💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-21

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"இப்போ என்ன பண்றது? என் குடும்ப மானத்தையே இப்படி சந்தி சிரிக்க வச்சுட்டாளே?" என்று சங்கீதாவின் அம்மா தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

வருணின் தந்தை வருணிடம் நெருங்கி, "வருண் இப்போ நம்ம மொத்த குடும்பத்தோட மானமும் உன்கிட்ட தான் பா இருக்கு." என்றார்.

"என்னப்பா சொல்றிங்க?" என்றான் ஒன்றும் புரியாமல்.

"இப்போ இவளை ஏமாத்தினவன் உயிரோட இருந்தா கூட அவனை எங்கிருந்தாலும் தேடி கொண்டு வந்து தாலி கட்ட வைக்கலாம். ஆனா, அவன் உயிரோடவே இல்லை. இனி இவளோட வாழ்க்கையே கேள்விக்குறி தான். அதனால..." என்று தயங்கினார்.

"அதனால.." என்றான் நெஞ்சம் படபடக்க.

அப்படி எதுவும் இருக்க கூடாதென்று வேண்டிக்கொண்டே.

"நீயே நம்ம சங்கீதாவை கல்யாணம் பண்ணிக்கோப்பா." என்றார் மெதுவாய்.

"அப்பா என்ன பேசறீங்க? புரிஞ்சு தான் பேசுறீங்களா?" என்று கத்திவிட்டான்.

"எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன்டா." என்றார் அவரும் விடாமல்.

"முடியாதுப்பா. சங்கி நான் தூக்கி வளர்த்த பொண்ணு பா. அவளை போய் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்க? அவசரப்படாதீங்க எதுவா இருந்தாலும் பொறுமையா பேசி முடிவெடுப்போம்." என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனின் மாமா வேகமாய் வெளியேறினார்.

அவரை கவனித்த எல்லோரும் அவரின் பின்னே ஓட, வேகமாய் பக்கத்து அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தார்.

"மாமா..." என்று கதவை தட்டினான் வருண்.

"அண்ணா.. தயவு செஞ்சு வெளிய வா ண்ணா" என்றார் அவனின் அம்மா.

"மாமா. ப்ளீஸ் எதுவா இருந்தாலும் நாம் சமாளிப்போம். வெளிய வாங்க." என்றான் வருண்.

கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அங்கே மின்விசிறியில் புடவையை கட்டிக் கொண்டிருந்தார் சங்கீதாவின் தந்தை.

"அய்யோ என்னங்க.."

"அப்பா.." என்று கதறிக்கொண்டே அருகில் ஓடினாள் சங்கீதா.

"மாமா..." என்று அதிர்ந்துவிட்டான் வருண்.

"டேய் என்னடா இப்படி பண்ணிட்ட..." என்று வருணின் தந்தையும்...

"அண்ணா..." என்று அனைவரும் அதிரிச்சியில் கத்திக்கொண்டு அவரை நெருங்கி கிழ இறங்கினர்.

"இனி உயிரோட இருந்து எல்லோரும் பேசுறதை கேட்கிறதுக்கு முன்னாடி உயிரை விட்றது உசத்திடா." என்றார் கண்கள் கலங்கி.

"என்ன மாமா நீங்க?" என்று வருண் வேதனையாய் கூற, "பின்ன என்னடா பண்ணுவார்? எங்கண்ணன் உயிர் போனா என்னோட உயிரும் சேர்ந்து போன மாதிரி தான்." என்றார் வருணின் தாய்.

"மா ஏம்மா இப்படி பேசிறிங்க?"

"ரெண்டு குடும்பத்துலர்ந்து உயிர்கள் போறதை பார்த்து உன் முடிவை எடுத்துக்கோ." என்றார் அவளின் தாய்.

"நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்றான் நிலைமை கை மீறி போவதை உணர்ந்து.

உடனே அவனை மணக்கோலத்தில் கீழே கூட்டி வந்து திருமண வேலைகளை விரைவாக முடித்தனர்.

*******

"எனக்கு அதுக்கு பிறகு அங்க இருக்க பிடிக்கலை. இங்க கூட்டிட்டு வந்துட்டேன். அவங்க கூட இருந்த உறவை மொத்தமா முறிச்சுகிட்டேன். அப்போலர்ந்து இப்போ வரைக்கும் சங்கீக்கு நான் வெறும் கார்டியன் மட்டும் தான். அவகிட்ட உன்னை பத்தி தெளிவா சொல்லிட்டேன். சங்கீக்கு உண்மை தெரிஞ்ச பிறகு அவளும் அவங்க வீடு ஆளுங்ககிட்ட பேசுறதை தவிர்த்துட்டாள். அவளுக்கு ரொம்ப வருத்தம். உன்னை ரொம்ப தேடினா என்கூட சேர்த்து வைக்கணும்னு... போய் சேர்ந்துட்டா." என்றான் விழிகள் கலங்க.

"எனக்கு உன்கூட வாழமுடியலைன்னு வருத்தம் ஏக்கம் இருந்தாலும் உன் நினைவுகள் போதுமானதாக இருந்தது. அப்பவும் இப்பவும் என் மனசில இருக்கிறதும் என் மனசை தொட்ட முதலும் கடைசியுமான பெண் நீ மட்டும் தாண்டி." என்றான் வருண்.

******

"ஷிட்.... ஷிட்... நான் எது நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ அதுவே நடந்துருச்சு... இதுக்கா இவ்ளோ கஷ்டப்பட்டேன்." என்றான் ஜெகன்.

"டேய் டென்சன் ஆகாத. டென்ஷன்ல யோசிச்சா எல்லாமே தப்பா போகும்." என்றான் அவன் நண்பன் மூர்த்தி.

"டேய்... நான் தான் அவளோட புருஷனா அவளோட சேரனும்... எந்த காலத்துலையும் அவளும் அந்த வருணும் கணவன் மனைவியா வாழ கூடாது... என்னோட கனவெல்லாம் ஒண்ணுமே இல்லாம போய்டும். அதனால நான் சொல்றபடி செய்." என்று தன் திட்டத்தை கூறவும் அரண்டு போனான் மூர்த்தி.

"என்னடா இப்படி முடிவெடுத்துருக்க..?" என்றான் அதிர்ச்சியாய்.

"வேற என்ன பண்ண? இப்போ இருக்குறது இது ஒண்ணு தான் வழி." என்றான் ஜெகன்.

"சரிடா. ஆரம்பதிலர்ந்து உனக்காக எவ்ளோவோ செஞ்சுட்டேன். இதையும் செய்றேன்." என்று வெளியேறினான்.

"நீ என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாதுடி... உன்னையும் அவனையும் பிரிகிறது தான் என்னோட அடுத்த வேலை." என்று கோபமாய் அங்கிருந்த பூச்சாடியை கீழே தள்ளிவிட்டான் ஜெகன்.

******

வருண் கூறியதை கேட்டதும் அவன் மேல் இருந்த அன்பு மேலும் கூடினாலும் முழுவதுமாய் உடனே அவனை மன்னிக்க மனம் ஏற்றுக் கொள்ளவில்லை தாரணிக்கு.

வருண் பேச வாயெடுக்கும் முன் அவன் கைபேசி ஒலிக்க, "ஒரு நிமிஷம். இதோ வரேன்." என்று வெளியேறினான்.

அவளும் அங்கேயே இருக்க விரும்பாமல் வெளியேறியதும் குழந்தையின் அழுகுரல் பக்கத்தில் இருந்த ஒரு அறையில் இருந்து வரவும் வேகமாய் அந்த அறையை  நோக்கி நடந்தாள்.

அங்க உள்ளே நுழையவும் கண்டா
காட்சியில் அப்படியே உறைந்து நின்றாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro