😘 சக்கர 11 😘

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தவின் மற்றும் அவர்கள் குடும்பம் அங்கு வந்த வேளையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தேவா அங்கு காணவில்லை  ......

அதனால் தான் வந்ததும் கார்த்தி கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினர் .....

தேவா இருந்த இடத்தில் வேறு யாரோ ஒரு பெண் அதே காயத்தோடு படுத்திருந்தாள்  .....

தவின் விசாரித்தவரையிலும் தேவா அங்கு வந்ததற்க்கு சாட்சியாய் கார்த்தியின் புலம்பல் மட்டுமே இருந்தது ...

அந்த மருத்துவர்கள் அங்கு வேலை செய்யும் அனைவரையும் கேட்டபோது கூட எந்த விவரமும் தெரியவில்லை  ......

இவர்கள் இருவரையும் அங்கிருந்த ஒருவர்தான் தான் ஆம்புலென்ஸில் ஏற்றியதாக கூறப்படுகிறது....
ஆனால் மருத்துவமனையில் இருப்பது நம் தேவா இல்லயே  .....

எந்த விவரமும் தெரியாமல் கார்த்தியை எப்படி சமாளிப்பதென்றும் புரியாமல் தவினின் நிலைமைதான் பாவமாக இருந்தது

அந்த சமயத்தில் அஞ்சலி அங்கு மறைந்திருந்து நடப்பதை பார்த்தால்...
அஞ்சலி :( தேவா இவ்ளோ சீக்கிரமே நீ போவனு எதிர்பார்க்கல
கூடிய சீக்கிரமே நீ நெனச்சது நடக்கும்  என்று நினைத்துக்கொண்டு அவள் கண்ணீரை துடைத்துக்கொண்டாள் .... )

கார்த்தி சற்று குணமடைந்தவுடன் வீட்டிற்க்கு அழைத்து செல்ல பட்டான் ....
கை கால்களில் கட்டுடன் .....
தலையில் தையல் போட பட்டிருந்தது  அவன் உடல் வலியை விட மனதின் வலி மட்டுமே அதிகமாய் இருந்தது  ...... மூச்சிற்க்கு முன்னூறு தடவை தேவாவை பற்றியேதான் கேட்டுக்கொண்டிருந்தான் .....

கார்த்தி : தவின் என்ன டா நடக்குது இங்க...
தேவா எங்க டா ..... நானு கேட்டே இருக்க அவளுக்கு ஒன்னு ஆகலல்ல ....
எதுமே சொல்லாமயே சமாளிக்குற
தேவா எங்க இப்பயே எனக்கு தெரிஞ்சாகனும்
என்று விடாபிடியாகவே இருந்தான்.....

தவின் : கார்த்தி நீ பதறாத டா....
உன்ட எப்டி சொல்றது...

கார்த்தி : என்ன டா எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லு என்னோட தேவா எங்க டா ....
எங்க டா அவ... 
என்று அவன் சட்டையை பிடித்தான்

தவின்  : அது வந்து....

அன்னைக்கு...

ஆக்ஸிடென்ட் ஆனா அன்னைக்கு

தேவா...

தேவா .......
எங்க போனானே தெரியல டா ....

ஆஸ்பிடல்ல நீ மட்டுந்தான் இருந்த தேவாவ கானல டா....... ( திக்கி திணறி கூறினான்)

கார்த்தி : என்ன டா சொல்ற எங்க போயிருப்பா....
வெளாடாதடா ....
எனக்கு சப்ரைஸ் தரதா சொல்லிட்டு இருக்காளா ....
வர சொல்லு டா.....
பிளீஸ் டா
என்று கதறினான் .....
அவன் அழுகையை முழுவதுமாக அன்று தான் பார்த்தான் தவின்.....

தவின்  : எல்லா இடத்திலயும் விசாருச்சுட்டே இருக்கோம் ...
ஆனா தேவா எங்கேனு தெரியல ....
போலீஸ்ட கூட கம்ப்லைன் பண்ணியாச்சு ....
எப்டியும் கண்டு புடுச்சரலாம் .....
நீ அழத டா தேவாக்கு ஒன்னும் ஆகியிருக்காது சீக்கிரமா கண்டுபுடுச்சரலாம்....
நீ ஸ்டெரெயின் பண்ணிக்காத டா....
என்று அவனை சமாதானம் செய்ய முயற்சித்தான் ஆனால் எதுவும் சரிவரவில்லை .....

நாட்களும் கடந்தது ஆனால் தேவாவை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை ....
அவளை பற்றி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தும் பார்த்தாயிற்று ஒரு பலனும் இல்லை  .......

தேவாவின் பெற்றோர்கள் முழுவதும் உடைந்து போனது தான் மிச்சம்....
அவள் வந்து சென்ற அந்நாளில் இருந்து இப்போது வரையிலும் ஏதோ கடமைக்கென்றே நகர்ந்தது அவர்கள் வாழ்க்கை  ......

இன்று அவர்கள் உயிர் இருக்கிறதென்றால் என்றாவது ஒரு நான் தங்கள் பிள்ளை  கிடைத்து விடுவாள் என்ற நம்பிக்கையில் தான்  ......
கார்த்தியின் முகத்திற்காக மட்டும் தான் இன்னும் அதே ஊரில் இருக்கின்றார்கள்......

கார்த்தியுன் சிரிப்பு மொத்தமாக பறிபோனது...
கலையிழந்த முகத்தில் அடர்த்தியாக வளர்ந்த தாடி .....
ஆயிரம் அழகிய கவிதைகள் பேசும் அவன் கண்கள் உணர்ச்சிகள் அற்று கருவலையங்களை கொண்டிருந்தது .....

அனைவரிடமும் சிநேகமாக பழகும் அவன் குணம் முற்றிலும் முறட்டுதனமாக மாறியது .....

மிகவும் வெறிபிடித்தவன் போல மாறினான்  ......
தேவாவை எப்படியாவது கண்டுபிடிக்க பல வகையில் முயற்சி செய்தான் யாரையும் நம்ப அவன் தயாராக இல்லை

யாரிடமும் பேசாமல் தனியாக அவன் அறையில் அவள் நினைவில் வாழ்ந்து வருகிறான் நம் கார்த்தி

இவனின் இந்த நிலையை பார்த்து வாயார சிரித்தாள் அந்த நிருபமா

(தேவாவின் இந்த பிரிவு கார்த்தியினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை)

என்னில் பாதியானவளே எங்கே சென்றாய்  ????

எனக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவளே எங்கே சென்றாய் ???...

என்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உன் சந்தோஷங்களை துறந்து எனக்காக வாழ்ந்தவளே
எங்கே சென்றாய்  ???......

தாயாவும் தந்தையாகவும் இருந்து என் இதயத்தில் இடம் பிடித்தவளே
எங்கே சென்றாய்  ????.....

என்னில் முழுவதுமாக கரைந்து  முத்துக்குளிப்பவள்
எங்கே சென்றாய் ???

பார்வையிலே என் மனநிலையை அறிந்து கொள்ளும் கெட்டிக்காரி
எங்கே சென்றாய்  ????

கண்களில் கண்ணீபோல .....  இதயத்தின் துடிப்பைப் போல .....
உடலில் ஓடும் ரத்தம் போல ....
பூவில் உள்ள தேன் துளியை போல  ......
புல் வெளியின் பனிதுளி போல ....
என்னுள் அணு அணுவாய் கரைந்தவளே எங்கேடீ சென்றாய்  ??

ஒவ்வொரு நாளும் அந்த நாட்குறிப்பு  கவிதையை சுமந்தவாறு அவளுக்காக காத்திருந்தது நம் கார்த்தியோடு

கார்த்தியின் தேவா வருவாளா ?????

.................................................................

Ore loves ah 10 update pottana atha konjam sogamana update ethu innum continue aagum next ennanu guess Pannunga readers 😊😊😊

Bore ah pochuna sollunga maathalam and unga votes and commends ah sollunga 😇😇😇😇

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro