💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-22

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அங்கே,

உள்ளே குழந்தை இருக்க, தொட்டில் யாருமே இல்லாமல் ஆடி கொண்டிருந்தது.

ஒரு நொடி பயம் கொண்டாலும் குழந்தையின் அருகே மெல்ல அடியெடுத்து வைத்தாள்.

இவள் வரவும் தொட்டில் ஆடுவது நின்றுவிட்டது.

அவளை சுற்றி ஒரு இதமான குளிர் பரவ தொடங்க, தாரணிக்கு பயத்தில் வியர்க்க தொடங்கியது.

"தாரும்மா. " என்று வருண் குரலில் சட்டென்று திரும்பியவள் வேகமாய் அவன் நெஞ்சில் தஞ்சம் கொள்ள, ஒரு நொடி அதிர்ந்தாலும் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது வருனுக்கு.

"என்னடா? ஏன் இங்க வந்த? பாப்பா அழுதாளா? " என்று அவளை அணைத்தபடி குழந்தையை பார்க்க, அது தொட்டிலில் பொக்கை வாய் தெரிய சிரித்து கொண்டிருந்தது.

"அடடா செல்லக்குட்டி எழுந்துட்டிங்களா° அதான் அம்மா உங்களை பார்க்க வந்தங்களா?" என்றதும் சத்தமாய் சிரித்தது குழந்தை.

அவனின் அம்மா என்ற வார்த்தையில் திடுக்கிட்டு விலகி நின்றாள் தாரணி.

"என்னடா?" என்றான்.

"இல்ல ஒன்னுமில்லை. " என்று குழந்தையையும் அறையையும் திரும்பி பார்த்தவள் வேகமாய் அங்கிருந்து தங்கள் அறைக்கு சென்றாள்.

அவள் வெளியேறியதும்.

"ஏய் வாலு சங்கீ... இது உன் வேலை தானே?" என்று கேட்டதும் திரைசீலைகள்  ஆட, "ஏன் அவளை பயமுறுத்துற சங்கீ." என்று தாரணியை தேடி வெளியேறினான்.

"தாரணி" என்று கதவை தட்ட அது திறந்து கொண்டது.

உள்ளே நுழைந்தவன் கதவை தாழிட்டு மெல்ல தாரணியின் அருகில் அமர்ந்தான்.

"என்னடா?" என்று தலையை கோத, என்ன நினைத்தாளோ? வருணின் மடியில் தலையை நகர்த்தி படுத்து கொண்டாள்.

"என்னம்மா? ஏன் இங்க வந்துட்ட?" என்றான்.

"பயமா இருக்கு வருண். " என்றாள் மெதுவாய்.

அவளின் சொற்களில் லேசாய் அதிர்ந்தாலும்.

"ஏன் தாரு. எதுக்கு பயம்? நான் உன்கூட இருக்கேன்." என்றான் வருடி கொண்டே.

"தெரியலை. ரொம்ப நாளாவே என்னை சுத்தி எனக்கு தெரியாம ஏதோ நடக்குற மாதிரி ஒரு பீலிங். என்னனனு சொல்ல தெரியலை. இதோ இப்போ கூட உன் மனைவியா இருக்கேன். ஆனா உன் மேல தப்பில்லைன்னு தெரிஞ்சும் முழுசா சந்தோஷ படமுடியலை. ஏதோ ஒண்ணு தடுக்குது. எனக்கு பயமா இருக்கு. ஏதோ தப்பா நடக்க போற மாதிரி மனசு கிடந்து அடிச்சுக்குது." என்று கூறி கொண்டிருக்கும் போதே வருணின் போன் அடித்தது.

"ஹலோ! " என்றான் வருண் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும்.

"ரொம்ப புத்திசாலியோ நீ? அவ போன் நம்பர் மாத்தினா எனக்கு அவகிட்ட பேச முடியாதா? முட்டாள்... போனை அவகிட்ட கொடு. இல்லைனா அவங்கப்பன் பரலோகம் போயிருவான்னு சொல்லு." என்றதும்.

"டேய்... மாமா எங்க? அவருக்கு ஏதாவது ஆச்சு? நீ அவ்ளோ தான்." என்று கர்ஜித்தான் வருண்.

"ரொம்ப துல்லாம போனை குடுடா." என்றது.

"கொடுக்க முடியாது. நீ எதுக்கு அவகிட்ட பேசணும். அவ இப்போ என் மனைவி" என்றான் கோபத்தில்.

தன் தந்தைக்கு தான் ஆபத்து என்று உணர்ந்த தாரணி வருணிடமிருந்து போனை பிடுங்கி, "ஹலோ! யாரு? எங்கப்பா எங்க? அவருக்கு என்னாச்சு?" என்றாள் பதற்றமாக.

கோபமாக வருண் முறைக்க, தன் போனை அவனிடம் கொடுத்து கண் ஜாடை செய்ய வேகமாய் வெளியேறினான்.

"என்ன செல்லம். நேத்து வரைக்கும் கட்டிக்க போறவனா இருந்த என்னை மறந்துட்டு.. அந்த பரதேசிய கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்க. ஒழுங்கு மரியாதையா சொல்றேன். அவன் கட்டின தாலியை கழட்டி வீசிட்டு நான் சொல்ற இடத்துக்கு வந்தா உங்கப்பாவோட சேர்த்து உனக்கு இன்னொரு பெரிய சர்ப்ரைஸ் தரேன்." என்றான் ஜெகன்.

"ஜெகன் நீயா? இப்படி பண்ண?" என்றாள் அதிர்ச்சியாய்.

"ஆமா நானேதான் டார்லிங்." என்று சிரிக்க,

"எங்கப்பா எங்க?" என்றாள் கோபமாக.

"நீயும் உன் புருஷனும் ரொமான்ஸ் பண்றதில உங்கப்பனை மறந்துட்டிங்க.. அதான் லட்டு மாதிரி நான் தூக்கிட்டு வந்து பத்திரமா வச்சிருக்கேன். நீ வந்தா உங்கப்பன் உயிர் பிழைப்பான் இல்லன்னா... எனக்கே சொல்ல கஷ்ட்டமா இருக்கு." என்றான் ஜெகன்.

"ஏய் எங்கப்பாவை பத்தி உனக்கு தெரியலை. ஒழுங்கா அவரை விட்டுட்டு இல்லைன்னா உனக்கு தான் பிரச்சனை." என்றாள் தாரணி.

"உன்னை உனக்கே தெரியாத ரகசியம் வரைக்கும் தெரிஞ்சவண்டி நான். அப்படி இருக்கும்போது உங்கப்பனை பத்தி தெரியாமையா இருக்கும். எல்லாம் தெரியும்." என்றான் ஜெகன் நக்கலாக.

"அப்போ சரி உன் விதியை யாராலையும் மாத்த முடியாது." என்றாள் தாரணி.

"என் விதியை மாத்த முடியாது. என்னைக்கு இருந்தாலும் நான் தான் உன்னோட புருஷனாக போறவன் அதனால முரண்டு பிடிக்காம வந்து சேரு." என்றான் ஜெகன்.

"ஏன்டா முட்டாள். என்னை பத்தி இன்னும் முழுசா தெரிஞ்சிக்கலை நீ. தெரிஞ்சிருந்தா என் பக்கம் வர கூட யோசிச்சிருப்ப... சரி... என் புருஷன் இங்க என் பக்கத்துல இருக்கும் போது கண்ட நாயெல்லாம் எனக்கு புருஷனாகிட முடியாது. எங்களுக்கு கல்யாணமாகி சரியா ஒரு நாள் முடிஞ்சு போச்சு. அதோட எல்லாமே எங்களுக்குள்ள முழுசா முடிஞ்சிருச்சு. நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்னு நினைக்கிறேன்." என்று சிரித்தாள்.

"ஏய் நீ பொய் தான சொல்ற? அப்படி நடக்க வாய்ப்பே இல்ல..." என்று ஜெகன் கத்தினான்.

"நான் சொன்னது தான் உண்மை. நான் அபி டா. முட்டாள்... உன்னை தேடி வரேன்... இல்லல்ல வரோம்னு சொல்ல வந்தேன். நானும் என் காதல் புருஷனும் வர்ட்டா..." என்று சிரித்து கொண்டே போனை வைத்தாள் தாரணி.

அவளின் எதிரே கைகளை கட்டி கொண்டு அவளை அழுத்தமாய் பார்த்தபடி நின்றான் வருண்.

உள்ளுக்குள் தலையில் அடித்து கொண்டவள்.

'அவசரத்தில் இவன் இருக்கிறதை மறந்து உளறிட்டேனோ...?'. என்று யோசித்தவள்.

என்னைக்கு இருந்தாலும் தெரிய போறது தானே தெரிஞ்சுக்கட்டும் என்று வருணை பார்த்து புன்னகைத்தாள்.

"நம்பர் ட்ரேஸ் பண்ணியாச்சா? போலாமா?" என்றாள் எதுவும் நடவாதது போல்.

எதுவும் பேசாமல் சென்று கதவை தாழிட்டு வந்தவன் தாரணியை பார்த்து கொண்டே நெருங்கிச் செல்ல, ஒரு அடி வேகமாய் பின் நகர்ந்தாள் தாரணி.

"வருண் ப்ளீஸ் இப்போ நம்ம சண்டை வேண்டாம். என் பக்கத்தில் வராத. முதல்ல அப்பாவை காப்பாத்தனும் போலாம்." என்றாள் அவன் விழிகளை பார்க்காமல்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro