அத்தியாயம் (44)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆப்பரேஷனுக்கான நியூரோ சர்ஜன் வரும் வரை சஞ்சனா ஐசீயூவிலேயே ஆப்சர்வேஷனில் வைக்கப்பட்டு இருந்தாள். உள்ளே சென்று பார்த்துவிட்டு வரும் அனுமதி ஒருவருக்கும் வழங்கப்படவில்லை. குடும்பமே அவளுக்காக ஐசீயூ வாசலில் தவம் இருந்தது. அஷோக் உடன் இருந்தது ஷக்திக்கு உறுதுணையாய் இருந்த போதும் யாரும் யாருடனும் பேசும் மனநிலையில் இல்லை. பெண்களை வீட்டுக்கு செல்லுமாறு எவ்வளவோ வலியுறுத்தியும் யாரும் அந்த இடத்தை விட்டு நகராமல் ஆளுக்கு ஒரு புறமாக அமர்ந்து எல்லா சாமியையும் வேண்டிக் கொண்டு இருந்தனர். புடவை அணிந்து யாருடனும் ஒட்டாமல் தனியாக யாரோ பெரிய மனுஷு போல அமர்ந்து இருந்த அபியை அவள் பார்க்காத நேரங்களில் கனகா பார்த்து அவளுக்காகவும் ஒரு புறம் கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தாள். கன்னத்தில் கை வைத்து அமர்ந்து இருந்த யசோதாவை பார்த்த போது ஷக்திக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக இருந்தது. என்ன நினைத்தானோ எழுந்து சென்று யசோதாவின் தோலில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

யசோதாவின் 25 வருட தவம். மறுபடியும் தன் குடும்பத்தோடு ஒன்றிணைய வேண்டும். தன் அண்ணனின் பிள்ளையை தன் மகன் போல அணைத்து கொஞ்ச வேண்டும் என்பதெல்லாம்... இந்த நாள் எப்படி இருக்கும் என்று யசோதா பல வருடங்களாக கனவு கண்டு இருக்கிறாள் ஆனால் அந்த நெடு நாள் காத்திருப்பின் பின்னாலான சந்திப்பு இப்படி அமையும் என அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஷக்தியின் மீது அவளுக்கு துளி கோபம் கிடையாது. அதற்கு காரணம் அவன் தன் அண்ணன் மகன் என்பதினாலும் கிடையாது! ஷக்தி, சஞ்சனாவுக்கு இடையே என்ன பிரச்சினை என்பது கூட அவளுக்குத் தெரியாது. ஆனால் அவள் ஷக்தியை சந்தித்த அந்த நொடியே அவன் கண்களில் தன் மகளுக்கான காதல் கொட்டிக் கிடப்பதை கண்டு கொண்டு விட்டாள். அந்த காதலை எல்லாம் ஆண்டு அனுபவிக்க தன் மகள் மீண்டும் எழும்பி வருவாள் என மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் தீர்க்கமாக நம்பினாள். ஷக்தி வந்து தன் தோலில் சாய்ந்ததும் அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள் யசோதா.

ஷக்தி எழுந்து சென்றதும் அஷோக்கும் அபியும் அருகருகே அமர்ந்து கொண்டனர். அபிராமிக்கு பிரமை பிடித்தது போல இருந்தது. சஞ்சனாவுக்கு நடந்ததை அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. அவள் ஷக்தியை மனப்பூர்வமாய் நேசித்த போதிலும் ஷக்தியும் சஞ்சனாவும் ஒருவரை ஒருவர் நேசிப்பதை அறிந்தது முதற்கொண்டு அவர்கள் இருவரும் சந்தோஷமாக சேர்ந்து வாழட்டும் என்று முதல் முதலாக ஆசை பட்டவள் அபிராமி தான். ஆச்சியின் மறைவுக்குப் பின்னால் மனதளவில் உடைந்து போயிருந்தவளை சஞ்சனாவுக்கு இப்படி ஆனது மீண்டும் புரட்டிப் போட்டது.

"ஒரு உசுரு தான் போகணும்னு இருந்திருந்தா அன்னைக்கே நான் செத்து போயிருக்கலாம். சஞ்சனா அக்காக்கு ஏன் இப்படி ஆச்சு......" என்றாள். அஷோக்கிற்கு மட்டும் கேட்கும் குரலில்.

"ஏன் உன் உசுருக்கு விலை கிடையாதா?" என்றான் அஷோக் எரிச்சலாக அவளுக்கு மட்டும் கேட்கும் படி.

"நான்லாம் இருந்து என்ன புண்ணியம் இல்லாட்டி என்ன புண்ணியம்" அழுது அழுது அவள் உடல் சோர்ந்து போயிருந்தது.

"சரி அழாத. சஞ்சனாக்கு ஒன்னும் ஆகாது. ஆப்ரேஷனுக்கு அப்புறமா எழுந்து வந்து உன்னோட suicide stunt க்காக உன்னை வெழுத்து வாங்கப் போறா பாரு..." என்று சொல்லி அபியின் கையை சினேகமாக பிடித்துக் கொண்டான் அஷோக். அவளது கைகள் நடுங்குவது போல இருந்தது.

"Blood donate பண்ணா எதாச்சு சாப்பிடனும் அபி. இப்படி ஒன்னும் சாப்பிடாமல் அழுதுட்டு இருந்த இப்ப நீ மயக்கம் ஆயிடுவ அப்பறம் உனக்கு வைத்தியம் பார்க்கணும். இப்ப இருக்க சூழ்நிலைல அது தேவையா? இரு நான் cafeteria வுக்கு போய் ஏதாச்சும் வாங்கிட்டு வாரேன்" என்று சொல்லி அஷோக் எழுந்து செல்ல அவன் எங்கு செல்கிறான் என விசாரித்து சுந்தரமும் அவனோடு இணைந்து கொண்டார்.

அப்பொழுது தான் அபியின் நினைவு வரவும் வாசுகி எழுந்து வந்து அபியின் பக்கத்தில் அமர்ந்து அவள் கைகளை தன் கைக்குள் வாங்கிக் கொண்டாள்.

"என்னடிம்மா.... நீயும் இப்படி பண்ணிட்ட? உனக்கு வீட்ல இருக்க பிடிக்கலைன்னா எங்க வீட்டுக்கு வர வேண்டியது தானே? ஏண்டி உங்களுக்கெல்லாம் இந்த சின்ன வயசுலயே வாழ்க்கை மேல அப்படி ஒரு வெறுப்பு? நாங்க எல்லாம் வாழ்க்கைல பார்க்காத கஷ்ட்டத்தையா நீங்க பார்த்துட்டிங்க? இல்ல கஷ்ட்டம்னா என்னன்னு சொல்லி தான் நாங்க உங்களை வளர்த்தமா? நான் உன்னை என் பொண்ணு மாறி தானேடி பார்த்துக்கிட்டேன். எதுவா இருந்தாலும் நீ என்கிட்ட வந்திருக்கலாம்ல? பெற்ற வயிற்றை இப்படி பத்த வெச்சிட்டிங்களேடி......" என்று தன் ஒட்டு மொத்த சோகத்தையும் அபியிடம் சொல்லி அவளை கட்டிக் கொண்டு அழுதாள் வாசுகி. அப்பொழுது அந்த அணைப்பும் அழுகையும் அவ்விருவருக்கும் தேவையாய் இருந்தது. குற்ற உணர்ச்சியின் காரணமாக கனகா அபிராமியை நெருங்க பயந்தாள். ஆனால் தன் மகள் வாசுகியை கட்டிக் கொண்டு அழுவதைப் பார்த்து இருந்த இடத்தில் இருந்து தனக்குள் அழுது கொண்டாள். எது எப்படியோ சஞ்சனாவால் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்து இருந்தது. ஆனால் அதற்கு சஞ்சனா கொடுத்த விலை.....................

அஷோக் cafeteria வுக்கு செல்வதாக கூறிய போது சுந்தரமும் அவனோடு சேர்ந்து கொண்டார். இருவரும் பொதுவாக பேசிக் கொண்டு cafeteriaவை சென்றடைந்தனர். சுந்தரமும் அஷோக்கும் இதற்கு முன் சந்தித்தது இல்லை. அங்கு இருந்த பலரையும் அஷோக் அன்று தான் முதன் முதலில் பார்கிறான். ஆனால் அங்கு இருந்த அனைவரும் சஞ்சனாவுக்காக அங்கு கூடியிருந்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் முன்பின் பார்த்திராத போதும் சஞ்சனா என்ற ஒற்றை வார்த்தை அவர்களை எல்லாம் ஒன்றிணைத்து இருந்தது. அஷோக் அபிராமிக்கு உண்பதற்கு ஏதாவது வாங்குவதற்காகத் தான் அங்கு சென்றான், இரண்டு நாட்களுக்கு மேலாக சரியாக சாப்பிடவோ தூங்கவோ இல்லாத சுந்தரம் "உட்காருப்பா... ஒரு டீ சாப்பிட்டு போலாம்" என்று சொல்லி களைப்பாக அங்கு போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியை இழுத்து அமர்ந்து கொண்டார். ஆளுக்கொரு டீயை ஆர்டர் செய்து விட்டு வந்து அஷோக்கும் அவருக்கு எதிரே ஒரு நாற்காலியை நகர்த்தி அமர்ந்து கொண்டான்.

"சஞ்சனாவுக்கு கூட ஒன்னும் நடந்திறாதுன்னு இப்ப வரைக்கும் நம்பிக்கை இருக்கு. ஆனால் என் பொண்ணு போய்ட்டான்னே நினைச்சிட்டேன்........" என்றார் சுந்தரம் நா தழுதழுக்க.

அஷோக்குக்கு அவருக்கு என்ன ஆருதல் சொல்லுவதென்றே தெரியவில்லை. அவரை பார்த்துக் கொண்டு மௌனமாக அம்ர்ந்து இருந்தான்.

"நீங்களும் ஷக்தியும் இல்லைனா என் பொண்ணு பொழைச்சிருக்க மாட்டா. ரொம்ப நன்றிய்யா....." என்று சொல்லி அஷோக்கின் கைகளை பிடித்துக் கொண்டார் அவர்.

"நடந்ததையே நினைச்சு கலங்கிட்டு இருக்காதிங்க அங்கிள். உங்க பொண்ணு தங்கமான பொண்ணு. அவ நல்ல மனசுக்கு அவளுக்கு மட்டுமில்லாமல் அவளை சுத்தி இருக்கவங்களுக்கும் நல்லதே நடக்கும்...."

"அவ எங்க மேல ரொம்ப கோவமா இருக்காளாப்பா......??" கேட்டார் சுந்தரம் குழந்தையாக மாறி.

"அதை கோவம்னு சொல்ல முடியாது அங்கிள். அவளை யாருமே புரிஞ்சிக்கலையேங்கற வருத்தம் அது. உங்களோட தனிப்பட்ட ஆசைகளுக்காக, கோபங்களுக்காக எல்லாத்துக்கும் ஒட்டுமொத்தமா அவளை பலி குடுக்க பாத்துட்டிங்கனு அவ மனசு ரொம்ப நொந்து இருக்கு. அவளுக்கு 22 வயசு ஆகுது அங்கிள். கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கற வயசு தான் ஆனால் இன்னும் அவளோட சுதந்திரம் அவ கைல இல்லை. அவ கட்டிக்கிற துணில இருந்து அவ யாரை கல்யாணம் பண்ணிக்கணும்ங்கறது வரைக்கும் அவளுக்காக நீங்க தான் முடிவு பண்ணி இருக்கிங்க. இது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா அவளை மனசளவுல ரொம்ப பாதிச்சு இருக்கு. அவ தங்கமான பொண்ணு, ரொம்ப பொறுப்பான பொண்ணு. சத்தியமா தப்பு பண்ண மாட்டா இனிமேலாவது அவ வாழ்க்கையை அவளை முடிவு பண்ண விடுங்க அங்கிள். எல்லாம் சரி ஆயிடும்."

"அவ அவ இஷ்ட்டப்படி இருக்கட்டும்! அவளுக்கு புடிச்சவனை கட்டிக்கட்டும்! ஆனால் எங்களை மன்னிச்சி எங்க கூட பேசச் சொல்லுப்பா.... அது போதும் எங்களுக்கு. என் பொண்ணு உசுரோட இருக்கான்னா அவ இஷ்ட்டப்பட்டவன் கூட சந்தோஷமா வாழ்ந்தான்னா அதுவே போதும்ப்பா...."

"சரி அங்கிள் நீங்க ஒன்னும் மனசை போட்டு குழப்பிக்காதிங்க. நான் அவகிட்ட பேசுறேன்" என அவருக்கு வாக்களித்து அவரை சமாதனப் படுத்தி இருவரும் டீ குடித்து விட்டு இன்னும் இரண்டு டீயும் பன்னும் வாங்கிக் கொண்டு கீழே சென்றார்கள். கீழே காத்திருந்த பெண்களுக்கு வற்புறுத்தி ஆளுக்கொரு டீயையும் அபிராமிக்கு பன்னையும் உண்ணக் கொடுத்தான் அஷோக். ஷக்தி இன்னும் யசோதா தோலில் கண் மூடி சாய்ந்திருந்தான். அவனை யாரும் தொந்தரவு செய்யவில்லை. ஹெட் நர்ஸ் வந்து இன்னும் சில நிமிடங்களில் சர்ஜன் வந்து விடுவார் எனவும் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆப்பரேஷன் ஆரம்பம் ஆகும் எனவும் தெரிவித்து விட்டு செல்ல அனைவருக்குள்ளும் லப்டப் அதிகரித்தது. சில நிமிடங்களுக்குப் பின் சஞ்சனா ICU வில் இருந்து Operation Theater க்கு மாற்றப்பட்டாள். குடும்பத்தினர் அனைவரும் சஞ்சனா கொண்டு செல்லப்பட்ட ஸ்ட்ரெச்சரை பின் தொடர்ந்து ஆப்ரேஷன் தியேட்டர் வாசல் வரை சென்றனர். சஞ்சனாவை தியேட்டர் கதவுக்குள் கொண்டு செல்லும் முன்னர் ஷக்தி கடைசியாக ஒரு முறை அவள் நெற்றியை வருடினான். அவன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் உருண்டோடியது.

கோயமுத்தூரில் இருந்து புறப்பட்டு வந்த சர்ஜன் நேராக Chief Doctor இன் அறைக்கு சென்றார். டாக்டரோடான சிறு பரஸ்பர உரையாடலுக்குப் பின்னர் அவர் சஞ்சனாவின் case file ஐ புரட்டிப் பார்த்தார். ஆப்பரேஷனுக்கான நேரம் மாலை 4 என குறிக்கப்பட்டிருக்க, மணி 3:35 ஐக் காட்ட சர்ஜன் தனக்காக தயாராக வைக்கப்பட்டிருந்த ஸ்க்றப் என அழைக்கப்பட்ட ஆப்பரேஷன் தியேட்டருக்கான ஆடையையும் face mask ஐயும் அணிந்து கொண்டு Chief Doctor சகிதம் ஆப்ரேஷன் தியேட்டர் நோக்கி சென்றார். Chief Doctor ஆப்ரேஷன் தியேட்டர் வாசலில் காத்திருந்த குடும்பத்தினரிடம் பேசவென ஒரு சில நிமிடங்கள் தாமதிக்க சர்ஜன் வேக நடையுடன் ஆப்ரேஷன் அறைக்குள் புகுந்து கொண்டார்.

"ஒன்னும் வர்ரி பண்ணிக்காதிங்க. சஞ்சனா இஸ் வெரி லக்கி. டாக்டர் ஆச்சார்யா is the number one neuro surgeon in the country. அவர் கை வச்ச எல்லா சர்ஜரியும் சக்சஸ் தான். லேசு பட்ட ஆள் இல்லை. வெரி ஸ்மார்ட். கோயமுத்தூர்ல நடந்திட்டு இருக்க டாக்டர்ஸ் கான்பரன்ஸ் இந்த வாட்டி இவர் தலைமைல தான் நடக்குது. அவரோட அப்பாய்ன்மண்ட்டுக்காக VIP's எல்லாம் க்யூல நிக்கிறாங்க. என் கூடவான நட்புக்காக மட்டுமே இங்க வர ஒத்துக்கிட்டார். Sanjana is now in safe hands!" என கூறி விட்டு தியேட்டரை நோக்கி நடந்தார் அவர்.

வேகமாக ஆப்ரேஷன் அறைக்குள் நுழைந்து தன் கையுறைகளை மாட்டிக் கொண்டு பேஷண்ட்டை நோக்கி சென்ற டாக்டர் ஆச்சார்யா மின்சாரம் தாக்கப்பட்டது போல ஒருஅடி பின் நோக்கி நகர்ந்தார். ஏனெனில் தலையில் கட்டுடன் மருத்துவக் குழாய்களுக்கு நடுவே அங்கு அவர் கண்டது சஞ்சனாவை! அவரது கை தனிச்சையாக தன் face mask ஐ கலட்டி தூரப் போட்ட்டது கால்கள் இரண்டும் பின்னோக்கி நகர்ந்தன. அப்பொழுது தான் உள்ளே வந்த சீப் டாக்டர், டாக்டர் ஆச்சார்யாவின் செய்கையை கண்டு திடுக்கிட்டார்.

"டாக்டர் ஆச்சார்யா... இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்?" என்றார் டாக்டர் சிவப்பிரகாசம் டென்ஷனாக.

"What..... What happened to her?"

"You already went through her case file doctor" எதைப் பற்றி கேட்கிறார் என புரியாமல் பதில் சொன்னார் டாக்டர் சிவப்பிரகாசம்.

இதற்கு மேல் இவரிடம் கேட்டு எதுவும் ஆகப் போவதில்லை என்று புரிய வேகமாக தியேட்டர் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் டாக்டர் ஆச்சார்யா. என்ன நடக்கிறது என்று புரியாமால் அவர் பின்னாலே தானும் ஓடி வந்தார் டாக்டர் சிவப்பிரகாசம். கதவு திறக்கவும் வெளியே காத்திருந்தவர்கள் மொத்தப் பேரும் யார் வருவது என பயத்துடன் பார்க்க,

"சமர்த்" என்று ஒரே நேரத்தில் சொல்லிக் கொண்டு எழுந்து நின்றனர் சஞ்சனாவின் தாயும் தகப்பனும்.

"ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்
முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன் கண்கள் பறித்தாய்
என் வலி தீர ஒரு வழி என்ன
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன

நீ சூடும் ஒரு பூ தந்தால்
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பேர் சொன்னால்
உன் காலடியில் கிடப்பேன்
தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம்
தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம்
இரண்டில் ஒன்று சொல்லிவிடு
இல்லை நீயே கொள்ளியிடு"

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro