அத்தியாயம் (45)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சஞ்சனாவை விட்டு பிரிந்ததன் பின்னர் சமர்த்தின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்தன, உயர்வுகள் வந்தன. ஆனால் சஞ்சனா விட்டு விட்டு சென்ற அந்த இடத்தை எதைக் கொண்டும் யாரைக் கொண்டும் நிரப்ப முடியவில்லை. சஞ்சனாவின் இடத்தை யாராலும் கடைசி வரை நிரப்ப முடியாது என்பதையும் அவன் அறிவான். சஞ்சனாவை அவனது தந்தை மறுத்ததும் கூட சமர்த்தின் எதிர்காலம் குறித்து அவர் ஏகப்பட்ட கனவுகளை வைத்திருந்ததினாள் தான். சமர்த்தும் வெளி நாடு சென்று படிதான். தன் இலட்சியங்களை எல்லாம் அடைந்தான். ஒரு நரம்பியல் நிபுனனாக சாதித்தான்.

அவளது பிரிவு ஆரம்பத்தில் அவனுக்கும் கஷ்ட்டமாகத் தான் இருந்தது ஆனால் போகப் போக பழகிக் கொண்டான். சஞ்சனாவை எண்ணி அவன் குடிக்கவில்லை, தாடி வளர்க்கவில்லை. அவனது மேல்தட்டு வாழ்க்கை அதன் பின்னரும் பெண்கள், உடல் சார் மனம் சார் தேவைகள் என்று குறையில்லாமல் தான் போய்க் கொண்டு இருந்தது. ஆனால் மனதின் ஒரு ஓரம் எப்பொழுதும் காலியாகவே இருந்தது.

கடவுள் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து விடுவதில்லை. எல்லோரையும் இறைவன் குறைகளோடு தான் படைக்கிறான். சமர்த் உள்ளூரிலும் சரி வெளியூரிலும் சரி எக்கச்சக்க அழகான பெண்களை சந்தித்து இருக்கிறான். சில பெண்களிடம் அழகு மட்டுமே இருக்கிறது அறிவு மிகவும் மட்டம்! சில பெண்களுக்கோ கொஞ்சம் அழகாய் பிறந்து விட்டாலே எக்கச்சக்க பெருமை வந்து அடிப்படை மனிதாபிமானமே காணாமல் போய் விடுகிறது, இன்னும் சிலதை எல்லாம் அழகென்றே ஏற்றுக் கொள்ள முடியாது. முகத்தில் அடித்த மேக்கப் இல்லாமல் கண் கொண்டு பார்க்க முடியாத artificial அழகு, சிலருக்கோ அந்த அழகே அவர்களை தப்பான பாதையில் கொண்டு சென்று விடுகிறது. இப்படி ஒன்று இருந்தாள் ஒன்று இருப்பதே இல்லை.

ஆர்ப்பாட்டம் இல்லாத அழகு, அமைதி, பொறுமை, புத்திசாலித்தனம், செய்யும் தொழிலுக்குண்டான அர்ப்பணிப்பு, உறவுகளிடத்தில் காட்டும் நேர்மை, பரிசுத்தமான அன்பு என்று எப்படி சஞ்சனாவை மட்டும் அந்த இறைவன் குறைகளே அற்றவளாய் படைத்தான். அவள் கோடியில் ஒருத்தி. அவள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்கட்டும். என்னுடனான வாழ்வை விடவும் நல்லதாய் ஒரு வாழ்க்கை அவளுக்கு அமையட்டும். எனக்கு பாக்கியம் இருந்தால் இந்த ஜென்மத்தில் அவள் என்னை மன்னிக்கட்டும்!

இதை மாத்திரம் தான் சமர்த் சஞ்சனா பற்றி நினைத்திருந்தான். சமர்த் ஒன்றும் சதாகாலமும் சஞ்சனாவின் நினைப்பில் கிடப்பவன் அல்ல. எப்பொழுதாவது ஏதாவது ஒரு சம்பவம் அவளது ஞாபகத்தை அவனுக்குள் எழுப்பி விட்டுச் செல்லும். அப்பொழுதெல்லாம் அவன் நினைத்துக் கொள்வது அவள் எங்கிருந்தாலும் நலமாய் இருக்கட்டும் என்று தான். அது தவிர அவளை மீண்டும் பார்க்கவோ, பேசவோ அவன் ஒரு நாளும் முயற்சி செய்தது கிடையாது. அவளை எதேர்ச்சையாகவேனும் காண நேரும் என்று நினைத்துப் பார்த்ததும் கிடையாது. அதுவும் தன்னுடைய பேஷண்ட்டாக, உயிருக்கு போராடியவாறு அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை அவன் எதிரே கட்டுகளோடு படுத்து இருப்பது அவள் தான் என்று. அவளை கண்டதுமே அவன் கைகள் எல்லாம் நடுங்கின. அவளுக்கு அவன் operation செய்வதா??? அவனாள் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. வெளியே ஓடி வந்தவனை சஞ்சனாவின் பெற்றோர் கண்டு கொள்ள அவனும் அவர்களை கண்டு கொண்டான். அவ்விருவரும் அவனை எதிர்பார்க்காத அதிர்ச்சியில் எழுந்து நின்று ஒருசேர சமர்த் என விளிக்க அவன் அவர்களை கண்டு கொண்ட மாத்திரத்தில்,

(சமர்த்தின் உரையாடல்கள் இதுமுதல் தமிழாக்கப்படும்)

"சஞ்சனாக்கு என்ன ஆச்சு ஆண்ட்டி? எப்படி ஆச்சு? என்றான் அதே அதிர்ச்சியோடு.

அவனுக்கு அப்பொழுது என்ன பதில் சொல்வ்தென்று ஷர்மாவுக்கும் யசோதாவுக்கும் புரியவில்லை. அவன் அங்கு ஒரு டாக்டராக நின்று கொண்டு இருந்த நிலையில் எங்கள் மகள் தற்கொலை முயற்சி செய்திருக்கிறாள் என்று எப்படி சொல்வது அவனிடம். மொத்த குடும்பமும் அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்க சஞ்சனாவின் பெற்றோரோ சமர்த்தின் முன் பதில் சொல்ல திராணியற்று நின்று கொண்டிருந்தனர். சமர்த்தை ஷக்தி சஞ்சனாவின் Phone இல் பார்த்திருக்கிறான். அவ்வளவு சுலபமாக மறக்கக் கூடிய முகமா அது???

சமர்த் ஒரு டாக்டர் ஷக்தியோ சஞ்சனாவின் கணவன். ஆனால் அன்று சமர்த் செய்ததைத் தான் இன்று ஷக்தி செய்து இருக்கிறான். அவன் சஞ்சனாவை கை விட்டு விட்டு இப்பொழுது ஒரு கோளையாய் நின்று கொண்டிருக்கிறான். ஒரு வேளை சஞ்சனா கண் விழித்து முதலில் சமர்த்தைப் பார்த்தால் என்ன செய்வாள்? ஷக்தியை வெறுத்து விடுவாளா? ஷக்தியை உள்ளுக்குள் ஒரு பெரும் பயம் வந்து கௌவிக் கொள்ள ஷக்தியும் வாயடைத்துப் போனான். அதற்கு மேல் மௌனமாக நிற்பது நல்லதல்ல என்று உணர்ந்து கொண்ட ஷர்மா தான் சமர்த்தை ஒரு ஓரமாக அழைத்துச் சென்று நடந்தவற்றை அவனிடம் மேலோட்டமாக தெரிவித்தார். சஞ்சனாவின் மேல் அவனால் கத்தி வைக்க முடியாது என்று அவன் முதலில் மறுத்த போதும், சஞ்சனா அப்பொழுது இருந்த நிலையில் அவளை அவனைத் தவிர வேறு யாராலும் காப்பாற்ற முடியாது என்ற கட்டாயத்தின் பேரில் அவன் ஆபரேஷனுக்கு ஒத்துக் கொண்டான். மறுபடியும் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைவதற்கு முன் சமர்த் ஒரு முறை ஷக்தியை நிமிர்ந்து பார்த்தான். அந்த பார்வையில் கோபம், அருவருப்பு, ஆற்றாமை, பொறாமை என்று ஏதேதோ அர்த்தங்கள் இருந்தன.

சமர்த் உள்ளே சென்றதும் கதவுகள் மூடப்பட ஆபரேஷன் ஆரம்பம் ஆனது. வெளியே காத்திருந்தவர்களில் சமர்த்தை அறியாதவர்கள் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். சஞ்சனாவுக்கு சர்ஜரி நடக்கப்போகிறது அவள் மறுபடியும் எழுந்து நடக்கப் போகிறாள் என்று எண்ணி இருந்த போது ஷக்திக்கு உண்டான உற்சாகம் மீண்டும் பூச்சியத்துக்கு வர அஷோக் தான் அவனுக்கு ஆருதல் சொல்லிக் கொண்டு இருந்தான்.

"ஷக்தி... தயவு பண்ணி இப்படி முட்டாள் தனமா கற்பனை பண்றதை முதல்ல நிறுத்து. சமர்த் ஒரு டாக்டர்டா. சர்ஜரி முடிஞ்ச கையோட ஒரு பெரிய amount ஐ fees ஆ கேட்டு வாங்கிட்டு அவன் போய்ட்டே இருப்பான். ஆனா நீ சஞ்சனாவோட ஹஸ்பண்ட். சமர்த் சஞ்சனா life ல ஒரு முடிஞ்சு போன அத்தியாயம். அவனை பார்த்து நீ பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது."

"நான் எதுக்குடா அவனை பார்த்து பயப்படனும்? எனக்கு அவனை பார்த்துலாம் ஒரு பயமும் கிடையாது. என் பயமெல்லாம் சஞ்சனா பத்தி தான். சஞ்சனா என்னை ஏத்துப்பாளான்னு தான்"

"சரி எதுவா இருந்தாலும் முதல்ல சஞ்சனா கண் முழிக்கட்டும் நீயா எதையாச்சும் கற்பனை பண்ணிட்டு மனசை போட்டு குழப்பிக்காமல் சர்ஜரி நல்ல படியா முடிஞ்சு சஞ்சனா சீக்கிரம் கண் திறந்து பார்க்கணும்னு கடவுளை வேண்டிக்கோ"
ஷக்தி பதில் பேசவில்லை. தலையை தொங்கவிட்டுக் கொண்டு அமைதியாக இருந்தான்.

ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் சஞ்சனாவுக்கு நல்ல படியாக ஆபரேஷன் நடந்து முடிந்தது. நர்சுகளை தொடந்து டாக்டர் சிவப்பிரகாசம் சிரித்த முகத்தோடு வெளியே வந்தார். வந்தவர் நேராக ஐயாவினிடத்தில் சென்று அவர் கைகளை பிடித்துக் கொண்டு,

"ஆபரேஷன் சக்ஸஸ்! அனஸ்தேஷியா கொடுத்திருக்கு. இன்னும் கொஞ்சம் நேரத்துல கண் முழிச்சிருவாங்க"

"ரொம்ப நன்றி டாக்டர். ஒரு கொஞ்ச நேரத்துல எனக்கு உசுரே போய்ட்டு வந்துரிச்சு...." என்றார் ஐயா.

"சின்ன சர்ஜரி தான். ஒன்னும் பயப்படற அளவுக்குலாம் இல்ல ஆனால் நன்றி சொல்றதுன்னா நீங்க டாக்டர் ஆச்சர்யாவுக்கு தான் சொல்லணும். அவர் மட்டும் நேரத்துக்கு வந்திருக்கலைனா எங்களால ஒன்னும் பண்ணி இருக்க முடியாது"

"நாங்க உள்ள போய் பார்க்கலாமா டாக்டர்?" இது யசோதா.

"ரெண்டு ரெண்டு பேரா போய் பாருங்கம்மா" என்று கூறிவிட்டு டாக்டர் விடை பெற்றார்.

ஆபரேஷன் தியேட்டரை விட்டு எல்லோரும் வெளியேறி ஆகிவிட்டது. சமர்த்தை தவிர! ஆக அவன் அங்கு உள்ளே சஞ்சனாவின் அருகில் தான் இருக்க வேண்டும். அவன் உள்ளே இருக்கும் போது ஷக்தி எப்படி உள்ளே செல்வது! "நீங்க முதல்ல போய் பாருங்க நான் அப்பறமா போறேன்" என்று சொல்லிவிட்டு ஷக்தி அங்கு இருந்து எழுந்தே சென்று விட்டான். இம்முறை அஷோக்காலும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. முதலில் யசோதாவும் ஷர்மாவும் ஐசீயூவின் உள்ளே சென்றார்கள். சஞ்சனா படுத்து இருக்க. அவள் அருகிலேயே ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டு சமர்த் அமர்ந்து இருந்தான். ஷர்மா சமர்த்தின் கைகளை பற்றிக் கொண்டு நன்றி தெரிவிக்க யசோதா தன் மகளை தொட்டுப் பார்த்து கண்களில் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அதன் பின்னர் ஐயா, வாசுகி, சுந்தரம், கனகா, அஷோக், அபி என ஒவ்வொருவராக சென்று சஞ்சனாவை பார்த்து விட்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் யாரையும் கண்டு கொள்ளாமல் இது எனக்கான இடம் என்பது போல சமர்த் சஞ்சனாவின் அருகிலேயே அமர்ந்து இருந்தான். சஞ்சனாவுக்கு வைத்தியம் பார்த்த டாக்டரை, அவளது ஆபரேஷனுக்காக அவ்வளவு தூரம் பயணித்து வந்து, ஆபரேஷனையும் வெற்றிகரமாக முடித்தவரை யார் என்ன கேள்வி கேட்க முடியும்? இல்லை ஐசீயூவில் இருந்து டாக்டரை தான் வெளியே போக சொல்ல முடியுமா?

மருத்துவமனையின் ஐசியு அமைந்திருந்த தளத்தின் ஒரு புறத்தில் ஒரு பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்தது. ஷக்தி அதன் அடியில் சென்று அமர்ந்து கொண்டான். சஞ்சனாவுக்கு ஆபரேஷன் நல்ல படியாக நடந்து முடிந்ததற்கு ஒரு நிமிடம் மனதார நன்றி செலுத்திக் கொண்டான். அவன் செய்து விட்டிருந்த காரியம் அவனால் சஞ்சனாவை நேருக்கு நேர் பார்க்க முடியாத படி ஒரு குற்ற உணர்ச்சியை அவனுக்குள் ஏற்படுத்தி இருந்தது. குற்ற உணர்ச்சி ஒரு புறம் என்றாள், மறுபுறம் சமர்த்! சமர்த் சஞ்சனாவின் அருகில் இருக்கும் பொழுது எப்படி அவன் போய் சஞ்சனா முன்னிலையில் குற்றவாளி போல  நிற்பான்? சஞ்சனா நல்ல படியாக உயிர் பிழைத்தது மட்டும் தனக்கு போதும் அவன் இங்கு இருந்து இதற்கு மேல் என்ன ஆவது இங்கிருந்து போய் விடலாம் என்றே ஒரு முறை நினைத்து விட்டான் ஷக்தி.

சஞ்சனாவுக்கு நினைவு திரும்பும் வரையில் அவள் அருகிலேயே காத்திருந்தான் சமர்த். சஞ்சனா எழுந்து அவனை இங்கு கண்டாள் என்ன செய்வாள்? என்ன சொல்வாள் என்று ஏதேதோ இனம் புரியாத எண்ணங்கள் அவனுக்குள். அவனது எண்ணங்களில் காதல் இல்லை. அவர்களுக்குள் முடிந்து போனது முடிந்து போனது தான் என்பது அவனுக்கு தெரியும். ஆனாலும் எத்தனை வருடங்களுக்கு பிறகு சஞ்சனா அவனை பார்க்கப் போகிறாள். பார்த்ததும் அவளுக்கு உடனே என்ன தோன்றும்? அதிர்ச்சி அடைவாளா? அழுவாளா? கோபப்படுவாளா? சத்தம் போடுவாளா? அதை என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் நேரம் செல்ல செல்ல சமர்த்துக்குள் அதிகரித்துக் கொண்டே சென்றது. சமர்த் இப்படி யோசனை செய்து கொண்டு இருக்கும் பொழுதே சஞ்சனாவினிடத்தில் அசைவு காணப்பட்டது. புதிதாய் பிறந்த குழந்தை போல சஞ்சனா மெதுவாக தன் கண்களைப் பிரித்தாள். இப்பொழுது சமர்த்தின் ஆர்வம் அதிகமானது. சர்ஜரி செய்ய வந்த டாக்டரின் லப்டப் சத்தம் வெளியில் கேட்கும் போல இருந்தது. சமர்த் எதுவும் பேசவில்லை சஞ்சனா பேசும் வரை அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு காத்திருந்தான். கண் திறந்த சஞ்சனா முதலில் சுற்றும் முற்றும் பார்த்தாள். தனக்கு என்ன நடந்தது தான் எங்கு இருக்கிறோம் என்பதை ஒரு நிமிடம் நியாபகப் படுத்திக் கொண்டாள். பின்னர் சமர்த்தை பார்த்தவள் ஒரு சில வினாடிகள் அவனையே கேள்வியாய் பார்த்திருந்து விட்டு,

"ஷக்தி....... ஷக்தி எங்க............??? என்றாள் சின்னக் குரலில் கண்களில் காதலோடு. கொஞ்சம் கண்ணீரோடு.

"நினைவில்லை என்பாயா
நிஜமில்லை என்பாயா
நீ என்ன சொல்வாய் அன்பே

உயிர் தோழன் என்பாயா
வழிபோக்கன் என்பாயா
விடை என்ன சொல்வாய் அன்பே

சாஞ்சாடும் சூரியனே
சந்திரனை அழவைத்தாய்
சோகம் ஏன் சொல்வாயா

செந்தாழம் பூவுக்குள்
புயலொன்றை வர வைத்தாய்
என்னாகும் சொல்வாயா

உன் பேரை சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குமே
நீயெங்கே நீயெங்கே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
நீயெங்கே நீயெங்கே
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே கண்ணா
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணா"

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro