அத்தியாயம் (47)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அபிராமிக்கும் அஷோக்கை பிடித்துத் தான் இருந்தது. ஆனால் அவ்வளவு சீக்கிரமாக அவ்வளவு வெளிப்படையாக அவ்வளவு நெருக்கத்தில் அவள் அந்த நேரடித் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை என்பது தான் நிஜம். சட்டென அவன் திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டதும் அவள் தன் உருண்டை கண்களால் அவனை நம்ப முடியாமல் பார்த்துவிட்டு பின்னர் தலை குனிந்து கொண்டாள். அவள் பதில் சொல்வதற்கான நேரத்தை அஷோக் அவளுக்கு கொடுக்க விரும்பினான். அதன் பின்னர் அவன் மௌனமாக வண்டி ஓட்டினான். வீட்டுக்கு சென்றதும் அஷோக் நேராக தன் அறைக்குள் சென்று ஒரு குளியலை போட்டு விட்டு உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான். அபிராமி சோபாவின் மேல் காலை தூக்கிப் போட்டு அமர்ந்து நகம் கடித்த படி ஏதோ பெரிய யோசனையில் மூழ்கிப் போயிருந்தாள். அவள் முன்னால் சென்று நின்று கொண்டவன் அவள் கண்களை பார்த்து தன் கண்களால் என்னவென கேட்டான். அவன் அப்படி வந்து நின்றதும் அபி அவசரமாக காலை கீழே இறக்கிவிட்டு சேலையை சரி செய்து கொண்டாள். அவன் அவள் அருகில் சென்று அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டு அவள் பேச காத்திருந்தான். அவள் யோசித்து யோசித்து ஓரிரு வார்த்தைகளாக பேசினால்.

"நம்ம ரெண்டு பேத்துக்கும் ஒத்து வருமா???"

"ஏன் அப்படி நினைக்கிற???"

"இல்லை. நீங்க படிச்சிருக்கிங்க. நான் படிக்காதவ. நீங்க அமெரிக்கா. நான் ஊர் எல்லையை தாண்டினதில்லை.... நல்லா யோசனை பண்ணி தான் பேசினிங்களா??? நம்ம ரெண்டு பேரும் கட்டிக்கிட்டா நல்லாவா இருக்கும்???"

"ஹ்ம்ம்ம்..... நம்ம ரெண்டு பேர் கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் நல்லா இருக்கும்....." அஷோக் ஒரு புன்சிரிப்புடன் பதில் கூற அபிராமிக்கு அவளை அவன் விளையாட்டாக எண்ணி விட்டது போல கோபம் வந்தது. கோபமாக மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.

"இங்க பாரும்மா. நான் நிஜமா தான் சொல்றேன். எப்பவுமே எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்னை ஒன்னு இழுக்கும். இப்ப நீயும் படிச்சிருக்க நானும் படிச்சிருக்கேன், நீ யோசிக்கிறதையே தான் நானும் யோசிப்பேன், உனக்கு சரியா படுறது தான் எனக்கும் சரியா படும்னு இருந்தா வாழ்க்கை எப்படி சுவாரஸ்யமா இருக்கும் சொல்லு???"

"இதெல்லாம் பேச்சுக்கு வேண்ணா நல்லா இருக்கலாம். நடைமுறைக்கு சரி வருமா???" அவனது பதிலில் திருப்தி இல்லாமல் சொன்னாள்.

அவள் புறம் திரும்பி அமர்ந்து கொண்டவன். அவளது கால்கள் இரண்டை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான்.

"ஐயோ.... என்ன பண்றீங்க? காலை விடுங்க....." பதறிப் போய் அவன் மேல் இருந்து தன் கால்களை விடுவித்துக் கொள்ள முயன்றாள்.

அவன் விடுவதாய் இல்லை. அவள் பாதங்கள் இரண்டை தன் மடியில் போட்டுக் கொண்டு,

"நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ நீயா இருக்கலாம் அபி. உன்னை நீ எந்த விதத்துலயும் மாத்திக்க தேவையில்லை. என்னை கண்டதும் மேல வச்சிருந்த காலை தூக்கி கீழ போட தேவையில்லை. உங்க அம்மாவும் அப்பாவும் வாழ்ந்தது போல வாழ தேவையில்லை. நீ வாழ ஆசை படற வாழ்க்கையை என்னால உனக்கு குடுக்க முடியும்னு நான் நம்புறேன். நீ என்னை நம்புறியா அபி?" அவளது கண்களை ஆழமாய் பார்த்து கேட்டான் அவன்.

அவளது பாதங்கள் இரண்டும் இன்னும் அவனது கட்டுக்குள்ளேயெ இருக்க, அவன் அவள் எதிர்பார்க்காத நேரத்தில் செய்த அந்த செயல் அவளது உள்ளத்தின் ஆழம் வரை சென்று தொட்டிருக்க கண்களும் இதயமும் கணத்தது அவளுக்கு. அவனது பரிசுத்தாமான அன்பின் கணத்தை அவளது மென்மையான இதயத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளது அமைதியை கலைக்க விரும்பாதவன். அவளுக்கு சிந்திப்பதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுக்க விரும்பினான்.

"சரி ஒன்னும் அவசரம் இல்லை. நீ ஒரடியா எல்லாத்தையும் மனசுல போட்டு குழப்பிக்காத. போ போய் குளிச்சுட்டு ட்ரஸ் மாத்திக்கோ போ...." என்றான்.

அவளும் பதில் எதுவும் பேசாமல் மௌனமாக எழுந்து படிக்கட்டு வரை சென்றாள். பின் திரும்பி வந்து அவனை பின்னால் இருந்து கட்டிக் கொண்டாள்.

அழகு பெண்கள் பழகினாலும்
ஐயம் கொள்ளேன் உன்
ஆண்மை நிறையும் போது உந்தன்
தாய் போல் இருப்பேன்

உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என்னுயிர் தருவேன்

காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

————————————————————

பத்து நாள் மருத்துவமனையில் இருந்து விட்டு பூரணமாக குணமாகி சஞ்சனா வீட்டுக்கு வந்து இருந்தாள். துறை பங்களா கல்யாணக் கலை கட்டி ஜேஜேயென இருந்தது. வாசலில் வாழை மரம் கட்டி பந்தல் கால் நட்டு வீட்டை சுற்றி பந்தலும் தோரணமும் கட்டப்பட்டு இருந்தது. அஷோக்கின் பெற்றோரும் ஊருக்கு திரும்பி இருந்த நிலையில் இரண்டு திருமணங்களையும் ஒரே நாளில் ஒரே மேடையில் துறை பங்களாவிலேயே வைத்துக் கொள்வது என்று முடிவாகி இருந்தது திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சி இருந்த நிலையில் ஆளாளுக்கு ஒவ்வொரு வேலையில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர். அஷோக்கின் குடும்பம், சஞ்சனாவின் குடும்பம், அபியின் குடும்பம் என அனைவரும் திருமணத்திற்கென நான்கைந்து நாட்களுக்கு முன்னமே துறை பங்களாவிற்கு குடி புகுந்து விட்ட நிலையில் திருமண நாளுக்கு முன்பே பங்களாவின் பின் புறம் பந்தல் போடப்பட்டு தினமும் மூன்று பந்தி கறி சோறு விருந்து நடந்து கொண்டிருந்தது. ஐயாவும் ஷர்மாவும் சமையல் நடக்கும் இடத்தை சுற்றி சுற்றி வந்து மேற்பார்வை செய்து கொண்டும் ஆட்களை வேலைக்கு ஏவிக் கொண்டும் இருந்தனர். சுந்தரமானால் ஜவுலிக் கடையையே வீட்டு முற்றத்தில் கடை பரப்பி வைத்திருந்தார். வீட்டுப் பெண்கள் சஞ்சனாவையும் அபிராமியையும் நடுவில் அமர்த்தி வைத்து ஒவ்வொரு புடவையாக இருவர் மேலும் வைத்து யாருக்கு எது எப்பொழுது கட்டுவது என்று தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர். கடைத்தெருவிலுள்ள பிரபல நகைக் கடைக்காரர் ஒருவர் அவர்கள் முன்னமே சென்று ஆர்டர் செய்து விட்டு வந்திருந்த நகை பெட்டிகளை அவரே நேரில் வந்து கொடுத்து விட்டு சென்றார். சஞ்சனாவின் கழுத்தில் ஏற்கனவே ஷக்தி கட்டிய மஞ்சள் தாலி இருப்பதால் ஷக்தி அவளுக்கு முறுக்கு சங்கிலியில் அம்மன் தாலியும் காசும் கோர்த்து தாலி பெருக்குவதாயும், அஷோக் அபிராமியின் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் அவர்கள் இனத்தாலியான சிறகு தாலி கட்டுவதாகவும் பொன்னுருக்கில் முடிவு செய்யப்பட்டது.

சஞ்சனா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருந்ததினாள் வீட்டில் இருந்த அனைவரும் அவளை பூப்போல பார்த்துக் கொண்டனர். அனைவரும் ஆளுக்கொரு வேளையாக கீழே அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்க சஞ்சனா சற்று இளைப்பாருவதற்கென மாடியில் உள்ள அவளது அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள். அதைக் கண்ட ஷக்தி அவனும் செய்து கொண்டிருந்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு மெதுவாக நகர்ந்து யாருக்கும் தெரியாமல் அவள் பின் சென்றான்.

"சின்னையா அங்க எங்க போறிங்க? உள்ள சஞ்சனாக்கா ரெஸ்ட் எடுக்குறாங்க...." கத்தினான் மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த சின்னா.

"டேய்.. டேய்.. டேய்.. கத்தி ஊரை கூட்டாதடா.. நான் அவகிட்ட சீக்கிரம் போய் பேசிட்டு வந்துர்ரேன்..." பதறினான் ஷக்தி.

"உங்களை தான் கல்யாணம் வரை சஞ்சனாக்கா இருக்க பக்கமே போக கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்கல்ல"

"அதெல்லாம் அப்படி தான் சொல்லுவாங்க. ஆனால் நீ என்னோட அசிஸ்டண்ட். நீ நான் சொல்றதை தான் கேக்கணும். நான் உள்ள போய் சீக்கிரம் வந்துர்ரேன். நீ யாராச்சும் வந்தா எனக்கு சிக்னல் குடு. என்ன புரிஞ்சுதா?"

"ஹ்ம்ம்ம்......" சம்மதம் இல்லாமல் சம்மதம் தெரிவித்தான் சின்னா.

ஷக்தி மெல்ல காலடி எடுத்து வைத்து சஞ்சனாவின் அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டான். சஞ்சனா முதுகு காட்டி படுத்து இருந்தாள். புடவை மறைக்காத இடத்தில் அவளது மஞ்சள் இடை பளபளத்தது. உள்ளே நுழைந்த ஷக்தி மெல்ல சென்று அவள் அருகில் அமர்ந்து கொண்டு அவள் தூங்கும் அழகையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் சலனமில்லாமல் உறங்கிக் கொண்டிருக்க அவளை எழுப்புவதற்காக அவள் இடுப்பில் கை வைத்து கிள்ளி விட்டான். அந்த அதிர்ச்சி மருத்துவத்தால் துள்ளி எழுந்து அமர்ந்து கொண்டாள் சஞ்சனா.

"ஏய்... லூசாடா நீ??? இங்க எங்க வந்த?"

"உன்னை பார்க்க தான்" கூலாக பதிலளித்தான் அவன். சஞ்சனாவின் அருகில் சாய்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டபடி.

"உன்னை தான் இங்கல்லாம் வர கூடாதுன்னு சொல்லி இருக்கில்ல. நீ முதல்ல கிளம்பு" ஷக்தியை தன் முழு பலம் கொண்டு தள்ளி கட்டிலில் இருந்து எழுப்பி விட்டு இப்பொழுது சஞ்சனா கட்டில் விளிம்பில் அமர்ந்து கொண்டாள்.

"தள்ளாதடி ராட்சசி! நான் உனக்கு ஒன்னு கொடுக்கலாம்னு வந்தேன்" ஷக்தி இப்பொழுது அவளுக்கு எதிரே நின்று கொண்டு இருந்தான்.

"எதுவா இருந்தாலும் சீக்கிரமா குடுத்துட்டு கிளம்பு" பொய்க்கோபம் காட்டினால் அவள்.

"அப்ப நீ கண்ணை மூடிக்கோ"

"ஏன்? எதுக்கு? அதெல்லாம் முடியாது. நான் கண்ணை திறந்துட்டு தான் இருப்பேன். இஷ்ட்டம்னா குடு இல்லன்னா கிளம்பு."

இப்பொழுது கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளை நெருங்கி சென்றவன் அவளது புஜங்களை இறுகப் பற்றி "என்னடி கெஞ்சுனா மிஞ்சுற? மூடுடி கண்ணை" அதட்டினான் அவளை.

சட்டென அவள் கண்கள் மூடிக்கொள்ள வாய் மட்டும் ஈன் ஸ்வரத்தில் முனுமுனுத்தது. "முரடா விடுறா என்னை".

ஆனால் சஞ்சனா கண்களை மூடிக் கொண்டதும் ஷக்தி அவளை விட்டு இரண்டு அடி பின்னாள் நகர்ந்தான். ஒரு சில நிமிடங்களாகியும் ஷக்தியிடம் இருந்து எந்த அசைவும் இல்லாதிருக்க பொறுமையை இழந்த சஞ்சனா ஒற்றைக் கண்ணை களவாக திறந்து ஷக்தியை பார்த்தாள். கையில் வைர மோதிர பெட்டியோடு அவளது காதல் கணவன் அவள் முன் மண்டியிட்டு இருந்தான். இப்பொழுது அவளது கண்கள் ஆச்சர்யத்தில் முழுதாக திறந்து கொண்டது.

"சஞ்சனா நான் உன்னை காதலிக்கிறேன், உன் மேல பைத்தியமா இருக்கேன், உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை படறேன், உன்கூடவே என் மீதி வாழ்க்கையை வாழணும்னு நினைக்கிறேன், உன்கிட்ட நிறைய சிரிச்சு பேசி அப்பறம் நிறைய சண்டை போடணும்னு நினைக்கிறேன், And I want to make love with you, எனக்கு உன்கூட சேர்ந்து வாழ்ந்து நிறைய குழந்தைங்க பெத்துக்கணும்..... Will you marry me???" அவளது கண்களை மட்டும் பார்த்து அவன் அப்படி கேட்க, அவள் கண்களோ பதிலுக்கு கண்ணீர் மழை பொழிந்தது. சந்தோஷத்தின் மிகுதியால் அவளுக்கு இதயமே வெடித்து விடும் போல இருந்தது.

அவனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கும் முகமாக அவள் அவனை நோக்கி தலையை ஆட்ட, அவன் முழங்காலிட்ட படியே அந்த மோதிரத்தை அவள் கையில் மாட்டி விட்டான். மோதிரத்தை மாட்டி விட்டது தான் தாமதம் அவள் கட்டிலில் இருந்து அப்படியே தரையில் பாய்ந்து அவனை கட்டிக் கொண்டு மூச்சு முட்டும் வரை அவன் முகமெங்கும் முத்தமிட்டாள். காதல் செய்தலுக்கான ஒரு சிறு ஒத்திகை அங்கு நடந்து முடிந்தது!

உனது உயிரை எனது வயிற்றில்
ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம்
பிள்ளைக்கு தருவேன்

கால மாற்றம் நேரும் போது
கவனம் கொள்வேன்
கட்டில் அறையில் சமையல் அறையில்
புதுமை செய்வேன்

காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

————————————————————

துறை பங்களா நடு வராந்தாவில் மேடை அமைக்கப்பட்டு பிரமாண்டமான இரு மணவறைகள் போடப்பட்டு இருக்க. ஒன்றில் அஷோக் அபிராமியும், இன்னொன்றில் ஷக்தி சஞ்சனாவும் திறுமண கோலத்தில் அமர்ந்திருந்தார். மேடையில் குடும்பமே திரண்டிருக்க, மேடைக்கு கீழே மணமக்களை அர்ச்சதை தூவி வாழ்த்த ஊரே கூடி வந்திருந்தது. முகூர்த்த நேரம் நெருங்க,

"மாங்கல்யம் தந்துநாநேந
மம ஜீவனஹேதுநா
கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்"

கெட்டி மேளம்!!!! கெட்டி மேளம்!!!!!

கெட்டி மேளம் முழங்க நாதஸ்வரம் இசைக்க ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க ஷக்தி சஞ்சனா கழுத்திலும் அஷோக் அபிராமி கழுத்திலும் தாலி கட்டினர்.

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்

செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்

கை பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

(சுபம்)

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro