40

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலம், காதல், காமம் இவை ஒரு மனித வாழ்வில் இன்றியமையாதது. ஒரு மனிதனின் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டுமெனில் இவை மூன்றும் அவனின் கட்டுப்பாட்டுக்குள் அல்லது அவனுக்கு அனுகூலமானதாக அமைய வேண்டும். ஒன்றைவிட்டு ஒன்றை அடைவது அவனது வாழ்வை முழுவைபடுத்தாது.

சுரேஷ், ராதா, ஷக்தி, மீனாக்‌ஷி, க்ரிஷ் என எல்லோரும் அந்த ஷாப்பிங்க் காம்ப்ளக்‌ஷின் ஃபுட் கோட்டில் உட்கார்ந்து காயத்ரியின் வருகைக்காக காத்திருந்தனர். ஆண்களுக்கு காயத்ரியின் வருகை கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் அது அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று. சுரேஷுக்கும் ஷக்திக்கும் க்ரிஷ்ஷின் வாழ்க்கை இனி எப்படியாவது சரியாகிவிட வேண்டும் என்ற ஆசை. ஆனால் ராதாவுக்கும் மீனாக்‌ஷிக்கும் அவனின் எதிர்காலம் இனி நன்றாக அமைய வேண்டும் என்ற ஆசை.

" ஹாய், முதல்ல சாரி. நான் கொஞ்சம் லேட்டா வந்ததுக்கு" என்று அங்கு வந்த காயத்ரி எல்லோரையும் பார்த்து மன்னிப்பு கேட்டாள்.

" ஹேய் பரவாயில்ல காயத்ரி" என்று ராதா கூறி அவளை அமரச்செய்தால்.

அதே இடத்துக்கு பூர்ணியும் ரூபினியும் வர க்ரிஷ் ரூபினியை கண்டு கொண்டான். அவனின் பார்வை எங்கோ செல்வதை கண்ட ராதா யார் என்று பார்க்க அங்கு ரூபினி நின்றுகொண்டிருந்தாள். இன்றே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என எண்ணிய ராதா ரூபினியை பார்த்து அவர்களை நோக்கி வரும்படி அழைத்தால். ரூபினி எஜமானனின் சொல்லுக்கு கட்டுப்பட்டவள் போல அவள் கால்கள் தானாகவே அவர்களை நோக்கி நடந்தது. அதற்கு காரணம் கரிஷ் மேல் கொண்ட காதலா இல்லை அவன் குடும்பம் எல்லோரையும் ஒரே நேரத்தில் பார்க்க போகின்றோம் என்ற ஆசையா என்று தெரியவில்லை.

ரூபினியும் அவள் தோழியும் அந்த இடத்துக்கு வந்தது சுரேஷ் மற்றும் ஷக்தி கொஞ்சம் சங்கடமாக இருந்தது. க்ரிஷ்ஷை கூறவே வேண்டாம். எல்லோரையும் பார்த்து ஒரு சினேக பார்வை வீசிய ரூபினி, காயத்ரியை யார் என்பது போல நோக்கினால்.

மீனாக்‌ஷி " ரூபினி, இது காயத்ரி. கரிஷ்ஷுக்கு பார்த்திருக்குற பொண்ணு. காயத்ரி இவங்க ரூபினி.. இவங்க க்ரிஷ்ஷோட.... ஃப்ரண்டு" என்று கூற ரூபினியின் கால்களுக்கிடையில் பூகம்பம் நிகழ்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. ஆம் அவள் வாழ்வில் இனி க்ரிஷ் இல்லை. மற்ற ஆண்கள் போன்று இனிமேல் அவன் தனது மனைவியை ஏமாற்றிவிட்டு அவளிடம் வரப்போவதில்லை. தான் இனி ஒரு பைத்தியமாக போகின்றோம் என்பது அவளுக்கு தெளிவாக தெரிந்தது.

மீனாக்‌ஷி தன்னை அறிமுகம் செய்த முறை கண்டு காயத்ரி முகம் சுழித்தால்.

" என்ன மீனாக்‌ஷி, ஒரேடியா முடிவே எடுத்துட்டீங்க போல. ஆமா இந்த பொண்ணுதான் அந்த பொண்ணா? ஹ்ம்ம். க்ரிஷ் நான் நேரடியாவே கேட்குறேன். உங்களுக்கு என்ன தைரியம் இருந்தா இவ்வளவு தப்பையும் பண்ணிட்டு நல்லவன் மாதிரி எங்க முன்னாடி உட்கார்ந்து இருப்பீக. நீங்க ப்ராஸ்ட்டிடியூட் கிட்ட போவீங்க. ஆனா நாங்க அதெல்லாம் மன்னிச்சு உங்கள் கல்யாணம் பண்ணிக்கனுமா?" என்று எடுத்தெரிந்து பேச அங்கிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சியாகியது. க்ரிஷ்ஷின் நிலமையோ மிகவும் மோசமாக இருந்தது. காயத்ரி இப்படி கேட்டதும் அவன் ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து போனான்.

மீனாக்‌ஷி காயத்ரியை பார்த்து " என்ன காயத்ரி இப்படி பேசுற. உனக்கு இதுல விருப்பம் இருக்கான்னு கேட்டுதானே நான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணேன். உன்கிட்ட எதையுமே மறைக்க கூட இல்லையே" என்றவளை காயத்ரி நோக்கி கேட்ட கேள்வி எல்லோரையும் சிறிது உறைய வைத்தது.

" எல்லாத்தையும் சொல்லிட்டா பண்ண தப்பு இல்லைன்னு ஆகிடுமா? இது என்னப்பா புதுசா இருக்கு" என்று கலாய்த்தாள். வந்ததில் இருந்து காயத்ரியின் பேச்சு யாருக்குமே பிடிக்கவில்லை. ஆனால் மீனாக்‌ஷியும் இந்த பேச்சை விட்டுக்கொடுப்பதாக இல்லை.

" நீயும் காதலிச்ச பையன் இல்லாம தனியா இருக்குற, உன் வாழ்க்கையும் நல்லா அமையட்டுமேன்னு பார்த்தா நீ என்ன இப்படி பேசுற. உனக்கு பிடிக்கலன்னா நீ ஆரம்பத்துலயே சொல்லிருக்கலாமே? எதுக்கு இப்படி எல்லோரும் முன்னாடி அவமானப்படுத்துற?"

" ஓஹ், நான் காதலிச்ச பையன் செத்துட்டான். அதுனால எனக்கு இவர சேர்த்து வைக்க பார்க்குறீங்க. ஹ்ம்ம் எவ்வளவு பெரிய நல்ல மனசு உங்களுக்கு. சரி நான் ஒன்னு கேட்கட்டா. நான் காதலிச்ச பையன் செத்துட்டான்னு சொல்லும் போது மனசு ரொம்ப வலிக்கும்ல. அப்போ என் மன கஷ்டங்கள தீர்த்துக்குறதுக்கு இன்னொரு ஆம்பளைகிட்ட, ஐ மீன் க்ரிஷ் எப்படி ரூபினிகிட்ட போனாரோ அதேபோல போயிட்டு வந்தா அப்பவும் என்ன அக்சப்ட் பண்ணிக்குவீங்களா?" என்று கேட்க அங்கு ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது. இவர்கள் யாரும் இனி பேச போவதில்லை என்பதை காயத்ரி உணர்ந்தால்.

" நீங்க அன்னைக்கு என்கிட்ட க்ரிஷ் பத்தி சொல்லும் போதே உங்களுக்கு என் பதில சொல்லிருப்பேன். ஆனா நீங்க ஏதோ எனக்கு வாழ்க்கை தர்ற மாதிரி இல்ல பேசினீங்க. அதனாலதான் இதுக்கு அப்புறம் இப்படி வாழ்க்கை கொடுக்குற வேலைய உங்க ஆயுலுக்கும் வேற யாருக்கும் பார்க்காதமாதிரி பண்ணனும்னு தோனிச்சி. க்ரிஷ் மாதிரி ஆள எவ கல்யாணம் பண்ணிப்பா. கால் கேர்ளா இருக்குற ரூபினியே வேணாம்னு சொல்லிட்டா. இதுல நான் கேட்குதா. வெட்கமா இல்ல உங்களுக்கு எல்லாம்" என்று கூற ரூபினியால் அமைதியாக இருக்க முடியவில்லை.

" இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியல. ஆனா க்ரிஷ்ஷ வேணாம்னு சொன்னதுக்கு காரணம், நான் ஒழுங்கானவ இல்லைன்னுதான். அவரு மாதிரி ஒரு நல்லவர எங்க தேடினாலும் கிடைக்கமாட்டாங்க. புரிஞ்சி பேசுங்க. அவரு ஏதோ மன கஷ்டத்துல என்கிட்ட வந்தாரு. அது தப்புதான் இல்லைன்னு சொல்லல. அதுக்காக ஒரேடியா அவர இப்படி கேவலமா பேசாதீங்க" என்று கூறினால்.

" ஓஹ் இவருக்கு நீ சப்போர்ட்டா. அப்போ நீயே இந்த உத்தமர கல்யாணம் பண்ணிக்கமா. எதுக்கு நான்" என்று காயத்ரி கூற ரூபினியால் பதில் கூற முடியவில்லை.

" கால் கேர்ளா இருக்குற உன்னாலயே அவர ஏத்துக்க முடியல்ல. அப்புறம் நான் எப்படி ஏத்துக்குவேன்னு எதிர்பார்க்கலாம்" என்றாள். இங்கு க்ரிஷ்ஷின் முகம் அவமானத்தால் சிவந்திருந்தது. க்ரிஷ் முகம் மட்டுமில்லை. அங்கிருந்த எல்லோர் முகத்திலும் ஈ ஆடவில்லை. யாருக்கும் என்ன பதில் கூறுவதென்று புரியவில்லை.

" நீங்க ரொம்ப பேசுரீங்க. இப்படித்தான் ஒருத்தங்கள கூப்பிட்டு கேவலபடுத்துவீங்களா?" என்று ரூபினி கேட்க காயத்ரி

" ஆமா என் காதல கொச்சைப்படுத்தினாங்கள்ள. இவரு பண்ணதும் நான் என் காதலன பறிகொடுத்ததும் ஒன்னா. என்கிட்ட இவங்க அப்படி கேட்கும் போது எனக்கு எப்படி இருந்திருக்கும். அந்த வலிய இவங்களுக்கு காட்ட வேண்டாமா. அதான் இப்படி பண்ணேன்" என்றவள் அந்த இடத்தை விட்டு செல்லாமல் அப்படியே இருந்தால். இந்த சம்பாசனை இத்துடன் முடியாது என்பது அங்கிருந்த எல்லோருக்கும் புரிந்தது. யார் மனது புன்படுவதை பற்றியும் ரூபினி யோசிக்கவில்லை. ஆனால் க்ரிஷ்ஷின் மனது வேதனை படுத்வதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

க்ரிஷ்ஷின் பக்கம் திரும்பிய ரூபினி " க்ரிஷ் என்ன உங்க வாழ்க்கை துணையா ஏத்துக்குவீங்களா?" என்று கேட்க இதுக்கு மேல் தனக்கு இந்த இடத்தில் வேலை இல்லை என்பதை உணர்ந்த காயத்ரி அங்கிருந்து கிளம்பினால். ரூபினியின் கேள்வி ஒரு சிலருக்கு அதிர்ச்சியாகவும் சிலருக்கு சந்தோசமாகவும் இருந்தது.

க்ரிஷ்ஷுகு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. ரூபினி உணர்ச்சி மிகுதியில் இதை கேட்டிருந்தாலும் அவன் இந்த சந்தர்ப்பத்தை தவற விட விரும்பவில்லை. அவள் கேட்ட கேள்விக்கு அவளின் கையை தன் கைகளுடன் இணைத்து அவனின் பதிலை புரியவைத்தான்.

எல்லாம் சுமூகமாக முடிந்தது போல இருந்தது எல்லோருக்கும். ராதா ரூபினியை அவள் அருகில் அமரவைத்து அவள் தலையை கோதியவள்,

" நான் உன்ன வார்த்தைகளால ரொம்ப கஷ்டபடுத்திருக்கேன். என்ன மன்னிச்சிடுன்னு கேட்டா அது ரொம்ப அபத்தமா இருக்கும். உன்னோட நிலமையில இருந்து நான் யோசிச்சி பார்த்தேன். அப்புறமாத்தான் உன் கஷ்டம் புரிஞ்சது. அதே போல நீ என்னோட நிலமையில இருந்து கொஞ்சம் யோசிச்சி பாரு. என் கஷ்டம் உனக்கு புரியும்" என்றாள்.

" ஐய்யோ அக்கா, என்ன நீங்க இப்படி பேசுரீங்க. எனக்கு புரியாம இல்லை. அப்போ ஏதோ ஈகோல அப்படி நானும் ஏட்டிக்கு போட்டியா பேசிட்டேன். நீங்கதான் வயசுல பெரியவங்க. நீங்கதான் என்ன மன்னிக்கவும். என் அம்மா யாருன்னு எனக்கு தெரியாதுக்கா. எனக்கு எல்லாமே பூர்ணிதான். அவதான் எனக்கு எல்லாமே. ஒரு அம்மாவோட அரவணைப்ப அவகிட்டதான் முதன் முதலா உணர்ந்தேன்" என்று தன் தோழியை இவர்களுக்கு அறிமுகப்படுத்தினால்.

ரூபினியை தன் நெஞ்சோடு அணைத்த ராதா " இனிமே இப்படி எல்லாம் நீ பேச கூடாது. உனக்கு அம்மாவா நான் இருக்கேன். க்ரிஷ் ஏதும் ஏடாகூடமா பண்ணான்னா என்கிட்ட சொல்லு. தோலை உரிச்சிடலாம்" என்று கூற பல நாட்களின் பின் இந்த குடும்பத்தில் ஒரு நிம்மதி தோன்றியது. இது அடுத்த தலைமுறைக்கும் தொடர வேண்டும் என்பதே எல்லோரினதும் ஆசையாக இருந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro