அத்தியாயம் (43)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சின்னவன் "டாக்டர் அம்மா....." என்று அவளை அடையாளம் கண்டுகொள்ளவும் மருத்துவருக்கும் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்த பெண்களுக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

பெண் 1: என்ன சொல்ற சின்னவனே... உனக்கு இந்த பொண்ணை தெரியுமா?

"இவங்க பங்களா வீட்டு மருமகப் புள்ள. வெளியூர்ல இருந்து வந்து இங்க புள்ள பேறு மருத்துவம் பார்த்துட்டு இருக்காங்க. என் ஒன்னுவிட்ட தங்கச்சிக்கு கூட இவங்க தான் பிரசவம் பார்த்தாங்க. ஐயோ.... என்ன ஆச்சுன்னு தெரியலயே... ஏதோ தப்பு நடந்து இருக்குன்னு மட்டும் தெளிவா தெரியுது..." என்று பதறினான் சின்னவன்.

சின்னவன் கூறியதைக் கேட்ட மருத்துவர் இன்னும் கொஞ்சம் அதிர்ந்தார். "என்னப்பா சொல்ற? முத்துப்பாண்டி ஐயா மருமகளா இந்த பொண்ணு???? இதுக்கு மேல நம்ம காலம் தாமதிக்கிறது இந்த பொண்ணு உயிருக்கே ஆபத்தா முடியலாம். சின்னவனே உடனே இவங்களை வண்டில போட்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போ. சின்னவன் கூட பின்னாடி இரண்டு பொண்ணுங்க ஏறிக்கிங்க. கிளம்புங்க... கிளம்புங்க" என்று சொல்லி அவர்களுக்கு சஞ்சனாவைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல உதவிய மருத்துவர் கையோடு பங்களா வீட்டுக்கு தகவல் தெரிவிக்கும் படியாக 2 பேரை பூம்பொழிலுக்கு அனுப்பி வைத்தார்.

வீட்டு ஆண்கள் சஞ்சனாவைத் தேடிச் சென்றதிலிருந்து வாசுகி அன்னம் தண்ணீரின்றி பூஜை அறையிலேயே விழுந்து கிடந்தாள். யசோதாவானால் கனகாவின் மடியில் படுத்து அழுது கொண்டிருந்தாள். வெளியூரில் இருந்து யாரோ இருவர் வந்திருப்பதாக வீட்டில் வேலை பார்க்கும் பெண் வந்து சொல்லவும் என்னவோ ஏதோவென்று யசோதாவும் கனகாவும் வாசலுக்கு ஓடினர்.

"வணக்கம்மா நாங்க கீழ சித்தூர்ல இருந்து வாறோம். காலைல எங்க ஊர்ப் பொண்ணுங்க கொழுந்துக்கு போனப்ப தேயிலைக் காட்டுக்குள்ள ஒரு பொண்ணு பேச்சு மூச்சில்லாமல் அடிபட்டு விழுந்து கிடந்துருக்கு. விசாரிச்சு பார்த்ததில் அது உங்க வீட்டு பொண்னுன்னு தெரிய வந்து இருக்கு. எங்க ஊர் ஆளுங்க உங்க பொண்ணை பெரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருகாங்க. நீங்க உடன போய் என்ன ஏதுன்னு பாருங்கம்மா...." என்று வந்தவர்களில் ஒருவர் தகவல் சொல்ல, முழுவதையும் கேட்டு முடித்த யசோதா அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்தாள்.

அங்கு இருந்தவர்களின் உதவியோடு யசோதாவை கொண்டு சென்று உள்ளே கிடத்திவிட்டு கனகா தான் நிதானத்தோடு சுந்தரத்துக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அவர்களை பெரிய ஆஸ்பத்திரிக்கு விரைந்து செல்லுமாறு கூறினாள். தகவல் அறிந்ததும் ஷக்தி அதிர்ந்து தான் போனான். ஆனால் அவள் உயிரோடு தான் இருக்கிறாள் என்ற தகவலே அவனுக்கு உற்சாகம் கொடுக்க போதுமானதாய் இருக்க ஐயாவையும் சுந்தரத்தையும் ஏற்றிக் கொண்டு பெரிய ஆஸ்பத்திரி நோக்கி பறந்தான் அவன். மயக்கம் தெளிந்து எழுந்த யசோதாவும், வாசுகியும் தாங்களும் இப்பொழுதே ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்க ஷர்மா மற்ற வண்டியை எடுத்துக் கொண்டு பெண்களை ஏற்றிக் கொள்ளும் படியாக வீட்டுக்கு சென்றார். அவர் வீட்டுக்குள் நுழையும் போதே, 

"என்னங்க.... நம்ம பொண்ணு தைரியசாலி அவ எந்த தப்பான முடிவுக்கும் போயிருக்க மாட்டான்னு எங்களுக்கு தைரியம் சொன்னிங்களே.... கடைசில இப்படி ஆகிப் போச்சே...." என்று சொல்லி அழுதாள் யசோதா.

"இப்ப என்ன ஆகிப் போச்சுங்கற? நான் அப்ப சொன்னதையே தான் இப்பவும் சொல்றேன். என் பொண்ணுக்கு ஒன்னும் ஆகி இருக்காது. நீயும் அதை நம்பறதா இருந்தா வா வந்து வண்டில ஏறு." என்று கூறியவர் வீட்டுப் பெண்களையும் சின்னாவையும் ஏற்றிக் கொண்டு பெரிய ஆஸ்பத்திரி நோக்கி விரைந்தார்.

அந்த வட்டாரத்துக்குறிய பெரிய ஆஸ்பத்திரி ஊட்டி அரசு மருத்துவமனை ஒன்று தான். அவசர சிகிச்சைகளுக்கு நோயாளிகளை எப்பாடு பட்டேனும் அங்கு தான் தூக்கிச் செல்ல வேண்டும். சின்னவனின் வண்டி ஒரு மணி நேரம் பயணம் செய்து இறுதியில் ஊட்டி அரச மருத்துவமனையை சென்றடைந்தது. ஆனால் நோயாளியை பரிசோதிப்பதற்கு முன்னர் அது யார், என்ன ஏது, எப்படி ஆனது என்று சின்னவனை கேள்வி கேட்டு குடைந்தெடுத்தனர் அங்கிருந்தவர்கள்.

சின்னவன்: என்ன ஏது எப்படி ஆச்சுன்னெல்லாம் தெரியாதுங்க. அடி பட்டு விழுந்து கிடந்தாங்க. தூக்கிட்டு வந்தோம். உடனே சிகிச்சை பண்ணி அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு பார்க்காம இப்படி நிப்பாட்டி வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்கிங்களே. இது உங்களுக்கே நியாயமா இருக்குதுங்களா???

அதிகாரி: எங்களுக்குன்னும் சில சட்ட திட்டங்கள்லாம் இருக்குதில்ல. நேரா இங்க தூக்கிட்டு வராமல் யாரு உங்களை காயத்துக்கு கட்டெல்லாம் போடச் சொன்னது??? பொழைக்காமல் போய்ட்டா எங்க மிஸ்ட்டேக் அப்படி இப்படின்னு போலிஸ் கேஸ் ஆயிடப் போகுது. சொந்தக்காரங்களுக்கு தகவல் சொல்லியாச்சுல்ல எதுவா இருந்தாலும் அவங்க வந்துறட்டும்.

சின்னவன்: அவங்க வாறதுக்குள்ள இவங்க போய்றப் போறாங்க. உயிரை காப்பாற்ற வேண்டிய நீங்களே இப்படி பண்ணா எப்படிங்க? இதோ அடிபட்டு கிடக்குதே இந்த அம்மாவும் டாக்டர் தான்ங்க. உடனே என்னன்னு பாருங்க.

அதிகாரி: என்னையா நீ சொல்றதை கேக்காமல் திருப்பி திருப்பி சொன்னதையே சொல்லிட்டு இருக்க. அது தான் நோயாளியை ஸ்ட்ரெச்சருக்கு மாத்தியாச்சில்ல. பேசாமல் அப்படி போய் நில்லு. சொந்தக் காரங்க வந்துரட்டும்.

வேறு வழி தெரியாத சின்னவனும் அந்த ஊர்ப் பெண்களும் சஞ்சனாவை ஸ்ட்ரெச்சரில் வைத்துக் கொண்டு வாசாலைப் பார்த்துக் கொண்டு நின்றனர். அவர்கள் அங்கு சென்று சேர்ந்த அரைமணி நேரத்தில் ஷக்தியின் வண்டி மருத்துவமனை வாயிலை சென்றடைந்தது. ஷக்தியும், ஐயாவும், சுந்தரமும் அவசர அவசரமாக கூட்டத்தை ஒதுக்கிக் கொண்டு உள்ளே நுழைய ஒரு ஓரமாக அந்த ஸ்ட்ரெச்சரில் அனாதையாய் படுத்திருந்தாள் சஞ்சனா. பட்டாம்பூச்சி போல பறந்து திறிந்தவளை அந்த கோலத்தில் கண்டதும் அனைவருக்கும் துக்கம் நெஞ்சை அடைத்துக் கொண்டது. அவளின் முகத்தை கையில் ஏந்திக் கொண்ட ஷக்தி ஓவென கதறி அழுதான்.

ஐயாவைக் கண்டதும் சஞ்சனாவுக்கு சிகிச்சை அழிக்காமல் அவர்கள் அறை மணி நேரத்துக்கு மேலாக வீம்பு பண்ணிக் கொண்டு இருப்பதாக சின்னவன் மருத்துவமனை மீது புகார் தெரிவித்தான். அதைக் கேட்ட மூவர் முகத்திலும் கோபம் கொப்பளித்தது. ஷக்தி கோபமாக அந்த அதிகாரியிடம் சென்றான்.

"ஏன் இவங்களுக்கு சிகிச்சை அழிக்க முடியாதுன்னு சொன்னிங்க?" என்றான்.

"தற்கொலை கேசு மாதிரி தெரியுதுப்பா. அதுக்குன்னு சில சட்ட திட்டங்கல்லாம் இருக்கு. ஆமா நீங்க யாரு?"

"நான் அவ புருஷன்"

"ஓஹோ... என்ன புருஷன் பொண்டாட்டி தகறாரா?"

ஷக்தி வெட்கி தலை குனிந்தான்.

"என்னம்மா வாய்க்கு வந்த படி பேசுற? அதெல்லாம் உனக்கு எதுக்கு? இப்ப உங்களால வைத்தியம் பார்க்க முடியுமா? முடியாதா?"

"சும்மா சத்தம் போடாதிங்க. யாராச்சு அடிபட்டு கெடந்தா நேரா இங்க தான் தூக்கிட்டு வரணும். இவங்க எதோ மூலிகை மருத்துவம்லாம் பார்த்துட்டு கட்டெல்லாம் போட்டு தூக்கிட்டு வந்து இருக்காங்க பாருங்க. இதோ இந்த Form ஐ Fill பண்ணிட்டு patient ஐ admit பண்ணுங்க."

"ஷக்தி பேச்சை குறைச்சிட்டு அதை சீக்கிரம் நிரப்பிக் குடுப்பா..." அவசரப் படித்தினார் சுந்தரம்.

"வேண்டாம் மாமா. என் சஞ்சனாவுக்கு இந்த ஆஸ்பத்திரி வேணாம். எவ்வளவோ பொறுத்தாச்சு பத்து நிமிஷம் தானே மலர் ஹாஸ்ப்பிட்டல் நம்ம சஞ்சனாவை அங்க தூக்கிட்டு போகலாம்." சொன்னவன் யார் பேச்சையும் கேட்காமல் சஞ்சனாவை தனி ஆளாக தூக்கிக் கொண்டு வாசலை நோக்கி ஓடினான். ஐயாவும் சஞ்சனாவை காப்பாற்றி அழைத்துக் கொண்டு வந்தவர்களை நன்றி தெரிவித்து அனுப்பிவிட்டு அவனோடு கூட சென்றார். வண்டி பத்தே நிமிடத்தில் மலர் ஹாஸ்ப்பிட்டல் வாசலை சென்றடைய மற்றவை அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தது.

வண்டியில் இருந்து இறக்கியவுடனேயே சஞ்சனா ஸ்ட்ரெச்சருக்கு மாற்றப்பட்டு நேராக ICU வுக்கு கொண்டு செல்லப்பட்டாள். மலர் ஹாஸ்ப்பிட்டல் Chief டாக்டர் சிவபிரகாசம் முத்துப்பாண்டி குடும்பத்தின் குடும்ப நண்பன். ஷக்தி சஞ்சனாவை ஆட்மிட் செய்த அடுத்த நிமிடமே டாக்டரை தொடர்பு கொள்ள அடுத்த சில நொடிகளில் அங்கு வந்து சேர்ந்தார் அவர். டாக்டர் சிவபிரகாசம் சஞ்சனாவின் க்ளினிக் ஓப்பனிங்கின் போது சஞ்சனாவை சந்தித்து இருக்கிறார். என்ன ஏது என்ற அநாகரிக கேள்விகள் ஒன்றும் கேட்காமல் சஞ்சனாவை பார்வையிட ICU வுக்குள் நுழைந்தார் அவர். ICU வில் சஞ்சனாவுக்கு அவசர சிகிச்சைகள் நடைபெற்றது. அதற்குள் சஞ்சனாவின் பெற்றோரும் அங்கு வந்து சேர, டாக்டர் சிவபிரகாசம் ICU வில் இருந்து வெளியே வரும் வரை அனைவரும் கடவுளை பிரார்த்தித்த வண்ணம் வெளியே காத்துக் கிடந்தனர்.

ICU வுக்குள் சென்ற டாக்டர் அரைமணி நேரத்துக்கு பின்னர் வெளியே வந்தார். அவரைக் கண்டதும் குடும்பமே அவரை சூழ்ந்து கொண்டது. "சிச்சுவேஷன் கொஞ்சம் க்ரிட்டிக்கலா தான் இருக்கு. தலைல பலமா அடி பட்டு இருக்கு. உள்ள CT Head Scan நடந்துட்டு இருக்கு. ரிசல்ட் வந்த உடனே தான் எதுவும் சரியா சொல்லலாம். ஆனால் யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும். Blood loss கொஞ்சம் ஜாஸ்த்தியா இருக்கு. உடனே Blood கொடுக்கணும். சஞ்சனாவோட Blood group கொஞ்சம் Rare blood group இப்போதைக்கு Blood bank ல B Negative Blood இல்லை. உங்கள்ள யாருக்காச்ச்சும் B- Blood group இருந்தா உடனே Blood donate பண்ணுங்க." என்று கூறிவிட்டு அங்கு இருந்து நகர்ந்தார் டாக்டர் சிவபிரகாசம்.

"ஷக்தி... அபியும் B- தான். உடனே Phone ஐ போட்டு அவளை வரச் சொல்லுடா" என்றார் சுந்தரம்.

ஷக்தி அவசரமாக அஷோக்கிற்கு கால் செய்தான். Phone ஐ எடுத்துக் கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கியவன் அவசர அவசரமாக அஷோக்க்குக்கு நடந்தவற்றை தெரிவித்து உடனேயே அபியை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு வரும்படி அவர்களை அழைதான். ஷக்தி பேசிக் கொண்டு இருந்தவை எல்லாம் நிஜம் தானா என்று ஒரு நிமிடம் அஷோக்கால் நம்ப முடியாமல் இருந்தது. அஷோக் சொல்லக் கேட்டதும் அபி அழுதே விட்டாள். பின்னர் இருவரும் அவசரமாக காரில் மலர் ஹாஸ்பிட்டல் நோக்கி விரைந்தனர். அபியை கண்டதும் கனகா ஓடி வந்து அவளை அணைத்துக் கொள்ள முயன்றாள். அதை நாசூக்காக தட்டிவிட்டவள் எங்கே இரத்த தானம் செய்வது என்று கேட்டு அறிந்து கொண்டு நேராக அந்த அறைக்குள் சென்று விட்டாள். அபி இரத்தம் கொடுத்து விட்டு வருவதற்கும், டாக்டர் சிவபிரகாசம் சஞ்சனாவின் Scan Report ஐ எடுத்துக் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.

"நான் சந்தேகப்பட்டது தான்..... ரொம்ப உயரத்துல இருந்து விழுந்ததுனால மண்டையோடு fracture ஆகியிருக்கு. Skull fracture ஆனதுனால மூளைல உள்ள ஒரு வகையான திரவம் காது மூக்கு வழியால வெளியேறிட்டு இருக்கு" பாதி கேட்கையிலேயே யசோதா மறுபடி மயங்கிச் சரிந்தாள்.

"இதை Cerebrospinal Fluid (CSF) Leak நு சொல்லுவோம். இந்த Fluid leak ஐ உடனே stop பண்ணனும். இல்லன்னா அது மூலமா மூளைக்கு வேற Infections ஏற்படறதுக்கு வாய்ப்பிருக்கு. இப்பொதைக்கு தலைல பெரிய கட்டு போட்டு அதை Temporary ஆ ஸ்டாப் பண்ணி வச்சிருக்கோம். ஆனால் உடனேயே ஒரு Operation பண்ணி ஆகனும். Head Operation பண்ண்றதுக்கு ஒரு Surgeon நம்ம Hospital ல இல்லை. ஆனால் உங்க நல்ல நேரம் கோயமுத்தூர்ல ஒரு பெரிய டாக்டர்ஸ் Conference நடக்குது. எல்லா மாநிலங்கள்ல இருந்தும் டாக்டர்ஸ் அதுக்காக வந்து இருக்காங்க. அங்க யாராவது Neuro Surgeon இருந்தா நான் எப்படியாச்சும் வரவழைக்கப் பாக்குறேன். உங்களுக்காகவும் சஞ்சனாவுக்காகவும் என்னால முடிஞ்சதை எல்லாம் நான் செய்வேன். அதுக்கு மேல அந்த கடவுள் விட்ட வழி" என்றார் டாக்டர் சிவபிரகாசம்.

ICU அறைக் கண்ணாடி வழியாக சஞ்சனாவை கண் நிரம்பக் கண்ணீருடன் எட்டிப் பார்த்தான் அவன். முகத்தில் கண் மூக்கு வாய் மட்டுமே தெரிய தலையை சுற்றி பெரிய கட்டு போடப்பட்டு இருந்தது அவனது அழகு தேவதைக்கு!

"மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாய கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள்
தன்னாலே

ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே
ஆளும் வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே

இந்த உலகம் தூளாய்
உடைந்து போனாலும்
அதன் ஒரு துகளில்
உன்னை கரை சேர்ப்பேன்

தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா"

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro