41

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காதல் என்பது ஒரு வரம். காதல் தோல்வியால் திருமணம் முடிக்காத எத்தனையோ பேர் நாம் நம் வாழ்வில் கண்டிருப்போம். அதெல்லாம் 2000மாம் ஆண்டுக்கு முன் இருந்த காதல்கள். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் எந்த நொடியில் தொடங்கும் என்பது நம் யாருக்கும் தெரியாது. செல்லச் சினுங்கள், ஒரு திட்டு, ஒரு பெண்ணின் நகத்தீண்டல் இதில் எல்லாம் காதல் மலரும்.  ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகில் காதல் என்பது பேஸ்புக்கில் தொடங்கி, வீடியோ காலில் முடிவடைகின்றது. வீடியோ காலில் என்ன நடக்கும் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இரண்டு நாட்களின் பின்..

" அக்கா நான் அன்னைக்கு ரொம்ப பேசிட்டேனா? அவரு மனசு நோகனும்னு நான் அப்படி பேசலக்கா.." என்று காயத்ரி பயந்து பயந்து மீனாக்‌ஷியிடம் பேசினால்.

" ஹேய், அப்படிலாம் இல்ல. நீ சூப்பரா பண்ண. உன்னோட ஆக்டிங்க்னாலதான் எங்களுக்கு இருந்த பெரிய மனக்கஷ்டம் இப்போ விலகி எல்லோரும் சந்தோசமா இருக்கோம். அப்புறம் இன்னொன்னு, நான் இன்னைக்கு ரொம்ப மன நிறைவோட இருக்கேன்னா அதுக்கு நீதான் காரணம் காயத்ரி" என்றால்.

" இப்போ கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்க ஹாஸ்பிடல்ல அட்மின் ஜாப்கு என் ரெஸ்யூமி அனுப்பியிருந்தேனே? இண்டர்வ்யூக்கு இன்னும் எனக்கு கால் வரலக்கா" என்று கவலையாக கேட்டால்.

" காயத்ரி, ரொம்ப யோசிக்காத. உனக்கு கால் வரும். நான் உன்ன ரெகமண்ட் பண்ணிருக்கேன்.கண்டிப்பா உனக்கு அந்த ஜாப் கிடைக்கும். ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கனும்" என்று மீனாக்‌ஷி கூறினால்.

" என்ன கேள்வி?"

"எத்தனை நாளைக்கு நீ இப்படி தனியா இருக்க போற. நீ காதலிச்ச பையன் இப்போ இல்ல. உன் அம்மா, அப்பா உன்ன ஏத்துக்கிறதாவும் இல்ல. அந்த பையன் வீட்டுலயும் அதே நிலமைதான். உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா? உனக்குன்னு ஒரு குடும்பம் வேணாமா?" என்று கேட்டால்.

" இப்போ என்ன சொல்ல வரீங்க. நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்ல வரீங்களா?"

" ஆமா காயத்ரி".

சிறிது நேரம் மூச்சை இழுத்துபிடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவள்

" நான் சொல்ரேன்னு தப்பா எடுத்துக்காதீங்கக்கா. நான் அருண் கூட கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கேன். அதுவும் கணவன் மனைவியா. என்ன பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னோட ஒரு ஜென்மத்துக்கு ஒரு காதல்தான். என்னோட இந்த ஜென்மத்துக்கான காதல் அருனோட முடிஞ்சி போயிடிச்சி. அருண் பார்த்த என் உடம்பாகட்டும், இல்ல அருண் வாழ்ந்த என் மனசாகட்டும் அது ரெண்டும் தன்னோட வேலைகளை முடிச்சாச்சி. இனிமே அதுங்களுக்கு இந்த ஜென்மத்துல வேலை இல்லக்கா. என்ன பொறுத்தவரைக்கும் காதல் என்ற மலர் எனக்கு மலர்ந்து அது வாடியும் போயிடிச்சி. என் வாழ்க்கையில இனி காதல் என்ற சாப்டர்க்கு இடம் இல்லைக்கா. நான் பேசுறதும் அபத்தமா தோனலாம். ஆனால் என்னோட நிலைப்பாடு அதுதான்" என்று கூற மீனாக்‌ஷி யாரோ அவளை செருப்பால் அடித்தது போல இருந்தது.

---------------------

" ஷக்தி, என்ன பார்த்தா எப்படி தோனுது" என்று மீனாக்‌ஷி தன் கணவனை நோக்கி கேட்டால். அவளை மேலும் கீழும் மில்லி மீட்டர் மில்லிமீட்டராக ரசித்தவன் அவளை கலாய்க்க எண்ணினான்.

" அழகாத்தான் இருக்கே. ஆனா கொஞ்சம் குண்டாகிட்ட. அடி வயித்துல குட்டி தொப்பை எல்லாம் போட்டிடுச்சி" என்று கூறி அவளை பார்த்து கண்ணடிக்க மீனாக்‌ஷியின் கண்கள் கலங்கியது.

" என்ன பார்த்தா உடம்பு சுகத்துக்கு அலையிறவ மாதிரி இருக்கா. அன்னைக்கி என்னடான்னா ரேஷ்மா என்ன ரொம்ப கேவலம திட்டுறா.இன்னைக்கு காயத்ரி பேசுறத வெச்சி யோசிச்சா என் நிலமை விபச்சாரிய விட மோசமா இருக்குற மாதிரி இருக்கு" என்று கூறி அவன் உட்கார்ந்திருந்த கட்டிலில் தானும் உட்கார்ந்து முழங்காள்களுக்கு தன் முகத்தை பொத்தி அழ ஆரம்பித்தாள்.

ஷக்திகு என்ன நடந்தது என்பது புரியவில்லை. பதறி எழுந்தவன் அவள் அருகில் சென்றான்.

" ஹேய் மீனாக்‌ஷி என்ன நடந்தது" என்று கேட்டு அவளின் தலையை வருட அவள் அன்று ரேஷ்மா தன்னை பற்றி கேவலமாக பேசியது முதல் இன்று காதல் பற்றிய காயத்ரியின் விளக்கம் வரை கூறி முடிக்க அவனுக்கு சிரிப்பு வந்தது.

" நீ ஒரு நாளைக்கு எத்தனை தரம் சாப்பிடுவ" என்று ஷக்தி கேட்க மீனாக்‌ஷி குழம்பினால்.

" நான் என்ன பேசுறேன், நீங்க என்ன கேட்குறீங்க" என்று தன் தலையை வருடிய அவனின் கைகளை கோபமாக தட்டிவிட்டால். அவனும் விடாப்பிடியாக " நான் கேட்டதுக்கு பதில சொல்லு. ஒரு நாளைக்கு எத்தனை தடவை சாப்பிடுற" என்று கேட்க அவள் வேண்டா வெறுப்பாக நாலு என்றால். நிஜமாகவே இப்போது ஷக்திக்கு சிரிப்பு வந்தது. இன்றைய காலகட்டத்தில் நிஜமில்லாத அழகு சாதன விளம்பரங்களையும், சீரோ ஸைஸ் ஹிப் விளம்பரங்களையும் பார்த்து பார்த்து பெண்கள் தாங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று டயட் என்று கூறி சாப்பாட்டை தவிர்ப்பார்கள். ஆனால் தனது காதல் மனைவி அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒரு நாளைக்கு நாலு வேலை ஃபுல் கட்டு கட்டுவாள்.

" உன்ன மாதிரி ஒரு பொண்ண உலகத்துல எங்கயாச்சும் பார்க்க முடியுமாடி என் லூசுப்பொண்டாட்டி. ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொரு மாதிரி சில விடயங்கள் அமையும். நீயே சொல்லுவதானே, எனக்கு பசிக்குது அதனால நான் நாலு வாட்டி சாப்பிடுறேன்னு. சோ அதே போல உன்னால கடந்த கால காதல மட்டும் வெச்சி வாழ முடியாது. உன்ன பொறுத்தவரைக்கும் உன்ன யாராச்சும் ஒருத்தங்க உன் பக்கதுல இருந்து காதலிச்சிக்கிட்டே இருக்கனும். அது தப்புனு நீ எப்படி சொல்லலாம். ஒரு வேலை நான் இல்லாம போனா கூட உனக்கு வேற காதல் வரலாம் மீனாக்‌ஷி. அதுதான் உன் இயல்பு. ஏன்னா நீ காதலிக்கப்பட வேண்டியவள் அப்படி என்ற வரம் வாங்கி வந்திருக்க. உனக்கு உன்ன காதலிக்கிறவங்க உன் பக்கத்துல இருக்கனும். புரியுதா. லூசு மாதிரி மனசை போட்டு குழப்பிக்காத. இந்த ஷக்தி இருக்குறவரைக்கும் நீ எப்படி இருந்தாலும், உன் குட்டி தொப்பை பெரிய கண்டைனர் வாகனத்தோட டயர் மாதிரி ஆனாலும் கூட உன்ன காதலிச்சிக்கிட்டே இருப்பேன்" என்றவன் அவள் அருகில் வந்து மீனாக்‌ஷியின் முகத்தை கைகளில் ஏந்தினான்.

" மீன் மாதிரி இருக்குற இந்த கண்கள் என்ன  பார்க்குற வரைக்கும் நான் உன்ன காதலிச்சிக்கிட்டே இருப்பேன் மீனாக்‌ஷி. ஐ லவ் யூ ஃபார் எவர்" என்று கூற அவள் ஷக்தியை இறுக்கி அணைத்துக்க்கொண்டாள்.

" அப்போ நான் குருடாகிட்டேன்னா. இல்லன்னா ஏதும் நோய் வந்து என் கண்கள் மூடிடிச்சின்னா" என்று கேட்க அவளை விட்டு சிறிது விலகியவன்

" அம்மா தாயே, இதுக்குலாம் என்கிட்ட பதில் இல்லமா. ரொம்ப கேள்வி கேட்குற நீ. உன்ன இப்படியே விட்டா நீ பேசிக்கிட்டு இருப்ப, உன்ன" என்றவன் அவளை அணைத்து தூக்கி கட்டிலின் நடுவில் போட்டான்.

சில நாழிகைகளுக்கு பின்.,

" ஏங்க, நம்ம கனடாவுக்கே போயிடலாமா? எனக்கு இங்க இருக்க பிடிக்கல. இங்க இருந்தா எப்படியும் பழைய விசயங்கள் எல்லாம் ஞாபகம் வரும். நம்ம அப்பப்போ இந்தியா வரலாம். நம்ம வாழ்க்கைய நம்ம கனடாவுல வாழலாம். என்ன சொல்ரீங்க" என்று கேட்க ஷக்தி மறு பேச்சு ஏதுமின்றி மீனாக்‌ஷியின் வேண்டுகோளை கட்டளையாக எடுத்து அதற்கான மற்ற வேலைகளை ஆரம்பித்தான்.

ஷக்தியும் இந்த இடமாற்றத்தை மிகவும் விரும்பினான். காரணம் அவனால் க்ரிஷ் முன்னாள் தலை நிமிர்ந்து உட்கார இருக்க முடியவில்லை. அடிக்கடி அவனை தன் மனைவியுடன் சந்திக்கும் போது அவனுக்கு குற்ற உணர்ச்சி மேலோங்கி இருந்தது. க்ரிஷ்ஷிற்கும் அது போலவே. ஷக்தியிடமோ அல்லது மீனாக்‌ஷியிடமோ அவனால் சகஜமாக பேச முடியவில்லை. என்னதான் அவன் மீனாக்‌ஷியை அவன் அண்ணி என்று அழைத்தாலும் தான் முதன் முதலில் காதலித்த பெண்ணை தன் அண்ணன் மனைவியாக பார்க்கின்றது மிகவும் கொடுமையானது. இவர்கள் கனடாவுக்கு செல்வதை ராதாவிடம் கூற அவளும் மறு பேச்சு ஏதுமில்லாமல் ஏற்றுக்கொண்டாள். அவளுக்கும் தெரியும் இவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இருந்தால் அது எப்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்கும் என்பது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro