அத்தியாயம் (40)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சஞ்சனாவை ஒரு வழியாக சமாதானம் செய்துவிட்டு அபியை கொஞ்சம் தேடிவிட்டு வருவதாக சொல்லி வண்டியை எடுப்பதற்குள் ஷக்திக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. வண்டியை சஞ்சனா கூறியது போல அளவான கதியில் ஒட்டிக்கொண்டு அஷோக்கின் வீடு நோக்கி சென்றான் அவன். ஒரு புறம் அஷோக் அபியை பார்க்க செல்ல இன்னொரு புறம் சுந்தரமும் ஐயாவும் அபியை வலை வீசித் தேடிக் கொண்டு இருந்தார்கள். எங்கு தேடியும் அவளைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாதிருக்க பயமும் சோகமும் அவர்கள் நெஞ்சை அடைத்து இருந்தது. சுந்தரம் தான் செய்த தவறை மனதார உண்ர்ந்து தன் தைரியம் எல்லாம் இழந்து பல இடங்களில் உடைந்து போய் அழுதார். அபி செய்த காரியத்தால் அவளே எதிர்பார்க்காமல் நடந்த ஒரு நன்மை என்றாள் அது ஐயாவும் சுந்தரமும் ஒன்று சேர்ந்தது தான். சில சமயங்களில் நமக்கு வாழ்க்கையில் இருக்கும் பெரிய பகையாலியும் நம் சொந்தம் தான், நாம் எங்கு போய் எதை செய்துவிட்டு வந்தாலும் கடைசியில் கைகொடுப்பதும் அதே சொந்தம் தான்.

அபி செய்ததையே தான் 25 வருடங்களுக்கு முன்பு சஞ்சனாவின் தாய் யசோதாவும் செய்தாள்.  அபி பிடிக்காத திருமணத்தை நிறுத்தவென்று வீட்டைவிட்டு நிர்க்கதியாய் வெளியேறினாள். யசோதா தன் மனதுக்கு பிடித்தவனுடன் வெளியேரினாள். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் யசோதாவால் இன்று வரை தன் சொந்த மண்ணுக்கும் தன் சொந்தபந்தங்களிடமும் சேரவே முடியாமல் போய்விட்டது. தன் சொந்த மண்ணில் தான் கால் வைப்பதற்கு முன்னர் தன் பெண்ணை அனுப்பி வைக்கலாம் அவள் மூலமாக வீட்டுக்குள் நுழையலாம் என்று பார்தால் அதற்கும் வழி இல்லாமல் செய்வது போல சஞ்சனா வாழ்க்கையில் என்னென்னவோ நடந்து முடிந்து விட்டது. இதை எல்லாம் நினைத்து நினைத்து யசோதாவுக்கு தூக்கம் பறி போனது தான் மிச்சம். தன் அருமை மனைவி படும் துன்பம் காண சகிக்காமல், மற்றும் அவருக்குமே மகளை உடனே பார்க்க வேண்டும் போல இருக்க உடனடியாக கோயமுத்தூருக்கு 2 flight டிக்கெட் புக் செய்தார் ஷர்மா. கணவனின் இந்த செயல் யசோதாவுக்கே ஆச்சர்யமாக இருக்க சஞ்சனா முன்னாள் நேரில் சென்று அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்றும் மனைவியிடம் கேட்டுக்கொண்டு இருந்தார் அவர். இருவரும்ஊருக்கு கிளம்புவதற்கென்று தடல்புடலாக தயாராகிக் கொண்டு இருந்தனர்.

ஷக்தி அஷோக்கின் வீட்டுக்குள் நுழையும் போது அங்கு வரவேற்பறையில் அஷோக்கும் அபியும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டு இருந்தனர். ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. யாரையும் எப்பேர்ப்பட்டவரையும் இலகுவில் தன்வசமாக்கும் தன்மை அஷோக்குக்கு பிறப்பிலேயே வந்தது. இல்லாவிட்டால் ஷக்தி போல ஒரு உம்முனா மூஞ்சியை அவனால் நண்பனாக்கிக் கொண்டு இருக்க முடியாது. ஷக்தியின் "ஹாய் காய்ஸ்" என்ற குரல் கேட்டு வீடியோ உலகில் இருந்து நடப்புக்கு வந்தனர் அபியும் அஷோக்கும்.

ஷக்தியை கண்ட சந்தோஷத்தில் ஜாய்ஸ்ட்டிக்கை அங்கேயே போட்டுவிட்டு அவனருகே சிறு குழந்த்தையின் சந்தோஷத்துடன் ஓடி வந்தாள் அபி. அவளை தோலோடு சேர்த்துக் கொண்டு ஆதரவாய் அனைத்துக் கொண்டான் அவன். அபியை பற்றி கண் மூடி யோசித்தால் பட்டுப் பாவாடை சட்டை கட்டிய குட்டி அபி தான் ஷக்திக்கு ஞாபகம் வந்தாள். அவளானால் தாவணிக்கு மாறி இன்று புடவை அணிந்து அவன் முன் நின்றுருந்தவளைக் காண அவனுக்கு லேசாக கண்ணைக் கரித்தது. சூழ்நிலையை லேசாக்குவதற்கு அஷோக் "உன் அத்தை பொண்ணை நாங்க நல்லா தாண்டா பார்த்துக்கிட்டோம். எதோ இங்க கொடுமை நடந்தா மாதிரி ரெண்டு பேரும் மூக்கை சிந்தாதிங்க" என்றான்.

"நைட் நல்லா தூங்கினியா" விசாரித்தான் ஷக்தி.

"நல்லாவே தூங்கினாங்க. தற்கொலை முயற்சி எல்லாம் பண்ணி இருக்காங்கல்ல பின்ன? அது தான் பாவம் டயர்ட்ல மதியம் வரை தூங்கிட்டாங்க" என்றான் அஷோக் அபியை பேச விடாது.

சூழ்நிலை மறந்து அபி குபுக் என்று சிரித்து வைக்க. அவளோடு சிரிப்பில் இணைந்து கொண்டனர் மற்ற இருவரும்.

"தற்கொலை முயற்சி பண்ணப் போய் கடைசில பல்பு வாங்கிட்டு நிக்கிறேன்ல" என்று கூறி மறுபடியும் சிர்த்தால் அவள்.

"தற்கொலை முயற்சிங்கறதே அவ்வளவு தான் அபி. அது ஒரு நொடிப்பொழுதுல தோண்ற ஒரு தப்பான எண்ணம். நம்ம அந்த நொடியை மட்டும் கடந்துட்டோம்னா மறுபடி அந்த தப்பை பண்ண மாட்டோம்" என்றான் ஷக்தி.

"நான் தற்கொலை பண்ணிக்கிற அளவு கோழை கிடையாது. எனக்கு தேவைப்பட்டதெல்லாம் அந்த வீட்டுக்குள்ள இருந்து ஒரு விடுதலை, நடக்க இருந்த அந்த கட்டாயக் கல்யாணத்துல இருந்து ஒரு விடுதலை. எனக்கு போக்கிடம் தெரியலை. இல்லைனா எந்த தப்புமே பண்ணாத நான் ஏன் சாகனும்???" என்றாள் அவள் தெளிவாக.

"உங்களை கிண்டல் பண்ணதுக்கு உங்க தைரியத்தை நான் ரொம்ப பாராட்டுறேன் அபிராமி. கட்டாயக் கல்யாணம்ங்குற கான்செப்ட்லாம் இன்னும் நடைமுறைல இருக்கான்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கு! மனசுக்கு புடிக்காத ஒரு துணையோட, நம்ம கூட எத்தனைக்கும் ஒத்துப் போகாத ஒரு ஆள் கூட நம்ம எண்ட்டயர் life ஐ ஷேர் பண்ணிக்கறது போல கொடுமை வேற என்ன இருக்க முடியும் சொல்லுங்க? ஒரு பொண்ணு கழுத்துல அவ விருப்பம் இல்லாம தாலி கட்றவன்லாம் ஒரு ஆம்பளையா? அந்த பொண்ணு கடைசி வரை விதியேனு தான் அவன் கூட வாழ்வாலே தவிர ஒரு நாள்.. ஒரு நாள்.. கூட அவன் கூட மனசார வாழ மாட்டா. வாக்கு குடுத்துட்டோமேன்னு கல்யாணம் பண்ணிக்கிறது, தாலிக் கட்டிட்டோமேனு சேர்ந்து வாழ்றது, குழந்தைங்களுக்காக குடும்பம் நடத்துறது இது எல்லாம் இங்க மட்டும் தான் சாத்தியம். இதுக்கு அமெரிக்கா எவ்வளவோ பரவாயில்லை" தன் மனதில் இருந்த ஆதங்கங்களை எல்லாம் கொட்டித் தீர்த்தான் அஷோக், அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் ஷக்தியின் நெஞ்சை அறுத்து உள்ளுக்குள்ளேயே கூறு போட்டதை அறியாது.

"பேசிக்கிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல சரி நான் கிளம்புறேன்" என்றான் ஷக்தி அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்.

"என்ன இப்ப தான் வந்திங்க அதுக்குள்ள கிளம்பிட்டிங்க" என்றாள் அபி ஆச்சர்யமாக.

"பேசிட்டு இருந்ததுல சொல்ல வேண்டியதை சொல்ல மறந்துட்டேன். உன்னை காணலன்னதும் உங்க அப்பா முதல் வேலையா ஐயாவை தேடி தான் போயிருக்காரு. இந்த கலவரத்துல பங்காளி பங்காளி ஒன்னு சேர்ந்துக்கிட்டாங்க. இப்ப ஐயா, உங்க அப்பானு ஒரு ஊரே சேர்ந்து உன்னை தேடிட்டு இருக்கு. நான் தான் உன்னை ஒழிச்சி வச்சிருக்கேன்னு தெரிஞ்சிதோ இப்போ இருக்க பிரச்சினை பத்து மடங்காயிடும். அதுனால நான் இப்போ கிளம்புறது தான் சரியா இருக்கும். ஒன்னும் யோசிக்காத. உன் வீடு மாதிரி நினைச்சு இருந்துக்கோ நான் மறுபடி வாரேன். பார்த்துக்கோடா அஷோக்." என்று விட்டு கிளம்பினான் ஷக்தி. ஷக்தியின் முகமாற்றத்தை அறியாத அஷோக்கும் அபியும் ஷக்தியை வழி அனுப்பி விட்டு வீட்டுத் தோட்டத்தில் போடப்பட்டு இருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டனர்.

"நீங்க யாரையும் காதலிக்குறிங்களா அஷோக்"

"ம்ஹூம்...." தலையாட்டினான் அஷோக்.

"பார்த்தா அப்படி தெரியலயே"

"பின்ன எப்படி தெரியுதாம்?"

"பார்த்தா ஊர்ல 4,5 வெள்ளக்காரியை வச்சிருக்காப்ல தான் தெரியுது....."

"4,5 எல்லாம் கிடையாது. ஒரே ஒரு வெள்ளக்காரி தான்"

"பின்ன. காதலிக்கலனு சொன்னிங்க?"

"ஒருத்தி இருந்தா இப்போ இல்லை"

"ஏன்??? சண்டை போட்டு பிரிஞ்சிட்டிங்களா?"

"ம்ஹும்... அவ இப்ப உயிரோட இல்ல"

"ஓஹோ....." என்றாள் அதிர்ச்சியாக அதே சமயம் அக்கறையாக.

"இந்த வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமானதில்லை? ஒரொருத்தருக்கும் பார்த்து பார்த்து டிசைன் டிசைனா பிரச்சனையை பிரிச்சு கொடுக்குது! ஆனால் நம்ம தான். இந்த உலகத்துல உள்ள ஆகப் பெரிய பிரச்சனை நம்மளோடது தான்னு நினைச்சிட்டு இருக்கோம். ஒரு முழுக்க முழுக்க அன்னியமான ஒருத்தங்க கூட உட்கார்ந்து பேசிப் பார்த்தா தான் தெரியும் அடடடா இதுக்கு நம்ம பொழப்பு எவ்வளவோ தேவலயேன்னு!"

இந்த சித்தார்ந்தம் அபியிடம் இருந்து அஷோக் கொஞ்சம் கூட எதிர்பாராதது தான். ஆனால் என் காதலி இறந்து விட்டாள் என்றதும் ஐயையோ என்ன ஆச்சு என்று இல்லாமல் இரங்கல் தெரிவிக்காமல் வாழ்க்கையின் ரியாலிட்டியை எடுத்து சொன்ன அபிராமியை ஒரு படி அதிகம் பிடித்தது அவனுக்கு.

"அது இருக்கட்டும்..... எனக்கு தற்கொலை முயற்சினு பேர் வச்சிட்டு. நீங்க உங்க காதலியோட மறைவுக்கு அப்புறம் தாடி வளர்த்துட்டு தேவதாஸ் ஆகிட்டேன்னு சொன்னிங்கன்னா அப்பறமா நான் சத்தமா சிரிச்சிடுவேன் ஆமா"

அபிராமி உண்மையை போட்டு அவன் தலை மீதே உடைத்தாள் ஆனால் அதை ஒத்துக் கொள்ள மனமின்ற" இப்போதைக்கு யாரையும் காதலிக்கலன்னு தானே சொன்னேன். ஒரு நல்ல பொண்ணா என் மனசுக்கு புடிச்சவளா தேடிட்டு இருக்கேம்மா" மழுப்பினான் அவன்.

"அப்ப ஓகே. ஏன்னா திரிஷா இல்லன்னா நயந்தாரா சார்..." என்று சொல்லி அவனைப் பார்த்து கண் அடித்து சிரித்தாள் அவள்.

ஆண்ட்றியாவின் மறைவுக்குப் பின்னர் முதன்முறையாக அவனுக்கு தலையில் Bulb 💡 எறிவது போல இருந்தது. அதிக நாட்களுக்குப் பின்னர் மனம் விட்டு சிரித்தான் அஷோக்.

"ஏன் அபிராமி நீங்க உங்க அப்பா பார்த்த மாப்பிள்ளையை வேண்டாம்னு முடிவெடுத்திங்க?"

"நான் ஷக்தி மச்சானை நிஜமாவே காதலிச்சேனா தெரியலை. ஆனால் காதலிக்க வைக்கப் பட்டேன்ங்கறது தான் சத்தியம். ஏன்னா சின்னப்போலேருந்து எங்க வீட்டுல அவங்க ஆசைகளை தான் என் மேல திணிச்சாங்க. துறை பங்களாவுக்கு நான் மருமகள் ஆகனும் இது தான் அவங்க எல்லாரோட ஆசை அதுக்கு நான் பலியாடாக்கப்பட்டேன். எங்க ஆச்சிக்கு ஆசை நான் தாவணி கட்டிக்கனும்னு அவங்க ஆசைக்காக 10 வருஷமா தாவணி மட்டுமே கட்டி இருக்கேன், எங்க அம்மா எனக்கு படிப்பு தேவலைனு முடிவு பண்ணாங்க என்னை பத்தாம்ப்போட சமைலறைக்கு அனுப்பி கைல கரண்டியை குடுத்துட்டாங்க. என் வாழ்க்கைல நான் போடற துணியிலேருந்து நான் யாரை கட்டிக்கிறனுங்கறது வரை எனக்காக மத்தவங்க தான் முடிவெடுத்து இருக்காங்க. ஷக்தி மச்சான் என்னை கல்யாணம் பண்ணிக்க மறுத்தப்ப தான் அவர் வாழ்க்கைங்கறது எப்படி அவர் உரிமையோ என் வாழ்க்கை இனி என் உரிமைங்கறது எனக்கு புரிஞ்சிது. அவங்க சொல் பேச்சை நான் மீறிட்டேன்னு என் சொந்த வீட்டுக்குள்ளாறயே என்னை அன்னியப் படுத்தினாங்க. அப்ப தான் நான் புரிஞ்சிக்கிட்டேன் அவங்க காலம் பூரா நான் அவங்க சாவி குடுத்தா ஆடற பொம்மையா இருக்கதை தான் விரும்புறாங்கன்னு. நான் உயிருள்ள ஒரு பொம்மைனு அவங்க என்னைக்குமே என்னை மதிக்கல. போகட்டும் இந்த 21 வருஷ வாழ்க்கையும் நாசமா போகட்டும். இனி மேல் என் வாழ்க்கையை எவனாலயும் சாவி கொண்டு ஆட்ட முடியாது. என் வாழ்க்கையை நான் என் இஷ்ட்டப்படி தான் வாழுவேன். இப்ப கூட நான் இங்க உங்க வீட்டுல ஒழிஞ்சிட்டு இல்லை. நேத்து வரை எனக்கு போக்கிடம் இல்லை. இன்னெக்கி கிடைச்சிருக்கு. நான் இங்க இருக்கனும்னு நினைக்கிறேன். அதுனால தான் இங்க இருக்கிறேன்" அபி கண்களில் கண்ணீர் முட்ட பேசி முடிக்க அஷோக்கிற்கு மெய் சிலிர்த்தது.

"எந்த பெண்ணோடும் எழுவது காமமே
அடி உன்னோடு தோணலையே
சிறு முந்தாணை மூடிடும் தெய்வமே
உன்ன முத்தாட தோணலையே

யாரோ யாரோ ஒருத்தி
முன்ன போறா என்ன கடத்தி
ஆள கொல்லும் அந்த கொல்லி கண்ணில்
உசுரோட என்ன கொழுத்தி

சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிபோச்சு"

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro