம். இன்னும் ஒன் வீக் ஸ்டரைன் பண்ணக்கூடாது. கொஞ்சம் கேர்புல்லா பார்த்துக்கோங்க." என்றார் மருத்துவர்.

"ஓகே டாக்டர். தாங் யு " என்று பெருமூச்சு விட்டவன் தன் மனைவியை அப்பொழுது தான் பார்த்தான்.

அவளும் அவனையே தான் பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் அவளின் பார்வையில் தெரிவபிஹென்னா என்று அவனால் உணர முடியவில்லை.

அமைதியாக வீட்டிற்கு கூட்டி வந்தான். அவளும் மிகவும் களைப்பில் இருந்ததால் எதுவும் பேச முடியாமல் அமைதியானாள்.

இதோ வீட்டின் வாசலில் கார் நின்றாயிற்று.

எப்படியோ ஒரு முறையில் திருமணம் முடிந்த முதல் நாள் கணவனுடன் அவன் வீட்டிற்கு வருகிறாள். ஆனால் அவள் முகத்தில் அதற்கான சந்தோஷமா துக்கமோ எதுவுமே இல்லை. அவளின் முகம் உணர்ச்சிகளை  துடைத்து வைத்தது போல் இருந்தது.

கதவை திறந்து இறங்க போனவளின் பாதம் கீழே படாமல் மெல்ல கையேந்தினான்.

"என்னடா பண்ற? கிழ இறங்கனும் இறக்கி விடு." என்றாள் கோபமாய்.

"அமைதியா இருந்தா நானும் சமத்தா உள்ள கூட்டிட்டு போவேன். இல்ல பேசற வாய்க்கு பூட்டு தான் போடணும்" என்றான் விழிகளில் குறும்பு மின்ன.

"இடியட்" என்றாள் அவன் நெஞ்சில் கரங்களால் தாக்கி.

"ஆமா. உன்னோட இடியட் தான்" என்றான்.

அவள் அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, "அண்ணா" என்று குரல் கொடுத்தான்.

"வந்துட்டேன்" என்று வந்தார் அந்த வீட்டில் பணிபுரியும் மனோ அண்ணா.

"அப்டியே நில்லுங்க தம்பி" என்று இருவருக்கும் ஆலம் சுற்றி வெளியே எடுத்துச் சென்றார்.

"இப்போ இறக்கி விடு டா" என்றாள் காட்டமாய்.

வார்த்தைகள் தான் கோபமாய் இருப்பது போல் காண்பித்தாலும், அவளின் மேனி அவனின் தொடுகையை வேறு விதமாக உணர்த்தியது.

'என் கிட்டயே நடிக்கிறியா? இனிமேல் தான் இருக்கு உனக்கு ஷாக் ட்ரீட்மென்ட்' என்று சிரித்தவன் அவளை கீழே இறக்காமல் நடு கூடத்தில் சோபாவில் அமர வைத்தான்.

விட்டால் போதுமென்று வேகமாய் தள்ளி அமர்ந்தாள்.

'எவ்ளோ நாளைக்கு ஓடறேன்னு நானும் பார்க்கிறேன்' என்று குறும்பாய் பார்க்க, அவளோ அவன் எண்ணம் புரிந்தது போல் முறைத்தாள்.

"தாரனிம்மா!" என்று குரல் கேட்ட திசையில் சட்டென திரும்பினாள்.

அங்கே, "பெற்றோர் கண்ணீரோடு நின்றிருந்தனர்.

"மா.. பா.. நீங்க எப்படி இங்க" என்றாள் அதிர்ச்சியாய்.

"மாப்பிள்ளை தான் நேத்து வீட்டுக்கு வந்து எல்லா விஷயமும் சொல்லி விடாபிடியாய் எங்களை இங்க கூட்டிட்டு வந்தார்." என்றார் அவளின் அன்னை.

அன்னையின் வார்த்தைகளில் மேலும் அதிர்ந்தவள் இருவரையும் மாறி மாறி பார்க்க, எங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும்." என்றார் அவளின் தந்தை.

"அப்பா..." என்று பேசவந்தவளை கை காட்டி தடுத்து நிறுத்தியவர்.

"இரு தடவை என்ன நடந்ததுன்னு கேட்டு தெரிஞ்சுக்கோ. இல்ல உட்கார்ந்து பேசுங்க. பேசாததுனால தான் இவ்ளோ நாள் பிரிஞ்சிருக்கிங்க..." என்றார்.

எதுவும் பேசாமல் வருணை பார்க்க, பிளீஸ் கெஞ்சும் பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தான் வருண்.

"சரி" என்றாள் மிக குழப்பமாய்.

"தாரணி! எங்க ரெண்டு பேரையும் மறந்துட்டல்ல நீ? இல்லைன்னா இப்படி ஒரு முடிவு எடுத்துருப்பியா?" என்றார் அவளின் அம்மா கோபத்துடன் கலந்து வருத்தமாய்.

"சாரி மா" என்றாள் தலை குனிந்தபடி.

"அத்தை என் மேல தான் தப்பு. அவளை அந்த முடிவுக்கு தள்ளியது நான் செஞ்ச வேலையால தான். அவளை திட்டாதிங்க" என்றான் வருண்.

"எங்கம்மா என்னை திட்றாங்க. நீ இதுல நடுவில வராத" என்றாள் கோபமாய். வருணின் முகமும் வாடியது.

"தாரணி" என்று அதட்டினார் அவளின் அப்பா.

"என்ன பழக்கம் இது? எப்போ ல இருந்து இப்படி அடித்தவங்களை கஷ்டப்படுத்துற மாதிரி பேச ஆரம்பிச்ச?" என்றார் கோபமாய்.

"மாமா விடுங்க" என்றான் வருண் உடனே.

"முதல்ல என்னநடந்ததுன்னு தெரிஞ்சுட்டு உன் கோபத்துக்கு இன்னமும் அர்த்தம் இருக்கான்னு யோசி" என்று வேகமாய் தங்களின் அறைக்குள் சென்று விட, "நீ இன்னும் சின்ன குழந்தை இல்லை மா. பார்த்து நடந்துக்கோ" என்று அவளின் அன்னையும் சென்றுவிட்டார்.

எதுவும் புரியாமல் தலையை பிடித்தபடி அமர்ந்து கொண்டாள் தாரணி.

"இந்தாங்க மா ஜூஸ்" என்று ஒரு தம்பளரை நீட்டினார் மனோ.

"அண்ணா எனக்கு எதுவும் வேணாம். தலை வலிக்குது ரொம்ப. கொஞ்ச நேரம்  நான் தூங்கனும்." என்றாள் தாரணி.

"அதெல்லாம் சரி தான். ஆனா ரத்தம் நிறைய போயிருக்கே... அது சரியாகணும்னா முதல்ல இந்த ஜூஸை குடிச்சுட்டு படுத்துக்கோங்க" என்றார் அன்பு கட்டளையாக.

அவரின் அன்பான பேச்சில் மறுத்து பேசமுடியாமல்  வாங்கி குடித்தாள்.

கொஞ்ச நேரம் சென்றிருக்க, தன்னையுமறியாமல்  உறங்கியும் போனாள்.

"அய்யா! நீங்க சொன்ன மாதிரி ஒரு தூக்க மாத்திரை போட்டு ஜூஸ் கொடுத்தேன். குடிச்சுட்டு தூங்குறாங்க" என்றார் மனோ.

"நன்றி னா. அப்படி செய்யலைன்னா எதையாவது யோசிச்சு ஸ்டரைன் பண்ணிக்குவா. அதான் நீங்க போங்க நான் பார்த்துக்குறேன்" என்று அவரை அனுப்பிவிட்டு சோபாவில் இருந்து தாரணியை தூக்கி வந்து தன் அறையின் மெத்தையில் படுக்க வைக்கான்.

அவளின் நெற்றி யோசனையில் சுருங்குவது போல் தெரிய, தன் இரண்டு விரலால் நீவி விட்டவன்.

"உன் கோபம் நியாயமனது தான். கூடிய சீக்கரம் உனக்கு பதில் தரேன் டா. தூக்கத்துல கூட அழகி தான்டி நீ" என்று அவளின் நெற்றியில் இதழ் பதித்து சிரித்தான்.

'நாளைக்கு எழுந்து என்ன பண்ண போறாளோ? எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலை. கடவுளே நீ தான் காப்பாதனும்.' என்று புலம்பிக்கொண்டே அவளின் அருகினில் உறங்கி போனான் வருண்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro