தீண்டல் 2

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

       

காலையில் சூரியன் உதித்ததும் அல்லி மலர்கள் எல்லாம் தன் காதலனைக்கண்ட கன்னியர் போல வெட்கத்தாள் முகத்தை மூடிக்கொள்ள நம் நாயகியோ இன்னும் தூக்கதிலேயே இருந்தாள்.

"ஏண்டி எரும மாடே இன்னுமா தூங்கிக்கிட்டு இருக்க.உன்னை எல்லாம் நாளைக்கு மாமியான்னு ஒருத்தி வந்துதான்டி பெண்டு நிமித்தனும்"என்ற தன் தாய் அமிர்தவள்ளியை முறைத்துக்கொண்டு எழுந்தாள் நம் நாயகி நித்யா.

"ஏன்மா இப்படி காலங்காலத்தாலேயே பொலம்புற. மாமியார் ,நாத்தனார் இல்லாத வீடா பார்த்துதான் நான் கட்டிக்க போறேன்"என்றவளை

"ஆமாண்டி அப்பதான் நீ உன் ஆட்டத்தை அங்கேயும் போய் கண்டினியூ பன்னலாம் பாரு.அங்க பார்த்தியா உன் தங்கச்சிய..காலைல ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி பூஜை எல்லாம் பன்னி குளிச்சிட்டு காலேஜ் போக ரெடியாகி இருக்கா.நீ என்னடான்னா இன்னும் பல்லு கூட விளக்காம" என்று கரிச்சுகொட்டிய தன் தாயை

"போதும்மா உன் லெக்சர்,தயவு செய்து கொஞ்சம் ஸ்டாக் வெச்சுக்க.மீதி லெக்சர உன் காலேஜ்ல போய் கண்டினியூ பன்னு"என்று கூறிவிட்டு குளியலரை செல்லும் முன் அம்மாக்கு தெரியாமல் அவர் போட்டு வைத்திருந்த காபியை பல்லு விளக்காமலேயே மடக்கு மடக்கு என்று குடித்து முடித்தாள்.இதை கண்ட அவளது தங்கை வாசுகியோ

"அம்மா ,அங்க பாரும்மா அக்கா பல்லு விளக்காம காபி குடிக்கிறா"என்று தன் தாயிடம் அவளின் அக்காவை போட்டுக்கொடுக்க அமிர்தவள்ளியோ கையில் கிடைத்த கரண்டியால் அவளை அடிக்க கையை ஓங்கும் முன்

"அமிர்தம் ஸ்டாப் .நம்ம ஹீலர் பாஸ்கர் என்ன சொல்லியிருக்காரு.காலைல எழும்பினதும் பல்லு விளக்க வேனாம்.காபியோ இல்லைன்ன டீயோ குடிச்சிட்டு பல்லு விளக்குங்க என்று தானே.அதுவும் ஏன் சொன்னாருன்னு யோசிச்சியா.பல்லு விளக்கிட்டு டீ குடிச்சா அந்த பால் மறுபடி பல்லுல ஒட்டிக்கும்.இப்ப நான் என்ன பன்னேன்.முதல்ல காபிய குடிச்சிட்டு பல்லு விளக்க போறேன்.சோ,எது நல்லதுனு யோசி அமிர்தம்"என்று கூறிவிட்டு குளிக்க சென்ற தன் மகளை இவளுக்குள் இவ்வளவு அறிவா என்று வியந்த தன் தாயை வாசுகியோ

"உன்னையே அவ ஏமாத்திட்டாலா.பல்லு விளக்காம காபி குடிக்க அவ ஏதோ பில்டப் பன்னி பேசிட்டு போறா.இத இந்த லெக்சர் அம்மா பெரிய ஏதோ ரிசேர்ச் ஆர்டிக்கல்ல படிச்ச மாதிரி வாய பொலந்து நிக்கிறாங்க.எங்கக்காக்கு வாய் மட்டும் இல்லன்னா ரோட்டால போறா ஏதோ கொண்டு போயிடும்" என்று மெதுவாக முனுமுனுத்த தன் மகளை அமிர்தவள்ளி

"என்னடி முனுமுனுக்குற"என்றார்

"இல்லம்மா ஹீலர் பாஸ்கர் எப்போ பல்லு விளக்காம காபி குடிக்க சொன்னாருன்னு யோசிக்கிறேன்"என்ற போதுதான் அவருக்கு உறைத்தது இவ்வளவு நேரமும் தன் மகள் தன்னை பேச்சால் மயக்கியது.

நித்யா குளித்து முடித்து இன்று பூத்த ஆவாரம் பூ போல அழகாக வந்தாள். அவளை கண்கொட்டாமல் பார்த்த தன் தாயை

"என்ன அமிர்தம்,ஏதோ பேய பார்க்குற மாதிரி பார்க்குற" என்று கலாய்த்த தன் மகளை

"இல்லம்மா ,உன்ன எப்போ ஒருத்தன் கைல பிடிச்சுக்கொடுப்போம்னு இருக்குடா"என்று உண்மையாகவே ஒரு தாயின் மனக்கவலையில் பேசிய தன் தாயை

"ஹேய் அம்மு டார்லிங்..டோண்ட் வொரி.உனக்கு அந்த கவலை எல்லாம் எதுக்கு.நானே பார்த்து நல்ல பிகரா அள்ளிட்டு வாரேன்"என்றவளை அவளின் தாய்

"ஹேய் என்னடி சொல்ர பிகரா" என்று முகம் சுளிக்க

"ஹேய் மம்மி..நீ இன்னும் 1990 லயே இருக்க.பசங்க மட்டும்தான் எங்கள பிகர்னு சொல்வாங்களா.ஏன் நாங்க சொன்னா என்ன.சோ எங்களுக்கு இப்போ பசங்க பிகர்தான்..ஆமா நீ ஏதும் எடக்கு மடக்கா யோசிச்சியா"என்று கொஞ்சம் சிந்தித்தவள்

"கர்மம் கர்மம்...ஏன்மா உன் புத்தி இப்படி போகுது "என்றாள்.

"ஹேய் சுகி ,உனக்கு தெரியுமா அம்மா என்ன நினைச்சாங்கன்னு"என்று தன் தங்கையிடம் அவள் தாய் நினைத்ததை கூற போக அமிர்தவள்ளியோ கையில் கிடைத்த கரண்டியை எடுத்து

"எரும எரும.தங்கச்சிகிட்ட பேசுர பேச்சாடி இது.நீதான் இப்படி அடங்காபிடாரியா இருக்கேன்னா எதுக்கு நல்ல பிள்ளையா இருக்குற அவளையும் கெடுக்குற" என்ற தன் தாயை

"யாரு ,அவ நல்ல பிள்ளை.இரு உனக்கு அவளோட புல் ரிப்போர்ட் ஒரு வாரத்துல கொடுக்கிறேன்.அப்புறம், உங்க இரண்டாவது பொண்ணுகிட்ட நாங்க இதெல்லாம் பேசக்கூடாது.ஆனா நீங்க உங்க முதல் பொண்ண அப்படி தப்பா நினைப்பீங்க..ஆனா மம்மி நீ நினைச்சது கூட ஒரு வகைல ஈசியான மேட்டர்தான் பாரு.சும்மா இந்த பசங்க பின்னாடிலாம் போக வேண்டியதில்லை பாரு" என்ற தன் மகளை அமிர்தவள்ளி முறைத்துகொண்டிருக்க ஸ்கூட்டியில் வந்த அதிதி ஹார்னை அடித்து

"ஹேய் நித்யயாஆஆஆஆஆ, சீக்கிரமா வாடி.இண்டர்வியூக்கு போகனும்.டைம் ஆச்சு.எப்ப பாரு உன்னால நான் லேட்டா போக வேண்டி இருக்கு"என்று கத்திய தன் தோழியை

"இருடி வரேன்.சும்மா சத்தம் போடாம"என்று கூறி தன் தாயிடம் விடைபெற்று அதிதியுடன் சென்றாள்.

அமிர்தவள்ளியின் கணவர் வாசுகி பிறந்து 1 வருடத்திலேயே அவரை விட்டு பிரிந்துவிட்டார.அதன் பிறகு தனக்கு என்று ஒரு துனையை தேடாமல் தன் பிள்ளைகளை ஒழுங்காக வளர்ப்பதிலேயே அதிகம் அக்கறை எடுத்துக்கொண்டார்.இவர்கள் வீட்டில் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள்.நித்யா- வாசுகி, அல்லது நித்யா-அமிர்தவள்ளி என்று மாத்தி மாத்தி ஏதாவது ஒரு சண்டை போய்க்கொண்டே இருக்கும்.அதே போல ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த பாசமாகவும் இருப்பார்கள்.

நித்யாவும் அவள் தாயும் பேசியதை வைத்தே புரிந்து இருக்கும்.இவர்கள் எவ்வளவு நெருக்கமாக பழகுகிறார்கள் என்று. அமிர்தவள்ளி காலேஜில் சைக்கலாஜி லெக்சரர் என்பதனால் அவர் தன் பிள்ளைகளிடம் எப்போதும் அம்மா போல பழகாமல் ஒரு தோழி போலவே பழகுவார்.அதனாலேயே அவரது இரு பெண்களும் எது என்றாலும் தன் தாயிடமே முதலில் எல்லாவற்றையும் சொல்லி விடுவார்கள்.அவ்வளவு சிறப்பாக நெறிப்படுத்தி தன் பிள்ளைகளை வளர்த்திருந்தார் அமிர்தவள்ளி.தங்களுக்கு தந்தை இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு ஒரு போதும் அவர்களின் தாய் வரவழைத்ததில்லை.

( ஹீலர் பாஸ்கரின் பற்களின் பராமரிப்பு சம்பந்தமான வீடியோ சேர்த்துள்ளேன். தேவை உள்ளவர்கள் பார்க்கவும்)

--------------------------

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro