39

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

திரைப்படங்களில் வரும் திடீர் திருப்பங்கள் மனிதனை அந்த இடத்தை விட்டு நகரவிடாமல் ஆக்கிரமித்திருக்கும். வாழ்க்கையும் அதே போல பல திடீர் திருப்பங்களை கொண்டதுதான். திருப்பம் இல்லாத வாழ்க்கை கடிகார முட்களை போன்றது. அதற்கு தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான், நேரம். கடிகார முட்களுக்கு தெரிந்தது அது மட்டுமே.

ரூபினியின் மனதில் இருப்பது தெள்ள தெளிவாக மீனாக்‌ஷிக்கும் ராதாவுக்கும் புரிந்தது. அவள் க்ரிஷ்ஷை நிராகரிப்பதற்கான காரணமும் அவர்களுக்கு தெரியாமல் இல்லை. திருமனத்தின் பின்னரான சமூகத்துடனான வாழ்க்கை பற்றிய பயமே ரூபினியின் இந்த முடிவுக்கு காரணம் என்பது புரிந்ததுமே இவர்கள் இருவருக்கும் ரூபினி மேல் நல்லெண்ணம் ஒன்று உருவாகியது.

தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு ரூபினி ஒன்றும் கோழை இல்லை என்பது இருவருக்குமே தெரிந்ததால் அவள் வேகமாக அவ்விடத்தை விட்டு சென்றாலும் அவளை யாரும் பின் தொடரவில்லை.

" இப்போ என்ன அண்ணி பண்ணலாம்?" என்று மீனாக்‌ஷி கவலையாக கேட்டாள்.

" நான் ஆரம்பத்துல ரூபினிய வேணாம்னு சொல்லலாம்னுதான் இருந்தேன். ஆனா அவளுக்கும் எவ்வளவு கஷ்டம்ல. க்ரிஷ் வேற ஒரு பொண்ண கல்ய்ணம் பண்ணி அதுக்கு அப்புறமா அவனோட பழைய காலத்த பத்தி அந்த பொண்ணுக்கு தெரிய வந்து, அவன் வாழ்க்கையில பிரச்சினைகள் வர்றத விட அவன தெரிஞ்ச ரூபினியே மேல்னு தோனுது மீனாக்‌ஷி. ஆனா நம்ம யோசிக்கிறத விட இந்த பொண்ணு ரொம்ப தெளிபா யோசிக்கிறா. இல்லைன்னா க்ரிஷ்ஷோட எதிர்காலம் அவளோட கடந்த காலத்தால பாதிக்கப்படக்கூடாதுன்னு யோசிப்பாலா. எனக்கு என்னமோ இவளும் க்ரிஷ்ஷும் சேர்ந்தா நல்லா இருக்கும்னு தோனுது" என்று கூறினாள். ராதாவின் பேச்சு மீனாக்‌ஷிக்கு சந்தோசத்தை கொடுத்தது. இருந்தாலும் ரூபினியை வழிக்கு கொண்டு வருவது எப்படி என்பதுதான் தெரியவில்லை.

" அண்ணி என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. அத வேணும்னா டிரை பண்ணி பார்க்கலாமா?" என்று கேட்டவளை ராதா என்ன என்பது போல பார்த்தாள். மீனாக்‌ஷி தனது திட்டத்தை ராதாவிடம் கூற அவள் முகத்தில் புன்னகை ஒன்று தோன்றியது.

" இத நீ முன்னாடி சொல்லியிருந்தா நான் ஏத்துக்கிட்டு இருக்க மாட்டேனோ என்னமோ. ஆனா இப்போ எனக்கு ரூபினிய பிடிச்சிருக்கு. இந்த ப்ளான் வேர்க் அவுட் ஆகுமா இல்லையான்னு தெரியல? ஆனா கரக்டா வேர்க் அவுட் ஆச்சினா நான் ரொம்ப சந்தோசப்படுவேன் மீனாக்‌ஷி" என்றவள் மீனாக்‌ஷியின் முகத்தில் ஒரு கவலை தெரிவதை கண்டாள்.

" என்ன மீனாக்‌ஷி உன் முகம் கொஞ்சம் டல்லா இருக்கு" என்று கேட்டாள்.

" ஒன்னுமில்லண்ணி, அன்னைக்கு ஒரு நிமிசம் உங்க அப்பா என்கிட்டயோ இல்லை க்ரிஷ் கிட்டயோ பேசியிருந்தா நான் க்ரிஷ்ஷ மிஸ் பண்ணிருக்க மாட்டேன்ல. எல்லோருக்கும் என்ன பார்த்தா வில்லி மாதிரி தோனும். இல்லைன்னா தம்பிய லவ் பண்ணிட்டு அண்ணன் கூட அடுத்த ஒரு வருசத்துலேயே குழந்த பெத்துக்கிட்டவ மனசாட்சி இல்லாதவன்னு தோனும். என்னோட பக்கம் இருக்குற கஷ்டமும் மனவேதனையும் யாருக்கும் புரியாதில்ல. என்ன ஷக்தி ரொம்ப நல்லாதான் பார்த்துக்கிறாரு. நான் தா அந்த வீட்டு மகாராணி. இருந்தாலும் என் மனசுல ஒரு வெறுமை இருக்கு அண்ணி. ஒரு வேலை சிவா இல்லைன்னா என்னோட முடிவு வேற மாதிரி இருந்திருக்குமோ என்னமோ. என் மனசுல இருக்குறத கூட வெளியில யார்கிட்டயும் பேசக்கூட முடியல. நான் பேசுறத கேட்டுட்டு கண்டிப்பா எனக்கு பின்னாடி என்ன பத்தி மோசமா பேசுவாங்கன்னு தெரியும். ஆனா என்னோட மனசுல இருக்குற உங்ககிட்டயாச்சிம் சொல்லாம்னுதான் சொல்ரேன். தயவு செய்து நான் இப்போ பேசினத சுரேஷ் அண்ணன் கிட்டயோ இல்லைன்னா ஷக்தி கிட்டயோ சொல்லிடாதீங்க. மீனாக்‌ஷி எல்லோருக்கும் கெட்டவலாவே இருந்துட்டு போறேன். ஆனா என் மனசுக்கு தோனுது. ஒரு நாளைக்கு சிவா பெரியவனாகி என்னோட பக்க நியாயத்த புரிஞ்சி எனக்கு ஆறுதலா இருப்பான்னு" என்று கண்கள் மல்கி நின்றால்.

குழப்பத்தில் எந்த காரியம் செய்தாலும் அது சரியாக அமையாது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ரூபினியை சந்தித்து ஒரு வாரம் ஆகியிருந்தது. ரூபினியின் முடிவு என்ன என்று ராதாவிடம் க்ரிஷ் பல நாட்களாக கேட்டும் அவள் அவனை பொறுமையாக இருக்கும்படி கூறிவிட்டாள். மீனாக்‌ஷியிடம் கேட்க அவள் அது சம்பந்தமாக தனக்கு எதுவுமே தெரியவில்லை என்று கூற அவன் நிலமை மிகவும் மோசமானது. இந்த குழப்பத்தின் நடுவில் அவன் பலமுறை ரூபினியை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவளை அவனால் தொடர்புகொள்ள முடியவில்லை.

சில நாட்களின் பின் க்ரிஷ்ஷை வீட்டுக்கு அழைத்தால் ராதா.

" க்ரிஷ், ரூபினி உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டா. அவள நாங்க எவ்வளவோ தொடர்புகொள்ள முயற்சித்தும் அவளை எங்களால காண்டக்ட் பண்ண முடியல. இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டனும். உனக்கும் ஒரு வாழ்க்கை அமையனும். அன்னைக்கு நீ சொன்னேல்ல உன் வாழ்க்கை சம்பந்தமா இனி நான் என்ன முடிவெடுத்தாலும் ஒத்துக்கொள்வேன்னு?" என்று கேள்வியில் நிறுத்த க்ரிஷ் ஆம் என்று தலை அசைத்தான்.

" சரி, சுரேச்ஷுக்கு தெரிஞ்ச பொண்ணு ஒன்னு இருக்கு. அவ ஒரு பையன காதலிச்சி வீட்ட விட்டு ஓடிப்போயிட்டா. அந்த பையன் கொஞ்ச நாள் முன்னாடி ஆக்சிடண்ட்ல இறந்துட்டான். இப்போ அவளுக்கு உதவிக்குன்னு யாருமே இல்லை.அவளை அவங்க வீட்டுல ஏத்துக்கவும் மாட்டாங்க. நீயும் அவளும் சேர்ந்து பேசி பாருங்க. ஒத்து வந்திச்சின்னா மேல பேசலாம்" என்றாள். க்ரிஷ்ஷால் ராதாவின் பேச்சை மறுத்து பேச முடியவில்லை. இருந்தாலும் தூக்குத்தண்டனை கைதியிடம் கடைசி ஆசையை கேட்பது போல அவனுக்கும் தன்னிடம் தனது கடைசி ஆசையை கேட்க மாட்டார்களா என்றிருந்தது. இருந்தாலும் அவனாகவே அவனது கடைசி ஆசையை கூற முற்பட்டான்.

" அக்கா ரூபினிகிட்ட இன்னொரு வாட்டி பேசிட்டு " என்று கூற ராதா அவனை முறைத்தாள். "இங்க பாரு க்ரிஷ் நீ சொன்னேன்னு நான் பேசினேன். ஆனா அவளுக்கு உன்ன கட்டிக்க இஷ்டம் இல்ல. இதுக்கு மேல அவ கால்ல என்ன விழ சொல்றியா? சொல்லு க்ரிஷ் அதுதான் உன் ஆசைன்னா அதுக்காக நான் அவ கால்ல விழுந்து கெஞ்சுறேன்" என்று கூற அவன் ராதாவின் அருகில் வந்து அவளின் கைகளை பற்றினான்.

" இல்லக்கா வேணாம். நீ யார் கால்லயும் விழ வேணாம்" என்றவன் அங்கிருந்து சென்றான்.

க்ரிஷ் அங்கிருந்து சென்றதும் மீனாக்‌ஷிக்கு கால் செய்தாள் ராதா.

" மீனாக்‌ஷி எனக்கு பயமா இருக்கு. ஒரு வேலை உன் ப்ளான் சக்ஸஸ் ஆகலன்னா என்ன பண்றது. இப்பவே க்ரிஷ் ரொம்ப அப்சட் ஆகி இருக்கான்" என்றாள். ராதாவின் கவலை மீனாக்‌ஷிக்கு புரியாமல் இல்லை. அவளுக்கும் அதே பயம் இருந்தது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

" அக்கா நம்மலாள முடிஞ்சத செய்வோம். அதுக்கு மேல கடவுள் விட்ட வழி. நாளைக்கே நம்ம எல்லோரும் காயத்ரி, க்ரிஷ் மீட்டிங்க ஏற்பாடு பண்ணுவோம். நான் ஆல்ரெடி பூர்ணி கிட்ட பேசிட்டேன். அவ எப்படி சரி அந்த இடத்துக்கு ரூபினிய கூட்டி வந்திடுவா" என்றாள்.

எல்லோரும் நாளைய நாளுக்காக காத்திருக்க ரூபினி இது எதுவும் தெரியாமல் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தாள். அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. க்ரிஷ்ஷை மறக்க அவள் தனது தொழிலில் ஈடுபடலாம் என்று ஒரு கஸ்டமரிடம் சென்றாள். ஆனால் அங்கு அவளால் அந்த கேவலமான வேலையில் ஈடுபடமுடியவில்லை. இப்போதெல்லாம் அவள் மனதில் க்ரிஷ் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பதால் வேறு எந்த யோசனையும் அவளுக்கு தோன்றவில்லை. ஆனால் மது போதையில் இருந்த அந்த கொடிய மிருகம் அவளை மிருதுவான பெண் என்றும் பாராமல் அவளை அடித்து சித்திரவதை செய்துவிட்டான். என்னதான் அந்த மிருகம் அவளை அடித்து துன்புறுத்தினாலும் அவள் தன் கற்பை அன்று விற்கவில்லை. கற்பின் கண்ணியத்தை ரூபினி உணர்ந்த முதல் நாள் அது. உடலில் காயம் பட்ட வலி இருந்தாலும் மனதளவில் அவன் மிகவும் சந்தோசமாக இருந்தால்.

பூர்ணியிடம் ரூபினி எதையும் மறைத்ததில்லை. க்ரிஷ் அவள் மனதுக்குள் இருப்பதை தவிர. ஆனால் பூர்ணி ரூபினியின் ஒவ்வொரு அசைவையும் வைத்தே அவளின் உள்ளம் அறிந்துகொள்வால். பம்பாயில் சிறு வயது முதலே ரூபினியை பூர்ணிக்கு தெரியும். சில இடங்களில் ரூபினி அறியாமலேயே பூர்ணி அவளை காப்பாற்றியிருக்கின்றாள்.

மீனாக்‌ஷி கால் செய்து ரூபினியை பற்றி பூர்ணியிடம் கூறினால். தனக்கு அமையாத நல்ல வாழ்க்கை ரூபினிக்காவது அமையட்டும் என்பது பூர்ணியின் எண்ணம். அது நடக்க அவள் எந்த எல்லைக்கும் செல்ல துணிந்தாள். இப்படி இருப்பவளுக்கு மீனாக்‌ஷி கேட்டது ஒன்றும் பெரிய விடயமாக தோன்றவில்லை.

" ரூபினி இன்னைக்கு ஸ்பென்சர் ப்ளாசாக்கு போகலாமா? எனக்கு கொஞ்சம் ஷாப்பிங்க் பண்ண வேண்டியிருக்கு" என்று கேட்க ரூபினியால் மறுக்கமுடியவில்லை. இருந்தாலும் அந்த வெறி பிடித்த மிருகம் அவளுக்கு கொடுத்த காயங்கள் ஆறியிருந்தாலும் முகத்தில் இருந்த வடு மட்டும் கொஞ்சம் மறையாமல் இருந்தது. இதை ருபினி உணர்ந்து கொண்டாள்.

" ஷால் போட்டு முகத்தை கவர் பண்ணிக்க. அப்போ முகத்துல இருக்குற தடம் தெரியாது. ப்ளீஸ்டி தனியா போக ஒரு மாதிரி இருக்கு. நீ இல்லாம நான் என்னைக்கு வெளியில போய் இருக்கேன்" என்றவளை ரூபினியும் சிரித்துக்கொண்டு நோக்கினால்.

" எல்லாம் சரிதான், ஆனா நீ என்கிட்ட ஏதோ ஒன்னு மறைக்கிற பூர்ணி" என்று கூற அவள் ஒரு கணம் திடுக்கிட்டவள் " என்ன ...என்ன மறைக்கிறேன்" என்று தடுமாறினால். அவளின் தடுமாற்றத்தை ரசித்துக்கொண்டு அவள் அருகில் வந்தால் ரூபினி.

" யாருடி அது அஷ்வின். சொல்லவே இல்லை" என்று கேட்க அவளுக்கு நிம்மதியாக இருந்தது. எங்கே ரூபினிக்கு தான் மீனாக்‌ஷியுடன் சேர்ந்து போட்ட திட்டம் தெரிந்திருக்குமோ என்ற கவலை இப்போது இல்லை.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro