அத்தியாயம் (46)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அஷோக் ஷக்தியை எல்லா இடத்திலும் தேடிக் கொண்டு இருந்தான். ஷக்தியை அவர்கள் இருந்த தளத்தில் எங்கு தேடியும் காணவில்லை. கீழே சென்று பார்க்கலாம் என்று மருத்துவமனையின் கீழ் தளத்துக்கு சென்றால், ஷக்தி வாயிலை நோக்கி போய்க் கொண்டு இருந்தான். "சஞ்சனாவானால் கண் முழித்து விட்டால். இவ்வளவு நேரம் அதற்காக காத்திருந்து விட்டு இப்பொழுது எங்கு போய்க்கொண்டு இருக்கிறான் இந்த ஷக்தி" என்று தனக்குள் அவனை திட்டிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக சென்று ஷக்தியை நிறுத்தினான் அஷோக்.

"எங்கடா போற? அங்க சஞ்சனா கண் முழிச்சு உன்னை தான் பாக்கணுங்கறா"

ஆர்வமில்லாமல் அஷோக்கை திரும்பிப் பார்த்தவன் அஷோக் சொன்னதைக் கேட்டதும் கண்களில் பல்பு எரிய "நிஜமாவாடா சொல்ற" என்றான்.

"என்ன நீ லூசு மாதிரி ரியாக்ட் பண்ற? சஞ்சனாவுக்குத் தான் தலைல அடி பட்டிருக்கு. உனக்கில்லை! வா மேல போகலாம்" என்று எரிச்சலாக கூறிவிட்டு ஷக்தியோடு மேல் தளத்துக்கு விரைந்தான் அஷோக்.

சமர்த் ஐசியூவை விட்டு வேகமாக வெளியேற, வெளியே காத்திருந்த எல்லோரும் சென்று சஞ்சனாவை பார்த்து விட்டு வந்திருந்தனர். ஆனால் அவளது கண்களோ அவனை மட்டுமே தேடிக் கொண்டு இருந்தது. ஷக்தி இப்பொழுது ஐசியூ கதவை திறந்து கொண்டு அவளை பார்க்க சென்றான். அவளை பார்க்க தைரியம் இல்லாமல் அவனுக்கு நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. ஒரு வழியாக அவள் அருகில் சென்றவன் அவளை நேருக்கு நேர் மறுபடியும் கண்ட சந்தோஷத்தில் அவள் கைகளை பற்றிக் கொண்டு அவளது கட்டிலின் கீழ் மண்டியிட்டான். இருவரும் ஒரு சில நிமிடங்கள் வரை பேசிக்கொல்லவில்லை. அது கண்ணீரை பகிர்ந்து கொள்ளும் நேரம்.

பின்பு, "I'm sorry Sanjana... I'm sorry..... I'm sorry..... I'm sorry......." கண்ணீர் தாரை தாரையாய் வடிந்து கொண்டிருக்க அவள் கையை எடுத்து தன் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு மனதார அவளிடம் மன்னிப்பு கேட்டான் அவன்.

"ஏன்..... இவ்வளவு..... sorry?" திக்கித் திக்கி மெதுவாக வாய் திறந்து கேட்டால் அவள்.

"எல்லாத்துக்கும்.... நான் உனக்கு பண்ணது எல்லாத்துக்கும். உன் கழுத்துல திருட்டு தாலி கட்டினதுக்கு, உன் வாழ்க்கையை நாசம் பண்ணதுக்கு, உன் நிம்மதியை கெடுத்ததுக்கு, உன்னை தற்கொலைக்கு தூண்டுனதுக்கு எல்லாத்துக்குமே........ என்னை மன்னிப்பியா சஞ்சனா.........?" அவளிடம் யாசகம் கேட்டான் அவன்.

ஒரு சில நிமிடம் வரை அவனை கண்ணோடு கண்ணாக பார்த்திருந்து விட்டு "I love you........" என்றாள் அவள் கண்கள் நிறைய காதலோடு.

"ஆ..... என்ன சொன்ன???" வெகுண்டெழுந்தான் ஷக்தி.

"I love you........" மறுபடியும் சொன்னாள். இப்பொழுது கண்களில் கொஞ்சம் குறும்பு.

இத்தனை நாட்களில் இந்த மூன்று வார்த்தைகளை அவர்கள் இருவரில் யாரும் ஒரு முறை கூட உச்சரித்ததில்லை. மனதிற்குள் காதல் கொட்டிக் கிடந்த போதிலும் அதை வாயால், வார்த்தையால் பகிர்ந்து கொள்ள இருவருமே முன்வந்ததில்லை. அதற்கு காரணம் ஈகோவாக இருக்கலாம், யார் முதலில் சொல்வது என்ற கண்ணாமூச்சி ஆட்டமாக இருக்கலாம், அந்த மூன்று வார்த்தைகளை சொல்வதற்கு முன்னர் இருவர் வாழ்விலும் வேக வேகமாக நடந்து முடிந்த காரியங்கலாய் கூட இருக்கலாம். நெஞ்சுக்குள் காதல் பெருக்கெடுத்துக் கொண்டிருந்த போதிலும் அதை பல முறை இருவரும் தங்கள் செயல்களால் காட்டிக் கொண்ட போதிலும் இந்த மூன்று மந்திர வார்த்தைகள் எப்படியோ அடித்தட்டுக்கு சென்றது தான் நிஜம்!

அவன் அவளை நோகடித்தான். அவளை சாவின் விழிம்பு வரை கூட்டி சென்றான். ஆனால் அவள் மறுபிறப்பெடுத்து மறுபடியும் கண் விழித்த போதும் அதே காதலோடு எழுந்திருந்து இருந்தாள். மனிதர்களால் இந்த பேரன்பு சாத்தியம் இல்லை. சஞ்சனா சாதாரணப் பெண்ணும் இல்லை. அவளது பரிசுத்தமான காதலில் ஷக்திக்கு உடல் குலுங்கியது. முழங்காலில் நின்றவாறே அவளருகில் தலை வைத்து படுத்து அவளது முகத்துக்கு அருகில் சென்று "I love you too கண்ணம்மா......" என்றான் கண்ணீர் பெருக்கெடுக்க.

"இதை சொல்றதுக்கு..... உனக்கு.... இவ்வளவு நாள்..... ஆச்சா ஷக்தி?????? இல்ல..... நானா...... சொல்லனும்னு....... வெய்ட் பண்ணிட்டு....... இருந்தியா??????"

சஞ்சனா சொன்னதும் தான் உரைத்தது செயல்களால் தன் காதலை அவளுக்கு பல முறை சொல்லியிருக்கிறான் தான். ஆனால் இதுவரை இருவரும் தங்கள் காதலை வார்த்தையால் சொல்லிக் கொண்டதில்லை என்று! ஷக்திக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை கண்ணீர் மட்டுமே பதிலாய் வந்தது அவனுக்கு. தன் வீரம் வீராப்பு எல்லாம் மறந்து போய் அவளை தொலைத்த நொடி முதல் அவன் இப்படித் தான் சிறு பிள்ளை போல அழுது கொண்டு இருக்கிறான்.

"அழுவாத ஷக்தி......." அவனை அவளால் அப்படி பார்க்க முடியவில்லை.

"என்னை விட்டு போய்டுவியோனு ரொம்ப பயந்துட்டேண்டி......" என்றான் அவன்.

"உன்கூட....... சேர்ந்து..... 100 வருஷம் வாழணும்னு...... மனசுல..... நிறைய....... ஆசை.... இருக்கு..... ஷக்தி..... அதுனால தான்..... அந்த சாவால.... கூட..... என்னை...... ஒன்னும் பண்ண....... முடியல......."

"இதை சொல்றதுக்கு உனக்கு இவ்வளவு நாள் எடுத்திச்சாடி???" அவள் முகத்துக்கு மிக அருகில் சென்று கேட்டான் அவன். இம்முறை செல்லக் கோபம் கொள்வது அவன் முறையானது. ஆனால் அந்த செல்லக் கோபத்துக்கு பதிலாக ஒரு அவளிடத்தில் இருந்து இம்முறை ஒரு நெற்றி முத்தம் பரிசாக கிடைத்தது.

"Excuse me please......" சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார் ஒரு நர்ஸ். ஷக்தி அசடு வழிந்த படி வேகமாக எழுந்து நின்று கொண்டான்.

"சார் கொஞ்சம் வெளியில வெய்ட் பண்ணுங்க. இன்னும் கொஞ்சம் நேரத்துல வார்டுக்கு மாத்திடுவோம். இப்ப தானே கண் முழிச்சாங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்"

"Sure Sister" என்றவன் சஞ்சனாவின் தலையை வருடிவிட்டு வெளியே செல்ல திரும்பினான்.

"ஷக்தி......." அவனை மீண்டும் அழைத்தால் அவள் சின்னக் குரலில். "என்ன" என்றான் கண்களால்......

"சமர்த்... எங்க இங்க?" என்றாள்.

"எல்லாம் அப்பறம் சொல்றேன். நீ இப்ப ஒன்னும் யோசிக்காமல் ரெஸ்ட் எடு" சொல்லி விட்டு அவள் கன்னத்தை தடவி விட்டு வெளியே சென்றான் ஷக்தி.

ஷக்தி வெளியே வந்த நேரம் அனைவரும் வீட்டுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்தனர்.

"ஷக்தி நாங்க எல்லாம் வீட்டுக்கு கிளம்புறோம்ப்பா. கோயிலுக்கு போகணும். சஞ்சனாவை வார்டுக்கு மாத்திட்டா அவளுக்கு சமையல் பண்ணி எடுத்துட்டு வரணும்...." சஞ்சனா கண் விழித்த சந்தோஷத்தில் அடுத்து நடக்க வேண்டியதை பார்க்க கிளம்பி விட்டால் வாசுகி.

"ஷக்தி... அந்த வெளியூர்ல இருந்து வந்த டாக்டர் சீக்கிரமா கிளம்பணும்னு சொன்னாங்கல்ல. போய் அவருக்கு நன்றி சொல்லிட்டு அவர் Bill ஐ பார்த்து settle பண்ணிட்டு வந்துருய்யா....." என்றார் ஐயா.

சஞ்சனாவோடு பேசியது புதுத் தெம்பு கொடுத்திருக்க அஷோக்கை கூட அழைத்துக் கொண்டு சமர்த்தை தேடி டாக்டர் சிவப்பிரகாசத்தின் அறைக்கு சென்றான் ஷக்தி. அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தனர் இருவரும்.

"வாப்பா.... Please take a seat. சொல்லுப்பா என்ன விஷயம்?"

"டாக்டர் ஆச்சார்யாவை பார்த்து Thank பண்ணிட்டு அவர் Bills ஐயும் settle பண்ணிட்டு போகலாம்னு வந்தேன் டாக்டர்"

"ஓஹ்... ஆனால் அவர் எப்பவோ கிளம்பி போய்ட்டார் ஷக்தி. அவரு இன்னெக்கி நைட் flight ஐ புடிச்சு டெல்லி கிளம்பனும். அதுனால தான் அவரால இங்க தாமதிக்க முடியல....."

"அவரோட Doctor Charges???......"

"சஞ்சனா தான் அவரோட ஜூனியராமே. அது தான் fees வேணான்னுட்டார். He is such a generous man....." என்று கூறி தன் சக டாக்டரை அவர் பெருமை பாராட்ட, அவர் கூறியது ஷக்திக்கும் அஷோக்குக்கும் தான் வியப்பாக இருந்தது. சமர்த் மீதிருந்த தனிப்பட்ட கோபத்தினால் அவனை என்னவோ நினைத்து விட்டதை எண்ணி இருவரும் தலை குனிந்தனர். பின்னர் டாக்டர் சிவப்பிரகாசத்திடம் சம்பிரதாயமாக ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு இருவரும் விடை பெற்று ஐசியு இருந்த தளத்துக்கு மீண்டும் சென்றனர். அங்கானால் இன்னும் வீடு செல்லாமல் எல்லோரும் நின்று கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர்.

"என்னப்பா சமர்த்தை பார்த்து பேசினியா?" என்றார் ஷர்மா.

"இல்லை மாமா. அவர் டெல்லி flight ஐ பிடிக்கிறதுக்கு எப்பவோ கிளம்பி போய்ட்டாராம்" ஏமாற்றத்துடன் பதிலளித்தான் ஷக்தி.

"அப்போ fees??....." இது ஐயா.

"டாக்டர் fees வேணாம்னு சொல்லிட்டாராம்" ஷக்தி பதில் சொல்ல அதற்கு மேல் அது பற்றி யாரும் பேசவில்லை.

"சரி நீங்கல்லாம் கிளம்புங்க. நைட் சஞ்சனாவை வார்டுக்கு மாத்துறதா டாக்டர் சொன்னார். நான் கூட இருந்து பார்த்துக்குறேன்."

அனைவரும் கிளம்ப அபி மாத்திரம் அவர்களுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லாதது போல எழும்பாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தாள். அவள் கோபம் இன்னும் குறையவில்லை என்பதை அறிந்த சுந்தரமும் கனகாவும் அவளை அழைக்க பயந்து கொண்டு நிற்பதை அறிந்த வாசுகி,

"அபி... வா வீட்டுக்கு போகலாம்" என்றாள்.

"இல்லை அத்தை. நான் வரலை நீங்க கிளம்புங்க" என்றாள் மிக தெளிவாக.

"நீங்க கிளம்புங்கம்மா. நான் வரும் போது அவளை அழைச்சிட்டு வாரேன்" என்றான் ஷக்தி.

"இல்லை. நான் உங்க யார்கூடவும் வரலை. நான் அஷோக் கூட அவர் வீட்டுக்கு போறேன். ஏன் அஷோக் நான் உங்க வீட்டுக்கு வரலாம்ல?" என்றாள் அவள் யாரும் எதிர்பாராத நேரத்தில்.

"ஆ??? ஆமா.... வாங்க.... வாங்க...." என்றான். பந்து தன் பக்கம் எறியப்படும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத அஷோக்.

ஷக்தி அவளை தான் சமாளித்துக் கொள்வதாக கண்ணால் காண்பிக்க அந்த இடத்தில் அதற்கு மேல அது பற்றி நின்று விவாதிக்காமல் அனைவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். இப்பொழுது ஷக்தியும், அஷோக்கும், அபியும் மட்டுமே அங்கு இருக்க, மேலே cafeteria வுக்கு போய் சாப்பிட்டு விட்டு வரலாம் என ஷக்தி மற்ற இருவரையும் மேல் தளத்துக்கு அழைத்து சென்றான். உணவு ஆர்டர் செய்துவிட்டு மூவரும் காத்திருந்தனர்.

"சொல்லு அபி நீ என்ன முடிவு பண்ணி இருக்க?" கேட்டான் ஷக்தி.

"எதை பத்தி கேக்குறிங்க?"

"வீட்டுக்கு போக முடியாதுன்னு சொன்னியே அதை பத்தி தான்"

"ஹ்ம்ம்ம்... எனக்கு அந்த வீட்டுக்கு போகவே பிடிக்கல. அவங்க ரெண்டு பேர் மூஞ்சியை பார்க்கவே பிடிக்கல"

"அதுக்காக எவ்வளவு நாள் தான் இன்னொருத்தங்க வீட்ல தங்க முடியும்?"

"அவங்க நம்மல வெளிய போக சொல்லும் வரை."

இப்பொழுது ஷக்தி அஷோக்கை பார்த்தான். "என்னை எதுக்குடா இப்போ அப்படி பாக்குற???" என்பது போல பாவமாக அஷோக் ஷக்தியை பார்த்தான்.

"என்னடா கம்முனு இருக்க? இவ விட்டா உன் வீட்ல பங்கு கேப்பா போல இருக்கு. நீ என்ன சொல்ற???" என்றான் ஷக்தி அஷோக்கை பார்த்து.

"இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? எனக்கெந்த ஆட்சேபனையும் கிடையாது....." என்றான் அஷோக்.

"உனக்கு எதுல ஆட்சேபனை கிடையாது?" ஷக்தி அஷோக்கை கூர்மையாக நோக்க,

"நீ எதைப் பத்திடா கேக்குற???......" அப்பாவியாக கேட்டவனைப் பார்த்து கலகலவென சிரித்து வைத்தால் அபிராமி.

மூவரும் சாப்பிட்டு முடித்து கீழே சென்று சிறிது நேரத்தில் சஞ்சனா வார்டுக்கு மாற்றப்பட்டாள். இரவு 8 மணியளவில் அஷோக்கும் அபியும் கிளம்பி சென்றார்கள். கார் ஓட்டிக் கொண்டே அஷோக் கேட்டான்,

"எந்த தைரியத்துல எல்லார் முன்னாடியும் அம்மா அப்பா கூட வர மாட்டேன் அஷோக் கூட போறேன்னு சொன்ன?"

"உங்க வீட்ல இருந்து தானே கிளம்பி வந்தோம். அப்ப அங்க தானே கிளம்பி போகணும்"

"அம்மா அப்பா கூட கோவிச்சிட்டு யாருக்கும் தெரியாமல் என் வீட்ல வந்து இருந்த ஓகே. ஆனால் இனிமேலும் என் கூடவே தங்கி இருக்கதா இருந்தா எல்லாரும் என்ன நினைப்பாங்க?"

"இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க? என்னை போக சொல்றீங்களா????" அவனை கூர்மையானதொரு பார்வை பார்த்து கேட்டால்.

"இல்லை..... நீ ஏன் என்னை கல்யாணம் பண்ணிட்டு என்கூடவே இருக்க கூடாதுங்குறேன்????" அவனும் அவளது கண்ணை பார்த்துக் கேட்டான்.

————————————————————

மறுபுறம் மருத்துவமனையில் சஞ்சனாவுக்கு மிகுந்த சிரத்தையுடன் கரண்டியால் உணவு ஊட்டிக் கொண்டு இருந்தான் ஷக்தி.

"நான்..... அவ்வளவு சீக்கிரமா..... உன்னை விட்டு போயிடுவேன்னு..... நினைச்சிட்டியா ஷக்தி????"

"பின்ன எதுக்குடி மேலேருந்து குதிச்ச????"

"நீ வந்து.... என்னை காப்பாத்துறியான்னு பார்க்கத் தான்......." கண்களில் குறும்பு மின்னியது அவளுக்கு.

ஷக்திக்கு செல்லக் கோபம் வந்தது. எதுவும் பேசாமல் அவளுக்கு ஊட்டி விட்டான்.

"எனக்கு...... இன்னொருவாட்டி தாலி கட்டுறியா?????" இப்பொழுது நிஜமாகவே கண்களில் ஏக்கத்தோடு அவனை பார்த்தாள்.

"உஹ்ஹும்.... ஒருவாட்டி கட்டினதுக்கே டங்கு வயரு அந்து போச்சு. இதுல இன்னொரு வாட்டியா????" என்றான் அசட்டையாக.

தனக்கு நீட்டப்பட்ட உணவை கை வைத்து தடுத்து விட்டு "நான் சீரியசா பேசிட்டு இருக்கேன் ஷக்தி..... எனக்கு ஊரறிய உன் கையால தாலி கட்டிக்கணும். என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா????????" என்றாள் கண்களில் அவனோடு சேர்ந்து வாழும் ஆசை பளபளக்க.

"ஏராளம் ஆசை என்நெஞ்சில் தோன்றும்
அதையாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து .
உன்னோடு இன்றே நான் வாழவேண்டும்
காதல் முடியலாம் நம் காதல் முடியுமா
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே

உன்னாலே என்னாலும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர் துளி
உன் மார்பில் சாய்ந்தது சாக தோணுதே"

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro