😘 சக்கர 10 😘

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மெல்ல தேவாவை இன்னும் இருக்கமாக அனைத்தான்....

தேவா : ஏ மாமா...
ஏன்டா போன் பண்ணல....

கார்த்தி : அடியே மல்கோவா....

தேவா : ம்ம்ம்...

கார்த்தி : இங்க பாரு...
(அவள் தாடையை பிடித்து தன்னை பார்க்கும் படி உயர்த்தினான் )
தேவா : தன் அழகிய சிரிப்பை இதழில் ஏந்தி ....

(அவனை பார்க்க நாணம் கொண்டவளாய் மெல்ல தன் கண்கள் முழுவதும் கார்த்தியை நிறைத்துக்கொண்டாள்..... )

கார்த்தி : ஒரு வேல நா போன் பண்ணிருந்தாலோ சீக்கிரமா வந்திருந்தாலோ என்ன பண்ணிருப்ப..
சின்னதா ஒரு ஹக்...
கிக்கா ஒரு கிஸ் அவ்ளோதான் கிடைக்கும்......
இப்போ பாரு உன்னோட இந்த கொஞ்சல்ஸ் அப்றம் மாமன அடிச்சியே அந்த அடி...
உன் கண்ணுல எனக்கான அந்த ஏக்கமான பார்வை அதுல வர கண்ணீர்....
இது எல்லாமே தனி ஃபீல் தெரியுமா மல்கோவா....

தேவா : கேடி ....
மாமா வர வர ரொம்ப பண்ற டா...
எவ்ளோ கோவமா வந்துச்சு தெரியுமா ....
உன்ன அப்டியே என்ன பண்ண போறனு பாரு.... (என்று அவனை அடிக்க ஓங்கிய கையை அவன் மடக்கி பிடித்தான்)

கார்த்தி : மெல்லமா பேசு டீ அத்த மாமா எந்துச்சுட போறாங்க....

தேவா : அவங்க ரொம்ப பிஸி...
காது கேக்காது ரெண்டு நாளைக்கு....

கார்த்தி : மல்கோவா...
ரெண்டு நாளைகெல்லாம் இங்க இருக்க முடியாது...
நாளைக்கு காலைலயே கிலம்புறோம் ....

தேவா : தெரியும் மாமா நீ இத தான் சொல்வனு....
நாளைக்கு ஆஃபிஸ்க்கு உன் கூடவே வர நைட்டு நம்ப வீட்டுக்கு போலாம்.....

கார்த்தி : சரி டி மல்கோவா....
ஆஃபிஸ் இன்னு என்ன நிலமைல இருக்கோ
(அவள் முறைப்பதை பார்த்தவுடன்)
எனக்கு ரொம்ப பசிக்குது டி...
இந்த தவின் பய எங்கயும் நிறுத்தவே இல்ல....
எப்போ சாப்பாடு தருவ....

தேவா : ஐயோ சாரி மாமா...
நீ வந்ததும் உன்ன பாத்த எல்லாதையும் மறந்துட்ட....
நீ போய் ஃபிரெஷ் ஆய்ட்டு வா...  நா போய் தோச ஊத்துற....

கார்த்தி :அதுக்கு முன்னாடி என்ன போக விடனும் இப்டி கட்டி புடுச்சுட்டு இருந்தா எப்டி போறது.....
பண்றதெல்லாம் நீ ஆனா எனக்கு மட்டும் கேடினு பேரு...
கால கொடுமை.....
என்று மெல்ல சிரித்தான் குறும்பு மின்ன.....
அவனிடம் நழுவி அவனுக்கு சமைத்து தர சென்றாள்.....

இருவரும் மணி 3 ஐ கடந்திருந்தது கூட தெரியாமல் ஒருவருக்கொருவர் மாறி மாறி ஊட்டிக்கொண்டனர் .....
கொஞ்சிக் கொளாவி தூங்கும் போது விடியற்காலை 4.30 மணி இருக்கும்....

கண்களை மூடியபடி ஏறி இறங்கும் அவன் மார்பில் தலை சாய்ந்து  தூங்கினாள் தேவா அவன் துடிப்பின் தாலாட்டில் .....

(பாவம் அடுத்த நாள் அவர்களின் இந்த மகிழ்வான வாழ்வை பறிக்கும் அந்த நிகழ்வு நடக்கவிருப்பது யாருக்கும் அறியவில்லை...... )

இருவரும் குளித்து சாப்பிட்டு தயாராகவே மணி மதியம் 2 இருக்கும் அதற்க்கு மேல் அவர்கள் அலுவலகம் செல்ல வில்லை ....
அவர்கள் வீட்டிற்கு கிளம்பி விட்டனர்...

தேவாவின் பெற்றோர்கள் இவர்களின் கூத்தை கவனிக்கவே இல்லை அவர்களின் நெருக்கத்தை பார்க்கும் போது அவர்கள் மனம் நிறைந்துதான் போனாது .......
இவர்கள் இதே போல் பல வருடங்கள் வாழ வேண்டும் என்று மனதாற வேண்டிக்கொண்டனர்...

(நாம் நினைப்பது நடந்துவிட்டால் அந்த கடவுள் எதுக்கு அவன் கணக்கு வேறாக அல்லவா உள்ளது ..... )

கார்த்தி வீட்டிற்க்கு போகாமல் வெளியே செல்லலாம் நாளைக்கு அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொள்ளலாம் என்று அப்படியே பைபாசில் வண்டியை செலுத்தினான் போகும் வழியில்  சாலையோரங்களில் பல மரங்களுக்கு நடு நடுவே வயல் வெளிகள் என கண்களுக்கு குளிர்ச்சியான ரம்மியமான காட்சிகளை ரசித்தவாரு சென்றனர்....
நெடுநேரம் ஆகிவிட்டது திரும்பி வீட்டிற்க்கு செல்லும் வேளையில் தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது ....
கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார் எங்கிருந்து வந்ததென்றே தெரியவில்லை  .....

இருவரும் ஆளுக்கொரு மூலையில் தூக்கி எரிய பட்டனர்...

அந்த காரில் வந்தவனோ அடித்த வேகத்தில் நிறுத்தாமல் அவர்களை பார்த்தவாறே போய்விட்டான் .....
ரத்தவெள்ளத்தில் மிதந்த இருவரையும் ஒரு மணி நேரத்தில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.....

அங்கே .....

தனிதனியே இருவரையும் ஒவ்வொரு அறையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது ....

சற்று நேரத்தில் அங்கு நடந்த அனைத்தையும் வாட்சேப் மற்றும் ஃபேஸ்புக்கில் வைரலானதை தொடர்ந்து தவினுக்கு தகவல் தெரிந்தது ... அவன் தேவாவின் வீட்டிற்க்கு தகவல் தெரிவித்தான் ....
அவனை தொடர்ந்து அஞ்சலிக்கும் விவரம் தெரிய அவளும் மருத்துவமனைக்கு விரைந்தாள் ...

மருத்துவமனையில்  ......

திடீரென்று கார்த்தி வேகமாக  அலரடித்துக்கொண்டு விழித்தான்
தேவா...
தேவா....
டேய் என்ன ஆச்சுடா என்னோட தேவாக்கு ஒன்னு இல்லல ....
அவ எங்க டா.....
(அவனுக்கு முன் தவினும் அவன் நண்பன் (பகுதி 2 ல் குறிப்பிட்ட பெயரிடாத நண்பர் இனி பிரபு)
பிரபுவும் அமைதியாக நின்றிருந்தனர் )
என்ன டா அமைதியா நிக்குறீங்க என்று மிகவும் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டான்....

அவனை சமாதானபடுத்த முடியாமல் அங்கிருந்த நர்ஸ்..
அவர்களை வெளியே அனுப்பி கார்த்திக்கு மயக்க ஊசியை செலுத்தினார்.....

தேவாவிற்க்கு என்ன நடந்திருக்கும் 

அடுத்த பகுதியில் பாக்கலாம்

.................................................................

கால தாமதத்திற்க்கு என்னை மன்னித்து விடுங்கள் 😊😊😊 
உங்கள் வாக்குகளையும் கருத்துக்களையும் மறக்காமல் பதிவு செய்யவும் இந்த பகுதி பிடித்திருந்தால் மட்டுமே 😊😊😊😊😊

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro