😘 சக்கர 9 😘

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவில் போதை பொருள் கலக்கப்பட்டிருந்தது...

அதை உண்ட பின் இருவரும் போதையில் தலையை பிடித்துக்கொண்டு தல்லாடிக்கொண்டிருந்தனர்....

அந்த நேரத்தில் தான் அந்த அறையில் அவள் நுழைந்தாள்....
அவளை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தாள் ஆனால் அவளை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது அஞ்சலியின் கண்கள்....

அவள் போய் ஒரு மணி நேரத்திற்க்கு மேல் இருக்கும் ( அங்கு என்ன நடந்திருக்கும்) ஆனால் இன்னும் வெளியே வராததால் அஞ்சலிக்கு பயம் ஏற்பட அவர்கள் அறைக்கு செல்ல போகும் போது அவள் வெளியே வந்தாள்...
உதட்டில் நிலைகொண்ட ஏளன சிரிப்புடன் வெளியே வந்தாள்....
அவள் தான் நிருபமா...
(நம்ப கதையோட வில்லி
வயது 24 உடையவள்....
அவளை பற்றி கதை போகும் போக்கில் பார்க்கலாம்....)

அவள் சென்ற பின் மெதுவாக உள்ளே சென்று பார்த்தாள்...
அவர்கள் இருந்த கோலத்தை பார்த்து சிரிப்பதா இல்லை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாள்....

கார்த்தி ஒரு தலையனையை கட்டிக்கொண்டு...
"மல்கோவா...
என்னடி பேசு...
சக்கர...
என்ன பாக்கமா இழச்சு போய்டியா இவ்ளோ தக்கயாய்ட்ட.."
என்று சோஃபாவிற்க்கு பக்கத்தில் கீழே விழுந்து புரண்டு கொண்டிருந்தான்....

தவினோ...
பாவம் தூங்கவும் முடியாமல் முழுமையான நினைவும் இல்லாமல் டி. வி ரிமோர்ட்டை எடுத்து காதில் வைத்து பேசுக்கொண்டிருந்தான்...
அவன் அருகில் மெல்ல சென்று..
அவனை படுக்க வைத்தாள்...
அவனோ அந்த போதையில் வந்தவள் அவனுடைய அம்மா என்றெண்ணி அவளை அருகில் அமர்த்தி அவள் மடி சாய்ந்தான்....

அம்மா...

எனக்கு தூக்கம் வரல...
என்ன தூங்க வை....
நா சமத்து புள்ளையா தூங்குற...
என்று அவளை ஒரு வழி படுத்திவிட்டான்....

அவனை மெல்ல அரவணைத்து தலை கோதி சற்று சமாதானப்படுத்தினாள்....

அந்த நேரத்தில் அஞ்சலியிடம் இருந்தது ஒரு அழகான தாய்மை உணர்வு....
அவனை மெல்ல உறங்க வைத்தது.....

பாவம் நம் கார்த்தி அந்த சோஃபாவிற்க்கு அருகிலே படுத்துவிட்டான் போதையில் சற்று மயங்கியவாரு....
அவனுக்கும் ஒரு போர்வையை போர்த்தி விட்டு அந்த அறையை விட்டு சென்று விட்டாள் அஞ்சலி....

காலையில் எழுந்து பார்த்த இருவருக்கும் நடந்தது எதுவும் நியாபகத்தில் இல்லை...

தலை வலியோடு தங்கள் ஊருக்கு திரும்பினர் .....

தேவாவை பார்க்க போகிற ஆவளிலே கார்த்தி இருந்தான்...
அன்று காலையில் இருந்து அவளுக்கு ஒரு முறை கூட அழைக்க வில்லை....
ஒரு இன்ப அதிர்ச்சி தரலாம் என்று அவளுக்கு பிடித்தமான சில பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு சென்றான்...

தவின் தங்கள் கம்பெனிக்கு தேவையான சில வேவைகளை பற்றி யோசித்துக்கொண்டிருந்தான்....
அவனுக்கு அஞ்சலியின் முகம் மட்டும் நியாபகத்தில் இருந்தது...
ஆனால் அவள் யார் என்று யோசித்துக்கொண்டே இருந்தான் ஆனால் அவனுக்கு நியாபகத்திற்க்கு வரவில்லை....
( நியாபகம் வரப்போ ரொம்ப ஷாக் ஆக போற தம்பி...  )

தேவாவின் அப்பா வீட்டில்....

அப்போது இரவு ஒரு 10 மணி இருக்கும்....
பெண் பிள்ளைகள் புகுந்த வீட்டில்
எல்லா வேலைகளும் செய்வார்கள் ஆனால் பிறந்த வீட்டில் அம்மா தான் எல்லாம்...
( சில வீடுகளில் நான் சொல்கிறேன் ...
யாரும் சண்டைக்கு வராதீங்க தாய்மார்களே ... )

தேவா டீவி முன் அமந்தவளாக ஒரு கையில் போனும் அதை நிமிடத்திற்கு 60 முறை  பார்த்துக்கொண்டும் சற்று பதட்டமாக சுவற்றில் மாட்டிய கடிகாரத்தை முறைத்துக்கொண்டும்....
நகத்தை கடித்துக்கொண்டும்....
கோபத்தில் பத்ரகாளியாகவே அமர்ந்திருந்தாள்....

அவளது அம்மா அவள் கைகளில் நங்கென்று ஒன்று வைத்தார்...
நகத்த கடிக்காதனு எவ்ளோ தடவ சொல்றது...
மாப்ள வரலனா போன் பண்ணி கேலு எதுக்கு இப்டி உக்காந்திருக்க....
என்றார்....

தேவா : மா... போன் ரீச் ஆகல..
தவின் அண்ணா போன் அடிக்குது எடுக்க மாட்டேங்குறாரு...
என்றாள் வருந்திய குரலில்...

அம்மா : சரி டீ...
வந்துட்டு இருபாங்க போல...
நீ சாப்டு போய் தூங்கு டீ....
மாப்ள வந்ததும் நா கதவ திறந்து விட்ற...

தேவா : ஏ மா.. உன் புருஷன் மட்டு
கொஞ்சம் வரதுக்கு லேட் ஆனா வீடே ரெண்டாக்குவ....
நா என்னோட புருஷன பாத்து நாலுநாளைக்கு மேல ஆகுது...
இன்னு வீடு வந்து சேரல....
எனக்கு எப்டி இருக்கு...
காலைல இருந்து ஒரு போன் கூட பண்ணல மா....
நீ போய் தூங்கு மா...
அவர் வந்தா நா பாத்துக்குற...
என்று மறுபடியும் தன் வேலையை தொடர்ந்தாள்

அம்மா : எவ்ளோ கோவ பட்றா....
மாப்ள என்ன பாடு படுத்த பாறாளோ என்று தனக்கு தானே பேசிக்கொண்டு தன் கணவனிடம் பிள்ளை பெருமையை கொட்டி தீர்த்தார்....

இரவு 2 மணி ஆனது...

மெல்ல கதவை திறந்து கொண்டு கார்த்தி உள்ளே நுழைந்தான்...

தேவாவிற்க்கு தூக்கம் கண்களில் ஆனால் இழுத்து பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்...

அவளை பின்னிருந்து மெல்ல அணைத்தான் கார்த்தி...

துள்ளி எழுந்து நின்றாள்..
அவள் முன்னே அவளின் கணவன் நின்று கொண்டிருந்தான்...

கார்த்தியை பார்த்தவுடன் எங்கிருந்து வந்ததோ அந்த அழுகை அவனை இருக்க அனைத்துக்கொண்டு அழுக தொடங்கி விட்டாள்.....

அவளை மென்மையாக பற்றி மெல்ல தலை முடியை வருடி விட்டான்...

அவள் விசும்பல் மட்டும் நிற்கவில்லை....

சிறிது நேரத்தில் தன்னை நிதானித்துக்கொண்டு அவனை அடிக்க ஆரம்பித்து விட்டாள்.....

தேவா : ஏன்டா போன் பண்ணல....
அறிவில்ல... பக்கி..
எரும மாடு....
கொஞ்சம் கூட உனக்கு என் மேல பாசமே இல்லயா....
போ நா கோவமா இருக்க என்ட பேசாத என்று அவனை கட்டி அணைத்தவாறே பேசி முடித்தாள்.........

பார்க்கலாம் கார்த்தி எவ்வாறு தேவாவை சமாளிக்கிறான் என்று.....

.................................................................

என்னை ஊக்கப்படுத்திய அத்துணை தோழமைக்கும் நன்றிகள் பல...

என் கதையை தொடர என்னை மேலும் மேலும் உற்சாக மூட்டிய அணைத்து நல்ல உள்ளங்களும் என் நன்றிகள்....

கதை நன்றாக போகிறதா உங்கள் கருத்துக்கள் எதுவாயினும் தெரியபடுத்துங்கள்...

இத்தனை நாட்கள் பொறுமை காத்த அனைத்து செல்வங்களுக்கும் நன்றிகள்..  😊😊😊

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro