தீண்டல் 1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

       

முதலாம் ஏக்கம்......

அந்த சிறிய கோயிலில் சிலர் கூடியிருக்க ஐயர் மந்திரங்களை கூறி முடித்து மாங்கல்ய நானை மணமகனிடம் எடுத்துக்கொடுத்த போது தன் உயிரினில் ,உடலினில் ,வாழ்வினில் ,இன்பத்தில்,துன்பத்தில் எல்லாவற்றிலும் தன்னில் பாதியாகப் போகின்ற தன்னவளுக்கு கழுத்தில் மங்கள நானை சூட்டினான்.என்னதான் அவளை தன் உயிர் என அவன் நினைத்தாலும் அவள் கண்களில் இருந்து எந்த நொடியும் கீழே விழுந்துவிடுவோம் என்று கங்கனம் கட்டிகொண்டிருந்த அவள் கண்ணீர்த்துளிகளை கண்டவன் உடனே அவனின் கைக்குட்டையை அவளுக்கு கொடுத்து

"ஹோமப்புகை அதிகமா இருக்கில்ல.அதன் அவ கண்ணு கலங்கிடுச்ச"என்றவனை அவள் கண்களில் எந்த உனர்வுமில்லாமல் வராத புன்னகையை வரவழைத்து சிரித்தாள்.எல்லா சடங்குகளும் முடிய மணமக்களும் அவர்களின் குடும்பதாரும் வீடு வந்து சேர்ந்தனர்.

"மாப்பிள்ளை ,கல்யாணம் சிம்பளா நடந்துச்சுன்னு வருத்தப்படுறீங்களா "என்று கேட்ட தன் மனைவியின் தாயான அமிர்தவள்ளியிடம் அவன்

"சேச்சே அப்படில்லாம் எதுவுமில்ல அத்தை.நீங்க மனச போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.ஹேய் வாலு வாசுகி.என்ன சைலண்ட் மோட்ல இருக்கே.எதுவும் பேசமாட்டியா" என்று தன் மனைவியின் சகோதரியிடம் குறும்பாக கேட்டவனை அவளோ

"சும்மா போங்க மாமா.இன்னைக்கு உங்க கல்யாண நாள் என்று பார்க்கிறேன் .இல்லன்னா நீங்க அவ்வளவுதான்.ஏண்டா இவகிட்ட வாய கொடுத்தம்னு யோசிக்கிற அளவுக்கு உங்களை உண்டு இல்லை என பன்னிடுவேன்..இப்படித்தான் ஒரு நாள் அருன் மாமாவும்......"என்றவளை அவளின் தாய்

"ஏய் வாலு.போதும் உன் பேச்ச நாளைககு வெச்சிக்க.அப்புறம் மாமா டயர்டா இருப்பாங்க.அவங்க ரூம் போகட்டும் "என்று தன் மகளின் பேச்சை இடையில் நிறுத்தினார்.

இரவு உணவை எல்லோரும் சந்தோசமாக உண்டு முடிக்க இரண்டு உள்ளங்கள் மாத்திரம் அடுத்து என்ன செய்வது என்று குழம்பி போய் இருந்தனர்.

"அம்மா நான் ரூம் போறேன் "என்று கூறி அவன் உள்ளே செல்ல இங்கு மணப்பெண்ணை முதலிரவுக்கு அவளின் தாய்,மாமியார்,அவளின் தங்கை ,அவளின் உயிர் சினேகிதியான அவளது கணவனின் தங்கை அதிதி என எல்லோரும் அவளை தயார்படுத்தினார்கள்.லேசான மேக்கப் இட்டு அவள் கார்குழலில் மல்லிகை இட்டு அலங்கரித்த போது அவளின் தோழி அதிதி

"ஹேய்.நீ மட்டும்தான் எனக்கு அண்ணியா வரனும்னு நினைச்சேன்.கடைசில நீ மட்டும்தான் இந்த குடும்பத்துக்கு என்று ஆகிட்டு.நீ ஒன்னும் யோசிக்காதடா.உன் வாழ்க்கை இனி எப்போதுமே நல்லா இருக்கும்" என்று குரல் தழு தழுக்க கூறிய தன் தோழியை பார்த்து புனகைத்தால் நம் நாயகி.

கடைசியில் அவளின் தாய் "இங்க பாருமா.நடந்ததுலாம் நடந்து போச்சி.இனி அதையே நினைச்சு நீ உன் வாழ்க்கைய வீனாக்கிக்க முடியாது.அப்புறம் மாப்பிள தம்பியும் ரொம்ப நல்லவரா இருக்காரு.இனி உன் வாழ்க்கையை வாழ வேண்டியது உன்னோட கைலமா.வாழ்க்கைல கஷ்டம் நஷ்டம் எல்லாமே வரும்.ஆனா நீ நஷ்டம் வரும்னு தெரிஞ்சும் ஒரு விசயம் பன்ன.அத நான் தப்பு சொல்லல.ஆனா அதையே நீ நினைச்சு உன் வாழ்க்கையையும் மாப்பிள வாழ்க்கையையும் கெடுத்துடாடதடா.அப்பா இல்லாம வளர்த்த பொண்ண தப்பா வளர்த்துட்டான்னு எனக்கு கெட்ட பேரு வர வெச்சிடாதம்மா"என்ற தன் தாயை இருக்கி அணைத்தவள்

"அம்மா,நான் என்னைக்குமே உங்களுக்கு கெட்ட பேரு வார மாதிரி நடக்க மாட்டேன்மா"என்றாள்.

அவளை முதலிரவு அறைக்குள் அனுப்பிய பின் இரு சம்பந்திகளும் ஏதோ தாங்கள் பெரியதொரு விடயத்தை சாதித்தது போல பெருமூச்சு விட்டுக்கொண்டனர்.

அறை உள்ளே சென்றவள் கையில் பால் கப்புடன் வர அவனோ "எதுக்கு இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம்"என்று புன்னகைதவனை அவள்

"எனக்கு இந்த கல்யானம் பன்னதுல விருப்பம்னு சொல்ல முடியாது.விருப்பம் இல்லைன்னும் சொல்ல முடியாது.ஆனா உங்க அம்மாக்காக மட்டும்தான் நான் இந்த கல்யானத்துக்கு விருப்பம் சொன்னேன்.நான் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியா இருப்பனா என்று தெரியல. ஆனா உங்களுக்கு ஒரு மனைவியா நான் செய்ய வேண்டிய எல்லாத்தையுமே நான் செய்வேன்"என்று அந்த எல்லாத்தையும் என்பதை அழுத்திக்கூறியவளை புருவம் சுருக்கி ஏறிட்டவன்

"இங்க பாருங்க,,ச்ச்சே எனக்கு உன்ன எப்படி கூப்பிடறதுன்னு கூட தெரியல்.நான் ஒன்னு மட்டும் சொல்ரேன்.அந்த எல்லாத்தையும் ஐ மீன் நீ எத மீன் பன்னி சொன்னியோ அது மட்டும் எனக்கு இப்ப இல்ல எப்பவுமே வேணாம்.ஆமா இதெல்லாம் நாம ஏற்கனவே பேசி முடிவெடுத்த விசயமாச்சே.ஓஹ் வெளில உள்ளவங்க அட்வைஸ் என்ற பேர்ல எமோசனல் ப்ளாக்மெயில் பன்னாங்கலா.அதெல்லாம் நீ மனசுல வெச்சுக்காதப்பா. முதல்ல நாம நல்ல ப்ரெண்ட்சா இருக்கலாம்.நாம ஆல்ரெடி அறிமுகம் ஆனவங்கதான்.என்றாலும் என்னைப்பத்தி உனக்கும் உன்னை பத்தி எனக்கும் முழுசா எதுவுமே தெரியாதே.சோ நம்ம ப்ரெண்ட்சா மட்டுமே பழகுவம்.நான் கணவன் என்கிற எந்த உரிமையும் உன்கிட் எடுக்க மாட்டேன்.முன்னாடி நாம எப்படி இருந்தமோ அப்படியே இருக்கலாம்.இநத கல்யாணம் எதுக்குனு உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.புரியலயா சாவகாசமா காலைல சொல்ரேன் சரியா.இப்போ நீ கட்டில்ல தூங்கு .நான் அந்த சோபால தூங்குறேன் "என்றவனை

"ரொம்ப தேங்க்ஸ்.என்னோட மனநிலைய புரிஞ்சிக்கிட்டதுக்கு"என்றவளை அவன் உள்ளம் அணைத்துக்கொள்ள துடித்தாலும் காலம் கணிந்து அவள் மனதிலும் தனக்கு என்று ஒரு சிறிய இடம் கிடைத்ததும் தன் காதலை அவளிடம் சொல்லலாம் என தன் காதலுக்கு முத்திரை இட்டு தன் இதய உறையில் பத்திரப்படுத்திக்கொண்டான்.

ஆடை மாற்றிவிட்டு கட்டிலில் தூங்க வந்தவள் தனக்கு காலையில் மங்கள நான் இட்ட தன் கணவனை பார்த்து "என் வாழ்க்கைக்காக இந்த குடும்பம் எவ்வளவு பெரிய விசயத்தை செய்திருக்காங்க. இனிமே என்ன நடந்தாலும் சரி ,நம்மளால இந்த குடும்பத்துக்கு இனி நல்ல பேரு மட்டும்தான் வரனும்.அதுக்கு என் உயிரே போனாலும் பரவாயில்லை"என்று மனதுக்குள் என்னியவள் கடந்த மூன்று வருடங்களில் தன் வாழ்க்கை எவ்வளவு மாறிவிட்டது என்பதை முதலில் இருந்து முழுவதுமாக அசை போட துவங்கினால்......

ப்ரெண்ட்ஸ் கொஞ்சம் காண்ட்றவேர்சியான சப்ஜக்ட எழுதலாம்னு யோசிச்சேன். ஒரு சிலரிடம் ஆலோசனைகளும் கேட்டேன் .அவங்க எல்லோரும் சொன்ன ஒரே பதில் "உன் மனதுக்கு சரி என்று தோன்றினால் அதை நீ செய்".சோ ,இந்த கதை கொஞ்சம் எடக்கு மடக்காக இருக்கும் என்பதால் நான் ஆரம்பத்தில் கூறியது போல எனக்கு தெரிந்த யாருடைய பெயரையும் ஹீரோ ,ஹீரோயினுக்கு வைக்கவில்லை.எப்படியும் இரண்டு பேருக்குமே நல்லா திட்டு விழும்.சொன்ன சொல்லை காப்பாற்ற முடியவில்லை.இல்லை என் பெயர வெச்சி மத்தவங்க திட்டினாலும் எனக்கு ஒக்கேதான் என்று சொல்ரவங்க கொமண்ட் பன்னுங்க

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro