தாரகை 11

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கல்லூரியில் கண்காட்சி நாள் வந்திருக்க..ஜானவியும் அபிநயனும் அவர்கள் ப்ராஜெக்ட் செய்வதில் தீவிரமாக இருந்தனர்..

ஜானவி அவள் செய்ததை எடுத்து கொண்டு வகுப்பிற்கு செல்ல அவள் பார்வை ஒரு பெண்ணிடம் பேசிகொண்டிருக்கும் அபிநயனின் மீது விழுந்தது..

அவனும் அந்த பெண்ணும் சிரித்து சிரித்து பேசுவதை பார்த்து முகம் சுளித்தாள் அவள்..

அவனை பார்த்து கொண்டே அங்கிருந்து நகர எதிர்பாராத விதமாக எதிரில் வந்த நபரின் மீது இடிக்க அவள் கையில் இருந்த ப்ராஜெக்ட் கீழே விழுந்து சிதறியது..

அவள் நிலை தடுமாறி கீழே விழும் முன் ஒரு கரம் அவள் இடையை பற்றி நின்றது..

அந்த நபர் அவள் அழகில் மயங்கி அவளை பார்த்து கொண்டிருக்க அபிநயன் இதை துரத்தில் இருந்து பார்த்தவனுக்கோ ஏதோ வேறு விதமான உணர்வு தோன்றியது..

மற்றொருவனின் கை அவளின் இடையில் இருப்பதை எரிச்சலுடனும் கோபமுடனும் கொண்டு அவனை நோக்கினான் கைகளை இருக்கியபடி..

ஜானவி அவனிடமிருந்து விலகி நின்றவள் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

அபிநயன் அவள் செயலை கண்டு
புன்னகைத்தவன் அந்த நபரை நேருக்கு நேர் காண அவனும் இவனை முறைத்து கொண்டு நின்றான்..

"சீக்கிரமே உன் கதைய முடிக்கிறேன் டா " என்றான் அபிநயன் எதிரில் நின்றிருந்த விக்னேஷ்..

அபிநயன் அதை கண்டு கொள்ளாதவன் இவனை பற்றி ஜானவியிடம் கூறி எச்சரிக்க நினைத்தவன் அவளை தேடி கொண்டு சென்றான்..

ஜானவியோ கல்லூரியில் உள்ள ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்திருந்தவள் அவள் ப்ராஜெக்ட் உடைந்ததை நினைத்து கவலையாக இருக்க அவளை மறைந்திருந்து பார்த்த அபிநயன் அவன் நண்பர்கள் உதவியுடன் அரைமணி நேரத்தில் புதிய ப்ராஜெக்ட் அதே போன்று செய்து முடித்தான்..

அவள் அமர்ந்திருந்த அந்த இடத்தில் அவளுக்கே தெரியாமல் அதை வைத்து விட்டு அவன் அங்கிருந்து சென்று விட்டான்..

இந்த வேலையில் விக்னேஷை பற்றி கூற வந்ததை அவன் மறந்தும் போனான்..

ஜானவி அவள் ப்ராஜெக்ட் சரியாகி இருப்பதை பார்த்து மகிழ்ந்தவள் யார் இதை சரி செய்திருப்பார் என சுற்றி முற்றி பார்க்க யாரும் இல்லை.. அந்த ப்ராஜெக்ட் அருகில் பார்க்க ஒரு பிரேஸ்லேட் கிடக்க அதை பார்த்தவள் கண்ணம் சிவந்தாள்..

அது அபிநயனுடையது என அறிந்தவள் அவன் தான் இதை இவளுக்காக சரி செய்துள்ளான் என்பதையும் புரிந்து கொண்டாள்..

மறுபுறம் விக்னேஷ் அவன் நண்பர்களிடம் ஜானவியை பார்த்ததும் அவள் அழகை பற்றியும் கூறி கொண்டிருந்தான்..

அவன் ஜானவியை அவனுக்கு சொந்தமாக்கி கொள்ள நினைத்தான்..அவன் நண்பர்களிடம் அது பற்றி பேசிக்கோண்டிருக்க எதிர்பாராதவிதமாக அபிநயன் நண்பன் ஒருவன் அதை கேட்டு விட உடனடியாக அவன் அபிநயனிடம் கூற..

அபிநயன் அதை கேட்டு ஆத்திரம் அடைந்தவன் அங்கிருந்து செல்லும் முன் பிரின்சிப்பல் அவனுக்கு முக்கியமான வேலை கொடுத்து விட அவனும் வேறு வழியில்லாமல் அங்கிருந்து சென்று விட்டான்..

ஜானவி அவள் பையை எடுத்து கொண்டு அவள் வகுப்பிற்கு செல்ல விக்னேஷும் அவன் நண்பர்களும் அவளுக்கு தெரியாமல் அவளை பின் தொடர்ந்தனர்..

அவன் முன் கூட்டியே ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டு நின்றான் அவளை எதிர்பார்த்து.. அவன் நண்பர்கள் மட்டும் அவள் பின் சென்றனர் அவள் அறியாமல்..

அவள் வித்யாசமாக உணர்ந்தவள் பின்னால் திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லை..

அவள் மீண்டும் அங்கிருந்து நகர்ந்தாள்.

அவன் அவளுக்கு முன்னே இருக்கும் ஒரு தூண் பின் சென்று ஒளிந்து கொண்டான்..

அவள் அவனை பார்க்காமல் முன்னே செல்ல அவளை ஒரு கரம் தன்னுடன் பிடித்து இழுத்து கொண்டது.

ஒரு நிமிடம் அவன் செயலில் அவள் அதிர்ந்து நிற்க அவனோ அவளை சுவற்றில் சாய்த்து கொண்டு நின்றான்.

"அபிநயன்" என அவள் கத்தும் முன் அவள் இதழில் விரல் வைத்தவன் "நான் தான்.. ஷ்.." என்க "என்ன ஆச்சு" என்றாள் அவள் புரியாமல்..

"ஷ் அப்புறம் சொல்றேன்" அவள் காதில் கிசுகிசுக்க அவளும் அவன் வார்த்தைக்கு கட்டு பட்டு நின்றாள் மௌனமுடன்..

அவள் அவன் செயலின் மாற்றத்தை உணர்ந்தவள் ஏதோ தவறு நடக்க போவதை புரிந்து கொண்டாள்..

அபிநயன் இடது புறம் எட்டி பார்த்து கொண்டிருக்க விக்னேஷும் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான் ஜானவியை எதிர்பார்த்து...

திடீரென காலடி ஓசை கேட்க விக்னேஷ் அந்த நபரை இழுத்து அவர் உதட்டில் முத்தமிட அவர் சட்டென அவனை தள்ளிவிட்டார்.
அவர் அந்த கல்லூரியில் பணி புரியும் உதவி ஆசிரியை..

அபிநயான் ஜானவி இருவரும் ஒரு கணம் அதிர்ந்து நின்றனர்..

கண்களில் கண்ணீர் தேங்கியவள் அபிநயனின் நோக்கத்தை புரிந்து கொண்டாள் அக்கணம்..

அவள் உணர்ச்சிகளை கட்டு படுத்த முடியாமல் சட்டென அவனை கட்டிகொண்டவளின் கண்களில் கண்ணீர் கசிந்தது..

அபிநயன் அவள் செயலில் ஆச்சர்யமடைந்தவன் வித்தியாசமான உணர்வை உணர்ந்தான்.. அவன் கல்லூரியில் பல தோழிகளை நட்புடன் கட்டி அணைத்திருக்கிறான்.. ஆனால் இது போன்ற உணர்வு அவனுக்கு எப்போதும் தோன்றியதில்லை.
ஆனால் ஜானவி அவனை கட்டி கொண்ட நிமிடம் அவனுக்குள் சில மாற்றங்கள் நிகழ்வதை உணர்ந்தான்..அவனை அறியாமல் அவனும் அவளை கட்டி அணைத்து கொண்டு நின்றான்..

அவன் சட்டை அவள் கண்ணீரால் ஈரமடைய அவன் இதயம் அவனையும் அறியாமல் வலித்தது..
அவள் அவன் சட்டையை இறுக பற்றி கொண்டு அழ அவனோ அவள் தலை முடியை வருடி அவளுக்கு ஆறுதல் கூறினான்..

பளீர் என அரைசத்தம் கேட்டு இருவரும் இடது புறம் திரும்பி பார்க்க அந்த ஆசிரியை விக்னேஷை அரைந்திருந்தார்..

அப்போது தான் அவனுக்கு தெரிந்தது அது ஜானவி இல்லை என்று..

அந்த ஆசிரியர் கண்ணீருடன் அங்கிருந்து ஓட அவனும் அவர் பின்னாலே சென்று விட்டான்..

இதை பார்த்து கொண்டிருந்த ஜானவி மேலும் அழ தொடங்கினாள்..

"அபி அபி..." என்றவள் குரல் நடுக்கமுற்றிருந்தது... அவனும் அவளை சமாதானம் செய்ய முயற்சித்து கொண்டிருந்தவன் "இங்க பாரு ஜானவி அவன் தான் விக்னேஷ்.. அவன் ரொம்ப மோசமானவன் அவன் கிட்டருந்து விலகியே இரு.." எனவும் அவன் கண்களில் உள்ள அக்கறையை கண்டு மனமகிழ்ந்தாள் அவள்..

புன்னகையுடன் அவள் அவனுக்கு நன்றியும் கூறினாள் அவளை அவனிடமிருந்து காப்பாற்றியதற்கு..

ம்ம் என்றவன் அங்கிருந்த செல்ல அபி ஒரு நிமிஷம் என அவனை தடுத்தவள்..

முதல் முறையாக அவன் பெயரை சுருக்கியும் அன்புடனும் அவளிடமிருந்து வந்ததை கேட்டான்..

அவள் புறம் திரும்பியவன் என்ன என்று வினவ..

"இதுவரைக்கும் நம்ம ஒரு நண்பர்களா கூட பழகல அதே மாதிரி என்னை நீ உன் மனைவியாவும் ஏத்துக்கல..இத நீ எந்த விததத்துல எனக்கு ஹெல்ப் பண்ணனு உண்மையாவே புரியல" என்றவளை அதிசயத்து பார்த்தான் அவன்..

"ஒரு பிரண்ட்டாவா இல்லை என் ஹஸ்பண்ட்டாவா" என்றாள் ஜானவி கேள்வியாய்..

அந்த வினா ஒரு நிமிடம் அவனை யோசிக்க வைத்தது..பின் புன்னகையை உதிர்த்தவன் "ரெண்டுமே 😊" என கூறியவன் திரும்பி புன்னகையுடன் செல்ல அவன் முழு பற்க்கலும் தெரிந்தன..

அவன் வார்த்தைகளை கேட்டவளுக்கு அளவில்லா ஆனந்தம்...அவனை நினைத்து புன்னகைத்தவளின் கண்ணம் வெட்கத்தில் சிவந்தது...

அபிநயன் ஜானவி இருவரும் அவர்கள் வீட்டில் அவர்களுக்குள் நடந்த சண்டைகளை நினைவு படுத்த அவர்களின் சற்று முன் செயலும் நினைவில் நகர்ந்து கொண்டிருந்தது..

மறுபுறம் விக்னேஷின் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது..

ஆனால் அவனோ அவன் தவறை ஒப்புகொள்ள வில்லை..அதனால் அனைவரின் முன்னிலையில் வைத்தே கல்லூரி தலைமை அதிகாரி பேசினார்..

ஜானவியோ அதை கண்டு பயத்தில் நடுங்கினாள்.

தலமை அதிகாரியும் இதை யாராவது பார்த்திங்களா.. யாரா இருந்தாலும் பரவாயில்ல வந்து தைரியமா சொல்லுங்க..உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது..நான் அதுக்கு பொறுப்பேத்துக்கிறேன்" என்றார் அவர்..

ஜானவியால் அங்கு அதை பார்த்து கொண்டு அமைதியாக நிற்க்க முடியாதவள் உண்மையை கூற அவள் அங்கிருந்து செல்ல அவளை வழிமறித்த அபிநயன் அவளை அங்கிருந்து வேறு இடத்திற்கு அழைத்து கொண்டு சென்றான்..

"ஜானவி நீ எங்க போற.."

"அபி.. அது மேம்.." என்றவளின் குரல் உடைந்தது..

"நீ அவங்களுக்கு சப்போர்ட் பண்ண போறியா?.." எனவும் "ம்ம்" என தலை அசைத்தாள் ஜானவி..

"ஏய் உனக்கென்ன பைத்தியமா?..ஏன் இப்படி நடந்துக்கிற.. நீ இப்போ போய் அவனுக்கு ஆப்போசிட்டா நின்னா என்ன ஆகும் தெரியுமா?.உனக்கு எந்த ஐடியாவும் இல்லையா அவன் என்ன பண்ணுவான்னு...
ஜானவி அவன் உன்னை கொன்னுடுவான்... அவன் ரொம்ப மோசமானவன்.. இன்னொரு முறை அவனுக்கு எதிரா நிக்கணும்னு மட்டும் நினைக்காத..உன்னால சமாளிக்க முடியாது என்ன நம்பு.." என்றவனை பார்த்தவள் கண்களில் கண்ணீர் தேங்கியிருந்தது..

"ஆனா மேம் பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பாரு அபி.. அவங்க என்ன தப்பு பண்ணாங்க.. அவங்கள இந்த நிலைமைல பாக்க முடியல அதான் நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாமேனு..."

"சரி உனக்கு அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும் அவ்வளவு தானே ஓகே உனக்கு பதில் நான் போய் சொல்றேன் நானும் பாத்தேன்ல..
ஆனால் இதுல நீ தலையிடாத ஓகே.."

அவன் அங்கிருந்து செல்லும் முன் அவன் கரத்தை பற்றியவள் "ப்ளீஸ் நீ போக வேண்டாம் அபி..."என கெஞ்சினாள் கண்ணீருடன்...

"விடு ஜானவி..நான் உனக்கு என்னென்னலாம் பண்ணிருக்கேன்னு எனக்கு தெரியும்...நான் பாத்துக்கிறேன் நீ கவலை படாத..." என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்..

அனைவரது முன்னிலையிலும் விக்னேஷிற்கு எதிராக உண்மையை கூறியவன் ஆசிரியை மீது எந்த தவறும் இல்லை... இதை தான் பார்த்ததாக கூறினான்..

கல்லூரி தலமை அதிகாரி விக்னேஷை கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்தவர் அவன் மீது காவல் துறையில் புகாரும் கொடுத்தார்..

விக்னேஷ் கோபமுடன் அபிநயனை பார்த்தவன் "உன்னை நான் கொள்ளாமல விட மாட்டேன்" என மிரட்டல் விடுக்க அபிநயன் அதை சிறிதும் கண்டு கொள்ள வில்லை..

அங்கிருந்து அனைவரும் சென்று விட அவனும் பெருமூச்சு விட்டவன் அங்கிருந்து செல்லும் முன் அவள் அவனை இறுக்கமாக கட்டி கொண்டு அழுதாள் ஜானவி ..

அவன் அவளை பார்த்து புன்னகைத்தவன் அவனும் அவளை அணைத்து கொண்டு நின்றான்..

"ஜானவி அழாத..எதுவும் நடக்கல இதோட இந்த விஷயத்தை மறந்துரு" என்றவனிடமிருந்து விலகியவள் "அபி ஏன் எனக்காக நீ போய் நின்ன இப்போ பாரு.. அவன் உன்னை எப்படி மிரட்டிட்டு போறான்னு.." என்றாள் அழுது கொண்டு..

"ஜானவி இட்ஸ் ஓகே அவனால என்ன எதுவும் பண்ண முடியாது..இத இதோட விடு" என்றவன் அவளை அங்கிருந்து அழைத்து கொண்டு சென்று விட்டான்..

சில நாட்கள் சென்றோடியது...

அபிநயன் ஜானவி இருவருக்குள்ளும் ஒரு வித உணர்வு தோன்ற அவர்கள் இருவரும் அதை வெளிப்படுத்திக்கொள்ள வில்லை..

மறுபுறம் விக்னேஷ் அபிநயனை கொள்ள துடித்து கொண்டிருந்தான்..

ஒருநாள் அபிநனயன் ஜானவி இருவரும் கல்லூரிக்கு சென்றவர்கள் தங்கள் வகுப்பில் அமந்திருக்க...

அபிநனயனை அழைத்த கல்லூரி ஆசிரியர் சில மாணவர்கள் சண்டையிட்டு கொண்டிருப்பதாகவும் அவர்களால் மாணவர்கள் விஷயத்தில் நேரடியாக மூக்கை நுழைக்க முடியாதென்பதாலும் அபிநயனை சென்று விசாரிக்குமாறு கூறினார்..
அபிநயன் அந்த கல்லூரியில் யூனியன் லீடர் என்பதால் அவன் அங்கு சென்று விட ஜானவிக்கு அவள் இதய துடிப்பு அதிகரித்தது..
அவளுக்குள் இனைபுரியாத பயம் தோன்றியிருந்தது..

அவளால் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவள் அங்கிருந்து நூலகத்திற்கு சென்று விட்டாள்..

புத்தகம் வாசிக்க மனம் அமைதியடைந்தவள் இன்னும் சில புத்தகங்களை தேட அலமாரி அருகில் செல்ல இருவரின் பேச்சு அவளை திசை திருப்பியது...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro