💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவள் விழித்திறக்க காத்திருந்தது போல, அவளின் விழிகள் இரண்டையும் நேருக்கு நேராக பார்த்தபடி மீண்டும் அதே தாலியை கட்டிக்கொண்டிருந்தான் அவளின் காதல் கணவன் வருண்.

அதிர்ச்சியாய் நோக்கியவள் விழிகளில் கோபத்தின் சாயல் உருவெடுக்க வருணின் கன்னத்தில் அறைய தொடங்கினாள்.

"ஏற்கனவே ஒரு தடவை என் வாழ்க்கைல விளையாடியது போதாதா ஏன் மறுபடியும் இப்படி ப ண்ண?" என்று ஆவேசமாய் கத்தியவள்..

"நீ தாலி கட்டிட்டா நான் உன் பொண்டாட்டியாகிடுவேனா?? எல்லாத்தையும் மறந்துட்டு  உன்கூட சேர்ந்து வாழுவேன்னு நினைச்சியா??" என்று தாலியில் கைவைக்க அவனும் அதை இறுக பற்றி, "ஏற்கனவே ஒரு தடவை இதே தாலிய நீ கழட்டினப்போ என்னால தடுக்க முடியலை... தப்பு என் பக்கமும் இருந்தது. ஆனா, இந்த முறை இதை கழட்டணும்னா ஒண்ணு நான் இந்த மண்ணுக்குள்ள போயிருக்கனும்... இல்ல நீ கழட்ற நேரம் என் உயிர் போயிரும்... சோதிக்கணும்னா கழட்டி பாரு..." என்றான் சாதுவான குரலில் அடக்கப்பட்ட கோபத்துடன்.

அவனின் வார்தைகளில் அதிர்ச்சியடைந்து கரத்தை கீழே இறக்கி கொண்டாள்.

அவளின் எண்ணங்களில் என்ன என்னவோ ஓடி குழப்பமடைய இந்த வாழ்க்கையே தேவையில்லை என்னும் அளவிற்கு வெறுத்து போக அவனை நிமிர்ந்து பார்த்து, "இப்போ உனக்கு என்ன, நான் இந்த தாலியை கழட்ட கூடாது கழட்டினா நீ செத்துருவ, அதானே?? " என்றாள் கோபமாய்.

'ஆமாம்' என்பது போல் தலையாட்டினான்.

"அப்போ சரி" என்று பின்னாலே அவனை பார்த்தபடி நடக்க, அவள் என்ன நினைக்கிறாள்... என்ன செய்ய போகிறாள்... என்று தெரியாமல் குழம்பி மனம் பதற முன்னேறினான்.

"செல்வா!" எனும்பொழுதே... "உன் வாயால அப்படி கூப்பிடாத..." என்று கத்தியவள்.

"நீ சாகிறதை என்னால பார்க்க முடியாது.. ஏன்னா நான் ஒரு பைத்தியகாரி அந்த அளவு உன் மேல அன்பு வச்சுருக்கேன். ஆனா, அதே நேரம் உன்கூட என்னால வாழ்வும் முடியாது. நீ எனக்கு பண்ண துரோகத்தை என்னால மறக்கவும் முடியாது... ஆனா, ஒண்ணு செய்யலாம்..." என்று நிறுத்தினாள்.

உள்ளம் பதறியது.

'என்னமோ ஏடாகூடமா பண்ணபோறா?' என்று யோசித்து கொண்டிருக்கும் பொழுதே அருகில் எலுமிச்சை பழ விளக்க போட பழத்தை அறுக்க வைத்திருந்த கத்தியை வேகமாய் எடுத்து தன் மணிக்கட்டில் இரண்டு முறை தொடர்ந்து ஆழமாக ஒரே இடத்தில் அறுக்க ரத்தம் பொல பொலவென கொட்ட தொடங்கியது.

"தாரும்மா! அடிப்பாவி ஏன்டி இப்படி பண்ண? என்னை ஏண்டி இப்படி உயிரோட கொல்ற?" என்று வேகமாய் அவள் கரத்தில் இருந்த கத்தியை தட்டி விட்டு ரத்தம் வராமல் அழுத்தி பிடித்தான்.

"உனக்கும் எதுவும் ஆகக்கூடாது... அதேநேரம், நானும் இருக்கமாட்டேன் உன்கூட வாழ... நல்லா இருக்குல்ல..." என்றாள் வேதனையாய் சிரித்து. என்ன அழுத்திப்பிடித்தாலும் ரத்தம் கொட்டுவது நிற்கவில்லை.

"இந்த முறை நீ எங்கே போனாலும் நானும் உன்கூட தான் வரப்போறேன். அது சாவா இருந்தாலும் உன்கூட தான்.. பார்த்துட்டே இரு. போதும். மனசுல உன்னை வச்சுக்கிட்டு வாழமுடியாம இவ்ளோ நாளும் நரகத்தை அனுபவிசாச்சு..." என்றான் தீர்க்கமாய்.

தன் கைக்குட்டையை எடுத்து அவள் கையை கட்டியவன், வேகமாய் காருக்கு கூட்டி போக முயன்றான்.

"நான் வரமாட்டேன். எனக்கு உன்கூட வாழ பிடிக்கலை... இதுக்கு ஒரே தீர்வு என்னோட சாவு தான்." என்றாள் தீர்மானமாக.

"அப்போ முதல்ல நானே போறேன்" என்று அதே கத்தியை எடுத்து தன் மணிக்கட்டை அறுக்க போகையில்... "அறிவிருக்கா உனக்கு?" என்று தட்டி விட்டு முறைத்தாள் தாரணி.

"இப்போ நீ என்கூட வரலைன்னா இங்கயே இந்த நிமிஷமே என் உயிர் போய்டும். பரவாலையா?" என்றான் வருண்.

அவனின் வார்த்தைகளில் மிகுந்த அதிர்ச்சி கொண்டவள் எதுவும் பேசாமல் நிற்க, அவளின் கரத்தை பற்றி கோவிலுக்கு வெளியே கூட்டி வர, ரத்தப்போக்கு அதிகமானதால் கண்கள் சொருகி மயக்கத்தில் லேசாய் தள்ளாடி கீழே விழப்போனவளை விழாமல் தடுத்து காருக்குள் ஏற்றினான் வருண்.

அடுத்த கால் மணி நேரத்தில் அருகிலிருந்த மருத்தவமனையில் இருந்தான் வருண்.

உள்ளே சிகிச்சை நடந்து கொண்டிருக்க, தவிப்பதை வெளியில் நடந்து கொண்டிருந்தவன்,
மருத்துவமனையின் வாசலில் வருபவர்களை பார்த்தவுடன் வேகமாய் அவர்களிடம் ஓடினான்.

"அத்தை மாமா நீங்க ஏன் இங்க வந்திங்க? உங்களை வீட்ல தானே இருக்க சொன்னேன்?" என்றான் பதற்றம் குறையாமல் வருண்.

"இப்போதைக்கு எங்களுக்குன்னு இருக்க ஒரே மன நிம்மதி எங்க பொண்ணுதான். அவளுக்கு இப்படி இருக்கும் போது எப்படி அங்க இருக்க முடியும்?" என்றார் தாரணியின் அப்பா.

"என்னை மன்னிச்சிடுங்க. அவளுக்கு எதுவும் ஆக விடமாட்டேன்னு சத்யம் பண்ணி தான் அவ கழுத்துல தாலி கட்டின்னேன். ஆனா, அதுனாலயே அவ இப்படி செய்வான்னு எதிர்பார்க்கலை... அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் என்ன ஆவேன்னு எனக்கே தெரியாது மாமா" என்று கண்கலங்கினான்.

"அவ தலையெழுத்து... இது தான் நடக்கணும்னு இருக்குப்பா. நீங்க மட்டும் வந்து சரியான நேரத்துல  எல்லாத்தையும் சொல்லைன்னா.. எங்க பொண்ணு எதுக்காக இத்தனை வருஷம் கல்யாணம் வேண்டாம்னு இங்க வந்து இருக்கான்னு தெரியாமயே போயிருக்கும். உங்களை மனசுல நினைச்சிட்டு தான் அவ எவ்ளோ வரன் பார்த்தும் முடியவே முடியாதுன்னு ஒத்தை கால்ல நின்னுருக்கா.." என்றார் தாரணியின் தாய் கண்ணீருடன்.

"என் மேல தானே அத்தை எல்லா தப்புமே... எந்த பெண்ணுக்கும் அவளோட நிலைமை வரக்கூடாது. என்னால அவ ரொம்ப கஷ்டப்பட்டுருக்கா. அவ காயத்துக்கு மருந்தும் நான் மட்டும் தான். ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேனத்தை... அவளை தவிர வேற எந்த பொண்ணு மேலயும் என்னோட நிழல்கூட பட்டதில்லை. நான் தாலிகட்டி கூட வாழ்ந்தேன்னு  நினைக்குற சங்கீதாவையும் சேர்த்து... இதை அவ புரிஞ்சுகிட்டா அன்னைக்கு எங்க வாழ்க்கைல எல்லா பிரச்சனைக்கும் தீர்வு வந்துரும். எவ்ளோ நாள் அனாலும் அதுக்காக நான் வெய்ட் பண்றேன். நீங்க கவலை படாதீங்க. இனி அவ என்னோட மனைவி. அவளை நான் பத்திரமா பார்த்துப்பேன்." என்றான் வருண்.

"அந்த நம்பிக்கைல தான் நீங்க சொன்னதுக்கு நாங்க சம்மதிச்சிருக்கோம். உங்களுக்கு எல்லா பிரச்சனையும் சரியாகிடுச்சுன்னா உங்க ரெண்டு பேரு கிட்டயும் நம்ம குடும்பத்தை பத்தி ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும்" என்றார் தாரணியின் அப்பா.

"சரி மாமா" என்றான் வருண்.

"இங்க தாரணியோட அட்டெண்டன்ட் யாருங்க?" என்று வெளியே வந்தாள் செவிலியர் பெண்.

"நான் தான். சொல்லுங்க" என்று அவர்களுக்கு முன் வந்து நின்றான் மதன்.

நின்றிருந்த மற்ற மூவரும் அதிர்ச்சியாய் அவனை நோக்கினர்.

"நீங்க அவங்களுக்கு யாரு?" என்றாள் நர்ஸ்.

"நான் அவங்களை கட்டிக்க போறவன்... அவங்க எப்படி இருக்காங்க?" என்றான் மதன்.

"என்ன பேசற நீ?" என்றார் தாரணியின் தந்தை.

அவரின் கரத்தை பிடித்து எதுவும் பேசவேண்டாம் என்று கண்ணசைத்து அமைதிபடுத்தினான் வருண்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro